என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இது வெறும் விளையாட்டு... சிஎஸ்கே ரசிகர்களுக்காக இதயத்தை வருடும் கவிதை வெளியிட்ட டோனி மனைவி
Byமாலை மலர்26 Oct 2020 10:26 AM IST (Updated: 26 Oct 2020 3:51 PM IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.
சென்னை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே), இந்த முறை பிளே ஆப் சுற்றில்கூட நுழையாமல் வெளியேறியது.
நேற்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சென்னை அணி வீழ்த்தியதை அடுத்து, மற்ற அணிகளின் முடிவுகளை கணக்கில் வைத்து, பிளே ஆப் வாய்ப்பு ஓரளவு இருந்தது. ஆனால் அதன்பின்னர் நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்று ரன்ரேட்டையும் பலமாக வைத்துள்ளது. இதனால் சென்னை அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது. சென்னை அணி முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்த தோல்வியைத் தொடர்ந்து சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் சிஎஸ்கே கேப்டன் டோனியின் மனைவி சாக்சி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவிதையை பதிவிட்டுள்ளார்.
அதில், ‘இது வெறும் விளையாட்டு ... சில போட்டிகளில் வெற்றி பெறலாம், சில போட்டிகளில் தோல்வி அடையலாம், யாரும் தோல்வி அடைய விரும்புவதில்லை, ஆனால் எல்லோரும் வெற்றியாளர்களாக இருக்க முடியாது. உண்மையான வீரர்கள் போராட பிறக்கிறார்கள். அவர்கள் எப்போதும் நம் இதயத்திலும் நம் மனதிலும் சூப்பர் கிங்ஸ்-களாக இருப்பார்கள் என உணர்வுப்பூர்வமாக’ கூறியிருக்கிறார்.
சாக்சியின் இந்த கவிதையை சிஎஸ்கே தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
Next Story
×