search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயங்க் அகர்வால்
    X
    மயங்க் அகர்வால்

    கேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்

    ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெபளிப்படுத்தியதன் மூலம் மயங்க் அகர்வால் ஒயிட்பால் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    இந்திய அணி நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.

    இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்த கேஎல் ராகுல் விக்கெட் கீப்பர் பணியை செய்வதால் ரிஷப் பண்ட் காயத்தால் வெளியேறியபோது ஒயிட்பால் கிரிக்கெட்டில் இடம்பிடித்தார். சிறப்பாக விளையாட இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

    ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டதுடன், சிறப்பாகவும் பேட்டிங் செய்கிறார். இதனால் அவரை ஒருநாள் மற்றும் டி20 அணியின் துணைக் கேப்டனாக நியமித்துள்ளது பிசிசிஐ.

    அதேபோல் டெஸ்ட் போட்டியில் சொதப்பியதால் அதிரடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

    அதேபோல் டெஸ்ட் அணியில் மட்டுமே இடம்பிடித்து விளையாடிய மயங்க் அகர்வால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.

    ஐபிஎல் போட்டியில் விளையாடிய ரோகித் சர்மாவுக்கு ஹாம்ஸ்டிரிங் இன்ஜுரி ஏற்பட்டது. இதனால் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலும் ரோகித் சர்மாவால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகியது அவருக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

    ரிஷப் பண்ட் மோசமான விளையாடியதால் ஒருநாள் மற்றும் டி20 அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பிடித்துள்ளார்.
    Next Story
    ×