search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள்.
    X
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள்.

    ஐதராபாத்துடன் இன்று மோதல்- ‘பிளேஆப்’ சுற்றுக்கு முதல் அணியாக டெல்லி கேப்பிடல்ஸ் தகுதிபெறுமா?

    துபாயில் ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன.
    துபாய்:

    13-வது ஐ.பி.எல்.20 ஓவர் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியின் 47வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி அணி 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. ‘பிளேஆப்’ சுற்றுக்கு இதுவரை எந்த அணியும் தகுதி பெறவில்லை. முதல் அணியாக ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் உள்ளது.

    டெல்லி அணி ஏற்கனவே 15 ரன்னில் ஐதராபாத்திடம் தோற்று இருந்தது. அதற்கு பதிலடி கொடுத்து 8-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி கடைசி 2 ஆட்டத்தில் (பஞ்சாப், கொல்கத்தா) தோற்றது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள்.

    டெல்லி அணியில் தவான் (471 ரன்), கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர் (382 ரன்), ரபடா (23 விக்கெட்), நோர்கியா (14 விக்கெட்) ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஐதராபாத் அணி 4 வெற்றி 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது.

    இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் அந்த அணி வீரர்கள் வெற்றிக்காக முழுவீச்சில் போராடுவார்கள்.

    ஐதராபாத் அணியில் கேப்டன் வார்னர் (370 ரன்), பேர்ஸ்டோவ் (345 ரன்), மனீஷ்பாண்டே (310 ரன்) போன்ற சிறந்த பேட்ஸ்மென்களும், ரஷீத்கான் (14 விக்கெட்), நடராஜன் (11 விக்கெட்), கலீல் அகமது (8 விக்கெட்) போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

    இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் ஐதராபாத் 10-ல், டெல்லி 6-ல் வெற்றி பெற்றுள்ளன.
    Next Story
    ×