என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இயன் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.

    துபாய்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று துபாயில் நடக்கும் 49-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-இயன் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சென்னை அணி ஏற்கனவே பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. 12 ஆட்டங்களில் 4 வெற்றி மட்டுமே பெற்று 8 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள இரு ஆட்டங்களிலும் ஆறுதல் வெற்றியை பெற சென்னை சூப்பர் கிங்ஸ் முயலும்.

    சென்னை அணியில் அம்பதி ராயுடு, டுபெலிசிஸ், சாம் கர்ரன், ஜடேஜா போன்ற வீரர்கள் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் (பெங்களூருக்கு எதிராக) இளம் வீரர் ருது ராஜ், கெய்க்வாட் அரை சதம் அடித்து நம்பிக்கை அளித்தார். இன்றைய போட்டியிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். பந்து வீச்சில் தீபக் சாகர், ‌ஷர்துல் தாகூர், இம்ரான் தாகிர் ஆகியோர் உள்ளனர்.

    ஏற்கனவே கொல்கத்தாவிடம் சென்னை அணி தோற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொல்கத்தாவின் அடுத்த சுற்று வாய்ப்பை குறைக்க சென்னை அணி தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் 6 வெற்றிகள் பெற்று 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் ரன்ரேட் (-0.479) மோசமாக இருக்கிறது. இதனால் அந்த அணிக்கு எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும் மிகப்பெரிய வெற்றி பெறவேண்டியது அவசியம ஆகும். ஒரு ஆட்டத்தில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கிவிடும்.

    கொல்கத்தா அணியில் சுப்மான்கில், நிதிஷ்ரானா, இயன் மார்கன், சுனில்நரேன், பெர்குசன், வருண் சக்ரவர்த்தி, கும்மின்ஸ் ஆகியோர் உள்ளனர். கொல்கத்தா அணி இன்று வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்குகிறது.

    சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாததற்கு அவர் மிகவும் ஏமாற்றம் அடைந்திருப்பார் என்று மும்பை அணியின் பொறுப்பு கேப்டன் போல்லார்ட் கூறியுள்ளார்.

    பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் 79 ரன் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். இதுகுறித்து மும்பை அணியின் பொறுப்பு கேப்டன் போல்லார்ட் கூறியதாவது:-

    தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு ஒருவர் நிலைத்து நின்று ஆடியதை நினைத்துப் பாருங்கள். அதுபோன்ற மந்தமான நிலையில் யாராவது ஒருவர் எப்போது இப்படி நிலைத்து நின்று விளையாடுகிறார்களா?.

    சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கு தேர்வு செய்யப் படாததற்கு அவர் மிகவும் ஏமாற்றம் அடைந்திருப்பார். அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். மீண்டும் ஒரு தனி நபராக நீங்கள் தொடர்ந்து நிலைத்திருந்தால் உங்களுக்கு வெகுமதி கிடைக்கும். எதுவும் அதன் காலத்துக்கு முன்பு நடக்காது.

    நான் டிவில்லியர்சுக்கு பந்து வீச முடிவு செய்தேன். கடைசி ஓவருக்காக நான் காத்திருந்திருக்கலாம். ஆனால் யாராவது அதிக ரன்களை கொடுக்க வேண்டி இருந்தால் அது நானாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு பந்து வீசினேன்.

    இந்த போட்டித்தொடரில் பும்ரா தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நாங்கள் மீண்டும் ஒரு அணியாக சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவோம் என்றார்.

    மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் குறைவாக எடுத்ததால் தோல்வி அடைந்தோம் என்று வீராட்கோலி கூறியுள்ளார்.

    அபுதாபி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு அபுதாபியில் நடந்த 48-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை தோற்கடித்தது.

    முதலில் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது. படிக்கல் 74 ரன் எடுத்தார். மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் விளையாடிய மும்பை அணியில் தொடக்க வீரர்களான டிகாக் 18 ரன்னிலும், இஷான்கி‌ஷன் 25 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் சூர்ய குமார் யாதவ் நிலைத்து நின்று விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் 43 பந்தில் 79 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

    மும்பை அணி பெற்ற 8-வது வெற்றி (12 ஆட்டம்) இதுவாகும். இதன்மூலம் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பெங்களூர் அணி 5-வது தோல்வியை (12 ஆட்டம்) சந்தித்தது. அந்த அணி 14 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

    தோல்வி குறித்து பெங்களூர் கேப்டன் வீராட் கோலி கூறியதாவது:-

    நாங்கள் அடித்த பந்துகள் பெரும்பாலும் பீல்டர்களிடமே சென்றது. அவர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். எங்களை 20 ரன்கள் குறைவாக எடுக்க வைத்து விட்டனர். அவர்களுக்கு நாங்கள் நல்ல நெருக்கடி கொடுத்து விளையாடினோம்.

    ஆடுகளத்தில் பந்து ஸ்விங் ஆகலாம் என்று நினைத்து தொடக்கத்திலேயே மோரீஸ், ஸ்டேயினை பந்து வீச வைத்தோம். அதன்பின் வாஷிங்டன் சுந்தரை பந்து வீச அழைத்தோம். இந்த போட்டி கடினமாக இருந்தது. ஆனால் அந்த கட்டத்தில் அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்றைய போட்டியில் 13-வது ஓவரின்போது சூர்ய குமார் அடித்த ஒரு பந்தை பீல்டிங் செய்த வீராட்கோலி அவரை நோக்கி முறைத்த படியே வந்தார்.

    அப்போது சூர்யகுமார் யாதவும் கோலியை பார்த்தபடியே நின்றார். அவர் அருகில் நின்ற கோலி பந்தை தேய்த்த படி நின்றார். ஆனால் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பின்னர் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

    அஸ்தானா ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய வீரர் திவிஜ் சரண், பிரிட்டன் வீரர் லூக் பாம்பிரிட்ஜ் ஜோடி காலிறுதிக்கு முற்தைய சுற்றில் வெற்றி பெற்றது.
    நூர் சுல்தான்:

    கஜகஸ்தான் நாட்டில் அஸ்தானா ஓபன் டென்னிஸ் போட்டித்தொடர் நூர் சுல்தான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் திவிஜ் சரண், பிரிட்டன் வீரர் லூக் பாம்பிரிட்ஜுடன் இணைந்து விளையாடி வருகிறார். 

    திவிஜ் சரண் ஜோடி நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ஏரியல் பெகர் (உருகுவே)-கான்சலோ எஸ்கோபர் (ஈக்வடார்) ஜோடியை எதிர்கொண்டது.

    சுமார் ஒன்றரை மணி நேரம் வரை விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் திவிஜ் சரண்- லூக் பாம்பிரிட்ஜ் ஜோடி 7-5, 4-6, 10-6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
    சார்லோர் லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இருந்து நடப்பு சாம்பியனான இந்திய வீரர் 19 வயதான லக்‌ஷயா சென் கடைசி நேரத்தில் விலகியுள்ளார்.
    சார்புருக்கென்:

    சார்லோர் லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் களம் இறங்க இருந்த நடப்பு சாம்பியனான இந்திய வீரர் 19 வயதான லக்‌ஷயா சென் கடைசி நேரத்தில் விலகியுள்ளார். அவரது தந்தையும், பயிற்சியாளருமான டி.கே. சென்னுக்கு அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. மற்ற வீரர்களின் பாதுகாப்புக்கும், போட்டித் தொடருக்கும் அச்சுறுத்தலாக இருக்க வேண்டாம் என்பதாலேயே போட்டியை விட்டு விலகியதாக லக்‌ஷயா சென் கூறியுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய தொடர் தேதி அதிகாரபூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது. மெல்போர்னில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் ரசிகர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    சிட்னி:

    ஐ.பி.எல். போட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந்தேதி முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு தனி விமானத்தில் புறப்படுகிறார்கள். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அங்கு மூன்று ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. நவம்பர் 12-ந்தேதி ஆஸ்திரேலியா சென்றடையும் இந்திய வீரர்கள் சிட்னி நகரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அச்சமயம் அருகில் உள்ள மைதானத்தில் பயிற்சியிலும் ஈடுபடுவார்கள். இந்த போட்டிக்கான அதிகாரபூர்வ போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. உலகின் மிகப்பெரிய மைதானமான மெல்போர்னில் பாரம்பரியமிக்க ‘பாக்சிங் டே’ டெஸ்ட் இந்த சீசனில் நடக்குமா? என்பதில் சந்தேகம் நிலவியது. ஏனெனில் அங்கு கடந்த 4 மாதங்களாக கடுமையான கொரோனா ஊரடங்கு நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஊரடங்கு நேற்று விலக்கிக் கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து உடனடியாக போட்டி அட்டவணை வெளியாகி இருக்கிறது. மெல்போர்னில் டெஸ்ட் (டிச.26-30) நடப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

     போட்டி அட்டவணை


    அத்துடன் கொரோனா தடுப்பு பாதுகாப்பு திட்டங்களை பின்பற்றி ரசிகர்களை மைதானத்திற்குள் அனுமதிப்பது குறித்து மெல்போர்ன் கிரிக்கெட் கிளப், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், மெல்போர்ன் நகரை உள்ளடக்கிய விக்டோரியா மாகாண அரசு ஆலோசித்தன. இதில் 1 லட்சம் பேர் அமரக்கூடிய இந்த மைதானத்தில் தினமும் ஏறக்குறைய 25 ஆயிரம் ரசிகர்களை அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    போட்டி அட்டவணையை வெளியிட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லே கூறுகையில், ‘மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் உலக விளையாட்டு அரங்கில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சவால்மிக்க எதிராளிகளில் ஒன்றாக விளங்குகின்றன. இந்த கோடை காலத்தில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு விளையாட வருகை தரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினரை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். முழுமையான பாதுகாப்புடன் வெற்றிகரமாக இந்த தொடரை நடத்தி முடிப்போம் என்று நம்புகிறோம். இந்திய வீரர்களுடன், அவர்களது குடும்பத்தினரை அனுமதிப்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் ஆலோசித்து வருகிறோம்’ என்றார்.

    இந்திய அணி முதலில் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் நவம்பர் 27-ந்தேதி நடக்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக நடத்தப்படுகிறது. ‘பிங்க் பந்து’ பயன்படுத்தப்படும் அந்த டெஸ்ட் அடிலெய்டில் டிசம்பர் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை அரங்கேறுகிறது. அடிலெய்டில் இதுவரை நடந்துள்ள 4 மின்னொளி டெஸ்டிலும் ஆஸ்திரேலியாவே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணிக்கு இரண்டு பயிற்சி ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை இந்தியா-ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் மோதுகின்றன. இதே போல் டிசம்பர் 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை சிட்னியில் இந்தியா- ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையே 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி பகல்-இரவாக நடக்கிறது. உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் இந்த முறை எந்த போட்டிகளும் இடம் பெறவில்லை. இந்த போட்டிகள் அனைத்தையும் சோனி டென்1, சோனி டென்3, சோனி சிக்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
    பெங்களூர் அணிக்கு எதிரன ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.
    அபுதாபி:

    ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் அபு தாபியில் இன்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் செய்தது. ஜோஷ் பிலிப், தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    இருவரும் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். ஜோஷ் பிலிப் 24 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஆர்சிபி 7.5 ஓவரில் 71 ரன்கள் எடுத்திருந்தது. 

    அடுத்து வந்த விராட் கோலி 9 ரன்னிலும், டி வில்லியர்ஸ் 15 ரன்னிலும், ஷிவம் டுபே 2 ரன்னிலும் வெளியேறினர்.

    தேவ்தத் படிக்கல் 45 பந்தில் 74 ரன்கள் அடிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்துள்ளது. குர்கீரத் சிங் மான் 14 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    மும்பை அணி சார்பில் பும்ரா 4 ஓவரில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார்.

    இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக குவிண்டன் டிகாக் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர்.

    19 பந்துகளில் 18 எடுத்த நிலையில் டிகாக்கும், 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த நிலையில் இஷான் கிஷனும் வெளியேறினர். அடுத்துவந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் சவ்ரவ் திவாரியுடன் ஜோடி சேர்ந்தார். 

    ஆனால், திவாரி 5 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். பின்னர் வந்த குர்னால் பாண்டியா (10 ரன்), ஹர்திக் பாண்டியா (17 ரன்) அடுத்தடுத்து வெளியேறினர்.

    ஆனால், ஒரு புறம் விக்கெட்டுகள் சாய்ந்த மோதும் மறுமுனையில் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். 

    இறுதியில் மும்பை அணி 19.1 ஓவரில் 5 விக்கெட் மட்டுமே இழந்து 166 ரன்கள் எடுத்தது. இதனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

    43 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உள்பட 79 ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் மும்பை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

    பெங்களூர் தரப்பில் முகமது சிராஜ் மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    நல்ல தொடக்கம் கிடைத்த போதிலும் விராட் கோலி, டி வில்லியர்ஸ் சொதப்ப மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி.
    ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் செய்தது. ஜோஷ் பிலிப், தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    இருவரும் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். ஜோஷ் பிலிப் 24 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஆர்சிபி 7.5 ஓவரில் 71 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த விராட் கோலி 9 ரன்னிலும், டி வில்லியர்ஸ் 15 ரன்னிலும், ஷிவம் டுபே 2 ரன்னிலும் வெளியேறினர்.

    தேவ்தத் படிக்கல் 45 பந்தில் 74 ரன்கள் அடிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்துள்ளது. குர்கீரத் சிங் மான் 14 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    மும்பை அணி சார்பில் பும்ரா 4 ஓவரில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார்.
    அபு தாபியில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் அபு தாபியில் 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை அணி கேப்டன் பொல்லார்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் நவ்தீப் சைனி, ஆரோன் பிஞ்ச், மொயீன் அலி இல்லை. ஷிவம் டுபே, ஜோஷ் பிலிப், டேல் ஸ்டெயின் சேர்க்கப்பட்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்றம் இல்லை.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விவரம்:-

    1.  தேவ்தத் படிக்கல், 2. ஜோஷ் பிலிப், 3. விராட் கோலி, 4. டி வில்லியர்ஸ், 5. குர்கீரத் சிங், 6. ஷிவம் டுபே, 7. கிறிஸ் மோரிஸ், 8. வாஷிங்டன் சுந்தர், 9. டேல் ஸ்டெயின், 10. முகமது சிராஜ், 11. சாஹல்.

    மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்:-

    1. இஷான் கிஷன், 2. குயின்டான் டி காக், 3. சூர்யகுமார் யாதவ், 4. சவுரப் திவாரி, 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்ட், 7. குருணால் பாண்ட்யா, 8. ஜேம்ஸ் பேட்டின்சன், 9. ராகுல் சாஹர், 10. டிரென்ட் போல்ட், 11. பும்ரா.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்தால் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு பறிபோகிவிடும் என்பதால் வெற்றிக்காக கொல்கத்தா போராடும்.
    ஐபிஎல் 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளுக்கும் இது 13-வது ஆட்டமாகும்.

    4 போட்டிகளில் மட்டுமே வெற்ற பெற்று பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பை இழந்த சிஎஸ்கே பாயின்ட் டேபிளில் கடைசி இடத்தில் இருந்து முன்னேறவும், மற்ற அணிகளின் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு வேட்டு வைப்பதும்தான் தற்போது சென்னையின் வேலையாக இருக்கும். மற்றபடி வெற்றி எந்த வகையிலும் உதவாது.

    சென்னை அணி வெற்றி பெற்றால் கொல்கத்தாவின் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு பெரிய ஆபத்து ஏற்படும்.

    பிளே-ஆஃப்ஸ் சுற்று தகுதியை இழந்த பின்னர் அணியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து 12-வது போட்டியில் ஆர்சிபியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

    முதலில் சென்னை பந்து வீசியபோது இதுவரை பவர்பிளேயில் மட்டுமே தீபக் சாஹர் மற்றும் சாம் கர்ரனை பயன்படுத்தி வந்த டோனி இந்த முறை தனது யுக்தியை மாற்றி தலா இரண்டு ஓவர்களுடன் நிறுத்திக் கொண்டு டெத் ஓவரில் பயன்படுத்தினார். இதற்கு இறுதியில் நல்ல ரிசல்ட் கிடைத்தது.

    மிடில் ஓவர்களில் ஜடேஜா  (20 ரன்), இம்ரான் தாஹிர் (30) ரன், சான்ட்னெர் (23 ரன், ஒரு விக்கெட்) சரியான வகையில் விராட் கோலி, டி வில்லியர்ஸ்க்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் 16 ஓவரில் ஆர்சிபி-யால் 116 ரன்களே அடிக்க முடிந்தது. இதற்கு முக்கிய காரணமாக டு பிளிஸ்சிஸை சொல்லலாம். பந்து எந்த திசையில் சென்றாலும் அங்கு அவர்தான் இருந்தார்.  சான்னெர் பந்தில் படிக்கல்லை பவுண்டரில் லைனில் அபாரமாக கேட்ச் பிடித்து கெய்க்வாட் இடம் பந்தை வீசி அவுட்டாக்க காரணமாக இருந்தார்.

    18-வது ஓவரில் சாஹர்  டி வில்லியர்ஸை வெளியேற்ற, சுட்டிப்பையன் சாம் கர்ரன் 19-வது ஓவரில் மொயீன் அலி, விராட் கோலியை அவுட்டாக்க ஆர்சிபி-யின் வேகம் குறைந்தது. கடைசி ஓவரில் சாஹர் மோரிஸை அவுட்டாக்க ஆர்சிபி-ஐ 145 ரன்னுக்குள் சுருட்டியது.

    டெத் ஓவரான கடைசி நான்கு ஓவரில் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட் வீழ்த்தியது சிஎஸ்கே-வுக்கு சாதகமாக அமைந்தது.

    146 ரன்கள் எடுக்குமா? என்ற சின்ன சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் என்னிடமா ஸ்பார்க் இல்லை? என்று கேட்பது போல அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தார். டு பிளிஸ்சிஸ் (25) ஏமாற்றினாலும், அம்பதி ராயுடு (27 பந்தில் 39 ரன்) ஒத்துழைப்பு கொடுக்க ருதுராஜ் 65 ரன்கள் விளாசி 6 பந்து மீதமுள்ள நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

    சாம் கர்ரன், ருதுராஜ் கெய்க்வாட், சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதுடன் சென்னை கொல்கத்தாவை எதிர்கொள்ளும்.

    ஏற்கனவே கொல்கத்தாவிடம் 10 ரன்னில் தோல்வியடைந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிஎஸ்கே களம் இறங்கும். கடந்த போட்யில் விளையாடிய பிராவோ, கரண் சர்மா, ஷர்துல் தாகூர், வாட்சன், கேதர் ஜாதவ் ஆகியோர் அணியில் இல்லை. இதனால் அந்த பேட்டியை ஒப்பிட முடியாது.

    கொல்கத்தா வெற்றி பெற்றேயாக வேண்டும் என நோக்கத்தில் களம் இறங்கும். ஏற்கனவே சென்னையை வீழ்த்தியுள்ளதால் அந்த நம்பிக்கையில் களம் இறங்கும்.

    கொல்கத்தா அணியின் ஒரே பிரச்சினை சீராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததுதான். கடைசி ஐந்து போட்டிகளில் (தோல்வி, வெற்றி, தோல்வி, வெற்றி, தோல்வி) என ரிசல்ட் வந்துள்ளது.

    தொடக்க வீரர் ஷுப்மான் கில் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். இருந்தாலும் சென்னைக்கு எதிராக சிறப்பாக விளையாடுவது அவசியம். நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி என இரண்டு பவர் ஹிட்டரை வைத்துள்ளது. ஒருவர் ஸ்பார்க் ஆனாலும் சென்னை காலி.

    அனுபவ வீரர்களான தினேஷ் கார்த்திக், மோர்கன் ஒரே நேரத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். சுனில் நரைன் அடித்தால் லாபம், இல்லை என்றால் இல்லைதான்.

    பந்து வீச்சில் லூக்கி பெர்குசன், பேட் கம்மின்ஸ், மிஸ்டிரி ஸ்பின்னர்கள் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி உள்ளனர். கொல்கத்தா வீரர்கள் அதிக ரன்கள் குவித்தால் இவர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். மேலும் பவுலர்களை மோர்கன் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை பொறுத்தே எதிரணியை பவுலர்கள் கட்டுப்படுத்துவார்கள்.

    இதனால் கொல்கத்தா எவ்வளவு ரன்கள் குவிக்கிறதோ? அதை பொறுத்தே இவர்களின் பந்து வீச்சும் அமையும். வெற்றியும் அமையும்.
    இன்று நடக்கும் ஐபில் போட்டியில் மும்பை-பெங்களூ அணிகள் மோத இருக்கின்றன. இதில் வெற்றி பெரும் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    அபுதாபி:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ந் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்கியது.

    இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    நேற்றுடன் 47 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. ஆனால் இதுவரை எந்த அணியும் இன்னும் அதிகாரப்பூர்வமாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணி ஐதராபாத்திடம் தோற்றதால் அந்த வாய்ப்பும் இல்லாமல் போனது. பிளேஆப் வாய்ப்பை இழந்த ஒரே அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.

    ஐ.பி.எல். போட்டியில் 48-வது ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் நடக்கிறது. இதில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் - இரண்டாவது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளுமே 7 வெற்றி 4 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளன. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும். பிளேஆப் சுற்றுக்கு நுழையும் முதல் அணி மும்பையா? பெங்களூரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணியிலும் சிறந்த அதிரடி வீரர்கள் உள்ளனர். இதனால் வெற்றிக்காக அவர்கள் கடுமையாக போராடுவார்கள். எனவே இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

    மும்பை அணியில் குயின்டன் டிகாக், சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, தற்காலிக கேப்டன் போல்லார்ட், இஷான் கி‌ஷன், போல்ட், பும்ரா போன்ற சிறந்த வீரர்களும் பெங்களூர் அணியில் கேப்டன் வீராட் கோலி, டிவில்லியர்ஸ், ஆரோன் பிஞ்ச், படிக்கல், யசுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

    மும்பை அணி ஏற்கனவே சூப்பர் ஓவரில் பெங்களூரிடம் தோற்று இருந்தது. அதற்கு பதிலடி கொடுத்து 8-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளுமே கடைசியாக ஆடிய ஆட்டத்தில் தோற்றது. வெற்றிப் பாதைக்கு திரும்ப அவைகள் முயற்சிக்கும்.

    இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் மும்பை 16-ல், பெங்களூர் 9-ல் வெற்றி பெற்றுள்ளன.

    நேற்று நடந்த ஐ.பி.எல். போட்டியில் விருத்திமான் சாஹாவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது என்று ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    துபாய்:

    ஐ.பி.எல். போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 88 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி 5-வது வெற்றியை பெற்றது. இந்த வெற்றி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் கூறியதாவது:-

    தொடக்க வீரராக களம் இறங்கிய விருத்திமான்  சாஹாவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது. நம்ப முடியாத வகையில் அவர் அபாரமாக ஆடினார். மிடில் ஆர்டர் வரிசையில் வில்லியம்சன் ஆடுவதற்கு தொடக்க வீரர் பேர்ஸ்டோவ் நீக்கப்பட்டார். இது மிகவும் கஷ்டமான முடிவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விருத்திமான் சாஹா இந்த ஆட்டத்தில் 45 பந்தில் 87 ரன் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.

    ×