என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நிதிஷ் ராணா அரைசதம் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு -- ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
    ஐபிஎல் தொடரின் 49-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்ற வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணா, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதுல் ஓவரை சாஹர் வீசினார். இந்த ஓவரில் சாஹர் மூன்று பவுண்டரிகள் விட்டுகொடுத்தார். அடுத்த ஓவரில் சாம் கர்ரன் 3 ரன் கொடுத்து கட்டுப்படுத்தினார். அடுத்த ஓவரில் சாஹர் 7 ரன் விட்டுக்கொடுத்தார்.

    6-வது ஓவரை சான்னெர் வீசினார். இந்த ஒவரில் ராணா 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க 15 ரன் விட்டுக்கொடுத்தது சிஎஸ்கே. இதனால் பவர் பிளேயில் கொல்கத்தா 48 ரன்கள் அடித்தது.

    கொல்கத்தா அதிக ரன்கள் குவிக்கும் என எதிபார்க்கப்பட்டது. ஜடேஜா, கரண் சர்மா ரன் கொடுப்பதை கட்டுப்படுத்தினர். 8-வது ஓவரை கரண் சர்மா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஷுப்மான் கில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த சுனில் நரைனை சான்னெர் 7  ரன்னில் வெளியேற்றினார். இதனால் 10 ஓவரில் 70 ரன்கள் எடுத்த கொல்கத்தா.

    அடுத்து வந்த ரிங்கு சிங் 11 ரன்னில் ஜடேஜா பந்தில் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட் விழ மறுமுனையில் நிதிஷ் ராணா 44 பந்தில் அரைசதம் அடித்தார். கொல்கத்தா 15 ஓவரில் 106 ரன்கள் எடுத்திருந்தது.

    16-வது ஓவரை கரண் சர்மா வீசினார். இந்த ஓவரில் நிதிஷ் ராணா தொடர்ச்சியாக 3 சிக்சர்கள் விளாசினார். அடுத்த 3 பந்தில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கொல்கத்தா 16 ஓவரில் 125 ரன்கள் எடுத்திருந்தது.

    17-வது ஓவரில் தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் 2 பவுண்டரியுடன் 11 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 18-வது ஓவரை லுங்கி நிகிடி வீசினார். முதல் பந்தில் 61 பந்தில் 87 ரன்கள் எடுத்திருந்த நிதிஷ் ராணாவை வெளியேற்றினார். என்றாலும் இரண்டு பவுண்டரிகளுடன் 14 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 19-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தது சிஎஸ்கே. 19 ஓவர் முடிவில் கொல்கத்தா 163 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மோர்கன், 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி 4 பந்தில் ஐந்து ரன்களுடன் கடைசி ஓவரில் 9 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்துள்ளது. டெத் ஓவரான கடைசி 6 ஓவரில் 67 ரன்கள் அடித்துள்ளது.
    தொடக்கத்தில் இருந்தே அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரபடாவிற்கு, தற்போது முகமது ஷமி, பும்ரா கடும் போட்டியாக திகழ்கின்றனர்.
    ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவருக்கு ஆரஞ்ச் தொப்பியும், அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்படும்.

    ஐபிஎல் தொடரில் தொடங்கியதில் இருந்தே ரன்குவிப்பில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல் முதல் இடத்தில் இருந்து வருகிறார். அதேபோல் பந்து வீச்சில் டெல்லி அணி வீரர் ரபடா ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

    முதல் போட்டியில் இருந்து 11-வது போட்டியை வரை அவர் விக்கெட் எடுக்காமல் இருந்தது கிடையாது. 12-வது போட்டியில் ஐதராபாத் அணிக்கெதிராக ரபடா விக்கெட்  வீழ்த்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் பும்ரா, முகமது ஷமி அதிக அளவில் விக்கெட் வீழ்த்தி அவரை நெருங்கிவிட்டனர்.

    ரபடா 23 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். அதிகபட்சமாக 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார். பும்ரா ஆர்சிபி-க்கு எதிராக 12-வது போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் 20  விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    முகமது ஷமியும் 20 விக்கெட் வீழ்த்தி 3-வது இடத்தில் உள்ளார். அதிகபட்சமாக 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    ஆர்சிபி வீரர் சாஹல் 18 விக்கெட்டும், ரஷித் கான், ஆர்சர், டிரென்ட் போல்ட் ஆகியோர் தலா 17 விக்கெட் வீழ்த்தி முறையே 5 முதல் 7 இடங்களையும் பிடித்துள்ளனர்.

    டெல்லி அணியின் நோர்ட்ஜோ 15 விக்கெட்டும், ராகுல் சாஹர் 14 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். வருண் சக்ரவர்த்தி 13 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் டு பிளிஸ்சிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் நீக்கப்பட்டு வாட்சன், லுங்கி நிகிடி சேர்க்கப்பட்டுள்ளனர்.
    ஐபிஎல் தொடரின் 49-வது லீக் ஆட்டம் துபாயில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர். டு பிளிஸ்சிஸ், இம்ரான் தாஹிர் நீக்கப்பட்டு வாட்சன், லுங்கி நிகிடி சேர்க்கப்பட்டுள்ளனர்.

    கொல்கத்தா அணி:

    1. ஷுப்மான் கில், 2. நிதிஷ் ராணா, 3. ராகுல் திரிபாதி, 4. தினேஷ் கார்த்திக், 5. மோர்கன், 6. சுனில் நரைன், 7. ரிங்கு சிங், 8. பேட் கம்மின்ஸ், 9. லூக்கி பெர்குசன், 10. கம்லேஷ் நாகர்கோட்டி. 11. வருண் சக்ரவர்த்தி.

    சென்னை அணி: 

    1. ருத்துராஜ் கெய்க்வாட், 2. வாட்சன், 3. அம்பதி ராயுடு, 4. எம்எஸ் டோனி, 5. ஜடேஜா, 6. சான்ட்னெர், 7. லுங்கி நிகிடி, 8. தீபக் சாஹர், 9. என் ஜெகதீசன், 10. கரண் சர்மா, 11. சாம் கர்ரன்.
    தென்ஆப்பிரிக்காவின் 41 வயதான ரிஸ்ட் ஸ்பின்னர் இம்ரான் தாஹிரை பிக் பாஷ் லீக்கில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
    தென்ஆப்பிரிக்காவின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர். 41 வயது ஆனாலும் அவரது திறமையிலும் குறைவில்லை. இதனால் கரீபியன் பிரிமீயர், ஐபிஎல் டி20 லீக்கில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் பிக் பாஷ் டி20 லீக்கில் முதன்முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மெல்போர்ன் ரெனேகட்ஸ் இம்ரான் தாஹிரை ஒப்பந்தம் செய்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பின்னர்தான் கலந்து கொள்வார். இதனால் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நூர் அஹமதுவை ஒப்பந்தம் செய்துள்ளார்.

    ‘‘இம்ரான் உலகில் நடைபெறும் பெரும்பாலான டி20 லீக்கில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். மீண்டும் ஒருமுறை விக்கெட் வீழ்த்தும் மிரட்டும் நபராக இருப்பார்’’ என ரெனேகட்ஸ் அணி தெரிவித்துள்ளது. 
    ஆர்சிபி - மும்பை இந்தியன்ஸ் போட்டியின்போது மோதிக்கொண்ட ஹர்திக் பாண்ட்யா - கிறிஸ் மோரிஸ் ஆகியோர் நடுவரின் கண்டிப்புடன் தப்பித்தனர்.
    ஐபிஎல் தொடரில் அபு தாபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஏறக்குறைய பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் ஆக்ரோசமக விளையாடினர்.

    மும்பை அணி சேஸிங் செய்தபோது 19-வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா எதிர்கொண்டார். அந்த ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். 16 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் மூன்று பந்தில் மூன்று ரன்கள் அடித்தது மும்பை இந்தியன்ஸ்.

    4-வது பந்தை ஹர்திக் பாண்ட்யா சிக்சருக்கு தூக்கினார். 15-வது ஓவரை வீசும்போது கிறிஸ் மோரிஸ் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் வைடு கோட்டை ஒட்டி பந்து வீசினார். இதனால் கடுப்பான ஹர்திக் பாண்ட்யா சிக்ஸ் அடித்ததும் கிறிஸ் மோரிஸை நோக்கி ஏதோ கூறினார்.

    அடுத்த பந்தில் ஹர்திக் பாண்ட்யா அவுட்டானார். இதனால் கோபத்துடன் இருந்த கிறிஸ் மோரிஸ் கடும் கோபத்தில் ஹர்திக் பாண்ட்யாவை நோக்கி ஏதோ கூறினார். உடனே ஹர்திக் பாண்ட்யா டிரஸ்ஸிங் ரூம் நோக்கி கையை காட்டு ஏதோ கூறிச் சென்றார்.

    இருவருடைய செயலும் ஐபிஎல் வீரர்களின் நன்னடத்தை மீறி்ய செயலாக இருந்தது. லெவன்-1 என்பதால் நடுவரின் கண்டிப்புடன் இருவரும் தப்பித்தனர்.
    சூர்ய குமாரை விராட் கோலி சீண்ட நினைத்த போதிலும், அவர் அமைதியாக சென்ற சம்பவம் விராட் கோலி மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் பேட்ஸமேன் சூர்யகுமார் யாதவ் என்று கூறினாலே, சற்றென்று எல்லோருடைய அறிவுக்கும் எட்டுவது அவரை ஏன் இந்திய அணியில் சேர்க்கவில்லை என்பதுதான்.

    ஐபிஎல் 13-வது சீசனில் சிறப்பாக விளையாடிய போதிலும் அவருக்கு ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

    ரஞ்சி டிராபியில் இருந்து ஐபிஎல் தொடரை வரை சிறப்பாக விளையாடிய போதிலும் தேர்வுக்குழு இவரை திரும்பிக்கூட பார்க்கவில்லை.

    இந்த நிலையில்தான் இந்திய அணி கேப்டனாக இருக்கும் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் விளையாடி ஆர்சிபி 164 ரன்கள் அடித்தது. பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களம் இறங்கியது.

    சூர்யகுமார் யாதவ் ஒரு முனையில் நின்று அதிரடியாக விளையாடி தனி நபராக அணியை வெற்றி பெற வைத்தார். சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது விராட் கோலி அவரிடம் சென்று ஸ்லெட்ஜிங் செய்யும் வகையில் ஏதோ கூறினார்.

    சூர்யகுமார் யாதவும் ஏதோ கூறுவார் என்று விராட் கோலி நினைத்தார். ஆனால் ஏதும் பேசாமல் கோலியை கண்டு கொள்ளாமல் சென்று விட்டார்.

    ஏற்கனவே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை என்ற கடுப்பில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் சீண்டலால் கோபம் அடைவார் என்ற கோலி நினைத்தது தவறானது.

    அவரது சீண்டலுக்கும் சூர்யகுமார் யாதவ் அமைதிக்கும் இடையில் ஆயிரம் அர்த்தம் உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே டுவிட்டர்வாசிகள் விராட் கோலிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    79 ரன்கள் அடித்து வெற்றி பெறச் செய்ததும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களை பார்த்து கவலைப்பட வேண்டாம். நான் இருக்கிறேன் எனத் தெரிவித்தார்.
    ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் இதுவரை இரண்டு வீரர்களால் இந்திய அணியில் இடம்பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு வீரர்களின் திறமையை கண்டறிய சிரமமாக இருக்கும். ரஞ்சி டிராபி போட்டிகள் நடைபெற இருக்கும் இடத்திற்கு சென்று வீரர்களின் ஆட்டத்தை கவனிக்க வேண்டும்.

    விஜய் ஹசாரே போன்ற ஒருநாள் தொடர் நடைபெறும் இடத்திற்கும் செல்வார்கள். ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட பின் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் திறமையை வைத்து அணியில் சேர்க்கப்படுகிறார்கள்.

    அந்த வகையில் இந்திய அணிக்கு கண்டெடுத்த தலைசிறந்த வீரர்தான் பும்ரா. இவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீச, பின்னர் அணியில் சேர்க்கப்பட்டார். மேலும் ஹர்திக் பாண்ட்யாவும் அதே போன்றுதான்.

    ஆனால் சில வீரர்கள் எவ்வளவுதான் விளையாடினாலும் தேர்வாளர்கள் கண்ணில் படுவதில்லை. இந்த அதிர்ஷ்டம் இல்லாத வீரர்கள் இருவர் எனக் கூறலாம். ஒருவர் கொல்கத்தா அணிக்காக விளையாடும் நிதிஷ் ராணா. மற்றொருவர் சூர்யகுமார் யாதவ். இருவரும் ஐபிஎல் தொடரில் இதுவரை 10 அரைசதம் அடித்துள்ளனர். ஆனால் இதுவரை இந்திய அணியில் இடம் பெற முடியாமல் இருக்கின்றனர்.
    இந்திய தொடருக்கான ஆஸ்திரேலியாவின் ஒயிட்-பால் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரோன் பிஞ்ச் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    இந்திய அணி நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. முதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரும், அதபின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரும், அதன்பின் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஆரோன் பிஞ்ச், 2. சீன் அப்போட், 3. ஆஷ்டோன்  அகர், 4. அலேக்ஸ் கேரி, 5. பேட் கம்மின்ஸ், 6. கேமரூன் க்ரீன், 7. ஜோஷ் ஹசில்வுட், 8. ஹென்ரிக்ஸ், 9. மார்னஸ் லாபஸ்சேன், 10. க்ளென் மேக்ஸ்வெல், 11. டேனியல் சாம்ஸ், 12. கேன் ரிச்சர்ட்சன், 13. ஸ்டீவன் ஸ்மித், 14. மிட்செல் ஸ்டார்க், 15. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 16. மேத்யூ வடே, 17. டேவிட் வார்னர், 18. ஆடம் ஜம்பா.
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி 8 வெற்றிகள் பெற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்யவில்லை.
    ஐபிஎல் தொடர் தொடங்கியபோது முதல் 12 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 8 அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. இதனால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.

    தொடர் செல்ல செல்ல மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஆர்சிபி அணிகள் ஆதிக்கம் செலுத்தின. என்றாலும் கடைசி சில போட்டிகளில் இந்த மூன்று அணிகளும் தோல்வியை சந்தித்தன.

    வழக்கமாக 8 போட்டிகளில் வெற்றி 16 புள்ளிகள் பெற்றாலே பிளேஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்ய முடியும். ஆனால் ஆர்சிபி வீழ்த்தி 8 வெற்றிகள் பெற்ற போதிலும் மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கபடவில்லை.

    இதற்கு காரணம் உள்ளது. 8 அணிகளும் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ளன. ஆர்சிபி, டெல்லி அணிகள் 7 வெற்றிகள் பெற்றுள்ளன. கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் 6 வெற்றிகள் பெற்றுள்ளன.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐந்து வெற்றிகள் பெற்றுள்ளன.

    மும்பை அடுத்த இரண்டு போட்டிகளில் டெல்லி, ஐதராபாத்திடம் தோல்வியடைந்தால் 16 புள்ளிகளுடன் இருக்கும்.

    கொல்கத்தா சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகளை வீழ்த்தினால் 16 புள்ளிகள் பெறும், ஆர்சிபி ஐதராபாத், டெல்லியை வீழ்த்தினால் 20 புள்ளிகள் பெறும். கிங்ஸ் லெவன் பஞ்சாப் ராஜஸ்தான், சிஎஸ்கே அணிகளை வென்றால் 16 புள்ளிகள் பெறும்.

    டெல்லி மும்பையை வீழ்த்தினால் 16 புள்ளிகள் பெறும். இதனால் மும்பை இந்தியன்ஸ் இன்னும் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் நெட் ரன்ரேட் அதிகமாக இருப்பதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கவலை இல்லை.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா விராட் கோலியை வீழ்த்தியதன் மூலம் 100-வது விக்கெட்டை பதிவு செய்துள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி-யை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ். முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபியை 164 ரன்னில் கட்டுப்படுத்தியது மும்பை இந்தியன்ஸ். இதற்கு முக்கிய காரணமாக பும்ராவின் பந்து வீச்சு. அவர் 4 ஓவரில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    முதல் விக்கெட்டாக விராட் கோலியை வீழ்த்திய போது ஐபிஎல் கிரிக்கெட்டில் 100-வது விக்கெட்டை பதிவு செய்தார் பும்ரா.

    இதில் ஒரு விசேசம் என்னவென்றால், பும்ரா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக விராட் கோலியை வீழ்த்தியதுதான் முதல் விக்கெட்டாகும். தற்போது 100-வது விக்கெட்டாக அதே அணியின் விராட் கோலியை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
    டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இயன் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.

    துபாய்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று துபாயில் நடக்கும் 49-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-இயன் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சென்னை அணி ஏற்கனவே பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. 12 ஆட்டங்களில் 4 வெற்றி மட்டுமே பெற்று 8 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள இரு ஆட்டங்களிலும் ஆறுதல் வெற்றியை பெற சென்னை சூப்பர் கிங்ஸ் முயலும்.

    சென்னை அணியில் அம்பதி ராயுடு, டுபெலிசிஸ், சாம் கர்ரன், ஜடேஜா போன்ற வீரர்கள் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் (பெங்களூருக்கு எதிராக) இளம் வீரர் ருது ராஜ், கெய்க்வாட் அரை சதம் அடித்து நம்பிக்கை அளித்தார். இன்றைய போட்டியிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். பந்து வீச்சில் தீபக் சாகர், ‌ஷர்துல் தாகூர், இம்ரான் தாகிர் ஆகியோர் உள்ளனர்.

    ஏற்கனவே கொல்கத்தாவிடம் சென்னை அணி தோற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொல்கத்தாவின் அடுத்த சுற்று வாய்ப்பை குறைக்க சென்னை அணி தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் 6 வெற்றிகள் பெற்று 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் ரன்ரேட் (-0.479) மோசமாக இருக்கிறது. இதனால் அந்த அணிக்கு எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும் மிகப்பெரிய வெற்றி பெறவேண்டியது அவசியம ஆகும். ஒரு ஆட்டத்தில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கிவிடும்.

    கொல்கத்தா அணியில் சுப்மான்கில், நிதிஷ்ரானா, இயன் மார்கன், சுனில்நரேன், பெர்குசன், வருண் சக்ரவர்த்தி, கும்மின்ஸ் ஆகியோர் உள்ளனர். கொல்கத்தா அணி இன்று வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்குகிறது.

    சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாததற்கு அவர் மிகவும் ஏமாற்றம் அடைந்திருப்பார் என்று மும்பை அணியின் பொறுப்பு கேப்டன் போல்லார்ட் கூறியுள்ளார்.

    பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் 79 ரன் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். இதுகுறித்து மும்பை அணியின் பொறுப்பு கேப்டன் போல்லார்ட் கூறியதாவது:-

    தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு ஒருவர் நிலைத்து நின்று ஆடியதை நினைத்துப் பாருங்கள். அதுபோன்ற மந்தமான நிலையில் யாராவது ஒருவர் எப்போது இப்படி நிலைத்து நின்று விளையாடுகிறார்களா?.

    சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கு தேர்வு செய்யப் படாததற்கு அவர் மிகவும் ஏமாற்றம் அடைந்திருப்பார். அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். மீண்டும் ஒரு தனி நபராக நீங்கள் தொடர்ந்து நிலைத்திருந்தால் உங்களுக்கு வெகுமதி கிடைக்கும். எதுவும் அதன் காலத்துக்கு முன்பு நடக்காது.

    நான் டிவில்லியர்சுக்கு பந்து வீச முடிவு செய்தேன். கடைசி ஓவருக்காக நான் காத்திருந்திருக்கலாம். ஆனால் யாராவது அதிக ரன்களை கொடுக்க வேண்டி இருந்தால் அது நானாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு பந்து வீசினேன்.

    இந்த போட்டித்தொடரில் பும்ரா தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நாங்கள் மீண்டும் ஒரு அணியாக சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவோம் என்றார்.

    ×