search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூர்யகுமார் யாதவ், விராட் கோலி
    X
    சூர்யகுமார் யாதவ், விராட் கோலி

    ஆயிரம் அர்த்தம் சொல்லும் விராட் கோலி சீண்டலுக்கு சூர்யகுமார் யாதவின் அமைதி

    சூர்ய குமாரை விராட் கோலி சீண்ட நினைத்த போதிலும், அவர் அமைதியாக சென்ற சம்பவம் விராட் கோலி மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் பேட்ஸமேன் சூர்யகுமார் யாதவ் என்று கூறினாலே, சற்றென்று எல்லோருடைய அறிவுக்கும் எட்டுவது அவரை ஏன் இந்திய அணியில் சேர்க்கவில்லை என்பதுதான்.

    ஐபிஎல் 13-வது சீசனில் சிறப்பாக விளையாடிய போதிலும் அவருக்கு ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

    ரஞ்சி டிராபியில் இருந்து ஐபிஎல் தொடரை வரை சிறப்பாக விளையாடிய போதிலும் தேர்வுக்குழு இவரை திரும்பிக்கூட பார்க்கவில்லை.

    இந்த நிலையில்தான் இந்திய அணி கேப்டனாக இருக்கும் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் விளையாடி ஆர்சிபி 164 ரன்கள் அடித்தது. பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களம் இறங்கியது.

    சூர்யகுமார் யாதவ் ஒரு முனையில் நின்று அதிரடியாக விளையாடி தனி நபராக அணியை வெற்றி பெற வைத்தார். சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது விராட் கோலி அவரிடம் சென்று ஸ்லெட்ஜிங் செய்யும் வகையில் ஏதோ கூறினார்.

    சூர்யகுமார் யாதவும் ஏதோ கூறுவார் என்று விராட் கோலி நினைத்தார். ஆனால் ஏதும் பேசாமல் கோலியை கண்டு கொள்ளாமல் சென்று விட்டார்.

    ஏற்கனவே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை என்ற கடுப்பில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் சீண்டலால் கோபம் அடைவார் என்ற கோலி நினைத்தது தவறானது.

    அவரது சீண்டலுக்கும் சூர்யகுமார் யாதவ் அமைதிக்கும் இடையில் ஆயிரம் அர்த்தம் உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே டுவிட்டர்வாசிகள் விராட் கோலிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    79 ரன்கள் அடித்து வெற்றி பெறச் செய்ததும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களை பார்த்து கவலைப்பட வேண்டாம். நான் இருக்கிறேன் எனத் தெரிவித்தார்.
    Next Story
    ×