என் மலர்
விளையாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல், விராட் கோலி ஐசிசி தரவரிசையில் முன்னேறியுள்ளனர்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுடனான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது. இந்தத் தொடரை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது கே.எல். ராகுல், தவான், கோலி, பாண்ட்யா, ஜடேஜா, சாஹல் மற்றும் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் ஆகியோரின் அதிகப்படியான பங்களிப்பு என சொல்லலாம்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையை அறிவித்தது. இதில் இந்தியாவின் கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் கோலி புள்ளிகளில் முன்னேற்றம் அடைந்து டாப் 10 இடங்களுக்குள் உள்ளனர். இதில் கே.எல். ராகுல் மூன்றாவது இடத்தை தக்கவைத்துள்ளார்.
விராட் கோலி ஒன்பதாம் இடத்திலிருந்து எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவுடனான தொடரில் ராகுல் 81 ரன்களை எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் இங்கிலாந்தின் டேவிட் மலனும், இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானின் பாபர் அசாமும் உள்ளனர்.
தென்ஆப்பிரிக்கா அணி 14 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் விளையாட வருகிறது என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன் என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
2009-ம் ஆண்டும் இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர். அதில் இருந்து 2019-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் சென்று விளையாட முன்னணி அணிகள் மறுத்துவிட்டனர்.
2019-க்குப் பிறகு இலங்கை, வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடியுள்ளன. இங்கிலாந்து அணி விளையாட இருக்கிறது. தென்ஆப்பிரிக்கா அணி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டு டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் செல்வதை உறுதி செய்துள்ளது.
இந்த செய்தியால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் வந்து விளையாடுவதை தென்ஆப்பிரிக்கா உறுதி செய்த செய்தியை கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
உள்ளூர் மைதானத்தில் முதன்முறையாக டெஸ்ட் அணி கேப்டனக களம் இறங்குவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். 2021 வருடத்தை பார்த்தீர்கள் என்றால், நாங்கள் எங்களை விட தரவரிசையில் முன்னணியில் இருக்கும் அணிகளுடன் மோத உள்ளோம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.
இது பாகிஸ்தான் அணியின் கற்றுக்கொள்வது மற்றும் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல. அனைத்து வடிவிலான கிரிக்கெட்டி தரவரிசையிலும் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்பு’’ என்றார்.
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, இளம் துப்பாக்கிசூடு வீராங்கனை இளவேனில் வாலறிவான் ஆகியோருக்கு 2020-ம் ஆண்டுக்கான FICCI-யின் விளையாட்டு விருது வழங்கப்படுகிறது.
விளையாட்டுத்துறையில் சிறப்பான செயல்படும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். அதன்படி 2019-2020 சீசனில் சிறப்பாக செயல்பட்ட மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, துப்பாக்கிசூடு போட்டியில் அசத்திய இளம் வீராங்கனை இளவேனில் வாலறிவான் ஆகியோருக்கு 2020-ம் ஆண்டுக்கான FICCI-யின் விளையாட்டு விருது வழங்கப்படுகிறது.
ஒலிம்பிக் போட்டிக்காக பஜ்ரங் புனியா அமெரிக்காவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (எப்ஐசிசிஐ) சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக விளையாடிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
‘‘என்னுடைய இலக்கே, எதிர்காலத்தில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி நாட்டிற்காக ஏராளமான பதக்கங்களை வாங்கி கொடுக்க வேண்டும் என்பதுதான். சில அங்கீகாரம் சிறப்பாக செயல்பட உத்வேகம் அளிக்கும். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது’’ என பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.
இளவேனில் ‘‘எனக்கு ஆதரவாக இருந்த என்னுடைய குடும்பத்திற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய ஆலோசகர் ககன் நரங், பயிற்சியாளர் நேகா சவுகான் எப்போதும் என்மீது நம்பிக்கை வைத்தவர்கள். தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மெஸ்சி விளையாடும் பார்சிலோனாவை ரொனால்டோ விளையாடும் யுவென்டஸ் அணி தோற்கடித்தது.
கால்பந்தில் இந்த தலைமுறையில் மெஸ்சி, ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் தலைசிறந்த வீரராக கருதப்படுகிறார்கள். இதில் மெஸ்சிக்கும், ரொனால்டோவுக்கும் இடையில்தான் கடும்போட்டி. இருவரும் ஸ்பெயின் நாட்டின் நடைபெறும் லா லிகா தொடரில் நேருக்கு நேர் சுமார் 10 ஆண்டுகளாக விளையாடினர். மெஸ்சி பார்சிலோனா அணிக்காகவும், ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடினர்.
அப்போது இருவரும் மோதும் ஆட்டத்தை காண கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். ரொனால்டோ கடந்த 2018-ல் இத்தாலியின் யுவென்டஸ் அணிக்கு சென்றுவிட்டார். அதன்பின் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் நேருக்குநேர் மோதியது கிடையாது.
இந்த நிலையில் கிளப் அணிகளுக்கு இடையிலான ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக்கில் நேற்று பார்சிலோனா - யுவென்டஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இருவரும் நேருக்குநேர் சந்தித்து கொண்டனர். இந்த போட்டியில் யுவென்டஸ் 3-0 என வெற்றி பெற்றது. கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி வாய்ப்பு மூலம் இரண்டு கோல்கள் அடித்தார். மெஸ்சி கோல் அடிக்க முடியாமல் ஏமாற்றம் அளித்தார்.

இந்த நிலையில் மெஸ்சி எனக்கு ஒருபோதும் எதிரி கிடையாது என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறிகையில் ‘‘நான் எப்போதும் மெஸ்சியுடன் ஒரு நல்லுறவை கொண்டிருந்தேன். அவரை நான் ஒருபோதும் எதிரியாக நினைத்ததில்லை.
அவர் எப்போதுமே அவருடைய அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பார். நானும் அதேபோல் என்னுடைய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க முயற்சிப்பேன். அவருடன் நல்லதையே பெற்றுள்ளேன். அவரிடம் கேட்டாலும் இதைத்தான் சொல்வார் என்பதை என்னால் உறுதியாக கூற இயலும். 12, 13 வருடமாக பரிசுகளை அவருடன் பகிர்ந்துள்ளேன்’’ என்றார்.
கால்பந்தின் உயரிய விருதான பலோன் டி'ஆர்-யை கடந்த 12 வருடத்தில் இருவரும் 11 முறை வென்றுள்ளனர்.
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
இலங்கை அணி 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியபோது பயங்கரவாதிகள் இலங்கை வீரர்களை குறிவைத்து துப்பாக்கிசூடு நடத்தினர். இதனால் வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர். அதன்பின் சுமார் 12 வருடத்திற்கு மேலாக எந்த அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை.
பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி புறக்கணித்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட் நடைபெற்ற முயற்சி எடுத்துள்ளது.
ஜிம்பாப்வே இரண்டு முறை பாகிஸ்தான் சென்றுள்ளது. வங்காளதேசம் அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் விளையாடியுள்ளது. இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்று விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றால் இங்கிலாந்து பாகிஸ்தான் செல்வது ஒத்தவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த வருடம் தொடக்கத்தில் தென்ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட், மூன்று டி20 போட்டிகளில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணி கடந்த 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடியிருந்தது. அதன்பின் 14 ஆண்டுகளில் கழித்து பாகிஸ்தான் செல்கிறது. போட்டிகள் கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் மைதானங்களில் நடக்க இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்திவ் படேல் அனைத்து வகை போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியில், விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என இரண்டு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டவர் பார்திவ் படேல். 17 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான பார்த்திவ் படேல், இந்திய அணிக்காக 25 டெஸ்ட் போட்டிகள், 28 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். கடைசியாக 2018ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது இந்திய அணியில் இடம்பெற்று விளையாடினார். அதன்பின்னர் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக பார்த்திவ் படேல் அறிவித்துள்ளார். இத்தகவலை அவர் டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவுக்காக விளையாடுவதற்கு வந்தபோது, 17 வயது சிறுவனான தன் மீது பி.சி.சி.ஐ அதிக நம்பிக்கை வைத்தாக கூறிய பார்த்திவ் படேல், தன் இளம் கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில், ஒரு வழிகாட்டும் சக்தியாகவும், வாய்ப்பு வழங்கியமைக்காகவும் பிசிசிஐக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் தனது கிரிக்கெட் பயணம் முழுவதிலும் தனக்கு ஆதரவாக இருந்த, சொந்த மாநில சங்கமான குஜராத் கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் காயத்தில் இருந்து குணமாகாததால் இந்தியாவுக்கு எதிரான 17-ந் தேதி அடிலெய்டில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் ஆடவில்லை.
அடிலெய்டு:
ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் உலகின் சிறந்த அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவர். தொடக்க வீரரான அவர் பந்து வீச்சாளர்களுக்கு எப்போதுமே அச்சுறுத்தலாக இருப்பார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டியில் வார்னர் சிறப்பாக ஆடினார். முதல் ஆட்டத்தில் 69 ரன்னும், 2-வது போட்டியில் 83 ரன்னும் எடுத்தார்.
2-வது போட்டியில் பீல்டிங்கின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. தசை பிடிப்பால் அவதிப்பட்ட அவர் உடனடியாக ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். இதனால் 3-வது போட்டியில் ஆடவில்லை. இதேபோல 20 ஓவர் தொடரிலும் அவர் காயத்தால் விலகியிருந்தார்.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிராக வருகிற 17-ந் தேதி அடிலெய்டில் தொடங்கும் முதல் டெஸ்டில் (பகல்-இரவு) வார்னர் ஆடவில்லை. இதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
காயத்தில் இருந்து குணமடையததால் அவர் ஆடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் வார்னர் இல்லாதது ஆஸ்திரேலியாவுக்கு பாதிப்பே.
முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு இந்திய அணியுடன் ஆஸ்திரேலிய ஏ அணி 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதற்கான ஆஸ்திரேலிய ஏ அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. தற்போது இந்த அணியில் தொடக்கவீரர் ஜோபர்ன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

நடராஜன் டி20 உலக கோப்பைக்கு எங்களுக்கு கிடைத்த சொத்து என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.
மெல்போர்ன்:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 நிலைகளிலான போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், ஒரு நாள் போட்டி தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடந்த இருபது ஓவர் போட்டியில் இடதுகை பந்து வீச்சாளர் நடராஜன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்திய அணியின் முகமது சமி மற்றும் பும்ரா விளையாடாத நிலையில் நடராஜன் தனக்கு கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தினார். தனது அறிமுக போட்டியிலேயே அவரது அற்புதமான ஆட்டம் வெளிப்பட்டது. டி 20 தொடரில் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கு எங்களுக்கு கிடைத்த சொத்து நடராஜன் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.
இதுதொடர்பாக கேப்டன் விராட் கோலி கூறுகையில், பும்ரா மற்றும் சமி இல்லாத சூழலில் சிறந்த முறையில் நடராஜன் விளையாடினார். நெருக்கடியான நிலையில் உண்மையில் நின்று விளையாடினார். சர்வதேச அளவில், நடைபெற்ற போட்டியில் சிறந்த ஆட்டத்தினை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
அவர் மிக தேர்ந்தவராக, கடின உழைப்பு மற்றும் பணிவு கொண்டவராகவும் இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இடதுகை பந்து வீச்சாளர் என்பவர் எப்பொழுதும் அணிக்கு கிடைக்க கூடிய ஒரு சொத்து. இதேபோன்று களத்தில் அவரது ஆட்டம் தொடர்ந்து வெளிப்பட்டால், அடுத்த ஆண்டு நடைபெறும் சர்வதேச டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு சிறந்த ஒன்றாக இருக்கும் என தெரிவித்தார்.
தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் நடராஜன் தான் என அவர் கையில் கோப்பையை வழங்கி அழகு பார்த்தார் ஹர்திக் பாண்ட்யா.
சிட்னி:
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
ஒருநாள் போட்டி தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி, தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டியில் பங்கேற்றது. கான்பெர்ராவில் நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்திலும், சிட்னியில் நடந்த 2-வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தியது.
இதற்கிடையே, இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னி நகரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் வேட் 80 ரன்னும், மேக்ஸ்வெல் 54 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
187-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை துவக்கியது. தொடக்க வீரர் கேஎல் ராகுல் ரன் எதுவும் இன்றி வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
கேப்டன் விராட் கோலி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. அதிரடியாக ஆடிய விராட் கோலி 85 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது.
ஆனாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
ஹர்திக் பாண்ட்யாவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால், அதை பெற்றுக் கொண்ட ஹர்திக், அந்த விருதுக்கு தகுதியானவர் தமிழக வீரர் நடராஜன் என்று கூறி கோப்பையை அவரிடம் வழங்கினார். இதேபோல, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலியும், 20 ஓவர் தொடருக்கான கோப்பையை நடராஜனிடம் வழங்கி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, மும்பை சிட்டி எப்.சி.யை சந்திக்கிறது.
கோவா:
11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, மும்பை சிட்டி எப்.சி.யை சந்திக்கிறது. சென்னை அணி முதல் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் டிராவும் (கேரளாவுடன்), முந்தைய ஆட்டத்தில் (பெங்களூருக்கு எதிராக) தோல்வியும் கண்டது.
சென்னை அணி வெற்றிப்பாதைக்கு திரும்புமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். மும்பை அணியை பொறுத்தமட்டில் 4 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் முதலிடத்தில் உள்ளது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
இதற்கிடையே நேற்று இரவு நடந்த பெங்களூரு எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

மேத்யூ வேட்டுக்கு டி.ஆர்.எஸ் முறைப்படி உரிய நேரத்தில் அவுட் கேட்டு அப்பீல் செய்ய தாமதமானது தவறு தான் என்று விராட்கோலி ஒப்புக்கொண்டுள்ளார்.
சிட்னி:
இந்திய அணிக்கு எதிராக சிட்னியில் நேற்று நடந்த கடைசி 20 ஓவர் போட்டியில் 11-வது ஓவரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் வீசிய பந்து ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ வேட்டின் காலில் தாக்கியது. இதற்கு இந்திய அணியினர் எல்.பி.டபிள்யூ. கேட்டு முறையிட்டனர். ஆனால் நடுவர் அவுட் இல்லை என்று அறிவித்தார். நடுவரின் முடிவை எதிர்த்து 15 வினாடிக்குள் டி.ஆர்.எஸ். முறையில் அப்பீல் செய்யலாம். அப்படி செய்யும்பட்சத்தில் 3-வது நடுவர் டெலிவிஷன் ‘ரீபிளேவை’ பார்த்து முடிவை அறிவிப்பார். ஆனால் இந்திய அணியினர் குறிப்பிட்ட நேரம் முடிந்த பிறகு தான் அப்பீல் செய்தனர். இதற்கு மேத்யூ வேட் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அந்த அப்பீலை ஏற்க நடுவர் மறுத்து விட்டார். அப்போது 50 ரன்னில் இருந்த மேத்யூவேட் 80 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். டி.ஆர்.எஸ் முறைப்படி உரிய நேரத்தில் அப்பீல் செய்யப்பட்டு இருந்தால் மேத்யூ வேட் மேலும் 30 ரன்கள் சேர்த்து இருக்க வாய்ப்பு கிடைத்து இருக்காது. ஏனெனில் டெலிவிஷன் ரீபிளேவில் அந்த பந்து ஸ்டம்பை தாக்குவது தெளிவாக தெரியவந்தது.
இந்த விவகாரத்தில் தங்களது காலதாமத தவறை விராட்கோலி ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், ‘அந்த எல்.பி.டபிள்யூ. விசித்திரமான ஒன்றாகும். அது குறித்து நாங்கள் விவாதித்து அப்பீல் செய்ய செல்லுகையில் காலஅவசாகம் முடிந்து விட்டது. இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்று நடுவர் தெரிவித்து விட்டார். இதுபோன்ற உயர்ந்த நிலை போட்டிகளில் காலதாமத தவறை நாங்கள் செய்யக்கூடாது. முக்கியமான ஆட்டத்தில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்’ என்றார்.

சிட்னியில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் விராட் கோலியைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்ப இந்தியா 12 ரன்னில் தோல்வியை தழுவியது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. மேத்யூ வடே 53 பந்தில் 80 ரன்களும், மேக்ஸ்வெல் 36 பந்தில் 54 ரன்களும் அடித்தனர்.
பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர் கேஎல் ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தர். தவான் - கோலி ஜோடி 8.5 ஓவரில் 74 ரன்கள் குவித்தது.
அதன்பின் வந்த சஞ்சு சாம்சன் (10), ஷ்ரேயாஸ் அய்யர் (0) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 41 பந்தில் 50 ரன்கள் அடித்தார். கடைசி நான்கு ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 56 ரன்கள் தேவைப்பட்டது. விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா களத்தில் இருந்ததால் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
18-வது ஓவரை ஆடம் ஜம்பா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழந்தார். அவர் 13 பந்தில் 20 ரன்கள் எடுத்து வெளியேறியதும் இந்தியாவின் தோல்வி உறுதியானது. அடுத்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்தார். அவர் 61 பந்தில் 85 ரன்கள் அடித்தார். இதனால் இந்திய அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களே அடிக்க முடிந்தது.
இதனால் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதால் இந்தியா தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.