என் மலர்
செய்திகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் (கோப்புப்படம்)
14 ஆண்டுகளுக்குப்பின் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்கிறது தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
இலங்கை அணி 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியபோது பயங்கரவாதிகள் இலங்கை வீரர்களை குறிவைத்து துப்பாக்கிசூடு நடத்தினர். இதனால் வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர். அதன்பின் சுமார் 12 வருடத்திற்கு மேலாக எந்த அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை.
பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி புறக்கணித்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட் நடைபெற்ற முயற்சி எடுத்துள்ளது.
ஜிம்பாப்வே இரண்டு முறை பாகிஸ்தான் சென்றுள்ளது. வங்காளதேசம் அணி டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் விளையாடியுள்ளது. இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்று விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றால் இங்கிலாந்து பாகிஸ்தான் செல்வது ஒத்தவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த வருடம் தொடக்கத்தில் தென்ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட், மூன்று டி20 போட்டிகளில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணி கடந்த 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடியிருந்தது. அதன்பின் 14 ஆண்டுகளில் கழித்து பாகிஸ்தான் செல்கிறது. போட்டிகள் கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் மைதானங்களில் நடக்க இருக்கிறது.
Next Story






