என் மலர்
செய்திகள்

இளவேனில், பஜ்ரங் புனியா
பஜ்ரங் புனியா, இளவேனில் வாலறிவான் ஆகியோருக்கு FICCI-யின் விளையாட்டு விருது
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, இளம் துப்பாக்கிசூடு வீராங்கனை இளவேனில் வாலறிவான் ஆகியோருக்கு 2020-ம் ஆண்டுக்கான FICCI-யின் விளையாட்டு விருது வழங்கப்படுகிறது.
விளையாட்டுத்துறையில் சிறப்பான செயல்படும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். அதன்படி 2019-2020 சீசனில் சிறப்பாக செயல்பட்ட மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, துப்பாக்கிசூடு போட்டியில் அசத்திய இளம் வீராங்கனை இளவேனில் வாலறிவான் ஆகியோருக்கு 2020-ம் ஆண்டுக்கான FICCI-யின் விளையாட்டு விருது வழங்கப்படுகிறது.
ஒலிம்பிக் போட்டிக்காக பஜ்ரங் புனியா அமெரிக்காவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (எப்ஐசிசிஐ) சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக விளையாடிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
‘‘என்னுடைய இலக்கே, எதிர்காலத்தில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி நாட்டிற்காக ஏராளமான பதக்கங்களை வாங்கி கொடுக்க வேண்டும் என்பதுதான். சில அங்கீகாரம் சிறப்பாக செயல்பட உத்வேகம் அளிக்கும். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது’’ என பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.
இளவேனில் ‘‘எனக்கு ஆதரவாக இருந்த என்னுடைய குடும்பத்திற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய ஆலோசகர் ககன் நரங், பயிற்சியாளர் நேகா சவுகான் எப்போதும் என்மீது நம்பிக்கை வைத்தவர்கள். தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
Next Story






