search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபர் அசாம்
    X
    பாபர் அசாம்

    நான் மகிழ்ச்சி அடைகிறேன்: பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம்

    தென்ஆப்பிரிக்கா அணி 14 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் விளையாட வருகிறது என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன் என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
    2009-ம் ஆண்டும் இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர். அதில் இருந்து 2019-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் சென்று விளையாட முன்னணி அணிகள் மறுத்துவிட்டனர்.

    2019-க்குப் பிறகு இலங்கை, வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடியுள்ளன. இங்கிலாந்து அணி விளையாட இருக்கிறது. தென்ஆப்பிரிக்கா அணி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டு டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் செல்வதை உறுதி செய்துள்ளது.

    இந்த செய்தியால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் வந்து விளையாடுவதை தென்ஆப்பிரிக்கா உறுதி செய்த செய்தியை கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

    உள்ளூர் மைதானத்தில் முதன்முறையாக டெஸ்ட் அணி கேப்டனக களம் இறங்குவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். 2021 வருடத்தை பார்த்தீர்கள் என்றால், நாங்கள் எங்களை விட தரவரிசையில் முன்னணியில் இருக்கும் அணிகளுடன் மோத உள்ளோம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.

    இது பாகிஸ்தான் அணியின் கற்றுக்கொள்வது மற்றும் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல. அனைத்து வடிவிலான கிரிக்கெட்டி தரவரிசையிலும் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்பு’’ என்றார்.
    Next Story
    ×