என் மலர்tooltip icon

    விளையாட்டு

    வங்காளதேச சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தினார்.
    வங்காளதேச அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஷாகிப் அல் ஹசன். சூதாட்டக்காரர்கள் தொடர்பு கொள்ள முயற்சி செய்ததை மறைத்ததாக இவருக்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. தற்போது தடைக்காலம் முடிந்து விளையாட தயாரானார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான வங்காளதேச அணியில் இடம் பிடித்தார். இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 122 ரன்னில் சுருண்டது. ஷாகிப் அல் ஹசன் சிறப்பாக பந்து வீசி 7.2 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணியால் 32.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது.

    பின்னர் 123 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களம் இறங்கியது. கேப்டனும், தொடக்க வீரருமான தமிம் இக்பால் 44 ரன்கள் அடிக்க வங்காள தேசம் 33.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு டேனியல் சாம்ஸ் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோரை கொடுத்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்.
    2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதனால் வீரர்களை தக்கவைப்பது, விடுவிப்பது குறித்த தகவல்களை இன்றைக்குள் தெரிவிக்க 8 அணிகளிடமும் ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

    அதன்படி ஒவ்வொரு அணியும் இன்று தக்கவைத்த, விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. சில அணிகள் மற்ற அணிகளுக்கு வீரர்களை மாற்றம் செய்யலாம்.

    அந்த வகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் இரண்டு ஆல்-ரவுண்டர்களான டேனியல் சாம்ஸ், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கொடுத்துள்ளது.
    மும்பை அணி லசித் மலிங்கா உள்பட 7 வீரர்களை விடுவிக்க, ஆர்சிபி ஆரோன் பிஞ்ச், கிறிஸ் மோரிஸ் உள்பட முக்கிய வீரர்களை விடுவித்துள்ளது.
    ஐபிஎல் தொடரில் விளையாடும் 8 அணிகளும் விடுவித்துள்ள வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    மும்பை இந்தியன்ஸ்: லசித் மலிங்கா, நாதன் கவுல்டர்-நைல், ஜேம்ஸ் பேட்டின்சன், மிட்செல் மெக்கிளெனகன், ரூதர்போர்டு, திக்விஜய் தேஷ்முக், பிரின்ஸ் பல்வான்ட் ராய்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: மொயீன் அலி, கிறிஸ் மோரிஸ், இசுரு உதானா, டேல் ஸ்டெயின், உமேஷ் யாதவ், ஷிவம் துபே, குர்கீரத் மான், பவன் நெஹி

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: டாம் பாண்டன், கிறிஸ் க்ரீன், நிகில் நாயக், சித்தேஷ் லாட், எம். சித்தார்த்

    ராஜஸ்தான் ராயல்ஸ்: ஸ்டீவ் ஸ்மித், அங்கித் ராஜ்பூட், ஒஷானே தாமஸ், ஆகாஷ் சிங், வருண் ஆரோன், டாம் கர்ரன், அனிருதா ஜோஷி, ஷஷாங்க் சிங்

    கிங்ஸ் லெவன் பஞ்சாப்: மேக்ஸ்வெல், ஷெல்டன் காட்ரெல், கே.கவுதம், முஜீப் உர் ரஹ்மான், ஜிம்மி நீசம், ஹர்துஸ் வில்ஜோன், கருண் நாயர், தஜிந்தர் சிங், சுசித்

    டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஜேசன் ராய், சந்தீப் லாமிச்சேன், அலேக்ஸ் கேரி, கீமோ பால், தேஷ்பாண்டே, மோகித் சர்மா

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்: சஞ்சங் யாதவ், பிரித்விராஜ், பி சந்தீப், பில்லி ஸ்டேன்லேக், பேபியன் ஆலன்
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
    2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் நடைபெற இருக்கிறது. இன்றைக்குள் (ஜனவரி 20-ந்தேதி) தக்கவைத்துள்ள வீரர்கள், வெளியேற்றியுள்ள வீரர்களின் பட்டியலை சமர்பிக்க ஐபிஎல் அணிகளுக்கு நிர்வாகம் கெடு விதித்திருந்தது.

    அதன்படி அனைத்து அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்கள் விவரம், விடுவித்த வீரர்கள் விவரத்தை வெளியிட்டுள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போதைய கேப்டனாக இருக்கும் ஸ்டீவ் ஸ்மித்தை அணியில் இருந்தே விடுவித்துள்ளது. இந்த நிலையில் புதிய கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமித்துள்ளது.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட் போட்டியின்போது காயம் அடைந்த முகமது ஷமி, கண்ணீர் விட்டு அழுததாக தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தயா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவின் கோட்டை என கூறப்படும் பிரிஸ்பேன் காபா மைதானத்திலேயே இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக்கைப்பற்றியது.

    முதல் போட்டியில் பேட்டிங் செய்தபோது முகமது ஷமி காயம் அடைந்தார். இதனால் அவர் மற்ற மூன்று போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் காயம் ஏற்பட்டபோது அவரது மனநிலை எப்படி இருந்தது என்பதை முகமது ஷமி நினைவு கூர்ந்துள்ளார்.

    இதுகுறித்து முகமது ஷமி கூறுகையில் ‘‘இந்த வெற்றி மிகப்பெரிய சாதனை. இந்திய அணியில் ஏராளமான வீரர்கள் காயம் அடைந்தனர். ரிசர்வ் வீரர்களை வைத்துக்கொண்டு அணியை ரஹானே வழிநடத்தியது பாராட்டுக்குரியதாகும்.
    முகமது ஷமி

    அறிமுகம் ஆன வீரர்கள் அவர்களுடைய ஆளுமையை வெளிக்காட்டினர்கள். மிக முக்கியமானது 2018-க்குப் பிறகு தற்போது தொடர்ந்து தொடரை கைப்பற்றியது. இந்த வரலாற்றுச் சாதனையுடன் ஒப்பிட ஏதுமில்லை. இந்தத் தொடரில் ஒரு அணியை நாம் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். பந்து வீச்சு அல்லது பேட்டிங் எதுவாக இருந்தாலும் சிறப்பாக தங்களை பணியை செய்தார்கள். இந்த வெற்றி, உலகின் எந்தவொரு இடத்திலும் அவர்களது இடத்தில் இந்திய அணியால் வெற்றி பெற முடியும் என்பது நிரூபனம் ஆகியுள்ளது.

    நான் காயம் அடையும்போது கண்ணீர் விட்டு அழுதேன். ஏனென்றல், நாங்கள் ஏராளமான திட்டங்கள் தீட்டியிருந்தோம். ஆனால் அணியில் இருந்து இடையிலேயே வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் நிர்வாகத்ததிற்கு, சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கு, அனைத்து வீரர்களுக்கும் இந்த வெற்றியை பெற்றதற்கான பெருமையை வழங்கிறேன்’’ என்றார்.
    உண்மையான அணி (இங்கிலாந்து) உங்கள் மண்ணில் விளையாடி உங்களை வீழ்த்த இருக்கிறது. அதனால் ஆஸ்திரேலியா வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டும் என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 2-1 எனவும் கைப்பற்றியது. இந்திய அணியின் வெற்றியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள் வரை வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய அணி வீரர்களும் வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதை அதிகம் கொண்டாட வேண்டாம் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்து இந்தி இந்தி மொழியில் டுவீட் செய்தார்.

    கெவின் பீட்டர்சன் அந்த டுவீட்டில் ‘‘பல தடைகளை கடந்து ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் பெற்ற வரலாற்று வெற்றியை இந்திய அணி அதிகமான அளவில் கொண்டாடி வருகிறது. எனினும், உண்மையான அணி (இங்கிலாந்து), இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்கிறது. அப்போது உங்கள் மன்ணிலேயே உங்களை வீழ்த்தும். பாருங்கள். இன்னும் இரண்டு வாரங்கள். அதிகமாக கொண்டாட வேண்டாம். தயாராகுங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

    இலங்கை அணி தற்போது இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலே மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஜோ ரூட் இரட்டை சதம் விளாச, இங்கிலாந்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பிப்ரவரி 5-ந்தேதி சென்னையில் நடக்கிறது.
    காபா மைதானத்தில் வாருங்கள் என டிம் பெய்ன் அஸ்வினை சீண்டிய நிலையில், பிரிஸ்பேனில் இந்தியா வெற்றி பெற்றதும் அஸ்வின் டிம் பெய்ன் பெயரை டேக் செய்து டுவீட் செய்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

    இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை டேக் செய்து இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் டுவீட் செய்துள்ளார்.

    அதில் அவர் பதிவிட்டுள்ளது  “காபாவிலிருந்து மாலை வணக்கம். காபாவில் என்னால் விளையாட முடியவில்லை, மன்னிக்கவும். எங்களை வரவேற்றதற்கும், இந்தக் கடினமான காலங்களில் கடுமையான கிரிக்கெட்டை விளையாடியதற்கும் நன்றி. இந்தத் தொடரை நாங்கள் என்றும் நினைவில் வைத்திருப்போம்” என்றார்.

    முன்னதாக, சிட்னி டெஸ்ட் ஆட்டத்தின்போது இந்திய அணியின் விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலியா திணறிக் கொண்டிருந்தது. அப்போது, அஸ்வின் மற்றும் பெயின் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது. அஸ்வின் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, நீ காபாவுக்கு வந்து பார் என்பதுபோல சவால் விடுத்தார் பெயின். இதற்கு அஸ்வினும், நீயும் இந்தியா வந்து பார், அதுவே உன்னுடைய கடைசி தொடராக இருக்கும் என்பதுபோல அப்போதே உடனடியாகப் பதிலளித்தார்.

    இந்த நிலையில் காபாவிலிருந்து மாலை வணக்கம் என்ற வாசகத்துடன் தொடங்கி டுவீட் செய்துள்ளார் அஸ்வின்.
    ஐபிஎல் 2021 சீசனுக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் ஹர்பஜன் சிங். முரளி விஜய், கேதர் ஜாதவ், பியூஷ் சாவ்லா ஆகியோரை விடுவித்துள்ளது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டு தடைக்காலம் முடிவடைந்து 2018-ல் களம் இறங்கியது. முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றது. 2019-ல் 2-வது இடம் பிடித்தது. ஆனால் 2020 சீசனில் மிகவும் மோசமாக விளையாடியது. முதல் அணியாக பிளே-ஆஃப்ஸ் சுற்றில் இருந்து வெளியேறியது.

    அணியில் ஏராளமான வயதான வீரர்களை வைத்துள்ளதுதான் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் விமர்சித்தினர். மேலும் சுரேஷ் ரெய்னா துபாயில் இருந்து அவசரமாக இந்தியா திரும்பினார். இதுவும் முக்கிய காரணம்.

    ஹர்பஜன் சிங்

    2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் நடைபெற இருக்கிறது. இன்றைக்குள் (ஜனவரி 20-ந்தேதி) தக்கவைத்துள்ள வீரர்கள், வெளியேற்றியுள்ள வீரர்களின் பட்டியலை சமர்பிக்க ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது.

    அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஹர்பஜன் சிங், கேதர் ஜதவ், முரளி விஜய், பியூஷ் சாவ்லா ஆகியோரை அணிணில் இருந்து விடுவித்துள்ளது. சுரேஷ் ரெய்னாவை தக்கவைத்துள்ளது.
    பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா மொத்தம் 430 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.
    துபாய்:

    பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குரிய 30 புள்ளிகளை வசப்படுத்தியது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா மொத்தம் 430 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.

    நியூசிலாந்து 420 புள்ளிகளும், ஆஸ்திரேலியா 332 புள்ளிகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஆனால் புள்ளிகளுக்குரிய சதவீதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் நிலையில் அதிலும் இந்தியா முதலிடம் (71.7 சதவீதம்) வகிக்கிறது. நியூசிலாந்து 70 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 69.2 சதவீதத்துடன் 3-வது இடத்திலும் உள்ளன.
    பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த வரலாற்று வெற்றி என் வாழ்வில் மிகப்பெரிய தருணம் என்று ரிஷப் பண்ட் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
    பிரிஸ்பேன்:

    பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியில் 2-வது இன்னிங்சில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். 

    ஆட்ட நாயகன் விருதை பெற்ற பிறகு ரிஷப் பண்ட் கூறியதாவது:

    என் வாழ்க்கையில் மிகப்பெரிய தருணமாக இந்த வெற்றி இருக்கும். இந்த டெஸ்ட் தொடர் எனக்குக் கனவுத் தொடராக இருந்தது.

    இந்திய அணி நிர்வாகம் நான் டெஸ்ட் போட்டிக்குள் இடம் பெற்றதும், அணியில் நீ முக்கியமானவர், மேட்ச் வின்னராக இருக்க வேண்டும், உன்னால் போட்டியை வெல்ல வைக்க முடியும் எனத் தொடர்ந்து எனக்கு ஊக்கமளித்து வந்தனர். இந்திய அணியை வெல்ல வைக்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் சிந்தித்து வந்தேன். அது இன்று நடந்துவிட்டது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
    இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
    புதுடெல்லி:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது.

    பிப்ரவரி 5-ம் தேதி முதல் மார்ச் 28-ம்ம் தேதி வரை இந்த கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இங்கிலாந்துடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டது.

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள்:-

    விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரோகித் சர்மா, சுக்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, விருத்திமான் சஹா, ஹர்திக் பாண்டியா, ரிஷிப் பண்ட், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப், வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், கேஎல் ராகுல் (உடல்தகுதியை பொறுத்து).

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட டி நடராஜன் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் இடம்பெறவில்லை.
    இந்தியர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார்.
    பிரிஸ்பென்:

    இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் பிரிஸ்பென் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் 329 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டி ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என இந்திய அணி வென்று காட்டியுள்ளது.

    கடந்த 1988-ல் இருந்து இந்த மைதானத்தில் நடைபெற்ற 28 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றிருந்தது. காபா டெஸ்ட் போட்டி டிராவானால் கூட அது ஆஸ்திரேலியாவின் தோல்வி என சொல்லி இருந்தார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். ஆனால் மெல்பேர்ன், காபா என இரண்டு மைதானங்களில் இந்தியா வெற்றிபெற்று, ஆஸ்திரேலிய அணியின் 32 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது.

    இந்திய அணியின் இந்த அசத்தலான வெற்றியை பலரும் பாராட்டிவருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் வெற்றி குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் கூறியதாவது:-

    இது மிகச்சிறந்த டெஸ்ட் தொடர். இதில் வெற்றியாளரும் உண்டு தோல்வியாளரும் உண்டு. டெஸ்ட் கிரிக்கெட் வெற்றிபெற்றுள்ளது. இந்த தோல்வி எங்களை மிகப்பெரிய அளவில் காயப்படுத்தப்போகிறது.

    அனைத்து பாராட்டுகளுக்கும் இந்தியா தகுதியானது. அவர்கள் சிறப்பாக விளையாடினர். இந்த தோல்வியில் இருந்து நாங்கள் நிறைய பாடங்களை கற்போம்.

    ரிஷப் பண்ட் இன்னிங்ஸ் ஹெட்டிங்லியில் பென்ஸ்டோக்ஸ் பேட்டிங்கை எனக்கு நினைவு படுத்தியது. அவர் (பண்ட்) வந்தார். அவருக்கு பயமில்லை. இதற்காவே அவர் பாராட்டுக்குரியவர்.

    சுக்மன் கில்லும் சிறப்பாக பேட்டிங் செய்தார். இந்திய அணியின் இளம்பந்துவீச்சாளர்கள் அனைத்து நேரத்திலும் எங்களை (ஆஸ்திரேலியாவை) பதற்றத்திலேயே வைத்திருந்தனர்.

    இந்திய வீரர்கள் முழுமையான வாழ்த்துக்கு தகுதியானவர்கள். எதையும் நமக்கு கொடுக்கப்பட்டு விட்டது என்பது போல் சுலபமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்தியர்களை ஒருபோதும் எளிதாக குறைத்து மதிப்பிடாதீர்கள். 1.5 பில்லியன் மக்கள் கொண்ட நாட்டில் சீனியர் அணியில் நீங்கள் (இந்தியர்கள்) விளையாடுகிறீர்கள். எனவே, நீங்கள் கடுமையாக
    உழைக்க வேண்டும். இந்தியாவை என்னால் பாரட்டாமல் இருக்க முடியவில்லை.

    என்றார்.
    ×