என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மலேசியாவின் கிசோனா செல்வதுரையை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
    பாங்காக்:

    தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 21-10, 21-12 என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் கிசோனா செல்வதுரையை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

    சிந்து அடுத்து முன்னாள் உலக சாம்பியன் ராட்சனோக் இன்டானோனை (தாய்லாந்து) சந்திக்கிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-12, 21-9 என்ற நேர் செட்டில் ரஸ்மஸ் ஜெம்கேவை (டென்மார்க்) வீழ்த்தி கால்இறுதியை எட்டினார். மற்றொரு இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 17-21, 18-21 என்ற நேர் செட்டில் மலேசியாவின் லீவ் டாரனிடம் வீழ்ந்தார். கலப்பு இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-அஸ்வினி, ஆண்கள் இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஆகிய இந்திய ஜோடிகளும் தங்களது 2-வது சுற்றில் வெற்றி கண்டு கால்இறுதியை உறுதி செய்தன.
    ஐ.எஸ்.எல். கால்பந்து 66-வது லீக் ஆட்டத்தில் மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தியது.
    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 66-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, நடப்பு சாம்பியன் ஏ.டி.கே. மோகன் பகானை எதிர்கொண்டது. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், ஷாட் அடிப்பதிலும் மோகன் பகான் அணி ஆதிக்கம் செலுத்திய போதிலும் அவ்வளவு எளிதில் சென்னை அணியின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை.

    ஒரு வழியாக கடைசி நிமிடத்தில் மோகன் பகான் வீரர் டேவிட் வில்லியம்ஸ் கோல் அடித்தார். முடிவில் மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி 7-வது வெற்றியை ருசித்தது. சென்னை அணிக்கு இது 4-வது தோல்வியாகும். இன்றைய லீக் ஆட்டத்தில் (இரவு 7.30மணி) ஈஸ்ட் பெங்கால்-மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன.
    டோனி போன்ற ஜாம்பவான்களுடன் என்னை போன்ற சிறிய வீரர்களை ஒப்பிடுவது நல்ல விஷயம் அல்ல என இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் கூறியுள்ளார்
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு டெல்லி வந்திறங்கிய இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம், உங்களை டோனியுடன் ஒப்பிட்டு பேசுகிறார்களே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு 23 வயதான ரிஷாப் பண்ட் கூறுகையில்,

    ‘டோனி போன்ற மிகச்சிறந்த வீரருடன் என்னை நீங்கள் ஒப்பிட்டு பேசுவது மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருக்கிறது. ஆனால் என்னை பொறுத்தவரை, எந்த வீரருடன் என்னை ஒப்பிட விரும்பவில்லை. இந்திய கிரிக்கெட்டில், எனக்குரிய அடையாளத்துடன் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்.

    டோனி போன்ற ஜாம்பவான்களுடன் என்னை போன்ற சிறிய வீரர்களை ஒப்பிடுவது நல்ல விஷயம் அல்ல. ஆஸ்திரேலிய தொடரில் நாங்கள் விளையாடிய விதத்தை நினைத்து ஒட்டுமொத்த அணியினரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்’ என்றார். சிட்னி டெஸ்டில் 97 ரன்களும், பிரிஸ்பேன் டெஸ்டில் 89 ரன்களும் விளாசி ரிஷாப் பண்ட் ஹீரோவாக ஜொலித்தது குறிப்பிடத்தக்கது.
    இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்ட டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு டெஸ்ட், 3 ஒருநாள், ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட் பிப்ரவரி 5-ந்தேதி சென்னையில் நடக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டியும் சென்னையிலேயே நடக்கிறது.

    இந்த இரண்டு போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்த அணி விவரம் வருமாறு:-

    1. ஜோ ரூட் (கேப்டன்), 2. ஜாஃப்ரா ஆர்சர், 3. மொயீன் அலி,  4. ஜேம்ஸ் ஆண்டர்சன், 5. டாம் பெஸ், 6. ஸ்டூவர்ட் பிராட், 7. ரோரி பேர்ன்ஸ், 8. ஜோஸ் பட்லர், 9. ஜாக் கிராவ்லி, 10. பென் போக்ஸ், 11. டான் லாரன்ஸ், 12. ஜேக் லீச், 13. டாம் சிப்லி, 14. பென் ஸ்டோக்ஸ், 15. ஒல்லி ஸ்டோன், 16. கிறிஸ் வோக்ஸ்.

    ரிசர்வ் வீரர்கள்:-

    1. ஜேம்ஸ் பிரேசி, 2. மேசன் கிரேன், 3. சகிப் மெஹ்மூத், 4. மேத்யூ பார்கின்சன், 5. ஒல்லி ராபின்சன், 6. அமர் விர்தி.
    செண்டை மேளம் முழங்க, சாரட் வண்டியில் ஊர்வலம் என டி நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது. ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டி என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகம் ஆன டி நடராஜன் சிறப்பாக பந்து வீசி அனைவரது பாராட்டையும் பெற்றார்.

    பிரிஸ்பேன் டெஸ்டில் வெற்றி பெற்று வரலாற்று சாதனைப் படைத்த இந்திய அணி இன்று தாயகம் திரும்பியது. டி நடராஜன் மாலை சொந்த ஊரான சேலத்தில் உள்ள சின்னப்பம்பட்டிக்கு திரும்பினார்.

    அப்போது செண்டை மேளம் முழங்க, சாரட் வண்டியில் ஊர்வலமாக அவரை வரவேற்றனர். முன்னதாக சுகாதாரத்துறை சார்பில் அவரை வரவேற்க தடைவிதிக்கப்பட்டது. கைக்குலுக்குவதற்கும், சால்வை அணிவிப்பதற்கும் தடைவிதித்தது. மேலும், 14 நட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவருக்கு வரவேற்பு விழா நடத்த அமைக்கப்பட்டிருந்த மேடையையும் அகற்றியது.
    ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த ஊர் திரும்பும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் டி நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க சுகாதாரத்துறை தடைவிதித்துள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய பயணம் மிகவும் வெற்றிகரமாக முடிந்தது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

    இரு அணிகள் இடையே 4 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய மண்ணில் 2-வது தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

    அடிலெய்டுவில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. இதற்கு மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

    சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் டிரா ஆனது. பிரிஸ்பேனில் நடந்த 4-வது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. பிரிஸ்பேனில் முதல்முறையாக டெஸ்டில் வென்று இந்திய அணி புதிய வரலாறு படைத்தது.

    விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களையும், அனுபவமற்ற பந்து வீச்சையும் வைத்துக் கொண்டு ரகானே தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவில் சாதித்து காட்டியது. சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் இன்று நாடு திரும்பினார்கள்.

    வீரர்கள் தனித்தனியாக தங்களது சொந்த நகருக்கு சென்றடைந்தனர். அணியின் தற்காலிக கேப்டன் ரஹானே, ரோகித்சர்மா, பிரித்விஷா, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் மும்பை வந்தடைந்தனர்.

    கடைசி டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ரி‌ஷப் பண்ட் மும்பை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவர் கூறும்போது, “கோப்பையை தக்க வைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொடரை கைப்பற்றியதால் ஒட்டு மொத்த வீரர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்” என்றார்.

    ஆஸ்திரேலிய பயணத்தில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், டி. நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 பேர் இடம் பெற்றிருந்தனர். வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தனது அறிமுக சர்வதேச போட்டியில் சாதித்தார். 29 வயதான அவர் பெங்களூரில் இருந்து தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு இன்று வருகிறார்.

    கடந்த மாதம் 6-ந்தேதிதான் நடராஜனின் மனைவி பவித்ராவுக்கு சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அதேநேரத்தில் இந்திய அணியில் இடம் பிடித்து ஆஸ்திரேலியா சென்றுவிட்டதால் முதன்முதலாக தனது குழந்தையை காணும் ஆர்வத்தில் நடராஜன் உள்ளார்.

    சொந்த ஊர் திரும்பும் அவருக்கு ஊர்மக்கள் சார்பாக பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதற்கான மேடை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அவர் வரும் வழியில் பேனர் வைத்து அசத்த இருந்தனர்.

    டி நடராஜன் வெளிநாட்டில் இருந்து வருவதால் அவருடன் கைக்குலுக்கினால், சால்வை அணிவித்தால், அருகில் சென்றார் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாகிவிடும் என சுகாதாரத்துறை வரவேற்புக்கு தடைவிதித்தது.

    மேலும், அவர்கள் பெற்றோரிடம் வெளிநாட்டில் இருந்து வருவதால் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவிறுத்தியுள்ளனர். அமைக்கப்பட்டிருந்த மேடையும் அகற்றப்பட்டது.

    முன்னதாக அவரது நண்பர்கள் கூறும்போது, “நடராஜனுக்கு மாலை 4.15 மணிக்கு சின்னப்பம்பட்டி பஸ் நிலையம் சந்தைப்பேட்டையில் இருந்து அவரது வீடு வரை சிறப்பான வரவேற்பு ஊர்வலம் நடக்கிறது. மேலும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    நாளையே (22-ந்தேதி) சென்னைக்கு புறப்பட்டு சென்று விடுவார் என்பதால் அவரை பார்த்து வாழ்த்து தெரிவிக்க விரும்புபவர்கள் இன்று மாலையே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்” என்றனர்.

    நெட் பவுலராக சென்ற நடராஜன் தனது முதல் டெஸ்டில் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டும், மூன்று 20 ஓவர் போட்டிகளில் சேர்த்து 6 விக்கெட்டும் கைப்பற்றினார். 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த பந்து வீச்சாளரான நடராஜன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது. இதற்காக வீரர்கள் அனைவரும் சென்னை வந்து கொரோனா தடுப்பு வளையத்துக்குள் வருவார்கள்.
    பாகிஸ்தானில் முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆர்வத்தில் இருப்பதாக தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் டு பிளிஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா அணி 13 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி கராச்சியில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    தென்ஆப்பிரிக்கா அணியும் பயிற்சிக்கு தயாராகி வருகின்றனர். அந்த அணியில் ஏறக்குறைய அனைத்து வீரர்களுக்கும் இதுதான் முதல் பாகிஸ்தான் தொடராக இருக்கும்.

    இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேனான டு பிளிஸ்சிஸ், இவ்வளவு சீக்கிரம் பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டி நடைபெறும் என நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் தொடர் குறித்து டு பிளிஸ்சிஸ் கூறுகையில் ‘‘என்னுடைய கிரிக்கெட் காலத்தில் டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் மண்ணில் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. ஒயிட்-பால் கிரிக்கெட் நடைபெறும் என்பது எனக்குத் தெதரியும், ஆனால், டெஸ்ட் போட்டி இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று எனக்குத் தெரியாது.

    நான் டெஸ்ட் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். 13 வருடத்திற்கு முன்பு இருந்தது போன்று ஆடுகளம் பிளாட்-ஆக இருக்கும். எங்களால் ரன்கள் குவிக்க இயலும் என நம்புகிறேன்’’ என்றார்.
    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இந்திய அணி இன்று நாடு திரும்பியது. ரஹானேவுக்கு அவரது வீட்டின் அருகில் உள்ளவர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
    ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. கடைசி 3 போட்டிகளிலும் ரஹானே கேப்டனாக பொறுப்பேற்றார். மூன்றில் இரண்டில் வெற்றிபெற்று, ஒரு போட்டியை டிரா செய்து இந்தியா தொடரை 2-1 எனக்கைப்பற்றியது.

    இந்திய அணி தொடரை கைப்பற்ற ரஹானேயின் பேட்டிங்கும், கேப்டனாக அவரது செயல்பாடும்தான் முக்கிய காரணம். 

    இந்திய அணி வீரர்கள் இன்று இந்தியா வந்தடைந்தனர். அதன்பின் அவரவர்கள் வீட்டிற்கு சென்றனர். ரஹானே மும்பையில் உள்ள அவரது அடுக்குமாடி வீட்டிற்குச் சென்றார். அப்போது அவர் வீடு இருக்கும் அப்பார்ட்மென்டில் உள்ளவர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க, சிகப்பு கம்பளம் விரித்து பூக்கள் தூவி பிரமாண்டமாக வரவேற்றனர். அவரரை வரவேற்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
    ஆஸ்திரேலியாவில் இருந்து இந்திய வீரர்கள் நாடு திரும்பியுள்ள நிலையில் நடராஜனுக்கு சொந்த ஊரில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய பயணம் மிகவும் வெற்றி கரமாக முடிந்தது.

    3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

    இரு அணிகள் இடையே 4 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய மண்ணில் 2-வது தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

    அடிலெய்டுவில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. இதற்கு மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

    சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் டிரா ஆனது. பிரிஸ்பேனில் நடந்த 4-வது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. பிரிஸ்பேனில் முதல்முறையாக டெஸ்டில் வென்று இந்திய அணி புதிய வரலாறு படைத்தது.

    விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களையும், அனுபவமற்ற பந்து வீச்சையும் வைத்துக் கொண்டு ரகானே தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவில் சாதித்து காட்டியது. சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் இன்று நாடு திரும்பினார்கள்.

    வீரர்கள் தனித்தனியாக தங்களது சொந்த நகருக்கு சென்றடைந்தனர். அணியின் தற்காலிக கேப்டன் ரகானே, ரோகித்சர்மா, பிரித்விஷா, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் மும்பை வந்தடைந்தனர்.

    கடைசி டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ரி‌ஷப் பண்ட் மும்பை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவர் கூறும்போது, “கோப்பையை தக்க வைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொடரை கைப்பற்றியதால் ஒட்டு மொத்த வீரர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்” என்றார்.

    ஆஸ்திரேலிய பயணத்தில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 பேர் இடம் பெற்றிருந்தனர். வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தனது அறிமுக சர்வதேச போட்டியில் சாதித்தார்.

    29 வயதான அவர் பெங்களூரில் இருந்து தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு இன்று வருகிறார்.

    கடந்த மாதம் 6-ந் தேதி தான் நடராஜனின் மனைவி பவித்ராவுக்கு சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

    அதேநேரத்தில் இந்திய அணியில் இடம் பிடித்து ஆஸ்திரேலியா சென்றுவிட்டதால் முதன் முதலாக தனது குழந்தையை காணும் ஆர்வத்தில் நடராஜன் உள்ளார்.

    சொந்த ஊர் திரும்பும் அவருக்கு ஊர்மக்கள் சார்பாக பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக அவரது நண்பர்கள் கூறும்போது, “நடராஜனுக்கு மாலை 4.15 மணிக்கு சின்னப்பம்பட்டி பஸ் நிலையம் சந்தைப்பேட்டையில் இருந்து அவரது வீடு வரை சிறப்பான வரவேற்பு ஊர்வலம் நடக்கிறது. மேலும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    நாளையே (22-ந் தேதி) சென்னைக்கு புறப்பட்டு சென்று விடுவார் என்பதால் அவரை பார்த்து வாழ்த்து தெரிவிக்க விரும்புபவர்கள் இன்று மாலையே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்” என்றனர்.

    நெட் பவுலராக சென்ற நடராஜன் தனது முதல் டெஸ்டில் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டும், மூன்று 20 ஓவர் போட்டிகளில் சேர்த்து 6 விக்கெட்டும் கைப்பற்றினார்.

    20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த பந்து வீச்சாளரான நடராஜன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை.

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது. இதற்காக வீரர்கள் அனைவரும் சென்னை வந்து கொரோனா தடுப்பு வளையத்துக்குள் வருவார்கள்.

    டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் 13-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மாற்றமின்றி முதலிடத்திலும்(919 புள்ளி), ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் 2-வது இடத்திலும் (891 புள்ளி) தொடருகிறார்கள்.

    இந்தியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்டில் சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேன் 12 புள்ளி கூடுதலாக பெற்று மொத்தம் 878 புள்ளிகளுடன் 4-ல் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 3-வது இடம் வகித்த இந்திய கேப்டன் விராட் கோலி கடைசி டெஸ்டையும் தவற விட்டதால் மேலும் 8 புள்ளிகளை இழந்து 862 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    பிரிஸ்பேன் டெஸ்டில் 89 ரன் விளாசி 328 ரன் இலக்கை எட்டுவதற்கு வித்திட்ட இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் கிடுகிடுவென 13 இடங்கள் எகிறி 13-வது இடத்துக்கு (691 புள்ளி) வந்துள்ளார். தற்போது விக்கெட் கீப்பர்களில் சிறந்த தரநிலையை கொண்டிருப்பது ரிஷாப் பண்ட் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதே டெஸ்டில் 91 ரன்கள் குவித்த மற்றொரு இந்திய ‘இளம்புயல்’ சுப்மான் கில் 21 இடங்கள் உயர்ந்து 47-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இதே போல் இந்திய அனுபவ வீரர்கள் புஜாரா 7-வது இடத்திலும் (ஒரு இடம் ஏற்றம்), அஜிங்யா ரஹானே 9-வது இடத்திலும் (2 இடம் சரிவு) ரோகித் சர்மா 18-வது இடத்திலும் (ஒரு இடம் குறைவு) உள்ளனர். காலேயில் நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 6 இடங்கள் அதிகரித்து 5-வது இடத்தை (783 புள்ளி) பெற்றுள்ளார்.

    பந்து வீச்சாளர்களின் தரவரிசையில், இந்திய தொடரில் தொடர்நாயகன் விருதை தட்டிச்சென்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ‘நம்பர் ஒன்’ இடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 2-வது இடத்திலும், நியூசிலாந்தின் நீல் வாக்னெர் 3-வது இடத்திலும் உள்ளனர். பிரிஸ்பேன் டெஸ்டில் மொத்தம் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் மேலும் ஒரு இடம் ஏற்றம் கண்டு 4-வது இடத்தை வசப்படுத்தினார். கடைசி டெஸ்டில் ஆடாவிட்டாலும் இந்தியாவின் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா தலா ஒரு இடம் உயர்ந்து முறையே 8, 9-வது இடங்களை வகிக்கிறார்கள்.

    பிரிஸ்பேன் டெஸ்டில் சொதப்பிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 8-ல் இருந்து 11-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார். இதே போட்டியில் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை அள்ளிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 32 இடங்கள் முன்னேறி 45-வது இடத்தை பிடித்துள்ளார்.
    இலங்கை அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா, உரிமையாளர்களை கொண்ட கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
    இலங்கை அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் லசித் மலிங்கா. உலகளவில் சிறந்த யார்க்கர் பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர். ஒரு ஓவரின் அனைத்தை பந்தையும் துல்லியமான வகையில் யார்க்கராக வீசும் வல்லமை படைத்தவர்.

    ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த நிலையில் இன்று லசித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்தது.

    இது அனைவருக்கும் சற்று ஆச்சர்யத்தை அளித்தது. இந்த நிலையில், மலிங்கா உரிமையாளர்களை கொண்ட கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவித்துள்ளது.

    லசித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 12 சீசன்களில் விளையாடியுள்ளார்.

    122 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை கைப்பற்றி, அதிக விக்கெட் வீழ்த்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 13 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தது சிறந்த பந்து வீச்சாகும்.
    வங்காளதேச சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தினார்.
    வங்காளதேச அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஷாகிப் அல் ஹசன். சூதாட்டக்காரர்கள் தொடர்பு கொள்ள முயற்சி செய்ததை மறைத்ததாக இவருக்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. தற்போது தடைக்காலம் முடிந்து விளையாட தயாரானார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான வங்காளதேச அணியில் இடம் பிடித்தார். இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 122 ரன்னில் சுருண்டது. ஷாகிப் அல் ஹசன் சிறப்பாக பந்து வீசி 7.2 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணியால் 32.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது.

    பின்னர் 123 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களம் இறங்கியது. கேப்டனும், தொடக்க வீரருமான தமிம் இக்பால் 44 ரன்கள் அடிக்க வங்காள தேசம் 33.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
    ×