என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் வகையில் கங்காரு வடிவிலான கேக்கை தயார் செய்து, அதை கட் செய்ய சொன்னபோது ரஹானே மறுத்துவிட்டார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றியது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த பின்னர், வீரர்கள் பலர் காயம் அடைந்த நிலையிலும் அபார வெற்றி பெற்றது. குறிப்பாக ஆஸ்திரேலியாவின் கோட்டையாக விளங்கிய பிரிஸ்பேன் மைதானத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது சிறப்பானதாக கருதப்படுகிறது.

    இதனால் சொந்த நாடு திரும்பிய வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஹானே அவரது வீட்டிற்கு வந்தபோது, அவரது அப்பார்ட்மென்டில் உள்ளவர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அப்போது பிரமாண்ட கேக்கை வெட்டி மகிழ்ச்சியை கொண்டாட நினைத்தனர். அதற்கான கேக் ஒன்று தயார் செய்திருந்தனர். அந்த கேக்கின் மீது ஆஸ்திரேலியாவின் தேசிய சின்னமான கங்காரு இருப்பதுபோல் தயார் செய்யப்பட்டிருந்ததது.

    ரஹானேயிடம் அந்த கேக்கை வெட்டச் சொன்னார்கள். ஆனால், கங்காரு போன்று இருந்ததால், ராஹானே கேக்கை வெட்ட மறுத்துவிட்டார். இந்த சம்பவம் ரஹானே சிறந்த குணத்தை காட்டியது.
    குடும்ப உறுப்பினர்களை அழைத்து வர அனுமதிக்க முடியாது என்று ஆஸ்திரேலியா கூறியதும், தொடரை ரத்து செய்வோம் என ரவி சாஸ்திரி மிரட்டியதால் யு-டர்ன் ஆனது என பீல்டிங் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா- இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆனால் மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    அதன்பின் சிட்னி நகருக்கு செல்லும்போது ஆஸ்திரேலியா இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. கோரன்டைன் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக்கியது. இதனால் இந்திய அணி பிரிஸ்பேன் செல்ல தயக்கம் காட்டியது. இறுதியில் வெற்றி பெற்று சாதனைப்படைத்தது.

    தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலியா நெருக்கடி கொடுத்தது. குடும்ப உறுப்பினர்களை அழைத்து வர அனுமதி தரவில்லை. அதன்பின் ரவி சாஸ்திரி மிரட்டல் விடுத்ததால் ஆஸ்திரேலியா சம்மதம் தெரிவித்தது என இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    ஆர் ஸ்ரீதர் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் யூ-டியூப் சேனனில் பேசினார். அப்போது நடந்த உரையாடல்,

    அஸ்வின்: 2021 புதுவருடம் தொடங்குவதற்கு முன் மெல்போர்னில் ஏராளமான டிராமா நடைபெற்றது. அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எங்களை அழைக்கும்போது, நீங்கள் ஏற்கனவே ஐபிஎல் போட்டிக்காக சுமார் மூன்றரை மாதங்கள் பயோ-பப்பிள் பாதுகாப்பில் இருந்துள்ளீர்கள். அதனால் ஆஸ்திரேலியாவில் 14 கோரன்டைனுக்குப் பிறகு ஷாஃப்ட் பப்பிள் இருந்தால் போதுமானது என்று சொன்னார்கள்.

    நீங்கள் காபி குடிக்க செல்லலாம். படங்கள் பார்க்கலாம். வெளியில் சென்று சந்தோசமாக நேரத்தை செலவிடலாம் என்றார்கள். ஆனால் தொடர் 1-1 என ஆனதும், எங்களை அறைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றார்கள். எப்போதும் அறைக்குள்ளேயே எப்படி இருக்க முடியும். அது சவாலான நேரமாக இருந்தது.

    ஆர்.ஸ்ரீதர்: எல்லாவற்றிற்கும் முன், நாங்கள் துபாயில் கோரன்டைனில் இருக்கும்போது, அவர்கள் திடீரென குடும்பங்களுக்கு அனுமதி கிடையாது என்றார்கள். ஆஸ்திரேலியா தொடர் கூட தொடங்கவில்லை. அதற்கு முன் ஸ்லெட்ஜிங் தொடங்கிவிட்டது. நாங்கள் இரவு முழுவதும் ஏராளமான போன் செய்தோம். ஆனால், அவர்கள் குடும்பங்களுக்கு அனுமதி கிடையாது என்றார்கள்.

    அஸ்வின்: இதை நான் என் மனைவியிடம் கூறினேன், அவர் சரி, நான் வேறு வேறு கணவரை தேடுகிறேன் என்றார்.  நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ஆறு மாதங்கள் ஆகிறது. என்னுடைய குடும்பம் துபாய் வந்துவிட்டது. அதன்பின் அவர்கள் இப்படி கூறினார்கள்.

    ஆர்.ஸ்ரீதர்: அங்கு ஆறு வீரர்களின் குடும்பங்கள் இருந்தது. அதை அவர்களுக்கு எப்படி தெரிவிக்க முடியும்?. அப்புறம் ரவி சாஸ்திரி வந்தார். அவர் ஜும் கால் ஏற்பாடு செய்தார். அவர்கள் எங்களுடைய வீரர்கள் குடும்பத்தை அனுமதிக்கவில்லை என்றால், நாங்கள் ஆஸ்திரேலியா தொடரில் விளையாடமாட்டோம். நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ? அதை செய்யுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார்.

    அதன்பின் ஒரு விஷயத்தை கூறினார். என்னைத் தவிர ஆஸ்திரேலியாவை பற்றி யாருக்கும் தெரியாது, அங்கு நான் 40 ஆண்டுகளாக சென்றிருக்கிறேன். அவர்களுடன் எப்படி பேச வேண்டும், எப்படி பேரம் பேச வெண்டும் என்பது எனக்குத் தெரியும் என்றார். பிசிசிஐ அதை ஏற்றுக் கொண்டது. வார இறுதியில் ஒரேநாள் இரவில் ஆஸ்திரேலியா அரசு அனுமதி அளித்தது.

    அஸ்வின்: இதற்கு முன் இதுபோன்று நடந்தது கிடையாது. சிட்னியில் நாங்களும், ஆஸ்திரேலியா வீரர்களும் ஒரே பப்பிளில் இருந்தோம். ஆனால், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எங்களுக்கு அனுமதி இல்லை.

    ஆர்.ஸ்ரீதர்: இது கொஞ்சம் அவமானகரமானது.
    பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றியை இந்திய அணி ருசிக்க முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவரான ஷர்துல் தாகூர், தன்னை பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் எனத் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர். இவர் ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகம் ஆகியிருந்தார். ஆனால், 10 பந்துகள் வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். அதன்பின் தற்போது இரண்டரை ஆண்டுகள் கழித்து பிரிஸ்பேன் டெஸ்டில் விளையாடினார்.

    இந்திய அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் தத்தளித்தபோது வாஷிங்டன் சுந்தர் - ஷர்துல் தாகூர் 123 ரன்கள் குவித்து இந்திய அணியை காப்பாற்றியது. 67 ரன்கள் விளாசிய ஷர்துல் தாகூர் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இந்த நிலையில் என்னால் பேட்டிங் செய்ய முடியும். என்னை பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் என்று அழைக்கலாம் என ஷர்துல் தாகூர் தெரிவித்துள்ளார்.

    ஷர்துல் தாகூர்

    இதுகுறித்து ஷர்துல் தாகூர் கூறுகையில் ‘‘என்னை பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் என அழைக்கலாம். பேட்டிங் செய்யும் திறமையை பெற்றுள்ளேன். எதிர்காலத்திலும் என்னால் பேட்டிங் செய்ய இயலும். எப்போதெல்லாம் எனக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம், சென்று அணிக்கு பயன்படும் வகையிலான ரன்களை சேர்ப்பேன்.

    பிரிஸ்பேன் டெஸ்டில் ஐந்து விக்கெட் வீழ்த்தாதது குறித்து வருத்தம் அடையவில்லை. நான் ஐந்து விக்கெட் எடுத்தால், நன்றாக இருக்கும் என நினைப்பேன். ஆனால், சிராஜ் ஐந்து விக்கெட் வீழ்த்தியதால் மிகவும் சந்தோசம் அடைந்தேன். கடிமான நேரங்களில் இருந்து வந்ததால், அவர்தான் ஐந்து விக்கெட் வீழ்த்தனும், அதானால் உண்மையிலேயே நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.
    வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியில் வங்காளதேசம் அணி வெற்றி பெற்றிருந்தது.

    இந்த நிலையில் 2-வது போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசத்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 43.4 ஓவர்கள் மட்டுமே விளையாடி 148 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரோவ்மன் பொவோல் அதிகபட்சமாக 41 ரன்கள் அடித்தார்.

    வங்காளதேசச அணி சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், முஷ்டாபிஜுர் ரஹ்மான், ஷாகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களம் இறங்கியது. தமிம் இக்பால் 50 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 43 ரன்களும் அடிக்க வங்காளதேசம் 33.2 ஓவரில் 149 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை வங்காளதேசம் 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
    மேத்யூஸ் சதம் அடிக்கவும், சண்டிமால் அரைசதம் அடிக்கவும் காலே டெஸ்ட் போட்டியில் இலங்கை முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.
    இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலே மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    லஹிரி திரிமானே, குசால் பேரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். குசால் பெரேரா 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஒஷாடா பெர்னாண்டோ ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். இந்த இரண்டு விக்கெட்டையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீழ்த்தினார்.

    3-வது விக்கெட்டுக்கு திரிமானே உடன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தது. திரிமானே 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து கேப்டன் தினேஷ் சண்டிமால் களம் இறங்கினார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. மேத்யூஸ், சண்டிமால் இருவரும் அரைசதம் அடித்தனர். சண்டிமால் 52 ரன்னில் வெளியேறினார். அப்போது இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்திருந்தது.

    ஜேம்ஸ்  ஆண்டர்சன்

    5-வது விக்கெட்டுக்கு மேத்யூஸ் உடன் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா ஜோடி சேர்ந்தார். மேத்யூஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இந்த ஜோடி இன்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.

    இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் 107 ரன்களுடனும், டிக்வெல்லா 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பாக பந்து வீசி 19 ஓவரில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். 
    2021 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ந்தேதி நடைபெற இருப்பதாக பிசிசிஐ அதிகாரி தெரிவித்ததாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
    ஐபிஎல் 2021 சீசனை நடத்த பிசிசிஐ ஏற்பாடு செய்து வருகிறது. முதற்கட்டமாக 8 அணிகளும் தக்கவைத்த வீரர்கள் பெயரையும், விடுவித்த வீரர்கள் பெயரையும் ஜனவரி 20-ந்தேதிக்குள் (நேற்றுமுன்தினம்) வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கூறியிருந்தது. அதன்படி 8 அணிகளும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.

    இந்த நிலையில் பிப்ரவரி 18-ந்தேதி வீரர்கள் ஏலம் நடைபெறும். ஆனால் எங்கு வைத்து நடைபெறும் என்பது இன்னும் முடிவாகவில்லை என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ நிறுவனத்திற்கு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

    ஆனால் 2021 சீசன் இந்தியாவில் நடைபெறுமா? மீண்டும் வெளிநாட்டில் நடைபெறுமா? என்பத குறித்து பிசிசிஐ இதுவரை உறுதியான முடிவு எடுக்கவில்லை.

    இந்தியா - இங்கிலாந்து இடையில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடர் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நடைபெற்று முடிந்தால், ஐபிஎல் தொடர் இந்தியாவில்தான் நடைபெறும்.
    ஆஸ்திரேலியா இனிமேல் சிறந்த அணி கிடையாது. இந்தியாவை இந்திய மண்ணில் இங்கிலாந்து வீழ்த்த வேண்டும் என முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக இரண்டு முறை டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. இங்கிலாந்து ஆஸ்திரேலியா மண்ணில் ஆஷஸ் தொடரை வெல்ல துடிக்கிறது.

    இனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது. இந்திய மண்ணில் இங்கிலாந்து தொடரை வெல்ல வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரீம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கிரீம் ஸ்வான் மேலும் கூறுகையில் ‘‘ஆஷஸ் தொடர் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதில் இருந்து நான் விலக வேண்டும். தற்போது இந்திய அணியை இந்திய மண்ணில் வீழ்த்துவதுதான் மிகப்பெரிய விஷயமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். 2012-ம் ஆண்டு இங்கிலாந்து இந்திய மண்ணில் தொடரை வென்ற பின்னர், தோற்றகடிக்க முடியாத அணியாக உள்ளது. இது ஏன் முக்கிய விஷயம் அல்ல?. விக்கெட் எடுக்கக் கூடிய சுழற்பந்து வீச்சாளரும், சுழற்பந்தை சிறப்பாக எதிர்கொண்ட கெவின் பீட்டர்சன் போன்ற பேட்ஸ்மேனும் தேவை’’ என்றார்.
    ரிஷப் பண்ட் காலப்போக்கில் சிறந்த விக்கெட் கீப்பராவார் என, அவருடன் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிக்க போட்டியிட்டு வரும் சாஹா தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் தலைசிறந்த விக்கெட் கீப்பரான எம்எஸ் டோனிக்குப்பின் ரிஷப் பண்ட்-ஐ விக்கெட் கீப்பராக இந்திய அணி தயார்படுத்தியது. ஆனால் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் பணியிலும், பேட்டிங்கிலும் மிகப்பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.

    இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒயிட்-பால் கிரிக்கெட் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டார். முதல் டெஸ்டில் சாஹா சேர்க்கப்பட்டார். ரிஷப் பண்ட்-க்கு இடம் கிடைக்கவில்லை.

    முதல் போட்டியில் சாஹா மோசமாக விளையாட, ரிஷப் பண்ட் 2-வது டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்தார். 3-வது போட்டியில் 2-வது இன்னிங்சில் 97 ரன்களும், 4-வது போட்டியின் 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 89 ரன்களும் அடித்தார்.

    விக்கெட் கீப்பர் பணியில் ஒன்றிரண்டு கேட்ச்களை விட்டார். இந்த நிலையில் காலப்போக்கில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் பணியில் முன்னேற்றம் அடைவார் என சாஹா தெரிவித்துள்ளார்.

    ரிஷப் பண்ட் குறித்து சாஹா கூறுகையில் ‘‘நீங்கள் ரிஷப் பண்ட் பற்றி கேட்க முடியும். அவருக்கும் எனக்கும் நட்பு ரீதியிலான தொடர்பு உள்ளது. யார் ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்தாலும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வோம். தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் இடையில் எந்த பிரச்சனையும் கிடையாது.

    யார் நம்பர் ஒன், நம்பர் 2 என நான் பார்க்கவில்லை. யார் சிறந்தவரோ, அவருக்கு அணி வாய்ப்பு வழங்கும். நான் என்னுடைய பணியை தொடந்து செய்வேன். தேர்வு என் கையில் இல்லை. அது நிர்வாகத்திடம் உள்ளது.

    வரிக்குதிரை பற்றி யாரும் முதல் வகுப்பிலேயே கற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் படிபடியாகத்தான் செல்ல வேண்டும். அவருடைய சிறந்த திறமையை வெளிப்படுத்தி வருகிறது. நிச்சயமாக அவர் முன்னேற்றம் அடைவார். அவர் ஏற்கனவே முதிர்ச்சியடைந்து, அவரை நிரூபித்துள்ளார். அவர் விக்கெட் கீப்பராக செயல்படுவதை இந்திய அணி விரும்புகிறது.

    ஒயிட்-பால் கிரிக்கெட்டில் இருந்து நீக்கப்பட்டது, அவருடைய நோக்கத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்’’ என்றார்.
    சையத் முஷ்டாக் அலி டிராபிக்கான காலிறுதி போட்டிகள் நடைபெறும் மைதானமும், போட்டி நடைபெறும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. லீக் ஆட்டங்கள் முடிவில் கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், ஹரியானா, பரோடா, பீகார், ராஜஸ்தான் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

    காலிறுதியில் மோதும் அணிகள் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காலிறு போட்டிகள் அனைத்தும் உலகின் மிகப்பெரிய மைதானமான மொதேராவில் உள்ள சர்தார் பட்டேல் மைதானத்தில் நடக்கிறது.

    ஜனவரி 26-ந்தேதி 2 காலிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஒரு ஆட்டத்தில் கர்நாடகா - பஞ்சாப் அணிகளும் மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு - இமாச்சல பிரதேச அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஜனவரி 27-ந்தேதி ஹரியானா - பரோடா அணிகளும் பீகார் - ராஜஸ்தான் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இரண்டு அரையிறுதிகளும் ஜனவரி 29-ந்தேதியும், இறுதிப் போட்டி ஜனவரி 31-ந்தேதியும் நடக்கிறது.
    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி - அஷ்வின் பொண்ணப்பா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் கலப்பு ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - அஷ்வினி பொண்ணாப்பா ஜோடி ஐந்தாம் நிலை ஜோடியான பெங்க் சூன் சான் - லியு யிங் கோவை காலிறுதியில் எதிர்கொண்டது.

    இதில் தரநிலை பெறாத இந்திய ஜோடி 18-21, 24-22, 22-20 என மலேசிய ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. 

    ஆஸ்திரேலிய தொடரை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பிய முகமது சிராஜ் தந்தையின் சமாதிக்கு சென்று மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
    மும்பை:

    ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் நேற்று தாயகம் திரும்பினர்.

    ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அறிமுக வீரராக அடியெடுத்து வைத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பிரிஸ்பேன் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை சாய்த்து அமர்க்களப்படுத்தினார். அவர் ஆஸ்திரேலியாவில் இருந்த போது அவரது தந்தை முகமது கோஸ் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தும் பாதுகாப்பு வளையத்தில் இணைந்திருந்ததால் அவரால் இந்தியாவுக்கு உடனடியாக திரும்ப முடியாமல் போனது. இதனால் தந்தையின் இறுதிச்சடங்கில் அவர் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி தனது தந்தையின் கனவை நிறைவேற்றி விட்டதாக கூறி முகமது சிராஜ் நெகிழ்ந்தார்.

    தெலுங்கானா ஷம்ஷாபத் விமான நிலையம் வந்திறங்கிய அவர் அங்கிருந்து நேராக தனது தந்தை நல்லடக்கம் செய்யப்பட்ட காயர்தாபாத் சுடுகாட்டுக்கு சென்று மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். சிறிது நேரம் அங்கு உட்கார்ந்திருந்த அவர் பின்னர் வீடு திரும்பியதும் தாயாருக்கு ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த முகமது சிராஜ், ஆஸ்திரேலிய தொடரில் வீழ்த்திய ஒவ்வொரு விக்கெட்டையும் மறைந்த தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாக உருக்கமுடன் கூறினார்.

    சிட்னியில் நடந்த 3-வது டெஸ்டின் போது முகமது சிராஜை மைதானத்தில் இருந்த சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் குரங்குடன் ஒப்பிட்டு இனவெறியுடன் திட்டினர். இந்த சம்பவம் பற்றி சிராஜிடம் கேட்ட போது, ‘ஆஸ்திரேலியாவில் இனவெறி அவமானத்தை சந்தித்தேன். உடனே கேப்டன் மூலம் நடுவர்களிடம் முறையிட்டேன். நடுவர்கள் எங்களுக்கு போட்டியில் இருந்து பாதியில் வெளியேறும் வாய்ப்பை வழங்கினர். ஆனால் கேப்டன் ரஹானே, நாங்கள் போட்டியில்இருந்து விலக மாட்டோம். நாங்கள் தவறு செய்யவில்லை. அதனால் தொடர்ந்து விளையாடுவோம் என்று கூறினார். ரசிகர்களின் வசைமொழி என்னை மனதளவில் வலுப்படுத்தியது. அதனால் எனது ஆட்டத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டேன்’ என்றார்.
    ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சென்னை:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 4 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்டில் தமிழக வீரர்கள் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அறிமுகமானார்கள்.

    இதில் இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். முதல் இன்னிங்சில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். அதேபோல் பேட்டிங்கில் வாஷிங்டன் சுந்தர் 62 ரன் சேர்த்தார்.

    அந்த டெஸ்டில் 328 ரன் இலக்கை நோக்கி இந்தியா விளையாடிய கடைசி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் பதற்றமின்றி 29 பந்தில் 22 ரன் எடுத்தார். அப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்று வரலாறு படைத்தது.

    இதையடுத்து இந்திய வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்தன. இதற்கிடையே ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நடராஜன் சொந்த ஊரான சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டிக்கு நேற்று மாலை சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

    இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். வீட்டுக்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளம் முழுங்க குடும்பத்தினர் நண்பர்கள் வரவேற்றனர்.

    வாஷிங்டன் சுந்தருக்கு ஆரத்தி எடுத்தனர். ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் சிறப்பாக விளையாடிய அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    அதேபோல் மற்றொரு தமிழக வீரரான முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சென்னை திரும்பினார். அப்போது நிருபர்களிடம் கூறும்போது, ‘10 ஆண்டுகளில் உலக கோப்பை, சாம்பியன் கோப்பை ஆகியவற்றை பெற்று இருக்கிறோம்.

    ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது உலக கோப்பை, சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றதற்கு இணையானது. முதல் டெஸ்டில் 36 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனபோது கேலி, கிண்டல் செய்தார்கள். அதன்பின் முக்கிய வீரரான கோலி நாடு திரும்பியது, வீரர்கள் காயத்தால் வெளியேறியது போன்ற சூழ்நிலையில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மிகவும் சிறப்பானது’ என்றார்.

    ×