search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாஹா, ரிஷப்  பண்ட்
    X
    சாஹா, ரிஷப் பண்ட்

    ரிஷப் பண்ட் காலப்போக்கில் சிறந்த விக்கெட் கீப்பராக முன்னேற்றம் அடைவார்: விருத்திமான் சாஹா

    ரிஷப் பண்ட் காலப்போக்கில் சிறந்த விக்கெட் கீப்பராவார் என, அவருடன் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிக்க போட்டியிட்டு வரும் சாஹா தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் தலைசிறந்த விக்கெட் கீப்பரான எம்எஸ் டோனிக்குப்பின் ரிஷப் பண்ட்-ஐ விக்கெட் கீப்பராக இந்திய அணி தயார்படுத்தியது. ஆனால் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் பணியிலும், பேட்டிங்கிலும் மிகப்பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.

    இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒயிட்-பால் கிரிக்கெட் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டார். முதல் டெஸ்டில் சாஹா சேர்க்கப்பட்டார். ரிஷப் பண்ட்-க்கு இடம் கிடைக்கவில்லை.

    முதல் போட்டியில் சாஹா மோசமாக விளையாட, ரிஷப் பண்ட் 2-வது டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்தார். 3-வது போட்டியில் 2-வது இன்னிங்சில் 97 ரன்களும், 4-வது போட்டியின் 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 89 ரன்களும் அடித்தார்.

    விக்கெட் கீப்பர் பணியில் ஒன்றிரண்டு கேட்ச்களை விட்டார். இந்த நிலையில் காலப்போக்கில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் பணியில் முன்னேற்றம் அடைவார் என சாஹா தெரிவித்துள்ளார்.

    ரிஷப் பண்ட் குறித்து சாஹா கூறுகையில் ‘‘நீங்கள் ரிஷப் பண்ட் பற்றி கேட்க முடியும். அவருக்கும் எனக்கும் நட்பு ரீதியிலான தொடர்பு உள்ளது. யார் ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்தாலும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வோம். தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் இடையில் எந்த பிரச்சனையும் கிடையாது.

    யார் நம்பர் ஒன், நம்பர் 2 என நான் பார்க்கவில்லை. யார் சிறந்தவரோ, அவருக்கு அணி வாய்ப்பு வழங்கும். நான் என்னுடைய பணியை தொடந்து செய்வேன். தேர்வு என் கையில் இல்லை. அது நிர்வாகத்திடம் உள்ளது.

    வரிக்குதிரை பற்றி யாரும் முதல் வகுப்பிலேயே கற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் படிபடியாகத்தான் செல்ல வேண்டும். அவருடைய சிறந்த திறமையை வெளிப்படுத்தி வருகிறது. நிச்சயமாக அவர் முன்னேற்றம் அடைவார். அவர் ஏற்கனவே முதிர்ச்சியடைந்து, அவரை நிரூபித்துள்ளார். அவர் விக்கெட் கீப்பராக செயல்படுவதை இந்திய அணி விரும்புகிறது.

    ஒயிட்-பால் கிரிக்கெட்டில் இருந்து நீக்கப்பட்டது, அவருடைய நோக்கத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்’’ என்றார்.
    Next Story
    ×