search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷர்துல் தாகூர்
    X
    ஷர்துல் தாகூர்

    என்னை பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் என அழைக்கலாம்: என்னால் பேட்டிங் செய்ய இயலும்- ஷர்துல் தாகூர்

    பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றியை இந்திய அணி ருசிக்க முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவரான ஷர்துல் தாகூர், தன்னை பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் எனத் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர். இவர் ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகம் ஆகியிருந்தார். ஆனால், 10 பந்துகள் வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். அதன்பின் தற்போது இரண்டரை ஆண்டுகள் கழித்து பிரிஸ்பேன் டெஸ்டில் விளையாடினார்.

    இந்திய அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் தத்தளித்தபோது வாஷிங்டன் சுந்தர் - ஷர்துல் தாகூர் 123 ரன்கள் குவித்து இந்திய அணியை காப்பாற்றியது. 67 ரன்கள் விளாசிய ஷர்துல் தாகூர் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இந்த நிலையில் என்னால் பேட்டிங் செய்ய முடியும். என்னை பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் என்று அழைக்கலாம் என ஷர்துல் தாகூர் தெரிவித்துள்ளார்.

    ஷர்துல் தாகூர்

    இதுகுறித்து ஷர்துல் தாகூர் கூறுகையில் ‘‘என்னை பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் என அழைக்கலாம். பேட்டிங் செய்யும் திறமையை பெற்றுள்ளேன். எதிர்காலத்திலும் என்னால் பேட்டிங் செய்ய இயலும். எப்போதெல்லாம் எனக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம், சென்று அணிக்கு பயன்படும் வகையிலான ரன்களை சேர்ப்பேன்.

    பிரிஸ்பேன் டெஸ்டில் ஐந்து விக்கெட் வீழ்த்தாதது குறித்து வருத்தம் அடையவில்லை. நான் ஐந்து விக்கெட் எடுத்தால், நன்றாக இருக்கும் என நினைப்பேன். ஆனால், சிராஜ் ஐந்து விக்கெட் வீழ்த்தியதால் மிகவும் சந்தோசம் அடைந்தேன். கடிமான நேரங்களில் இருந்து வந்ததால், அவர்தான் ஐந்து விக்கெட் வீழ்த்தனும், அதானால் உண்மையிலேயே நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
    Next Story
    ×