என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டோயோட்டா தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் அரைஇறுதியில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி தோற்று நடையை கட்டியது.
    பாங்காக்:

    டோயோட்டா தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையரில் நேற்று நடந்த அரைஇறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 18-21 என்ற நேர் செட்டில் ஆரோன் சியா- சோ வூய் யிக் (மலேசியா) இணையிடம் தோற்று நடையை கட்டியது. இதே போல் கலப்பு இரட்டையரிலும் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதன் அரைஇறுதியில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- அஸ்வினி பொன்னப்பா ஜோடி 20-22, 21-18, 12-21 என்ற செட் கணக்கில் போராடி தாய்லாந்தின் டேச்சாபோல்-சப்சிரீ இணையிடம் வீழ்ந்தது.

    பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) 21-19, 21-15 என்ற நேர் செட்டில் அன் சி யங்கை (தென்கொரியா) விரட்டியடித்து இறுதிசுற்றுக்கு முன்னேறினார். இன்று நடக்கும் மகுடத்துக்கான ஆட்டத்தில் கரோலினா மரின், ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங்கை (சீனதைபே) எதிர்கொள்கிறார்.
    மேத்யூஸ், டிக்வெல்லா, பெராரா ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் காலே டெஸ்ட் போட்டியில் இலங்கை முதல் இன்னிங்சில் 381 ரன்கள் எடுத்துள்ளது.
    காலே:

    இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. லஹிரி திரிமானே, குசால் பேரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 

    குசால் பெரேரா 6 ரன்னில் வெளியேறினார். ஒஷாடா பெர்னாண்டோ டக் அவுட் ஆனார். திரிமானே 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் தினேஷ் சண்டிமால் அரை சதமடித்து 52 ரன்னில் வெளியேறினார்.

    5-வது விக்கெட்டுக்கு மேத்யூஸ் உடன் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா ஜோடி சேர்ந்தார்.

    ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மேத்யூஸ் பொறுப்புடன் விளையாடி சதம் அடித்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் 107 ரன்களுடனும், டிக்வெல்லா 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. சிறப்பாக ஆடிய மேத்யூஸ் 110 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த மெண்டிஸ் டக் அவுட்டானார். 

    டிக்வெல்லா, அடுத்து இறங்கிய தில்ருவான் பெராரா ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 92 ரன்னில் டிக்வெல்லா ஆட்டமிழந்தார். தில்ருவான் 67 ரன்கள் அடித்து வெளியேறினார்.

    இறுதியில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 139.3 ஓவரில் 381 ரன்கள் எடுத்துள்ளது.

    இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன்6 விக்கெட்டும், மார்க் வுட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர் சிப்லி ரன் எதுவும் எடுக்காமலும், கிராலே 5 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய பேர்ஸ்டோ, ஜோ ரூட் நிதானமான ஆடி மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

    இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. பேர்ஸ்டோவ் 24 ரன்னுடனும், ஜோ ரூட் 67 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
    ஆஸ்திரேலிய மண்ணில் மாஸ் காட்டிய இளம் இந்திய வீரர்களுக்கு புத்தம் புதிய தார் காரை பரிசாக வழங்குவதாக ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.


    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இளம் இந்திய அணிக்கு உலகம் முழுக்க பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. டெஸ்ட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்று அசத்தியது. 

    இந்நிலையில், வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா இந்திய அணியில் அசத்திய ஆறு இளம் வீரர்களுக்கு புத்தம் புதிய மஹிந்திரா தார் காரை பரிசாக வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்.

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    அந்த வகையில் இந்திய அணியை சேர்ந்த நடராஜன், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஷூப்மன் கில் மற்றும் நவ்தீப் சைனி உள்ளிட்ட ஆறு இளம் வீரர்களுக்கு மஹிந்திரா தார் கார் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது.

    காரை வென்ற முகமது சிராஜ் அதில் பயணிக்கும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இவர் கடைசி போட்டியில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். மேலும் தொடரில் அதிகபட்சமாக 13 விக்கெட்களை வீழ்த்தினார்.
    ‘வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரான தமிழகத்தின் நடராஜனை ஒரு ஜாம்பவான்’ என்று ஆஸ்திரேலிய அதிரடி வீரர் வார்னர் புகழாரம் சூட்டியுள்ளார்.
    சிட்னி:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக டேவிட் வார்னர் தலைமையில் விளையாடிய தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் கடந்த ஐ.பி.எல். சீசனில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தி பிரமாதப்படுத்தினார். அது மட்டுமின்றி அந்த ஐ.பி.எல்.-ல் மொத்தம் 71 யார்க்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். அதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்ட அவர் ஒரு நாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனதுடன் மொத்தம் 5 ஆட்டங்களில் விளையாடி 11 விக்கெட்டுகள் கைப்பற்றி முத்திரை பதித்தார். அவருக்கு ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பாராட்டு தெரிவித்து ஒரு வீடியோவை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் முதலில் ‘வாழ்த்துகள் நட்டு’, என்று தமிழில் பேசியுள்ள வார்னர் அதன் பிறகு, ‘நடராஜன், நிச்சயம் நீங்கள் ஒரு ஜாம்பவான். நான் உங்களுடன் நிறைய நேரத்தை செலவிட்டு இருக்கிறேன். களத்திற்கு வெளியேயும், உள்ளேயும் நீங்கள் சிறப்பான மனிதர். நீங்கள் எங்கள் அணியில் (ஐதராபாத்) இருப்பதை மிகவும் விரும்புகிறேன்’ என்றார்.

    மேலும் வார்னர் கூறுகையில், ‘அதிர்ஷ்டவசமாக அவருக்கு நான் கேப்டனாக இருந்துள்ளேன். நடராஜன் வியப்புக்குரிய வீரர். பணிவானவர். உண்மையிலேயே ஒரு ஜென்டில்மேன். 2020-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நம்ப முடியாத அளவுக்கு அவரது பந்து வீச்சு இருந்ததை பார்த்தோம். அதைத் தொடர்ந்து வலைபயிற்சி பவுலராக ஆஸ்திரேலியாவுக்கு பயணித்தார். தனக்கு முதல் குழந்தை பிறந்ததை கூட பார்க்க செல்லாமல் தியாகம் செய்தார். அதன் பிறகு மூன்று வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டிலும் கால்பதிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்ன ஒரு மகத்தான சாதனை. அவரை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்ன செய்ய வேண்டும், சூழ்நிலைக்கு தக்கபடி எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். கடந்த முறை இறுதிகட்ட பந்துவீச்சில் நேர்த்தியாக செயல்பட்டார். இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.’ என்றும் குறிப்பிட்டார்.

    இதற்கிடையே சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் நடராஜனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை பார்த்து இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் சிலாகித்து போய் உள்ளார். மேளம் தாளம் முழங்க சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஷேவாக், ‘இது தான் இந்தியா. இங்கு கிரிக்கெட் என்பது சாதாரண விளையாட்டல்ல. அதற்கும் மேலாக பார்க்கப்படுகிறது. நடராஜன் சொந்த ஊருக்கு திரும்பிய போது அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இது நம்ப முடியாத வகையில் இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.
    ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் இன்று நடக்கும் ஆட்டத்தில் கேரளாவை மீண்டும் தோற்கடித்து கோவா 6-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    கோவா:

    11 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதவேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். 

    68-வது லீக் ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் எப்.சி.கோவா-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. கோவா அணி ஏற்கனவே கேரளாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். கேரளாவை மீண்டும் தோற்கடித்து கோவா 6-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி புள்ளிகள் பட்டியலில் தற்போது 3-வது இடத்தில் உள்ளது. 

    கேரள அணி கோவாவுக்கு பதிலடி கொடுத்து 4-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது. அந்த அணி 13 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது. 
    ஐ.எஸ்.எல். போட்டியில் மும்பை அணி 9 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 29 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. மோகன் பகான் 24 புள்ளிகளுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ளது.
     
    கோவா 5 வெற்றி, 4 டிரா, 3 தோல்வியுடன் 19 புள்ளிகளும், ஐதராபாத்  17 புள்ளிகளும் பெற்றுள்ளன. 

    சென்னையின் எப்.சி. 3 வெற்றி, 6 டிரா, 4 தோல்வியுடன் 15 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணியும் கவுகாத்தியும் சம புள்ளியுடன் உள்ளது. கோல்கள் அடிப்படையில் முன்னிலை வகிப்பதால் கவுகாத்தி 5-வது இடத்தில் இருக்கிறது.
    சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் ஓய்வு பெற்று விட்டதால் அந்த இடத்திற்கு அனுபவ வீரர் தேவை என்ற நோக்கில் உத்தப்பாவை சென்னை அணி வாங்கியுள்ளது.
    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரூ.3 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பா, பரஸ்பர பரிமாற்றம் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தாவுகிறார்.

    சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் ஓய்வு பெற்று விட்டதால் அந்த இடத்திற்கு அனுபவ வீரர் தேவை என்ற நோக்கில் உத்தப்பாவை சென்னை அணி வாங்கியுள்ளது. இது அவர் விளையாடப்போகும் 6-வது அணியாகும்.

    2008-ம் ஆண்டில் இருந்து ஐ.பி.எல்.-ல் விளையாடி வரும் 35 வயதான உத்தப்பா கடந்த ஐ.பி.எல். சீசனில் 12 ஆட்டங்களில் வெறும் 196 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.
    தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சமீர் வர்மா ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறினர்.
    பாங்காக்:

    டோயோட்டா தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 13-21, 9-21 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் ராட்சனோக் இன்டானோனிடம் (தாய்லாந்து) 38 நிமிடங்களில் தோற்று வெளியேறினார்.

    ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சமீர் வர்மா 13-21, 21-19, 20-22 என்ற செட் கணக்கில் 3-ம் நிலை வீரர் ஆன்டெர்ஸ் ஆன்டன்செனிடம் (டென்மார்க்) போராடி வீழ்ந்தார். இந்த ஆட்டம் 1 மணி 22 நிமிடங்கள் நீடித்தது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்த நிலையில் ஆண்கள் இரட்டையரில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி, கலப்பு இரட்டையரில் சாய்ராஜ்-அஸ்வினி ஜோடிகள் அரைஇறுதிக்கு முன்னேறி ஆறுதல் அளித்துள்ளன.
    கொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று ஜப்பான் அரசு தனிப்பட்ட முறையில் முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
    கொரோனா நோய் தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டும் ஜூலை மாதம் 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகளும், ஆகஸ்ட் 24-ம் தேதி பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளது என தகவல் வெளியானது.

    ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்ய ஜப்பா\ன் அரசு தனிப்பட்ட முறையில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் விளையாட்டு டோக்கியோ 2020 குறித்த எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பு  டோக்கியோ ஏற்பாட்டுக்குழு மற்றும் ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து வரும் என்று அமெரிக்காவின் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குழு டுவிட்டரில் கூறி உள்ளது.

    ஜப்பான் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து வருபர்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. டோக்கியோ மற்றும் முக்கிய நகரங்களில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஜப்பானில் சுமார் 80 சதவீத மக்கள் இந்த கோடையில் ஒலிம்பிக் போட்டி  நடத்தப்படுவதை விரும்பவில்லை என்று சமீபத்திய கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. விளையாட்டு வீரர்களின் வருகை வைரஸை மேலும் பரப்பும் என்ற அச்சப்படுகின்றனர் என்று டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

    டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்வது குறித்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று ஜப்பானின் துணை தலைமை அமைச்சரவை செயலாளர் மனாபு சாகாய், செய்தித் தொடர்பாளர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

    சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் நேற்று அளித்த பேட்டியில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை  நடத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 ஆம் தேதி ஆரம்பமாகாது என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை என்று அவர் கூறி உள்ளார்.
    விராட் கோலி உள்பட முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்திய அணி ஆஸ்திரேலியா தொடரை வென்றது எல்லாம் ராகுல் டிராவிட்டின் செயலாகும் என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
    பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார். இவர் முன்னதாக 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியும் தலைமை பயிற்சியாளராகவும், இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராகவும் 216 முதல் 2019 வரை செயலாற்றி இருந்தார்.

    இளைஞர்களுக்கு சிறப்பான வகையில் பயிற்சி அளித்து சீனியர் அணிக்கு அவர்களை தயார்படுத்தினார். சீனியர் அணிக்கு தேவைப்படும்போதெல்லாம் ஜூனியர் அணியில் இருந்து வீரர்களை அனுப்பி வைத்தார். இவரது கட்டமைப்பில் ஏராளமான இளைஞர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டனர்.

    இதனால்தான் ஆஸ்திரேலியா தொடரில் விராட் கோலி, பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜடேஜா, அஷ்வின் இல்லாமல் இந்திய அணியால் வெற்றி பெற முடிந்தது.

    முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், டி நடராஜன், ஷர்துல் தாகூர், ரிஷப் பண்ட், ஷுப்மான் கில் சிறப்பாக செயல்பட்டனர்.

    இந்த நிலையில் இந்திய அணியின் சிறப்பாக செயல்பட்டுக்கு ராகுல் டிராவிட் முக்கிய காரணம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், சிறந்த பேட்ஸ்மேனுமான இன்சமாம் உல் ஹக் புகழாரம் சூட்டியுள்ளார்.

    இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வெல்வது எல்லோருக்கும் கடினமானது. இளைஞர்களை கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தொடரை கைப்பற்றியதுபோல், எந்த அணியையும் எனது வாழ்க்கையில் நான் பார்த்தது இல்லை. ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் 2016 உலகக்கோப்பை போட்டியில் எவ்வாறு செயல்பட்டனரோ, அதை தற்போதும் செய்ததை நான் நினைத்து பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

    அப்புறம் ஷுப்மான் கில், பிரித்வி ஷா 2018 U-19 உலகக்கோப்பையில் விளையாடினார்கள். முகமது சிராஜ், நவ்தீப் சைனி, ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால் போன்றோர் இந்திய ஏ அணிக்காக அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

    இந்த பயணம் U-19 அணியில் இருந்து இந்தியா ஏ, அதன்பின் இந்தியா ஏ அணியில் இருந்து தேசிய அணி. ராகுல் டிராவிட்டை தவிர வேறு எவராலும் இளம் வீரர்கள் தங்கள் தளத்தை மேம்படுத்தவில்லை என்பதை நான் உணர்ந்தேன்.

    ராகுல் டிராவிட்டின் வலிமை. அவரை ஏன் தடுப்புச்சுவர் என்று அழைக்கிறர்கள் என்றால், அவர் வலிமையான பாதுகாப்பு ஆட்டக்காரர். அவரால் எந்தவித கண்டிசனிலும் விளையாடுவார். மனதளில் வலிமை கொண்டவர். எந்தவொரு இடத்திற்கும் ஏற்ப அவரி சரி செய்து கொள்வார். இந்த வீரர்களுடன் ராகுல் டிராவிட் பணிபுரிந்தது, அவர்களை மனதளவில் வலிமைப்படுத்தியுள்ளது.

    இன்சமாாம் உல் ஹக், ராகுல் டிராவிட்

    முதல் போட்டி தோல்வி, விராட் கோலி இந்திய திரும்பிய பிறகு, மெல்போர்ன் டெஸ்ட் பேட்டியில் வெற்றி, நான்கு முக்கிய வீரர்கள் காயம் காரணமாக இடம் பெறாமல் போட்டியை தீர்மானிக்கும் போட்டியில் அசத்தியிருந்தால், இது எல்லாமே ராகுல் டிராவிட் செயலாகும் என நினைக்கிறேன்.

    தொழில்நுட்பத்தை விட, எந்தவொரு கண்டிசனிலும் விளையாடும் வகையில் தடுப்பு மிகவும் சிறந்தது என்ற வகையில் அவர்களை தயார் செய்ய முயற்சி செய்துள்ளார். ராகுல் டிராவிட் அவர்களுக்கு பயிற்சி கொடுத்ததன் மூலம், அவர்கள் அதில் இருந்து பயனடைந்துள்ளனர்’’ என்றார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5-ம்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி பிப்ரவரி 17-ந்தேதி தொடங்குகிறது.

    கொரோனா தொற்றுக்குப்பின் இந்தியாவில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். மத்திய அரசு திறந்தவெளி மைதானங்களில் 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

    இதனால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. இந்த நிலையில் இரண்டு போட்டிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று முன்தடுப்பு நடவடிக்கையாக ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என தமிழக கிரிக்கெட் செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் வகையில் கங்காரு வடிவிலான கேக்கை தயார் செய்து, அதை கட் செய்ய சொன்னபோது ரஹானே மறுத்துவிட்டார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றியது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த பின்னர், வீரர்கள் பலர் காயம் அடைந்த நிலையிலும் அபார வெற்றி பெற்றது. குறிப்பாக ஆஸ்திரேலியாவின் கோட்டையாக விளங்கிய பிரிஸ்பேன் மைதானத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது சிறப்பானதாக கருதப்படுகிறது.

    இதனால் சொந்த நாடு திரும்பிய வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஹானே அவரது வீட்டிற்கு வந்தபோது, அவரது அப்பார்ட்மென்டில் உள்ளவர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அப்போது பிரமாண்ட கேக்கை வெட்டி மகிழ்ச்சியை கொண்டாட நினைத்தனர். அதற்கான கேக் ஒன்று தயார் செய்திருந்தனர். அந்த கேக்கின் மீது ஆஸ்திரேலியாவின் தேசிய சின்னமான கங்காரு இருப்பதுபோல் தயார் செய்யப்பட்டிருந்ததது.

    ரஹானேயிடம் அந்த கேக்கை வெட்டச் சொன்னார்கள். ஆனால், கங்காரு போன்று இருந்ததால், ராஹானே கேக்கை வெட்ட மறுத்துவிட்டார். இந்த சம்பவம் ரஹானே சிறந்த குணத்தை காட்டியது.
    குடும்ப உறுப்பினர்களை அழைத்து வர அனுமதிக்க முடியாது என்று ஆஸ்திரேலியா கூறியதும், தொடரை ரத்து செய்வோம் என ரவி சாஸ்திரி மிரட்டியதால் யு-டர்ன் ஆனது என பீல்டிங் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா- இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆனால் மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    அதன்பின் சிட்னி நகருக்கு செல்லும்போது ஆஸ்திரேலியா இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. கோரன்டைன் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக்கியது. இதனால் இந்திய அணி பிரிஸ்பேன் செல்ல தயக்கம் காட்டியது. இறுதியில் வெற்றி பெற்று சாதனைப்படைத்தது.

    தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலியா நெருக்கடி கொடுத்தது. குடும்ப உறுப்பினர்களை அழைத்து வர அனுமதி தரவில்லை. அதன்பின் ரவி சாஸ்திரி மிரட்டல் விடுத்ததால் ஆஸ்திரேலியா சம்மதம் தெரிவித்தது என இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    ஆர் ஸ்ரீதர் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் யூ-டியூப் சேனனில் பேசினார். அப்போது நடந்த உரையாடல்,

    அஸ்வின்: 2021 புதுவருடம் தொடங்குவதற்கு முன் மெல்போர்னில் ஏராளமான டிராமா நடைபெற்றது. அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எங்களை அழைக்கும்போது, நீங்கள் ஏற்கனவே ஐபிஎல் போட்டிக்காக சுமார் மூன்றரை மாதங்கள் பயோ-பப்பிள் பாதுகாப்பில் இருந்துள்ளீர்கள். அதனால் ஆஸ்திரேலியாவில் 14 கோரன்டைனுக்குப் பிறகு ஷாஃப்ட் பப்பிள் இருந்தால் போதுமானது என்று சொன்னார்கள்.

    நீங்கள் காபி குடிக்க செல்லலாம். படங்கள் பார்க்கலாம். வெளியில் சென்று சந்தோசமாக நேரத்தை செலவிடலாம் என்றார்கள். ஆனால் தொடர் 1-1 என ஆனதும், எங்களை அறைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றார்கள். எப்போதும் அறைக்குள்ளேயே எப்படி இருக்க முடியும். அது சவாலான நேரமாக இருந்தது.

    ஆர்.ஸ்ரீதர்: எல்லாவற்றிற்கும் முன், நாங்கள் துபாயில் கோரன்டைனில் இருக்கும்போது, அவர்கள் திடீரென குடும்பங்களுக்கு அனுமதி கிடையாது என்றார்கள். ஆஸ்திரேலியா தொடர் கூட தொடங்கவில்லை. அதற்கு முன் ஸ்லெட்ஜிங் தொடங்கிவிட்டது. நாங்கள் இரவு முழுவதும் ஏராளமான போன் செய்தோம். ஆனால், அவர்கள் குடும்பங்களுக்கு அனுமதி கிடையாது என்றார்கள்.

    அஸ்வின்: இதை நான் என் மனைவியிடம் கூறினேன், அவர் சரி, நான் வேறு வேறு கணவரை தேடுகிறேன் என்றார்.  நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ஆறு மாதங்கள் ஆகிறது. என்னுடைய குடும்பம் துபாய் வந்துவிட்டது. அதன்பின் அவர்கள் இப்படி கூறினார்கள்.

    ஆர்.ஸ்ரீதர்: அங்கு ஆறு வீரர்களின் குடும்பங்கள் இருந்தது. அதை அவர்களுக்கு எப்படி தெரிவிக்க முடியும்?. அப்புறம் ரவி சாஸ்திரி வந்தார். அவர் ஜும் கால் ஏற்பாடு செய்தார். அவர்கள் எங்களுடைய வீரர்கள் குடும்பத்தை அனுமதிக்கவில்லை என்றால், நாங்கள் ஆஸ்திரேலியா தொடரில் விளையாடமாட்டோம். நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ? அதை செய்யுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார்.

    அதன்பின் ஒரு விஷயத்தை கூறினார். என்னைத் தவிர ஆஸ்திரேலியாவை பற்றி யாருக்கும் தெரியாது, அங்கு நான் 40 ஆண்டுகளாக சென்றிருக்கிறேன். அவர்களுடன் எப்படி பேச வேண்டும், எப்படி பேரம் பேச வெண்டும் என்பது எனக்குத் தெரியும் என்றார். பிசிசிஐ அதை ஏற்றுக் கொண்டது. வார இறுதியில் ஒரேநாள் இரவில் ஆஸ்திரேலியா அரசு அனுமதி அளித்தது.

    அஸ்வின்: இதற்கு முன் இதுபோன்று நடந்தது கிடையாது. சிட்னியில் நாங்களும், ஆஸ்திரேலியா வீரர்களும் ஒரே பப்பிளில் இருந்தோம். ஆனால், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எங்களுக்கு அனுமதி இல்லை.

    ஆர்.ஸ்ரீதர்: இது கொஞ்சம் அவமானகரமானது.
    ×