என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  ஐஎஸ்எல் கால்பந்து: கோவா அணி 6-வது வெற்றியை பெறுமா? கேரளாவுடன் இன்று மோதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் இன்று நடக்கும் ஆட்டத்தில் கேரளாவை மீண்டும் தோற்கடித்து கோவா 6-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  கோவா:

  11 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதவேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். 

  68-வது லீக் ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் எப்.சி.கோவா-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. கோவா அணி ஏற்கனவே கேரளாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். கேரளாவை மீண்டும் தோற்கடித்து கோவா 6-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி புள்ளிகள் பட்டியலில் தற்போது 3-வது இடத்தில் உள்ளது. 

  கேரள அணி கோவாவுக்கு பதிலடி கொடுத்து 4-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது. அந்த அணி 13 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது. 
  ஐ.எஸ்.எல். போட்டியில் மும்பை அணி 9 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 29 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. மோகன் பகான் 24 புள்ளிகளுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ளது.
   
  கோவா 5 வெற்றி, 4 டிரா, 3 தோல்வியுடன் 19 புள்ளிகளும், ஐதராபாத்  17 புள்ளிகளும் பெற்றுள்ளன. 

  சென்னையின் எப்.சி. 3 வெற்றி, 6 டிரா, 4 தோல்வியுடன் 15 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணியும் கவுகாத்தியும் சம புள்ளியுடன் உள்ளது. கோல்கள் அடிப்படையில் முன்னிலை வகிப்பதால் கவுகாத்தி 5-வது இடத்தில் இருக்கிறது.
  Next Story
  ×