search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோக்கியோ ஒலிம்பிக் (கோப்புப்படம்)
    X
    டோக்கியோ ஒலிம்பிக் (கோப்புப்படம்)

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய ஜப்பான் அரசு ஆலோசனை?

    கொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று ஜப்பான் அரசு தனிப்பட்ட முறையில் முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
    கொரோனா நோய் தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டும் ஜூலை மாதம் 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகளும், ஆகஸ்ட் 24-ம் தேதி பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளது என தகவல் வெளியானது.

    ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்ய ஜப்பா-ன் அரசு தனிப்பட்ட முறையில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் விளையாட்டு டோக்கியோ 2020 குறித்த எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பு  டோக்கியோ ஏற்பாட்டுக்குழு மற்றும் ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து வரும் என்று அமெரிக்காவின் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குழு டுவிட்டரில் கூறி உள்ளது.

    ஜப்பான் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து வருபர்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. டோக்கியோ மற்றும் முக்கிய நகரங்களில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஜப்பானில் சுமார் 80 சதவீத மக்கள் இந்த கோடையில் ஒலிம்பிக் போட்டி  நடத்தப்படுவதை விரும்பவில்லை என்று சமீபத்திய கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. விளையாட்டு வீரர்களின் வருகை வைரஸை மேலும் பரப்பும் என்ற அச்சப்படுகின்றனர் என்று டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

    டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்வது குறித்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று ஜப்பானின் துணை தலைமை அமைச்சரவை செயலாளர் மனாபு சாகாய், செய்தித் தொடர்பாளர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

    சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் நேற்று அளித்த பேட்டியில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை  நடத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 ஆம் தேதி ஆரம்பமாகாது என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை என்று அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×