search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜஸ்டின் லேங்கர் - கோப்பையுடன் இந்திய வீரர்கள் (கோப்பு படம்)
    X
    ஜஸ்டின் லேங்கர் - கோப்பையுடன் இந்திய வீரர்கள் (கோப்பு படம்)

    ’இந்தியர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்’ - ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் புகழாரம்

    இந்தியர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார்.
    பிரிஸ்பென்:

    இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் பிரிஸ்பென் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் 329 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டி ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என இந்திய அணி வென்று காட்டியுள்ளது.

    கடந்த 1988-ல் இருந்து இந்த மைதானத்தில் நடைபெற்ற 28 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றிருந்தது. காபா டெஸ்ட் போட்டி டிராவானால் கூட அது ஆஸ்திரேலியாவின் தோல்வி என சொல்லி இருந்தார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். ஆனால் மெல்பேர்ன், காபா என இரண்டு மைதானங்களில் இந்தியா வெற்றிபெற்று, ஆஸ்திரேலிய அணியின் 32 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது.

    இந்திய அணியின் இந்த அசத்தலான வெற்றியை பலரும் பாராட்டிவருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் வெற்றி குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் கூறியதாவது:-

    இது மிகச்சிறந்த டெஸ்ட் தொடர். இதில் வெற்றியாளரும் உண்டு தோல்வியாளரும் உண்டு. டெஸ்ட் கிரிக்கெட் வெற்றிபெற்றுள்ளது. இந்த தோல்வி எங்களை மிகப்பெரிய அளவில் காயப்படுத்தப்போகிறது.

    அனைத்து பாராட்டுகளுக்கும் இந்தியா தகுதியானது. அவர்கள் சிறப்பாக விளையாடினர். இந்த தோல்வியில் இருந்து நாங்கள் நிறைய பாடங்களை கற்போம்.

    ரிஷப் பண்ட் இன்னிங்ஸ் ஹெட்டிங்லியில் பென்ஸ்டோக்ஸ் பேட்டிங்கை எனக்கு நினைவு படுத்தியது. அவர் (பண்ட்) வந்தார். அவருக்கு பயமில்லை. இதற்காவே அவர் பாராட்டுக்குரியவர்.

    சுக்மன் கில்லும் சிறப்பாக பேட்டிங் செய்தார். இந்திய அணியின் இளம்பந்துவீச்சாளர்கள் அனைத்து நேரத்திலும் எங்களை (ஆஸ்திரேலியாவை) பதற்றத்திலேயே வைத்திருந்தனர்.

    இந்திய வீரர்கள் முழுமையான வாழ்த்துக்கு தகுதியானவர்கள். எதையும் நமக்கு கொடுக்கப்பட்டு விட்டது என்பது போல் சுலபமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்தியர்களை ஒருபோதும் எளிதாக குறைத்து மதிப்பிடாதீர்கள். 1.5 பில்லியன் மக்கள் கொண்ட நாட்டில் சீனியர் அணியில் நீங்கள் (இந்தியர்கள்) விளையாடுகிறீர்கள். எனவே, நீங்கள் கடுமையாக
    உழைக்க வேண்டும். இந்தியாவை என்னால் பாரட்டாமல் இருக்க முடியவில்லை.

    என்றார்.
    Next Story
    ×