என் மலர்tooltip icon

    விளையாட்டு

    15-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் இந்திய அணி வீரர் ஷிகர் தவானை பஞ்சாப் அணி 8.25 கோடிக்கு வாங்கியது.
    15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன. 10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். 

    ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டவர் உள்பட 25 வீரர்களை வைத்துக் கொள்ளலாம். இதன்படி பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்படுகிறது. இவர்களை தேர்வு செய்ய ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது.

    இதில் முதல் வீரராக ஷிகர் தவானை ஏலம் எடுத்தலில் ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு, பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் பஞ்சாப் அணி 8.25 கோடிக்கு ஷிகர் தவனை ஏலம் எடுத்தது. அடுத்து தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 கோடிக்கு ஏலம் போனார். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விலைக்கு வாங்கியது.

    இது நியாயமான விளையாட்டு மற்றும் விளையாட்டு விதிகள் பற்றிய செய்தி என தமது ட்விட்டர் பதிவில் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குவாட் அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆஸ்திரேலியாவின் பின்னர் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு  சென்று அதனை பார்வையிட்டார். 

    அவருடன் ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி மரிஸ் பெய்னும் சென்றிருந்தார். அப்போது விராட்கோலி கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை  ஜெய்சங்கர் மரிஸ் பெய்னுக்கு பரிசாக வழங்கினார்

    பின்னர் இது குறித்து தமது ட்விட்டர் பதிவில் நியாயமான ஆட்டம் மற்றும் விளையாட்டின் விதிகளின் செய்தி என்று ஜெய்சங்கர்  குறிப்பிட்டுள்ளார்.



    இந்தத் தொடரில் இருந்து எதைப் பெற விரும்பினோமோ அதுவே எங்களுக்குக் கிடைத்ததாகவும் ரோஹித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
    அகமதாபாத்:

    அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

    இந்தியா சார்பில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டும், தீபக் சாஹர், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக ரோஹித் ஷர்மா பொறுப்பேற்ற பின்னர் இந்திய அணியின் மிகப் பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது. 

    இந்த சாதனை மிக மகிழ்ச்சிகரமானது என அவர் தெரிவித்துள்ளார். போட்டி நிறைவுக்கு பின்னர் இது குறித்து ரோஹித் சர்மா பேசியதாவது:

    நிச்சயமாக அந்த எண்களை பார்க்கவில்லை. இந்தத் தொடரில் இருந்து நாங்கள் எதைப் பெற விரும்புகிறோமோ, அது எங்களுக்குக் கிடைத்தது. 

    நாம் விளையாடும் வரை சத்தம் இருக்கும். மக்கள் நம்மைப் பார்க்கிறார்கள், எல்லோரும் நம்மைப் பார்க்கிறார்கள். வீரர்களாக, தனிநபர்களாக, நாம் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். 

    கோப்பு படம்

    உண்மையில் வேகப்பந்து வீச்சாளர்களைப் பார்ப்பது நன்றாக இருந்தது. சிராஜ் மிகவும்  ஈர்க்கப்பட்டார். ஷர்துலும் தீபக்கும் சிறப்பாக செயல்பட்டனர். குல்தீப் மற்றும் சாஹல் இருவரும் எங்களுக்கு முக்கியமான வீரர்கள். அவர்களுக்கு நம்பிக்கையை கொடுப்பது முக்கியம்.இவ்வாறு அவர் குறிபிட்டார். 

    ஒருநாள் தொடர் தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி உள்ளார்.இது குறித்து அவர் பேசியதாவது:

    இந்தியாவுக்கு வாழ்த்துகள் சொல்ல வேண்டும்.தொடரில் நாங்கள் பந்துவீசிய விதம் அற்புதமாக இருந்தது. 50 ஓவர்களில் நிறைய வேலை இருக்கிறது. 

    கடந்த இரண்டு ஆட்டங்களில் வீரர்கள் பந்துவீச்சு அருமையாக இருந்தது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் செயல்படும் விதம் குறித்து நிறைய வேலைகள் உள்ளன. இவ்வாறு பூரன் குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது
    பெங்களூரு:

    8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், நேற்று இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் புனேரி பால்டன் அணி, அரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர் கொண்டது. 

    இதில் 45-27 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் அணி, அரியானா ஸ்டீலர்சை தோற்கடித்து வெற்றி பெற்றது.

    உ.பி.யோத்தா மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வீரர்கள்

    மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. 41-34 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தா அணி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.

    இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டம் ஒன்றில் தமிழ் தலைவாஸ் அணி தபாங் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தது.
    அகமதாபாத்:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் அரை சதம் அடித்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் 80 ரன்னும், ரிஷப் பண்ட் 56 ரன்னும் எடுத்தனர். 7-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் ஜோடி 53 ரன் சேர்த்தது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 4 விக்கெட்டும் அல்ஜாரி ஜோசப், வால்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தலாக பந்து வீச சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 122 ரன்களை எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அந்த அணியில் ஒடியன் ஸ்மித் அதிரடியாக ஆடி 18 பந்தில் 36 ரன்னும், நிகோலஸ் பூரன் 34 ரன்னும் எடுத்தனர். 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அல்ஜாரி ஜோசப், வால்ஷ் 47 ரன்கள் சேர்த்தது. 

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டும், தீபக் சாஹர், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதன்மூலம் வெஸ்ட் இண்டீசுடனா தொடரை 3-0 என இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சாஹல் 4 விக்கெட்டும், 2வது ஒருநாள் போட்டியில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.
    அகமதாபாத்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டித் தொடரை ஏற்கனவே இந்தியா கைப்பற்றி விட்டது.

    இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் பிப்ரவரி 16ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. 

    இந்நிலையில், டி20 அணியில் இருந்து காயம் காரணமாக கே.எல்.ராகுல் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் விலகி உள்ளனர். 
    அவர்களுக்கு பதிலாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் அரை சதம் அடித்து அசத்தினார்.
    அகமதாபாத்:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - தவான் களமிறங்கினர்.

    இந்திய அணிக்கு தொடக்கமே சொதப்பலாகவே அமைந்தது. ரோகித் சர்மா 13, தவான் 10, விராட் கோலி 0 என அடுத்தடுத்து வெளியேறினர். 42 ரன்கள் எடுப்பதற்குள்ளயே 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இதனையடுத்து ஸ்ரேயாஸ் அய்யர்-ரிஷப் பண்ட் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர்-ரிஷப் பண்ட் அரை சதம் அடித்து அசத்தினர். அரை சதம் அடித்த ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாட முயற்சித்த நிலையில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் (6) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்த சிறிது நேரத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் 80 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    இந்திய அணி 187 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தருடன்-தீபக் சாஹர் ஜோடி சேர்ந்தார். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை எளிதாக எதிர் கொண்டு ஆடினர். குறிப்பாக தீபக் சாஹர் அதிரடியாக விளையாடினார். 4 பவுண்டரி 2 சிக்சர் விளாசிய அவர் 38 ரன்கள் எடுத்த நிலையிலும் வாஷிங்டன் சுந்தர் 33 ரன்கள் எடுத்த நிலையிலும் ஹோல்டர் பந்து வீச்சில் வெளியேறினார். 7-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர்-தீபக் சாஹர் ஜோடி 53 ரன்கள் சேர்ந்தனர்.

    50 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர் 4 விக்கெட்டும் அல்ஜாரி ஜோசப், வால்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் தவான், ஷ்ரேயாஸ் அய்யர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 3.3 ஓவரில் 16 ரன்கள் இருக்கும்போது இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது, ரோகித் சர்மா 15 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி தான் சந்தித்த 2-வது பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினார்.

    இதையும் படியுங்கள்

    தவான் உடன் 3-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். தவானும் நீண்ட நேரம் விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. அவர் 26 பந்தில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது இந்தியா 9.3 ஓவரில் 42 ரன்கள் எடுத்திருந்தது.

    42 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இந்தியா இழந்து திணறியது. 4-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் ரிஷாப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி வருகிறது. இந்தியா 13.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
    அகமதாபாத்:

    இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. 

    இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். 

    இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சஹால், ஹூடா, கேஎல் ராகுல், தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டு தவான், ஸ்ரேயாஸ் அய்யர், குல்தீப் யாதவ், தீபக் சாஹர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    புரோ கபடி லீக் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்- புனேரி பல்தான் அணிகள் மோதுகின்றன.
    பெங்களூர்:

    12 அணிகள் பங்கேற்று உள்ள புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்- புனேரி பல்தான் அணிகள் மோதுகின்றன.

    அரியானா அணி 9 வெற்றி, 3 டை, 6 தோல்வி யுடன் 58 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி புனேயை வீழ்த்தி 10-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றால் அரியானா அணி 2-வது இடத்துக்கு முன்னேறும்.

    புனே அணி 8 வெற்றி, 8 தோல்வியுடன் 42 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் உள்ளது. அந்த அணி அரியானாவை வீழ்த்தி 9-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- உ.பி.யோதா அணிகள் மோதுகின்றன.

    ஜெய்ப்பூர் அணி 8 வெற்றி, 2 டை, 7 தோல்வியுடன் 51 புள்ளிகள் பெற்று 6-வது இடத்திலும், உ.பி.யோதா 7 வெற்றி, 8 தோல்வியுடன் 52 புள்ளிகள் பெற்று 5-வது இடத்திலும் உள்ளன. ஜெய்ப்பூர் 9-வது வெற்றிக்காகவும், உ.பி. அணி 8-வது வெற்றிக்காகவும் காத்திருக்கின்றன.

    பாட்னா அணி 70 புள்ளியுடன் முதல் இடத்திலும், டெல்லி 60 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன.
    தீபக் சாஹர் அல்லது ‌ஷர்துல் தாகூர் ஆகியோரில் ஒருவரை ஏலத்தில் எடுக்க சென்னை அணி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
    பெங்களூர்:

    15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 2-ந் தேதி தொடங்குகிறது. இதில் புதிதாக லக்னோ, சூப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் (அகமதாபாத்) ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதனால் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன.

    இந்த ஐ.பி.எல். போட்டிக்காக மிகப்பெரிய ஏலம் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 8 அணிகளும் 27 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது.

    சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகியவை தலா 4 வீரர்களையும், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகியவை தலா 3 வீரர்களையும், பஞ்சாப் 2 வீரர்களையும் தக்க வைத்து உள்ளன.

    புதிய அணிகளான லக்னோ, அகமதாபாத் ஆகியவை தலா 3 வீரர்களை ஏலத்துக்கு முன்பே எடுத்துக் கொண்டன. இதுவரை 10 அணிகளிலும் சேர்த்து 33 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

    ஐ.பி.எல். போட்டிக்கான மெகா ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நாளையும் (12-ந் தேதி), நாளை மறுநாளும் (13-ந் தேதி) நடக்கிறது. இந்த ஏலப்பட்டியலில் மொத்தம் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 290 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில் இடம்பெற்றுள்ள வீரர்களில் 228 பேர் சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள் மீதி உள்ள வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடாத உள்ளூர் மற்றும் புதுமுக வீரர்கள் ஆவார்கள்.

    வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி, ரூ.1½ கோடி, ரூ.1 கோடி, 75 லட்சம், 50 லட்சம், 40 லட்சம், 30 லட்சம், 20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதிகபட்ச அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு 46 வீரர்களின் பெயர் உள்ளது.

    இந்த ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலைக்கு போகும் நட்சத்திர வீரர் யார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்ரேயாஸ் அய்யர், டேவிட் வார்னர், இஷான் கி‌ஷன், தீபக் சாஹர், ஜேசன் ஹோல்டர், யசுவேந்திர சாஹல், ரபடா, தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போகலாம். இவர்களை எடுக்க 10 அணிகளும் கடுமையாக போராடும்.

    இது தவிர குயின்டன் டிகாக், நிக்கோலஸ் பூரன், ஷிகர்தவான், அஸ்வின், சுரேஷ் ரெய்னா, ‌ஷர்துல் தாகூர், அம்பதி ராய்டு, படிக்கல், குணால் பாண்ட்யா, ஹர்‌ஷல் படேல், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக், முகமது ‌ஷமி ஆகியோர் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது.

    ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய இளம் வீரர்கள் மீதும் ஐ.பி.எல். ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

    ஒவ்வொரு அணியும் இந்த சீசனில் வீரர்களின் ஏலத்துக்காக ரூ.90 கோடி வரை செலவழிக்கலாம்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்ததன் மூலம் ரூ.42 கோடியை செலவழித்து உள்ளது. இதனால் அந்த அணி எஞ்சிய தொகையான ரூ.48 கோடியை மட்டுமே ஏலத்தில் பயன்படுத்த முடியும். ஏற்கனவே அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களை சென்னை அணி ஏலத்தில் எடுக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை. தீபக் சாஹர் அல்லது ‌ஷர்துல் தாகூர் ஆகியோரில் ஒருவரை ஏலத்தில் எடுக்க சென்னை அணி திட்ட மிட்டுள்ளதாக தெரிகிறது.

    பஞ்சாப் கிங்ஸ் அணியிடம்தான் ஏலத்தில் எடுக்க அதிக தொகை உள்ளது. அந்த அணியிடம் கைவசம் ரூ.72 கோடி இருக்கிறது.

    டெல்லி அணிக்கு ரூ.47.5 கோடியும், கொல்கத்தா, மும்பை அணிகளுக்கு தலா ரூ.48 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.62 கோடியும், பெங்களூருக்கு ரூ.57 கோடியும், ஐதராபாத்துக்கு ரூ.68 கோடியும் எஞ்சி உள்ளன.

    புதிய அணிகளான லக்னோவிடம் ரூ.58 கோடியும், அகமதாபாத்திடம் ரூ.52 கோடியும் கைவசம் உள்ளன.

    ஐ.பி.எல். ஏலம் நாளை மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்த பிரம்மாண்ட ஏல நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பான நிலைக்கு எடுத்துச் சென்றவர் தோனி என்றும் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் குறிப்பிட்டுள்ளளார்.
    ஐ.பி.எல். 2022 டி20 தொடர் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை  எம் எஸ் தோனி வழிநடத்தி செல்வது குறித்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளதாவது :

    ஐ.பி.எல்.லில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக தோனி இருந்தார். கடந்த சீசன் உள்பட  சென்னை சூப்பர் கிங்ஸ் 4 பட்டங்களை கைப்பற்ற தோனி அணியை வெற்றிகரமாக வழி நடத்தி உள்ளார். 

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல சந்தர்ப்பங்களில் முக்கியமான பினிஷிங் ஷாட்கள் விளையாடியதன் மூலம் கடந்த காலங்களில் தோனி அணியின் மன உறுதியை உயர்த்த உதவியுள்ளார். அவரது கேப்டன் திறமை குறித்து பேசுபவர்கள் இது குறித்து  சரியாக பேசுவதில்லை. 

    ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸை மிகவும் நிலையான அணியாக மாற்றினார். தோனியின் அமைதியான மற்றும் கூட்டு அணுகுமுறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×