என் மலர்tooltip icon

    விளையாட்டு

    லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி அவேஷ் கானை 10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்ததன் மூலம், சர்வதேச விளையாட்டில் விளையாடாமல் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    ஐ.பி.எல். போட்டியில் கடந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடியவர் அவேஷ் கான். ரபடா, நோர்ஜோ ஆகியோருடன் இணைந்து தனது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். 140 கி.மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பந்து வீச்சு முன்னணி பேட்ஸ்களை திணறடித்தார்.

    இதன்மூலம் நேற்று நடைபெற்ற ஏலத்தில் அவரை எடுக்க பல அணிகள் போட்டியிட்டன. அடிப்படை விலையான 20 லட்சத்தில் இருந்து கிடுகிடுவென உயர்ந்தது. லக்னோ அணி இவரை எடுக்க கடும் போட்டியிட்டது. இறுதியில் 10 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தது.

    அவேஷ் கான் இதுவரை சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர். இதன்மூலம் சர்வதேச விளையாட்டில் விளையாடாமல் அதிக தொகைக்கு ஏலம் போனவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன் கிருஷ்ணப்பா கவுதமை சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த ஆண்டுக்கான ஏலத்தில் 9.25 கோடி ரூபாய்க்கு எடுத்தது. இதுவே அதிக தொகையாக இருந்தது. இதை தற்போது அவேஷ் கான் முறியடித்துள்ளார்.

    முதல் நாள் ஏலத்தில் நட்சத்திர வீரர்கள் புறக்கணிக்கப் பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    பெங்களூரு:

    15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் புதிதாக இணைந்துள்ளன. 

    இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று பெங்களூருவில் தொடங்கியது. முதல் நாள் மெகா ஏலத்தில் 161 வீரா்களின் பெயர்கள் இடம் பெற்றன.

    வெளிநாட்டு வீரர்களை வாங்குவதில் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இரண்டாம் நாளாக இன்று காலை மீண்டும் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதனிடையே, சில முக்கியமான நட்சத்திர வீரர்களை அடிப்படை விலைக்கு கூட எந்த அணியினரும் எடுக்க முன் வரவில்லை. 

    சென்னை அணியில் பல ஆண்டுகளாக விளையாடி வந்த சுரேஷ் ரெய்னாவை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு வாங்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை.  அதேபோல ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை. 

    இந்திய அணியின் வேகப்பந்து வேச்சாளர் உமேஷ் யாதவ், விக்கெட் கீப்பர் விருத்திமான் சாகா மற்றும் தென் ஆப்பிரிகாவின் அதிரடி வீரர் டேவிட் மில்லர், சுழற் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், ஆஸ்திரேலியாவின் மேத்தீவ் வேட், ஆடம் ஜாம்பா, இங்கிலாந்தின் சாம் பில்லிங்ஸ், வங்காளதேசத்தை சேர்ந்த ஷகிப் அல் ஹசன், மற்றும் ஆப்கானிஸ்தானின் முகம்மது நபி போன்ற நட்சத்திர ஆட்டக்காரர்களை ஏலத்தில் எடுக்க  நேற்று எந்த அணியும் முன் வரவில்லை.  

    முதல் நாள் ஏலத்தில் நட்சத்திர வீரர்களை புறக்கணித்த ஐ.பி.எல் அணி நிர்வாகங்களால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    பெனால்டி கார்னர் வாய்ப்புகளை பயன்படுத்தி இந்திய வீரர்கள் கோல் அடிக்க தவறியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது.
    போட்செஃப்ஸ்ட்ரூம்:

    சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் புரோ லீக் ஹாக்கிப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றன. போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா, பிரான்ஸை எதிர்கொண்டது.

    ஏற்கனவே முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி பிரான்சை 5-0  என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்து. 

    நேற்றைய போட்டியில் ஆரம்பம் முதலே பிரான்ஸ் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். இந்திய வீரர்கள் தங்களுக்கு கிடைத்த 10 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை பயன்படுத்தி கோல் அடிக்க தவறினர். 

    ஆட்டத்தின் முடிவில் 2-5 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்திய பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தியா தனது அடுத்த லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    மற்றொரு ஆட்த்தில் பெங்கால் வாரியர்ஸை தோற்கடித்து யு மும்பா அணி வெற்றி பெற்றது.
    பெங்களூரு:

    8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகின்றன.
    நேற்று இரவு நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, தபாங் டெல்லி அணியை எதிர்கொண்டது. இதில்  32-31 என்ற கணக்கில் தபாங் டெல்லி அணி வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி லீக் புள்ளி பட்டியலில்  2வது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

    யு மும்பா , பெங்கால் வாரியர்ஸ் அணி வீரர்கள்

    மற்றொரு ஆட்டத்தில்  யு மும்பா அணியும், பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின. இதில் 37-27 என்ற கணக்கில் யு மும்பா அணி நடப்பு சாம்பியனான பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு  அதிகரித்துள்ளது.

    15-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிக்கான முதல் நாள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது.
    பெங்களூர்:

    ஐ.பி.எல். முதல் நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

    இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் நாளில் 3 பவுலர்கள், பேட்ஸ்மேன், ஆல் ரவுண்டர், விக்கெட் கீப்பர் தலா ஒருவர் என 6 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது.

    தீபக் சாஹர் - ரூ. 14 கோடி

    அம்பதி ராயுடு - ரூ. 6.75 கோடி

    டிவைன் பிராவோ - ரூ. 4.40 கோடி

    ராபின் உத்தப்பா - ரூ. 2 கோடி

    துஷார் தேஷ்பாண்டே - ரூ. 20 லட்சம்

    கே.எம்.ஆசிப் - ரூ. 20 லட்சம்
    15-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் ஆவேஷ் கானை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
    பெங்களூர்:

    ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

    2021-ம் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆவேஷ் கான் விளையாடி வந்தார். இவருக்கு இந்த ஐபிஎல் ஏலத்தில் கடும் போட்டி நிலவியது.

    இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இவரை 10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
    15-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் ஷாருக் கானை பஞ்சாப் கிங்ஸ் அணி 9 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
    பெங்களூர்:

    ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

    2021-ம் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக தமிழக வீரர் ஷாருக் கான் விளையாடி வந்தார். இவருக்கு இந்த ஐபிஎல் ஏலத்தில் கடும் போட்டி நிலவியது.

    சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மல்லுக்கட்டிய நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை 9 கோடி ரூபாய்க்கு எடுத்தது.
    15-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் தீபக் சாஹரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 கோடிக்கு ஏலம் எடுத்தது.
    பெங்களூர்:

    ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். 2021-ம் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக தீபக் சாஹர் விளையாடி வந்தார். 80 லட்சத்துக்கு எடுக்கப்பட்டிருந்த சாஹருக்கு இந்த ஐபிஎல் ஏலத்தில் கடும் போட்டி நிலவியது.

    தீபக் சாஹர்

    ராஜஸ்தான், டெல்லி, சென்னை, ஆகிய அணிகள் மல்லுக்கட்டிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை 14 கோடிக்கு எடுத்தது. இஷான் கிஷானுக்கு அடுத்தபடியாக தீபக் சாஹர் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

    15-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் இஷான் கிஷானை மும்பை இந்தியன்ஸ் அணி அதிக விலைக்கு ஏலம் எடுத்துள்ளது.
    ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. பரபரப்பாக நடைபெற்ற ஏலத்தில் யாரும் சற்று எதிர்பார்க்காத நிலையில் இஷான் கிஷான் அதிக விலைக்கு ஏலம் போனார். மும்பை, குஜராத், ஐதராபாத் அணி இவரை ஏலம் எடுப்பதில் கடும் போட்டியாக இருந்தது. 

    இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை 15.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதுவரை நடந்த ஏலத்தில் இஷான் கிஷான்தான் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்.

    ஐபிஎல் ஏலத்தில் இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர்களில் இஷான் கிஷான் 2-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் யுவராஜ் சிங் உள்ளார். 
    டெஸ்டில் துணை கேப்டன் பதவியை ரோகித் சர்மாவுக்கு கொடுத்து ஒட்டுமொத்த தேர்வுக்குழுவின் முடிவாகும். தேர்வு குழுவின் இந்த முடிவை நான் மதிக்கிறேன் என ரகானே தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்பவர் ரகானே.

    ரகானேயின் ஆட்டம் சமீபகாலமாக மிகவும் மோசமாக உள்ளது. தென் ஆப்பிரிக்க தொடரில் 6 இன்னிங்சில் 136 ரன்களே எடுத்தார். இதனால் அவர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

    இனி வரும் காலங்களில் 11 பேர் கொண்ட டெஸ்ட் அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா என்பது கேள்விகுறியாகும்.

    ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது கேப்டனாக இருந்த விராட் கோலி பாதியில் நாடு திரும்பினார். இதனால் துணை கேப்டனாக இருந்த ரகானே கேப்டன் பொறுப்பு வகித்து தொடரை கைப்பற்றி சாதித்தார்.

    இது தொடர்பாக அவர் சமீபத்தில் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை சாடியிருந்தார். ஆஸ்திரேலிய தொடரில் வெற்றிக்கான திட்டங்களை நானே வகுத்தேன். ஆனால் பாராட்டுகளை பெற வேறு சிலர் முயற்சித்தனர் என்று ரவிசாஸ்திரியை மறைமுகமாக குறிப்பிட்டு இருந்தார்.

    தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது ரகானேயிடம் இருந்த துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் காயம் காணமாக ரோகித் சர்மா ஆடவில்லை. இதனால் லோகேஷ் ராகுல் துணை கேப்டனாக பொறுப்பு வகித்தார்.

    இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது தேர்வுக்குழுவின் முடிவாகும் என்று ரகானே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு வீரருக்கும் சிறப்பான ஆட்டம் இருக்கும். மோசனமான ஆட்டமும் இருக்கும். தென் ஆப்பிரிக்க தொடரில் எனது பேட்டிங் நன்றாகவே இருந்தது. தற்போது ரஞ்சிப் போட்டியில் எனது கவனம் இருக்கிறது. மும்பை அணிக்காக சிறந்த பங்களிப்பை நான் வெளிப்படுத்துவேன். இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    தற்போது உள்ள நிலை நிரந்தரமானது அல்ல. நான் பல்வேறு பாடங்களை கற்றுள்ளேன்.

    டெஸ்டில் துணை கேப்டன் பதவியை ரோகித் சர்மாவுக்கு கொடுத்து ஒட்டுமொத்த தேர்வுக்குழுவின் முடிவாகும். தேர்வு குழுவின் இந்த முடிவை நான் மதிக்கிறேன். அவருக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது மகிழ்ச்சிதான்.

    இவ்வாறு ரகானே கூறியுள்ளார்.
    15-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்பேன் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
    ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில் அதிரடி வீரரான சுரேஷ் ரெய்னா ஏலம் போகவில்லை. ஐபிஎல் போட்டியில் சிறந்த வீரராக வலம் வந்த ரெய்னா விலை போகாதது சென்னை அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா வீரர் மில்லர் மற்றும் ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வங்காளதேச அணியின் ஆல்ரவுண்டர் சகீப் அல்ஹசன் ஆகியோரை ஏலம் எடுப்பதில் எந்த அணியும் விருப்பம் காட்டவில்லை. 

    ராபின் உத்தப்பா, ஜேசன் ராய், ஆகியோர் அடிப்படை விலையில் ஏலம் போனார்கள். ராபின் உத்தப்பா சென்னை அணியும் ஜேசன் ராய் குஜராத் அணியும் ஏலம் எடுத்தது.
    15-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 

    இலங்கை வீரர் அசரங்காவை ஏலம் எடுக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. 

    அப்போது ஏலம் விட்ட ஹூக் எட்மீட்ஸ் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அரங்கமே மெளனித்தது. இதனையடுத்து ஐபிஎல் ஏலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
    ×