என் மலர்

  விளையாட்டு

  போல்ட் - ரபாடா
  X
  போல்ட் - ரபாடா

  அதிக விலைக்கு ஏலம் போன முன்னணி வெளிநாட்டு வீரர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  15-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் தென் ஆப்பிரிக்கா வீரர் ரபாடா 9.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
  ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. வெளிநாட்டு வீரர்களை வாங்குவதில் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

  ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மின்ஸ் 7.25 கோடிக்கு ஏலம் போனார். அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தக்க வைத்துக் கொண்டது. அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளார் ரபாடா 9.25 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது. நியூசிலாந்து அணி வீரர் போல்ட் 8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். மும்பை அணியில் இருந்த போல்டை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 கோடிக்கு கொடுத்து வாங்கியது. சன்ரைசர்ஸ் அணிக்கு விளையாடி வந்த ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னரை டெல்லி அணி விலைக்கு வாங்கியது.

  சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த டுபிலிசிஸ் 7 கோடிக்கு ஏலம் போனார். இவரை ஏலம் எடுப்பதில் சென்னை அணிக்கும் பெங்களூரு அணிக்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் பெங்களூரு அணி இவரை வாங்கியது. தென் ஆப்பிரிக்கா அணி வீரரும் விக்கெட் கீப்பருமான டிகாக் 6.75 கோடிக்கு ஏலம் போனார். இவரை புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட் வாங்கியது.
  Next Story
  ×