என் மலர்
விளையாட்டு

ரோகித் சர்மா - ரகானே
டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு துணை கேப்டன் பதவி தேர்வுக்குழுவின் முடிவாகும் - ரகானே
டெஸ்டில் துணை கேப்டன் பதவியை ரோகித் சர்மாவுக்கு கொடுத்து ஒட்டுமொத்த தேர்வுக்குழுவின் முடிவாகும். தேர்வு குழுவின் இந்த முடிவை நான் மதிக்கிறேன் என ரகானே தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்பவர் ரகானே.
ரகானேயின் ஆட்டம் சமீபகாலமாக மிகவும் மோசமாக உள்ளது. தென் ஆப்பிரிக்க தொடரில் 6 இன்னிங்சில் 136 ரன்களே எடுத்தார். இதனால் அவர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
இனி வரும் காலங்களில் 11 பேர் கொண்ட டெஸ்ட் அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா என்பது கேள்விகுறியாகும்.
ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது கேப்டனாக இருந்த விராட் கோலி பாதியில் நாடு திரும்பினார். இதனால் துணை கேப்டனாக இருந்த ரகானே கேப்டன் பொறுப்பு வகித்து தொடரை கைப்பற்றி சாதித்தார்.
இது தொடர்பாக அவர் சமீபத்தில் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை சாடியிருந்தார். ஆஸ்திரேலிய தொடரில் வெற்றிக்கான திட்டங்களை நானே வகுத்தேன். ஆனால் பாராட்டுகளை பெற வேறு சிலர் முயற்சித்தனர் என்று ரவிசாஸ்திரியை மறைமுகமாக குறிப்பிட்டு இருந்தார்.
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது ரகானேயிடம் இருந்த துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் காயம் காணமாக ரோகித் சர்மா ஆடவில்லை. இதனால் லோகேஷ் ராகுல் துணை கேப்டனாக பொறுப்பு வகித்தார்.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது தேர்வுக்குழுவின் முடிவாகும் என்று ரகானே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு வீரருக்கும் சிறப்பான ஆட்டம் இருக்கும். மோசனமான ஆட்டமும் இருக்கும். தென் ஆப்பிரிக்க தொடரில் எனது பேட்டிங் நன்றாகவே இருந்தது. தற்போது ரஞ்சிப் போட்டியில் எனது கவனம் இருக்கிறது. மும்பை அணிக்காக சிறந்த பங்களிப்பை நான் வெளிப்படுத்துவேன். இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தற்போது உள்ள நிலை நிரந்தரமானது அல்ல. நான் பல்வேறு பாடங்களை கற்றுள்ளேன்.
டெஸ்டில் துணை கேப்டன் பதவியை ரோகித் சர்மாவுக்கு கொடுத்து ஒட்டுமொத்த தேர்வுக்குழுவின் முடிவாகும். தேர்வு குழுவின் இந்த முடிவை நான் மதிக்கிறேன். அவருக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது மகிழ்ச்சிதான்.
இவ்வாறு ரகானே கூறியுள்ளார்.
Next Story






