என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    விராட் கோலி டக்: ரோகித் சர்மா, தவான் ஏமாற்றம்- 42 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்த இந்தியா

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் தவான், ஷ்ரேயாஸ் அய்யர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 3.3 ஓவரில் 16 ரன்கள் இருக்கும்போது இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது, ரோகித் சர்மா 15 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி தான் சந்தித்த 2-வது பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினார்.

    இதையும் படியுங்கள்

    தவான் உடன் 3-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். தவானும் நீண்ட நேரம் விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. அவர் 26 பந்தில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது இந்தியா 9.3 ஓவரில் 42 ரன்கள் எடுத்திருந்தது.

    42 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இந்தியா இழந்து திணறியது. 4-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் ரிஷாப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி வருகிறது. இந்தியா 13.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    Next Story
    ×