என் மலர்tooltip icon

    விளையாட்டு

    வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பூரன் - இந்திய கேப்டன் ரோகித் சர்மா
    X
    வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பூரன் - இந்திய கேப்டன் ரோகித் சர்மா

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி - அதிக மாற்றங்களுடன் இந்தியா பேட்டிங்

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
    அகமதாபாத்:

    இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. 

    இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். 

    இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சஹால், ஹூடா, கேஎல் ராகுல், தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டு தவான், ஸ்ரேயாஸ் அய்யர், குல்தீப் யாதவ், தீபக் சாஹர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×