என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதலில் ஆடிய இலங்கை அணி 152 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணி 73 ரன்னில் சுருண்டது.

    சிட்னி:

    8-வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

    16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

    இந்நிலையில், நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணி 73 ரன்களில் சுருண்ட் பரிதாபமாக தோற்றது.

    இதில் ஐக்கிய அரபு அமீரக அணி வீரர் ஜுனைத் சித்திக் 17-வது ஓவரில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். அது 109 மீட்டர் தூரம் சென்றது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது.
    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 23-ந் தேதி பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.

    பிரிஸ்பேன்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வரும் 23-ந் தேதி பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.

    அதற்கு முன்னதாக இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. நேற்றைய முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது.

    2-வது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேன் மைதானத்தில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் நியூலாந்து அணியுடன் இந்திய அணி மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி நம்பிக்கையுடன் விளையாட முடியும் என கருதப்படுகிறது.

    முன்னதாக குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து அணி முதல் பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் மற்ற பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

    • இலங்கை தரப்பில் துஷ்மந்த சமீரா, ஹசரங்கா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
    • ஐக்கிய அரபு அமீரக வீரர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற தொடக்க சுற்று போட்டி 2வது ஆட்டத்தில் இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட் அணிகள் விளையாடின. மெல்போர்ன் நகரில் உள்ள கீலாங் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.

    அந்த அணியின் தொடக்க வீரர் பதும் நிசாங்க 60 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். தனஞ்செய டி செல்வா 33 ரன்னும், குசால் மெண்டிஸ் 18 ரன்னும் அடித்தனர். ஐக்கிய அரபு அமீரக அணி சார்பில் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

    பின்னர் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி வீரர்கள் இலங்கை பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் திணறினர். அடுத்தடுத்து விக்கெட்கள் சாய்ந்த நிலையில் 17.1 ஓவர் முடிவில் அந்த அணி 73 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 79 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் துஷ்மந்த சமீர, ஹசரங்க டி சில்வா தலா 3 விக்கெட்களையும், தீக்சனா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். லியனகமகே,தசுன் ஷனக தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2023 ஆசிய கோப்பை போட்டி நடுநிலையான இடத்தில் நடத்தப்படும்
    • இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்வது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும்.

    மும்பை:

    அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அட்டவணைப்படி பாகிஸ்தானில் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா, ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணி,பாகிஸ்தான் செல்லாது என தெரிவித்தார்.

    2023 ஆசிய கோப்பை போட்டி நடுநிலையான இடத்தில் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்றும், இதில் நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார் ஆனால் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட போட்டி தொடரை நடுநிலையான இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

    • இலங்கை வீரர் நிசாங்க 74 ரன்கள் குவித்தார்.
    • ஐக்கிய அரபு அமீரக வீரர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

    கீலாங்:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற தொடக்க சுற்று போட்டி 2வது ஆட்டத்தில் இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட் அணிகள் விளையாடி வருகின்றன. மெல்போர்ன் நகரில் உள்ள கீலாங் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.

    அந்த அணியின் தொடக்க வீரர் பதும் நிசாங்க 60 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். தனஞ்செய டி செல்வா 33 ரன்னும், குசால் மெண்டிஸ் 18 ரன்னும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னும் வெளியேறினர். இதில் ஐக்கிய அரபு அமீரக அணி வீரர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 15வது ஓவரை வீசிய அவர் அந்த ஓவரில் பனுகா ராஜபக்ச ,சரித் அசலங்கா ,தசுன் ஷானகா ஆகியோரின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஜாகூர்கான் 2 விக்கெட்களையும், அப்சல்கான், ஆர்யன் லக்ரா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் 153 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐக்கிய அரபு அமீரக அணி விளையாடி வருகிறது.  

    • முதலில் விளையாடிய நமீபியா அணி 121 ரன்கள் அடித்தது.
    • நெதர்லாந்து அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியது.

    கீலாங்:

    16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நமீபியா, நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் பிரைலின்க் 43 ரன்கள் அடித்தார்.

    இதையடுத்து 122 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணியில் விக்ரம்ஜித் சிங் 39 ரன்களும் மேக்ஸ் ஓடொவ்ட் 35 ரன்களும் எடுத்தனர். இறுதி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், லீடே முதல் பந்தில் பவுண்டரி அடித்தும், 3வது பந்தில் 2 ரன்கள் எடுத்தும் அணியை வெற்றி பெற செய்தார்.

    இறுதியில் அந்த அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் அடித்தது. இதையடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெதர்லாந்து இந்த சுற்றில் தனது 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

    • முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
    • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் பதவிக்கு இந்தியா சார்பில் யார் போட்டியிடுவது என்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகிகள் இன்று நடந்த ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இந்நிலையில், கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்த முன்னாள் வீரர் ரோஜர் பின்னி போட்டியின்றி அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டார்.

    செயலாளராக ஜெய்ஷா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் மற்ற நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    கடந்த 3 ஆண்டுகளாக கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் பதவிக்கு இந்தியா சார்பில் யார் போட்டியிடுவது என்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • டென்னிஸ் போட்டி வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை டபிள்யூ.டி.ஏ. வெளியிட்டு வருகிறது.
    • இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் மகளிர் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

    பாரீஸ்:

    டென்னிஸ் போட்டியில் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை டபிள்யூ.டி.ஏ. வெளியிட்டு வருகிறது. நேற்று முன்தினம் நடந்த சான் டீகோ ஓபன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், குரோசியா நாட்டின் டோன்னா வெகிச் என்பவரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், மகளிர் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் இகா ஸ்வியாடெக் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இது, நடப்பு ஆண்டில் அவர் பெறும் 64-வது சாதனை வெற்றியாகும்.

    இந்த தரவரிசை பட்டியலில் ஆன்ஸ் ஜேபியர் 2-வது இடத்திலும், ஆனெட் கொன்டாவிட் 3-வது இடத்திலும், ஆரைனா சபலென்கா 4-வது இடத்திலும், ஜெஸ்சிகா பெகுலா 5-வது இடத்திலும் உள்ளனர்.

    • டி 20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
    • இந்திய அணி வரும் 23-ம் தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது

    பிரிஸ்பேன்:

    டி 20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று விளையாட 10 நாட்களுக்கு முன்பே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சென்றுவிட்டது.

    நேரடியாக சூப்பர் 12 சுற்றில் அடியெடுத்து வைத்துள்ள இந்திய அணி வரும் 23-ம் தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்தப் போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணிக்கு 2 பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நேற்று நடந்த முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இந்நிலையில், இந்த ஆண்டு சிறந்த கேட்ச்களை பிடிப்பதே எனது இலக்காக இருக்கும் என்று இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், கடவுள் என்னிடம் கருணை காட்டியுள்ளார். எனது உடற்தகுதி உயர்ந்துள்ளது. எங்கள் பயிற்சியாளருடன் எனது பீல்டிங்கில் அதிக நேரம் செலவிட முடிகிறது. நான் எப்போதும் ஒரு பீல்டராக இயல்பாகவே இருந்தேன். ஆனால் நான் விதிவிலக்காக இருக்க விரும்புகிறேன். இப்போது எனது திறமைக்காக சிறிது நேரம் செலவழித்து அந்த கடினமான கேட்சுகளை பெற முடிகிறது. எனக்கு தெரிந்த ஹர்திக், டைவ் செய்து பந்துகளை நிறுத்துவது வழக்கம். இந்த ஆண்டு எனது குறிக்கோள் எனது சிறந்த கேட்ச்களில் ஒன்றாக கீழே செல்லக்கூடிய கேட்ச்சைப் பிடிப்பதாகும் என பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    • கார்ல்சனை வீழ்த்திய இளம் வீரர் என்ற பெருமை, தமிழக வீரருக்கு கிடைத்துள்ளது.
    • ஏழாவது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி, கார்ல்சனை வீழ்த்தி இருந்தார்.

    ஏய்ம்செஸ் ரேபிட் ஆன்லைன் சாம்பியன்ஷிப் செஸ் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் 9 சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 7 தொடர்கள் முடிந்துள்ள நிலையில், 8வது தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஒன்பதாவது சுற்று ஆட்டத்தில் 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழகத்தைச் சேர்ந்த 16 வயதான குகேஷ் எதிர்கொண்டார்.

    வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 26வது காய் நகர்த்தலின் முடிவில் கார்ல்சனை வீழ்த்தினார். முன்னதாக நடைபெற்ற ஏழாவது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி, கார்ல்சனை வீழ்த்தி இருந்த நிலையில் தற்போது தமிழக வீரர் குகேஷ்சும் உலக சாம்பியன் கார்ல்சனை தோற்கடித்துள்ளார்.

    மேலும் கார்ல்சனை வீழ்த்திய இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. முன்னதாக இதே சாம்பியன்ஷிப் முதல் மற்றும் நான்காவது தொடரில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    • ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா 48 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார்.
    • அயர்லாந்து அணி 143 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    ஹோபர்ட்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், முதல் சுற்று 4வது லீக் ஆட்டம் இன்று ஹோபார்ட் நகரில் அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் சிக்கந்தர் ராசா 48 பந்துகளில் 5 சிக்சர், 5 பவுண்டர்களுடன் 82 ரன்கள் குவித்தார்.

    பின்னர் விளையாடிய அயர்லாந்து அணி ஆரம்பம் முதலே ஜிம்பாப்வே பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அடுத்தடுத்து அந்த அணி வீரர்கள் விக்கெட்டை பறி கொடுத்தனர். அதிகபட்சமாக கர்டிஸ் கேம்பர் 27 ரன்னும், ஜார்ஜ் டோக்ரெல்,கரேத் டெலானி தலா 24 ரன்களும் அடித்தனர். அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. பாரி மெக்கார்த்தி 22 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். இதையடுத்து ஜிம்பாப்வே அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • அந்த அணி வீரர் சிக்கந்தர் ராசா 48 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார்.
    • அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் லிட்டில் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

    ஹோபர்ட்: 

    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், முதல் சுற்று 4வது லீக் ஆட்டம் இன்று ஹோபார்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் ரெஜிஸ் சகப்வா ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார்.

    கேப்டன் கிரேக் எர்வின் 9 ரன்னுடன் வெளியேற, வெஸ்லி மாதேவேரே 22 ரன்னுக்கு அவுட்டானார். அதிரடியாக விளையாடிய சிக்கந்தர் ராசா 48 பந்துகளில் 5 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் குவித்தார். லூக் ஜாங்வே 20 ரன் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார்.

    20 ஓவர் முடிவில் ஜிம்பாப்வே 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. அயர்லாந்து தரப்பில் ஜோஷ் லிட்டில் 3 விக்கெட்களையும், மார்க் அடேர், சிமி சிங் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து 175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி விளையாடுகிறது.

    ×