என் மலர்
விளையாட்டு
- இந்த உலகக் கோப்பையில் எங்கள் அணியின் பேட்டிங் செயல்பாடு திருப்தி இல்லை
- சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறிய அயர்லாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்தார் பூரன்.
டி20 உலகக் கோப்பை முதல் சுற்று லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறுவதற்கான முக்கியமான இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியடைந்தது. இதனால் தொடரில் இருந்து வெளியேறியது. டி20 போட்டிகளில் சிறந்து விளங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த உலகக் கோப்பையில் நிச்சயம் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் சுற்றோடு வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. வீரர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கேப்டன் நிகோலஸ் பூரன் பேசும்போது, தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும், ரசிகர்களை ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
'நாங்கள் எங்கள் ரசிகர்களையும் எங்களையும் ஏமாற்றிவிட்டோம். இந்த தோல்வி வேதனை அளிக்கிறது. நான் எனது மோசமான ஆட்டத்தால் சக வீரர்களையும் ஏமாற்றிவிட்டேன். இந்த உலகக் கோப்பையில் எங்கள் அணியின் பேட்டிங் செயல்பாடு திருப்தி இல்லை. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் 145 ரன்கள் எடுத்தால், அடுத்து அந்த ரன்னுக்குள் எதிரணியை கட்டுப்படுத்துவது பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் கடினமான பணியாகும். அது ஒரு சவாலாகவும் இருக்கும்' என்றார் பூரன்.
மேலும், சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறிய அயர்லாந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்த பூரன், அந்த அணி பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டினார். அயர்லாந்திடம் அடைந்த தோல்வி தங்களுக்கு ஒரு கற்றல் அனுபவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார்.
- கால் இறுதியில் லக்ஷயா சென் ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதுகிறார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார்.
முன்னாள் சாம்பியனான அவர் சிங்கப்பூரின் லோ கீன்யூலிடம் 13-21, 15-21 என்ற நேர்செட் கணக்கில் தோற்று வெளியேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென் 21-9, 21-18 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரர் பிரணாய்யை தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
இன்று நடைபெறும் கால் இறுதியில் லக்ஷயா சென் ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதுகிறார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடக்கும் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரெங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-சோவூய்யிக் ஜோடியுடன் மோதுகிறது.
- முதலில் ஆடிய ஸ்காட்லாந்து அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்தது.
- அதிரடியாக ஆடிய சிக்கந்தர் ரசா 23 பந்துகளில் 40 ரன்கள் விளாசி நம்பிக்கை அளித்தார்.
டி20 உலகக் கோப்பை முதல் சுற்றில் குரூப்-பி பிரிவில் உள்ள ஜிம்பாப்வே-ஸ்காட்லாந்து அணிகள் இன்று மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஜிம்பாப்வே. துவக்க வீரர் ரெஜிஸ் 4 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க வீரர் கிரேக் எர்வின் நிதானமாக ஆடி ரன் சேர்த்தார். வெஸ்லி ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அதிரடியாக ஆடிய சிக்கந்தர் ரசா 23 பந்துகளில் 40 ரன்கள் விளாசி நம்பிக்கை அளித்தார். மறுமுனையில் அரை சதம் கடந்த கிரேக் எர்வின் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து மில்டன் ஷம்பா 11 ரன்களும் (நாட் அவுட்), ரியான் 9 ரன்களும் (நாட் அவுட்) எடுக்க, 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து ஜிம்பாப்வே அணி இலக்கை எட்டியது. 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி, சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறியது.
- ஸ்காட்லாந்து அணியின் துவக்க வீரர் ஜார்ஜ் முன்சே 54 ரன்கள் சேர்த்தார்.
- ஜிம்பாப்வே தரப்பில் டெண்டாய் சதாரா, ரிச்சர்டு நிகாரவா தலா 2 விக்கெட் எடுத்தனர்.
டி20 உலகக் கோப்பை முதல் சுற்றில் குரூப்-பி பிரிவில் உள்ள ஜிம்பாப்வே-ஸ்காட்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்தது.
சிறப்பாக ஆடிய துவக்க வீரர் ஜார்ஜ் முன்சே 54 ரன்கள் சேர்த்தார். மெக்லியோட் 25 ரன்கள் அடித்தார். ஜிம்பாப்வே தரப்பில் டெண்டாய் சதாரா, ரிச்சர்டு நிகாரவா தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறும்.
- வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன் எடுத்திருந்தது.
- தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கைல் மேயர்ஸ் ஒரு ரன்னிலும், சார்லஸ் 24 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. முதல் சுற்றில் விளையாடிய 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டன. இதில் 'ஏ' பிரிவில் இருந்து இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் 'சூப்பர்-12' சுற்றுக்கு தகுதி பெற்றன. நமீபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் வெளியேற்றப்பட்டன.
'பி' பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 4 அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் உள்ளது. இந்த அணிகள் தலா இரண்டு புள்ளிகளுடன் உள்ளன. முதல் சுற்றில் கடைசி 2 லீக் ஆட்டங்கள் இன்று நடைபெறுகிறது.
இப்போட்டிகளின் முடிவில் 'பி' பிரிவில் இருந்து முன்னேறும் இரண்டு அணிகள் எவை என்பது தெரியும். இதனால் வெற்றி கட்டாயத்துடன் நான்கு அணிகள் களம் இறங்குகின்றன. காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கைல் மேயர்ஸ் ஒரு ரன்னிலும், சார்லஸ் 24 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் பிரண்டன் கிங்-எவின் லீவீஸ் ஜோடி நிதானமாக விளையாடியது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன் எடுத்திருந்தது. கிங் 30 ரன்னுடனும், லீவீஸ் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த ஆட்டத்தின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது.
இதனால், 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களத்தில் இறங்கியது.
இந்நிலையில், அயர்லாந்து அணி 17.3 ஓவர் முடிவில் 150 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது. இதில், பேட்டிங் செய்த ஆண்டி பால்பிர்னிய் 23 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். பின்னர், லார்கன் டக்கர் 45 ரன்களும், பால் ஸ்டிர்லிங் 66 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
அயர்லாந்து அணி வீழ்த்தியதை அடுத்து, வெஸ்ட் இண்டீஸ் இந்த தொடரில் இருந்து வெளியேறிகிறது.
- வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன் எடுத்திருந்தது.
- தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கைல் மேயர்ஸ் ஒரு ரன்னிலும், சார்லஸ் 24 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. முதல் சுற்றில் விளையாடிய 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டன. இதில் 'ஏ' பிரிவில் இருந்து இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் 'சூப்பர்-12' சுற்றுக்கு தகுதி பெற்றன. நமீபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் வெளியேற்றப்பட்டன.
'பி' பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 4 அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் உள்ளது. இந்த அணிகள் தலா இரண்டு புள்ளிகளுடன் உள்ளன. முதல் சுற்றில் கடைசி 2 லீக் ஆட்டங்கள் இன்று நடைபெறுகிறது.
இப்போட்டிகளின் முடிவில் 'பி' பிரிவில் இருந்து முன்னேறும் இரண்டு அணிகள் எவை என்பது தெரியும். இதனால் வெற்றி கட்டாயத்துடன் நான்கு அணிகள் களம் இறங்குகின்றன. காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கைல் மேயர்ஸ் ஒரு ரன்னிலும், சார்லஸ் 24 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் பிரண்டன் கிங்-எவின் லீவீஸ் ஜோடி நிதானமாக விளையாடியது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன் எடுத்திருந்தது. கிங் 30 ரன்னுடனும், லீவீஸ் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது.
இதனால், 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களத்தில் இறங்கி உள்ளது.
- நெதர்லாந்து அணியை வீழ்த்தி 4 புள்ளிகளுடன் இலங்கை சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது.
- நேற்றைய போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி வெற்றி பெற்றதால் நமிபியா சூப்பர் 12 சுற்று வாய்ப்பை இழந்தது.
கீலாங்:
8-வது டி 20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் முதல் சுற்று போட்டியில் குரூப் 'ஏ' வில் நமிபியா, நெதர்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம்பெற்றுள்ளன. பி' பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
நேற்று நடந்த முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி 4 புள்ளிகளுடன் இலங்கை சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது.
அடுத்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் நமிபியா அணி ஐக்கிய அரபு அமீரக அணியுடன் மோதியது. பரபரப்பான இந்த போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி வெற்றி பெற்றதால் நமிபியா அணி சூப்பர் 12 சுற்று வாய்ப்பை இழந்தது. இதனால் நெதர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது.
முதல் சுற்று முடிவில் குரூப் 'ஏ' பிரிவில் 2-வது இடம் பிடிக்கும் அணியும். குரூப் 'பி' பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும் இந்திய அணியின் குரூப்பில் இடம்பெறும். அந்த வகையில் குரூப் 'ஏ' பிரிவு ஆட்டங்கள் இன்று முடிந்துள்ளன. இதில் 2-வது இடம் பிடித்த நெதர்லாந்து அணி, இந்திய அணி இடம்பெற்றுள்ள குரூப்பில் பாகிஸ்தான், வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளோடு இணைந்துள்ளது. அதே போல் குரூப் ஏ பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ள இலங்கை அணிக்கு இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், குரூப் 2 ஆஸ்திரேலியா அணிகள் இடம்பெற்றுள்ள குழுவில் இடம் கிடைத்துள்ளது.
- ஜெய் ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அறிவிப்புகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஆசிய கோப்பை திட்டமிட்டபடி பாகிஸ்தானில் தான் நடைபெற வேண்டும் என கம்ரான் அக்மல் வலியுறுத்தினார்
கராச்சி:
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார். மேலும், ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் அல்லாத நடுநிலையான இடத்திற்கு மாற்றப்படலாம் என்றும் கூறினார்.
ஜெய் ஷாவின் இந்த கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சமூகத்திடம் இருந்து கடும் கண்டனங்களுக்கு வழிவகுத்தது. ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் அல்லாத நடுநிலையான இடத்திற்கு மாற்றப்பட்டால், இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ஜெய் ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த அறிவிப்புகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "ஜெய் ஷாவின் இந்த பேச்சை நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் கடந்த முறை இந்தியா பாகிஸ்தான் ஆசிய கோப்பையில் விளையாடிய போது அவர் மைதானத்தில் நேரில் வந்து பார்த்தார். ஜெய் ஷா விளையாட்டில் அரசியலை கொண்டுவர கூடாது. ஆசிய கோப்பை திட்டமிட்டபடி பாகிஸ்தானில் தான் நடைபெற வேண்டும். அப்படி இல்லை என்றால் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்க கூடாது. இதே போன்று எவ்வித ஐசிசி போட்டியிலும் பாகிஸ்தான் இந்தியாவுடன் மோதக் கூடாது' என்றார்.
வரும் ஞாயிறு அன்று நடைபெறும் இந்தியா- பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடைபெறும். ஆனால், பிசிசிஐ-யின் இந்த நடவடிக்கை, எதிர்வரும் ஐசிசி நிகழ்வுகளில் இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
- முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது.
- நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களே எடுத்தது.
டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று குரூப்-ஏ லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர் முகமது வாசீம் 50 ரன்கள் விளாசினார். விருத்யா அரவிந்த் 21 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ரிஸ்வான் 43 ரன்களுடனும், பாசில் ஹமீது 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி 16 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. துவக்க வீரர்கள் மைக்கேல் 10 ரன்னிலும், ஸ்டீபன் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஜேன் நிகோல் ஒரு ரன், ஜெர்ஹார்டு 16 ரன், ஜேன் பிரைலிங்க் 14 ரன், ஜேஜே ஸ்மித் 3 ரன், ஜேன் கிரீன் 2 ரன் என விரைவில் விக்கெட்டை இழந்தனர்.
அதேசமயம் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வீஸ், அரை சதம் கடந்து நம்பிக்கை அளித்தார். அவருடன் ரூபன் இணைய அணியின் ரன் ரேட் உயர்ந்தது.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் 3 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 4வது பந்தில் வீஸ் ஆட்டமிழந்தார். அவர் மொத்தம் 55 ரன்கள் சேர்த்திருந்தார். அவர் ஆட்டமிழந்ததால் ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சாதகமாக திரும்பியது.
அடுத்த இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்ததால், நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களே எடுத்தது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகக் கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரகம் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. முகமுது வாசீம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
நமீபியா தோல்வியடைந்ததால், சூப்பர்-12 வாய்ப்பினை இழந்தது. குரூப் ஏ பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
- ஐக்கிய அரபு அமீரக அணியின் துவக்க வீரர் முகமது வாசீம் 50 ரன்கள் விளாசினார்.
- நமீபியா அணி 16 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நமீபியா அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர் முகமது வாசீம் 50 ரன்கள் விளாசினார். விருத்யா அரவிந்த் 21 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ரிஸ்வான் 43 ரன்களுடனும், பாசில் ஹமீது 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி 16 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. துவக்க வீரர்கள் மைக்கேல் 10 ரன்னிலும், ஸ்டீபன் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ஜேன் நிகோல், ஜெர்ஹார்டு நிதானமாக விளையாடினர்.
- 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தனர்.
- 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்தது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் சுற்றில் ஏ பிரிவில் இன்று கடைசிகட்ட லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதில் கீலாங் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்க தொடங்கிய முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, நெதர்லாந்துடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பதும் நிசாங்கா 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க வீரரான குசல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 44 பந்துகளில் 79 ரன்கள் (5 சிக்சர்கள், 5 பவண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார்.
தனஞ்செயா டி சில்வா ரன் எதுவும் எடுக்கவில்லை. தொடர்ந்து களமிறங்கிய சரித் அசலங்கா 31 ரன்களும் பனுகா ராஜபக்ச 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்தது.
இந்நிலையில், நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.
- சேட்டன் சர்மா தேர்வு குழு தலைவராக நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- புதிய தேர்வாளர்களை பொறுத்து நியமனத்தில் மாற்றம் வரலாம்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யும் தேர்வு குழுவுக்கு முன்னாள் வேகப்பந்து வீரர் சேட்டன் சர்மா தலைவராக உள்ளார்.
தேபாசிஷ் மொகந்தி, ஹர்வீந்தர்சிங், சுனில் ஜோஷி ஆகியோர் தேர்வு குழு உறுப்பினர்களாக உள்ளனர். மேற்கு மண்டல தேர்வாளர் அபய் குருவில்லா கடந்த பிப்ரவரி மாதம் வெளியேறினார். அவரது இடம் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் தேர்வு குழுவை மறு சீரமைப்பு செய்து அதிரடியான மாற்றங்களை கொண்டு வர இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா கூறும் போது, 'கிரிக்கெட் ஆலோசனை குழுவை (சி.ஏ.சி.) நாங்கள் விரைவில் அமைப்போம். அதன் நடைமுறையை பின்பற்றி புதிய தேர்வு குழுவை நியமிப்போம்' என்றார்.
தென் மண்டல தேர்வாளர் சுனில் ஜோஷி, மத்திய மண்டல தேர்வாளர் ஹர்வீந்தர் சிங் ஆகியோர் வெளியேற்றப்படுகிறார்கள். அவர்களுக்கு பதிலாக புதிய தேர்வு குழு உறுப்பினர்கள் டிசம்பர் மாதத்திற்குள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சேட்டன் சர்மா தலைமையில் 5 பேர் கொண்ட தேர்வு குழு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டது. இதில் 3 பேருக்கு பதிலாக 3 புதுமுகங்கள் நியமிக்கப்படுகிறார்கள். தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா, தேபாசிஷ் மொகந்தி ஆகியோர் மட்டுமே நீடிப்பார்கள்.
20 ஓவர் போட்டிகள் தான் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் இந்த போட்டி குறித்து நன்கு அறிந்தவர்கள் தான் தேர்வாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
சேட்டன் சர்மா தேர்வு குழு தலைவராக நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் புதிய தேர்வாளர்களை பொறுத்து நியமனத்தில் மாற்றம் வரலாம். கிரிக்கெட் வாரிய விதிப்படி தேர்வு குழு உறுப்பினர்களில் யார் அதிக டெஸ்டில் விளையாடி இருக்கிறார்களோ அவர்கள் தான் தேர்வு குழு தலைவராவர்.






