என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலக கோப்பை போட்டி: அயர்லாந்துக்கு 147 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்
    X

    டி20 உலக கோப்பை போட்டி: அயர்லாந்துக்கு 147 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்

    • வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன் எடுத்திருந்தது.
    • தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கைல் மேயர்ஸ் ஒரு ரன்னிலும், சார்லஸ் 24 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. முதல் சுற்றில் விளையாடிய 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டன. இதில் 'ஏ' பிரிவில் இருந்து இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் 'சூப்பர்-12' சுற்றுக்கு தகுதி பெற்றன. நமீபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் வெளியேற்றப்பட்டன.

    'பி' பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 4 அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் உள்ளது. இந்த அணிகள் தலா இரண்டு புள்ளிகளுடன் உள்ளன. முதல் சுற்றில் கடைசி 2 லீக் ஆட்டங்கள் இன்று நடைபெறுகிறது.

    இப்போட்டிகளின் முடிவில் 'பி' பிரிவில் இருந்து முன்னேறும் இரண்டு அணிகள் எவை என்பது தெரியும். இதனால் வெற்றி கட்டாயத்துடன் நான்கு அணிகள் களம் இறங்குகின்றன. காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கைல் மேயர்ஸ் ஒரு ரன்னிலும், சார்லஸ் 24 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் பிரண்டன் கிங்-எவின் லீவீஸ் ஜோடி நிதானமாக விளையாடியது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன் எடுத்திருந்தது. கிங் 30 ரன்னுடனும், லீவீஸ் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது.

    இதனால், 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களத்தில் இறங்கி உள்ளது.

    Next Story
    ×