என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 159 ரன்களை எடுத்துள்ளது.
    • அடுத்து ஆடிய இந்தியாவின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    மெல்போர்ன்:

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. அதிரடியில் மிரட்டிய இப்திகார் அகமது 34 பந்தில் 51 ரன் குவித்து ஆட்டமிழந்தார். ஷான் மசூத் 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா தலா 3 விக்கெட்டும், ஷமி, புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல், ரோகித் சர்மா களமிறங்கினர். கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா தலா 4 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். சூர்யகுமார் 15 ரன்னிலும், அக்சர் படேல் 2 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இந்திய அணி 6.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது.

    அடுத்து இறங்கிய விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஜோடி பொறுப்புடன் ஆடியது. 5-வது விக்கெட்டுக்கு சேர்ந்த இந்த ஜோடி 100 ரன்களை கடந்து அசத்தியது. விராட் கோலி அரை சதம் கடந்து அசத்தினார். பாண்ட்யா 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்தியா 20 ஓவரில் 160 ரன்களை எடுத்து திரில் வெற்றி பெற்றது. கோலி 82 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 159 ரன்களை எடுத்துள்ளது.
    • இந்தியாவின் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    மெல்போர்ன்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தான் வீசிய முதல் பந்தில் கேப்டன் பாபர் அசாமை டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார் அர்ஷ்தீப் சிங். அடுத்து அர்ஷ்தீப் சிங் ரிஸ்வானை 4 ரன்னில் அவுட்டாக்கினார்.

    தொடர்ந்து இறங்கிய ஷான் மசூத்துடன், இப்திகார் அகமது ஜோடி சேர்ந்தார். முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி பின்னர் அதிரடியில் இறங்கியது. அதிரடியில் மிரட்டிய இப்திகார் அகமது 34 பந்தில் 51 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. ஷான் மசூத் 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    பொறுப்புடன் வீசிய அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். ஷமி, புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    • பந்து வீச்சில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் நல்ல நிலையில் உள்ளனர்.
    • பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி அணிக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலமாக கருதப்படுகிறது.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்று போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த தொடரில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது.

    கடந்த மாதம் துபாயில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுத்து வெற்றியுடன் இந்த தொடரை இந்திய அணி தொடங்கும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இதுவரை இரு அணிகள் இடையே நடைபெற்றுள்ள 11 டி20 போட்டிகளில் இந்திய அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா,வீராட் கோலி, லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இருந்தாலும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பந்து வீச்சில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் நல்ல நிலையில் உள்ளனர். எனினும் பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி அணிக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலமாக கருதப்படுகிறது. இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அவர் கடும் சவாலாக இருப்பார்.

    இந்நிலையில் இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கியது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனால், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.

    • 129 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இலங்கை அணி பின்னர் விளையாடியது.
    • இலங்கை தரப்பில் தீக்சனா, ஹசரங்கா தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடை பெற்று வருகிறது. முதல் சுற்று முடிவில் இலங்கை , நெதர்லாந்து , ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து , நமீபியா , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை வெளியேற்றப்பட்டன.

    சூப்பர் 12 சுற்றில் விளையாடும் 12 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. குரூப்-1 பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து , ஆப்கானிஸ் தான், இலங்கை அயர்லாந்து அணிகளும், குரூப்-2 பிரிவில் இந்தியா பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா , வங்காளதேசம் ஜிம்பாப்வே , நெதர்லாந்து அணிகளும் இடம் பெற்று உள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நாடுகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    சூப்பர் 12 சுற்று நேற்று தொடங்கியது. ஒரு ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 89 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது.

    ஹோபர்ட்டில் இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் குரூப்-1 பிரிவில் உள்ள இலங்கை- அயர்லாந்து அணிகள் மோதின.

    அயர்லாந்து கேப்டன் பால்பிரீன் 'டாஸ்' வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அவரும், பால் ஸ்டிர்லிங்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    2-வது ஓவரிலேயே அயர்லாந்து அணியின் தொடக்க ஜோடி பிரிந்தது. பால்பிரீன் ஒரு ரன்னில் லகிரு குமாரா பந்தில் ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு பால் ஸ்டிர்லிங்குடன் டக்கர் ஜோடி சேர்ந்தார்.

    இலங்கை வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சால் அயர்லாந்து விக்கெட்டுகளை இழந்து ரன் குவிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 128 ரன்னே எடுக்க முடிந்தது. டெக்டர் அதிகபட்சமாக 45 ரன் எடுத்தார். இலங்கை தரப்பில் தீக்சனா, ஹசரங்கா தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    129 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இலங்கை அணி பின்னர் விளையாடியது. அந்த அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது.

    இலங்கை 15 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    குசால்மென்டிஸ் 43 பந்தில் 68 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), தனஞ்செய டி.செல்வா, அசலங்கா தலா 31 ரன்னும் எடுத்தனர்.

    இன்று பிற்பகல் நடைபெறும் ஆட்டத்தில் குரூப்-2 பிரிவில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    • அயர்லாந்து கேப்டன் பால்பிரீன் ‘டாஸ்’ வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
    • 129 ரன்கள் வெற்றி இலக்குடன் இலங்கை அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடை பெற்று வருகிறது.

    முதல் சுற்று முடிவில் இலங்கை , நெதர்லாந்து , ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட் லாந்து , நமீபியா , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை வெளியேற்றப்பட்டன.

    சூப்பர் 12 சுற்றில் விளையாடும் 12 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. குரூப்-1 பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து , ஆப்கானிஸ் தான், இலங்கை அயர்லாந்து அணிகளும் , குரூப்-2 பிரிவில் இந்தியா பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா , வங்காளதேசம் ஜிம்பாப்வே , நெதர்லாந்து அணிகளும் இடம் பெற்று உள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நாடுகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    சூப்பர் 12 சுற்று நேற்று தொடங்கியது. ஒரு ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 89 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது.

    ஹோபர்ட்டில் இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் குரூப்-1 பிரிவில் உள்ள இலங்கை- அயர்லாந்து அணிகள் மோதின.

    அயர்லாந்து கேப்டன் பால்பிரீன் 'டாஸ்' வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அவரும், பால் ஸ்டிர்லிங்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    2-வது ஓவரிலேயே அயர்லாந்து அணியின் தொடக்க ஜோடி பிரிந்தது. பால்பிரீன் ஒரு ரன்னில் லகிரு குமாரா பந்தில் ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு பால் ஸ்டிர்லிங்குடன் டக்கர் ஜோடி சேர்ந்தார்.

    இந்த ஆட்டத்தின் முடிவில் அயர்லாந்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 129 ரன்கள் வெற்றி இலக்குடன் இலங்கை அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

    • 20 ஓவர் போட்டி முடிவு கணிக்க முடியாததாக இருக்கிறது.
    • தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருக்கிறது.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர் கொள்கிறது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இந்த உலக கோப்பை போட்டியில் அரைஇறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் எவை என்பது பற்றி முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான கங்குலி கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கடந்த உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்றது பற்றி விவாதிப்பதில் அர்த்த மில்லை. 20 ஓவர் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஆனால் போட்டி முற்றிலும் மாறுபட்டது.

    20 ஓவர் போட்டி முடிவு கணிக்க முடியாததாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நாளில் எந்த அணியும் யாரையும் வீழ்த்த முடியும். ஏற்கனவே சில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் வெளியேறி இருந்தது.

    இந்திய அணியை பொறுத்த வரை சிறந்த அதிரடி வீரர்கள் இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

    என்னை பொறுத்த வரை 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் அரை இறுதிக்கு தகுதி பெற இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு வாய்ப்பு உள்ளது.

    தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருக்கிறது. ஆஸ்திரேலிய மைதானங்களில் அவர்கள் சிறப்பாக வீசுவார்கள்.

    இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.

    • பந்து வீச்சு பலம், பேட்டிங் வரிசை அவர்களின் பலவீனம்.
    • ஷார்ட் பிட்ச் பந்து வீச்சுக்கு எதிராக அவர்களால் சிறப்பாக விளையாட முடியாது.

    டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

    இந்த டி20 உலகக் கோப்பையில் உள்ள அனைத்து அணிகளையும்விட, பாகிஸ்தானிடம் சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள். ஆஸ்திரேலியாவைப் பார்த்தால், அவர்களிடம் 140 கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடிய ஒரே ஒரு பந்து வீச்சாளர் மட்டுமே உள்ளனர். இங்கிலாந்தைப் பொறுத்தவரை, மார்க் வுட் மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்து வீச முடியும்.

    ஆனால். பாகிஸ்தானுக்காக, ஷாஹின் அப்ரிடி, ஹரிஸ் ரவுப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் 140 கிமீக்கு மேல் பந்து வீசுவார்கள். வேகப்பந்து வீச்சுதான் அவர்களின் பலம். இருப்பினும், அவர்களின் பேட்டிங் வரிசை அவர்களின் பலவீனம். அவர்களிடம் தரமான பவர்-ஹிட்டர் இல்லை, மேலும் அவர்கள்(பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்) ஷார்ட் பிட்ச் பந்து வீச்சுக்கு எதிராக அவர்களால் விளையாட முடியாது.

    பாபர் சீக்கிரம் அவுட்டானால், இந்தியா தனது மிடில் ஆர்டர் வேகப்பந்து வீச்சை சிறப்பாக வெளிப்படுத்த முடியும். ஆஸ்திரேலிய மைதானங்கள் பெரியவை, எனவே பவுண்டரி அடிப்பது அவர்களுக்கு எளிதாக இருக்காது. இதுவே பாகிஸ்தானுக்கு பலவீனங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • இந்திய அணி பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்ப்பு
    • இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்டும் பாகிஸ்தான் பந்து விச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி.

    மெல்போர்ன்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்று போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    கடந்த மாதம் துபாயில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுத்து வெற்றியுடன் இந்த தொடரை இந்திய அணி தொடங்கும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுவரை இரு அணிகள் இடையே நடைபெற்றுள்ள 11 டி20 போட்டிகளில் இந்திய அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    இந்திய அணி பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா,வீராட் கோலி, லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இருந்தாலும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் நல்ல நிலையில் உள்ளனர்.

    எனினும் பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி அணிக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலமாக கருதப்படுகிறது. இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அவர் கடும் சவாலாக இருப்பார். இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 112 ரன்களில் சுருண்டது.
    • இங்கிலாந்தின் சாம் கர்ரன் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

    பெர்த்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்று இன்று தொடங்கியது. இதில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவரில் 112 ரன்களில் சுருண்டது. இப்ராகிம் சட்ரன் 32 ரன்களும், உஸ்மான் கனி 30 ரன்களும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் சாம் கர்ரன் 5 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், மார்க் வுட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல் 19 ரன்னும், ஜோஸ் பட்லர் 18 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 2 ரன்னிலும் அவுட்டாகினர். டேவிட் மலான் 18 ரன்னிலும், புரூக் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து இறங்கிய லிவிங்ஸ்டோன் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 18.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. லிவிங்ஸ்டோன் 29 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 112 ரன்களை எடுத்தது.

    பெர்த்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்று இன்று தொடங்கியது. இதில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது.

    அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. அந்த அணி நிதானமாக ஆடியது. இப்ராகிம் சட்ரன் 32 ரன்கள் எடுத்தார்.

    உஸ்மான் கனி பொறுப்புடன் ஆடி 30 ரன்களை எடுத்தார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவரில் 112 ரன்களில் சுருண்டது.

    இங்கிலாந்து சார்பில் சாம் கர்ரன் 5 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், மார்க் வுட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 3 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது.
    • அந்த அணியின் கான்வே அதிரடியாக ஆடி 92 ரன்கள் குவித்தார்.

    சிட்னி:

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்று இன்று தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது. கான்வே 92 ரன்களுடனும், நீஷம் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினர். இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி 17.1 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார்.

    இதன்மூலம் நியூசிலாந்து 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி, சான்ட்னர் தலா 3 விக்கெட்டும், டிட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது.
    • தேவன் கான்வே அதிரடியாக ஆடி 92 ரன்கள் விளாசினார்

    டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று சூப்பர்-12 சுற்று தொடங்கியது. இதில் இன்று போட்டியை நடத்தும் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துடன் மோதுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர்கள் பின் ஆலன், தேவன் கான்வே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி 56 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. ஃபின் ஆலன் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய கான்வே அரை சதம் கடந்து ஸ்கோரை உயர்த்தினார். கேப்டன் வில்லியம்சன் 23 ரன், கிளென் பிலிப்ஸ் 12 ரன் சேர்த்தனர்.

    அதன்பின்னர் கான்வேயுடன் நீஷம் இணைய, நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. கான்வே 92 ரன்களுடனும், நீஷம் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது. 

    ×