என் மலர்
விளையாட்டு
- ரிஷிக்கு பதில் நெஹ்ரா புகைப்படத்தை மாற்றி பகிர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள்.
- இருவரது தோற்றமும், ஒரே மாதிரியாக இருப்பதாகவும் சிலர் கருத்து.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமரான பின்னர் அவர் குறித்த தகவல்கள் தற்போது சமூக வளைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் ரிஷி சுனக் புகைப்படத்திற்கு பதிலாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். நெஹ்ராவின் தோற்றமும், ரிஷியின் தோற்றமும் ஒரே மாதிரி இருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இருவரது புகைப்படங்களும் இணைந்து பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே அதிக அளவில் சமூக வளைதள பார்வையாளர்களை ஈர்த்ததுடன் டுவிட்டர் பார்வையாளர்களிடையே அது வைரலாகி உள்ளது.
- டி 20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
- இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியாவின் 19 ஆண்டு கால சாதனையை இந்திய அணி முறியடித்தது.
மெல்போர்ன்:
டி 20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவின் 19 ஆண்டு கால சாதனையை இந்திய அணி முறியடித்தது. அனைத்து வடிவிலான போட்டியிலும் சேர்த்து இந்திய அணி 39 வெற்றியைப் பெற்றுள்ளது.
டெஸ்டில் 2, ஒருநாள் ஆட்டத்தில் 13, டி20 போட்டியில் 24 என 39 வெற்றி கிடைத்துள்ளது.
2003-ம் ஆண்டு உலக கோப்பையை வென்றபோது ஆஸ்திரேலியா அந்த வருடத்தில் மொத்தம் 38 போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. ஒரு ஆண்டில் ஒரு அணி சர்வதேச போட்டியில் பெற்ற அதிக வெற்றியாக இது இருந்தது. ஆஸ்திரேலியாவின் இந்த சாதனையை தற்போது இந்தியா முறியடித்து உள்ளது.
கடந்த 11-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த சாதனையை சமன் செய்திருந்தது. டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் சாதனை முறியடிக்கப்பட்டது.
- முதலில் ஆடிய இலங்கை 20 ஓவரில் 157 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 158 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
பெர்த்:
Australia beat Sri Lanka in T20 world cup
டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது.
நிசங்கா 40 ரன்னில் வெளியேறினார். சரித் அசலங்கா 38 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 11 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 17 ரன்னிலும், மேக்ஸ்வெல் 23 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் ஆரோன் பின்ச் நிதானமாக ஆடினார். ஸ்டோய்னிஸ் ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடினார். அவர் 17 பந்தில் அரை சதமடித்தார்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 16.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. ஸ்டோய்னிஸ் 18 பந்தில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 59 ரன்னும், ஆரோன் பின்ச் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- இந்தியாவின் பி.வி.சிந்து பேட்மிண்டன் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.
- இந்தியாவின் பி.வி.சிந்து. ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவர்.
புதுடெல்லி:
இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவர்.
இந்நிலையில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு உலக பேட்மிண்டன் தரவரிசை இன்று வெளியிடப்பட்டது. அதில் 3 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் டாப்-5 இடங்களுக்குள் நுழைந்துள்ளார் பி.வி.சிந்து.
கரோலினா மரினை பின்னுக்குத் தள்ளி பி.வி.சிந்து 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
- டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
- கொரோனா தொற்றால் ஆடம் ஜாம்பா இடம்பெறவில்லை.
பெர்த்:
டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இன்று மோதி வருகின்றன. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுதை அடுத்து இன்றைய போட்டியில் அவர் இடம்பெறவில்லை. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் குசால் மெண்டிஸ் 5 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய தனஞ்செய டி சில்வா, நிசரங்காவுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்த நிலையில் டி சில்வா 26 ரன்னில் அவுட்டானார்.
பொறுப்புடன் ஆடிய நிசங்கா 40 ரன்னில் வெளியேறினார். பானுகா ராஜபக்ச 7 ரன்னிலும், டாசன் ஷனகா 3 ரன்னிலும், ஹசரங்கா ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. சரித் அசலங்கா 38 ரனனுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.
- டி20 உலக கோப்பை தொடரின் ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.
- நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆடம் ஜாம்பா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
பெர்த்:
டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆடம் ஜாம்பா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய பந்துவீச்சாலர் ஆடம் ஜம்பாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் இடம்பெறவில்லை என அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக ஆஷ்டன் அகர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- ஆஸ்திரேலியா முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.
- இலங்கை அணி முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
பெர்த்:
டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஒன்றில் குரூப்1-ல் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.
ஆஸ்திரேலியா அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. இதனால் அரைஇறுதிக்கு முன்னேற் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இலங்கை அணி முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற அந்த அணி முயற்சிக்கும் என்பதால், இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெர்த் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
- இதை விட சிறப்பான கிரிக்கெட் போட்டி இதுவரை நடைபெற்றதில்லை.
- விராட் கோலி உலகக் கோப்பையில் அவரது முத்திரையை பதித்தார்.
மெல்போர்ன்:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டமிழக்காமல் விராட் கோலி எடுத்த 82 ரன்கள் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இது குறித்து மெல்போர்னில் பேசிய ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கூறியுள்ளதாவது: மெல்போர்னில் இதைவிட சிறப்பான கிரிக்கெட் போட்டி இதுவரை நடைபெற்றதில்லை .இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எப்போதுமே பார்க்க முடியாத நம்ப முடியாத ஒரு ஆட்டமாக அது இருந்தது. என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

இதற்கு பிறகு உலககோப்பையை கைப்பற்றும் எங்களது எண்ணத்தை அங்கேயே நிறுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். விராட் கோலி வாழ்க்கையைப் பற்றி நினைக்கும் போது அவரது ஆட்டம் ஆச்சரியமாக இருக்கிறது.12 மாதங்கள் அவர் அலட்சியமாக இருந்துள்ளார். உலகக் கோப்பையில் அவரது முத்திரையை பதித்தார், இது பார்ப்பதற்கு நம்ப முடியாத ஒரு இன்னிங்ஸ். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- முதலில் ஆடிய ஜிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் சேர்த்தது
- இன்னும் ஒரு ஓவர் வீசப்பட்டிருந்தால் தென் ஆப்பிரிக்காவை குயின்டன் டி காக் வெற்றி பெற செய்திருப்பார்.
டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்றில் இன்று ஹோபர்ட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி தொடங்க தாமதம் ஆனது. பின்னர் போட்டி 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பவர் பிளே 3 ஓவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
டாஸ் வென்று முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி, 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக வெஸ்லி 35 ரன்கள் (நாட் அவுட்) சேர்த்தார். மில்டன் ஷூம்பா 18 ரன்கள் அடித்தார்.
அதன்பின்னர் மழை அச்சுறுத்தல் இருந்ததால், தென் ஆப்பிரிக்க அணி 7 ஓவர்களில் 64 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கைத் துரத்திய தென் ஆப்பிரிக்கா ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. துவக்க வீரர் குயின்டன் டி காக் பவுண்டரிகளாக விளாசி, ஜிம்பாப்வே பவுலர்களை திணறடித்தார். மறுமுனையில் இணைந்திருந்த பவுமாவுக்கு வாய்ப்பே கிடைக்காத அளவுக்கு குயின்டன் டி காக் ருத்ரதாண்டவம் ஆடினார்.
3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. ஆடுகளம் கடுமையாக வழுக்கியதால் பந்துவீச முடியவில்லை. ஒரு பந்துவீச்சாளர் வழுக்கி விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.
அப்போது குயின்டன் டி காக், 18 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 47 ரன்கள் சேர்த்திருந்தார். வெற்றி பெற 24 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது. இன்னும் ஒரு ஓவர் வீசப்பட்டிருந்தால் தென் ஆப்பிரிக்காவை குயின்டன் வெற்றி பெற செய்திருப்பார். ஆனால் மழை நீடித்ததால் ஆடுகளம் ஈரப்பதம் மேலும் அதிகமாகி பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
- முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது.
- 20 ஓவர் முடிவில் நெதர்லாந்து அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஹோபர்ட்:
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஹோபர்ட்டில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஆபிப் உசைன் 38 ரன்கள் சேர்த்தார். நஜ்முல் உசைன் 25 ரன், மொசாடெக் உசைன் (20 நாட் அவுட்) ரன் சேர்த்தனர்.
இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி, வங்காளதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. மறுமுனையில் அதிரடியாக ஆடிய கொலின் ஆக்கர்மேன், 48 பந்துகளில் 62 ரன்கள் விளாசி நம்பிக்கை அளித்தார். ஆனால் அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், அணியின் வெற்றி வாய்ப்பு நழுவியது.
கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய பால் வேன் மீகரன், எதிரணியை சற்று மிரளச் செய்தார். ஆனால் அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் 14 ரன்களே எடுத்தது. மீகரன் 14 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 24 ரன்கள் சேர்த்த நிலையில், கடைசி பந்தில் அவுட் ஆனார்.
20 ஓவர் முடிவில் நெதர்லாந்து அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றது. வங்காளதேச அணியின் தஷ்கின் அகமது 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- வங்காளதேச அணியில் அதிகபட்சமாக ஆபிப் உசைன் 38 ரன்கள் சேர்த்தார்.
ஹோபர்ட்:
டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஹோபர்ட்டில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஆபிப் உசைன் 38 ரன்கள் சேர்த்தார். நஜ்முல் உசைன் 25 ரன், மொசாடெக் உசைன் (20 நாட் அவுட்) ரன் சேர்த்தனர். நெதர்லாந்து தரப்பில் பால் வேன் மீகரென் பாஸ் டி லீட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது.
- இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
- வரவிருக்கும் போட்டிகளில் வெற்றி பெறவும் பிரதமர் வாழ்த்து கூறினார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் தன்னுடைய டுவீட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அணி சிறப்பாக போராடி வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு வாழ்த்துகள். குறிப்பிடத்தக்க உறுதியை வெளிப்படுத்திய அற்புதமான இன்னிங்சிற்காக விராட் கோலிக்கு வாழ்த்துக்கள். வரவிருக்கும் போட்டிகளிலும் (வெற்றி பெற) வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






