என் மலர்
விளையாட்டு
- 2011 உலகக்கோப்பையை வெல்ல டோனி அடித்த சிக்சரை எத்தனை முறை பார்த்தோமோ அதேபோல கோலியின் சிக்சரையும் பார்க்கலாம்.
- டோனியை போல விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை நின்று வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
புதுடெல்லி:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி விளையாடிய அதிரடியான ஆட்டம் மறக்க இயலாத ஒன்றாகும்.
அவர் 53 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 82 ரன் எடுத்து வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.அவரது இந்த இன்னிங்ஸ் மிகவும் சிறப்பானதாகும்.
இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் ஷாட்கள் எல்லாம் அபாரமாக இருந்தது. வேகப்பந்து வீரர் ஹாரிஸ் ரவுப் வீசிய ஆட்டத்தின் 19-வது ஓவரின் 5-வது பந்தில் அவர் அடித்த சிக்சர் மிகவும் அற்புதமாக இருந்தது.
காலை பின் பக்கமாக (பேக்புட்) கொண்டு சென்று நேராக சிக்சர் அடித்தார்.
விராட் கோலியின் இந்த சிக்சரை முன்னாள் கேப்டன் கபில்தேவ் வியந்துள்ளார். அவர் 2011 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இலங்கை வீரர் குலசேகராவின் பந்தில் டோனி அடித்த சிக்சரோடு கோலியின் சிக்சரை ஒப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கபில்தேவ்
மெதுவான பந்தில் நேராக சிக்சர் அடிப்பது மிகவும் கடினமானது. 2011 உலகக்கோப்பையை வெல்ல டோனி அடித்த சிக்சரை எத்தனை முறை பார்த்தோமோ அதேபோல கோலியின் சிக்சரையும் பார்க்கலாம். இந்த சிக்சரை ஆயிரம் முறை பார்க்கலாம்.
டோனியை போல விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை நின்று வெற்றியை பெற்றுக்கொடுத்தார். அந்த சூழ்நிலையில் அணி வெல்ல யாராவது உதவினால் அது விராட் கோலி தான் என்று நாங்கள் விவாதித்தோம். அது போல அவர் அணியை வெற்றி பெற வைத்தார்.
இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.
இந்திய அணிக்கு உலகக்கோப்பையை முதல் முறையாக பெற்றுக் கொடுத்தவர் கபில்தேவ். அவர் தலைமையிலான அணி 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது. அதன் பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையில் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை கிடைத்தது. டோனி தலைமையில் 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பையும் கிடைத்து இருந்தது.
இந்திய அணி இதுவரை 3 உலகக்கோப்பையை (1983, 2011-ஒரு நாள் போட்டி, 2007-இருபது ஓவர்) கைப்பற்றி உள்ளது.
- டி காக் 38 பந்துகளில் 63 ரன்கள் அடித்தார்.
- டி20 கிரிக்கெட்டில் ரோசோவ் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்கா - வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரரான பவுமா 2 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து டி காக் - ரோசோவ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். டி காக் 38 பந்துகளில் 63 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். தொடர்ந்து அதிரடி காட்டிய ரோசோவ் தென் ஆப்பிரிக்காவுக்காக தனது 2-வது சதத்தை பதிவு செய்தார்.
அவர் 109 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதில் 8 சிக்சர் 7 பவுண்டரிகள் அடங்கும். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் எடுத்தது.
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்களாதேசம் அணி களமிறங்குகிறது.
- பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் (849 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார்.
- இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் (828 புள்ளி) ஒரு இடம் சரிந்து 3-வது இடத்துக்கு இறங்கினார்.
துபாய்:
20 ஓவர் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் (849 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டம் இழக்காமல் 92 ரன்கள் குவித்த நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டிவான் கான்வே (831 புள்ளி) 3 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் (828 புள்ளி) ஒரு இடம் சரிந்து 3-வது இடத்துக்கு இறங்கினார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (799 புள்ளி) 4-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க வீரர் மார்க்ராம் (762 புள்ளி) 5-வது இடத்திலும் தொடருகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 82 ரன்கள் எடுத்த இந்திய வீரர் விராட்கோலி 5 இடங்கள் எகிறி 9-வது இடத்தை பெற்றுள்ளார்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட்டை (699 புள்ளி) பின்னுக்கு தள்ளி ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் (702 புள்ளி) மீண்டும் முதலிடம் அரியணையில் ஏறியுள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் (647 புள்ளி) இரு இடம் அதிகரித்து 10-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் (261 புள்ளி) முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி (247 புள்ளி) 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர். இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா (189 புள்ளி) 3 இடம் உயர்ந்து 3-வது இடத்தை தனதாக்கினார்.
- இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
- முடிந்தவரை சிறப்பாக விளையாடுவோம் என நெதர்லாந்து கேப்டன் நம்பிக்கை.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டி தொடரில் தற்போது சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று ஒரேநாளில் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. காலை 8.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
நண்பகல் 12.30 மணிக்கு தொடங்கும் 2வது போட்டி இந்தியா நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங் மற்றும் பௌலிங்கில் வலுவாக இருக்கும் இந்திய அணி, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியிலும் எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெதர்லாந்து தனது முதல் போட்டியில் வங்காளதேசத்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், இன்றைய போட்டியில் நாங்கள் வெற்றி பெற மாட்டோம் என்று பெரும்பாலானவர்கள் கருதுவதாகவும், முடிந்தவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எங்களது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாலை 4.30 மணிக்கு பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 3வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.
- முதல் ஆட்டத்தில் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி அயர்லாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
- நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று மெல்போர்னில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின. மழையால் தாமதமாக தொடங்கிய இந்த போட்டியில், முதலில் ஆடிய அயர்லாந்து அணி 157 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி அயர்லாந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இரண்டாவது ஆட்டத்தில் குரூப்-1ல் உள்ள நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுவதாக இருந்தது. டாஸ் போடுவதற்கு முன்பே மழை பெய்யத் தொடங்கியது. மழை விட்டதும் போட்டி தாமதமாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இடைவிடாது மழை பெய்தது. எனவே, டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
- 45 பாலுக்கு அப்புறமா சந்திரமுகியா மாறின கங்காவாதான் அவர் ஆட்டத்த பாக்கணும்.
- கண்ண விரிச்சுக்கிட்டு சந்திரமுகி படத்துல ஜோதிகா வந்து 'ஒதலவா' அப்படின்னு சொல்ற மாதிரி. நான் பேட் செய்ய உள்ள போறேன்.
சிட்னி:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்றில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டமிழக்காமல் விராட் கோலி எடுத்த 82 ரன்கள் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இந்த போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி அபாரமாக ஆடிஅணிக்கு வெற்றியை தேடித்தந்தார். அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் புதுவரவாக இணைந்துள்ளார் மற்றொரு இந்திய வீரரான அஸ்வின். சந்திரமுகி படத்தில் வரும் பிரபலமான வசனத்தை எடுத்துக்காட்டாக சொல்லி கோலியின் இன்னிங்ஸை அஸ்வின் புகழ்ந்துள்ளார். "விராட் கோலி. அவருக்குள்ள என்ன பூந்துடுச்சுன்னே தெரியல.
ஏதோ பூந்துடுச்சு சத்தியமா. அதுல ஒண்ணும் சந்தேகமே கிடையாது. இந்த மாதிரிலாம் ஷார்ட்ஸ் ஆடி. ஷார்ட்ஸ விடுங்க. 45 பாலுக்கு அப்புறமா சந்திரமுகியா மாறின கங்காவாதான் அவர் ஆட்டத்த பாக்கணும். கண்ண விரிச்சுக்கிட்டு சந்திரமுகி படத்துல ஜோதிகா வந்து 'ஒதலவா' அப்படின்னு சொல்ற மாதிரி. நான் பேட் செய்ய உள்ள போறேன்.
அப்போ ஒரு பால்ல ரெண்டு ரன்னு தேவை. அப்படி கண்ண வச்சுக்கிட்டு அவர் பேசினாரு. 'இங்க அடி. அங்க அடின்னு'. என்னால என்ன முடியுமோ அத நான் பண்றேன். அப்படின்னு மனசுக்குள்ள நினச்சுக்கிட்டு அந்த பந்த ஆடினேன்" என அஸ்வின் தெரிவித்துள்ளார். இதனை சமூக வலைதளத்தில் வீடியோவாக அவர் பதிவு செய்துள்ளார். இதை அவரது குட்டி ஸ்டோரியில் ஒன்றாக அஸ்வின் பகிர்ந்துள்ளார்.
- டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த 2-வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஸ்டாய்னிஸ் படைத்துள்ளார்.
- 17 பந்துகளில் அரை சதமடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார்.
டி20 உலகக்கோப்பை 19-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும் ஆசிய சாம்பியன் இலங்கையும் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆடியது.
ஸ்டாய்னிசின் அதிரடி ஆட்டத்தால் 16.3 ஓவரிலேயே ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஸ்டாய்னிஸ் தேர்வு செய்யப்பட்டார். இப்போட்டியில் 17 பந்துகளில் அரை சதமடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார்.
1. மார்கஸ் ஸ்டாய்னிஸ்: 17 பந்துகள், இலங்கைக்கு எதிராக, 2022*
2. டேவிட் வார்னர்: 18, பந்துகள், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2010
2. கிளன் மேக்ஸ்வெல் : 18 பந்துகள் பாகிஸ்தானுக்கு எதிராக, 2014
அத்துடன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த ஒட்டுமொத்த பட்டியலில் 2-வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்.
1. யுவராஜ் சிங் : 12 பந்துகள், இங்கிலாந்துக்கு எதிராக, 2007
2. மார்கஸ் ஸ்டோனிஸ் : 17 பந்துகள், இலங்கைக்கு எதிராக, 2022*
2. ஸ்டீபன் மைபர்க் : 17, அயர்லாந்துக்கு எதிராக, 2014
3. கிளென் மேக்ஸ்வெல் : 18, பாகிஸ்தானுக்கு எதிராக, 2014
3. கேஎல் ராகுல் : 18, ஸ்காட்லாந்துக்கு எதிராக, 2021
மேலும் இப்போட்டியில் 327.78 என்ற ஸ்டிரைக் ரேட்டில் இலங்கையை அடித்து நொறுக்கிய அவர் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 300+ ஸ்ட்ரைக் ரேட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த பேட்ஸ்மேன் என்ற யுவராஜ் சிங் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார்.
1. மார்கஸ் ஸ்டாய்னிஸ் : 59* ரன்கள், இலங்கைக்கு எதிராக, 2022*
2. யுவராஜ் சிங் : 58 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக, 2007
- அயர்லாந்து அணி 19.2 ஓவரில் 157 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது.
- இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்தது.
மெல்போர்ன்:
மெல்போர்னில் இன்று நடந்த ஆட்டத்தில் குரூப்1 பிரிவில் உள்ள இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின
மழையால் ஆட்டம் தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. மழை விட்ட பிறகு 45 நிமிட நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. ஆனால் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.
இங்கிலாந்து கேப்டன் ஜாஸ்பட்லர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அயர்லாந்து கேப்டன் பல் பிரீனும், பால் ஸ்டிர்லிங்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் ஓவரில் அயர்லாந்து அணியால் 3 ரன்களே எடுக்க முடிந்தது.
2-வது ஓவர் வீசப்பட்ட போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 9 பந்துகள் வீசப்பட்ட நிலையில் மழையால் ஆட்டம் மீண்டும் தடைபட்டது.
மழை விட்டதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இங்கிலாந்து வீரர்கள் பந்து வீச்சு நேர்த்தியாக இருந்தது. கேப்டன் பல்பிரீன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார்.
அயர்லாந்து அணி 19.2 ஓவரில் 157 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 158 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பால்பிரீன் அதிகபட்சமாக 47 பந்தில் 62 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), டக்கர் 27 பந்தில் 34 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் மார்க்வுட், லிவ்விங்ஸ்டோன் தலா 3 விக்கெட்டும், சாம்கரண் 2 விக்கெட்டும் பென்ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டம் கைப்பற்றினர்.
158 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து ஆடியது. கேப்டனும், தொடக்க வீரருமான பட்லர் முதல் ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அலெக்ஸ் 7, பென் ஸ்டோக்ஸ் 6, ப்ரோக் 18, மலான் 35 ரன்னில் வெளியேறினர். இதனால் இங்கிலாந்து அணி 13.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து மொய்ன் அலி மற்றும் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தனர். மொய்ன் அலி அதிரடியாக விளையாடி 12 பந்தில் 24 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். அப்போது மழை குறுக்கிட்டது. இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி அயர்லாந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
- மெல்போர்னில் இன்று நடந்த ஆட்டத்தில் குரூப்1 பிரிவில் உள்ள இங்கிலாந்து- அயர்லாந்து அணிகள் மோதின.
- அயர்லாந்து கேப்டன் பல் பிரீனும், பால் ஸ்டிர்லிங்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் குரூப்1 பிரிவில் நியூசிலாந்து (ஒரு வெற்றி), இங்கிலாந்து (ஒரு வெற்றி), இலங்கை (ஒரு வெற்றி, ஒரு தோல்வி), ஆஸ்திரேலியா (ஒரு வெற்றி, ஒரு தோல்வி) தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. ஆப்கானிஸ்தான் (1 தோல்வி), அயர்லாந்து (1 தோல்வி) புள்ளி எதுவும் பெறவில்லை.
குரூப்2 பிரிவில் இந்தியா (1 வெற்றி), வங்காள தேசம் (1 வெற்றி) ஆகியவை தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே (மழையால் ரத்து), தலா 1 புள்ளிகளுடன் உள்ளன. பாகிஸ்தான் (1 தோல்வி), நெதர்லாந்து (1 தோல்வி), புள்ளி எதுவும் பெறவில்லை.
மெல்போர்னில் இன்று நடந்த ஆட்டத்தில் குரூப்1 பிரிவில் உள்ள இங்கிலாந்து- அயர்லாந்து அணிகள் மோதின.
முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. 2-வது வெற்றி ஆர்வத்துடன் இந்த அணி களம் இறங்கியது. அயர்லாந்து முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் முதல் வெற்றிக்காக அந்த அணி களத்தில் குதித்தது.
மழையால் ஆட்டம் தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. மழைவிட்டபிறகு 45 நிமிட நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. ஆனால் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.
இங்கிலாந்து கேப்டன் ஜாஸ்பட்லர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அயர்லாந்து கேப்டன் பல் பிரீனும், பால் ஸ்டிர்லிங்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் ஓவரில் அயர்லாந்து அணியால் 3 ரன்களே எடுக்க முடிந்தது.
2-வது ஓவர் வீசப்பட்ட போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 9 பந்துகள் வீசப்பட்ட நிலையில் மழையால் ஆட்டம் மீண்டும் தடைபட்டது.
பின்னர் ஆட்டம் தொடங்கியது. போட்டியின் முடிவில், 19.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அயர்லாந்து அணி 157 ரன்கள் எடுத்தது. இதில், அயர்லாந்து கேப்டன் பால்பிரினி அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார்
இங்கிலாந்து பந்துவீச்சில் மார்க் வுட், லியாம் லிவிங்ஸ்டன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்நிலையில், 158 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. தற்போது, 5 ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.
- மெல்போர்னில் இன்று நடந்த ஆட்டத்தில் குரூப்1 பிரிவில் உள்ள இங்கிலாந்து- அயர்லாந்து அணிகள் மோதின.
- அயர்லாந்து கேப்டன் பல் பிரீனும், பால் ஸ்டிர்லிங்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் குரூப்1 பிரிவில் நியூசிலாந்து (ஒரு வெற்றி), இங்கிலாந்து (ஒரு வெற்றி), இலங்கை (ஒரு வெற்றி, ஒரு தோல்வி), ஆஸ்திரேலியா (ஒரு வெற்றி, ஒரு தோல்வி) தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. ஆப்கானிஸ்தான் (1 தோல்வி), அயர்லாந்து (1 தோல்வி) புள்ளி எதுவும் பெறவில்லை.
குரூப்2 பிரிவில் இந்தியா (1 வெற்றி), வங்காள தேசம் (1 வெற்றி) ஆகியவை தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே (மழையால் ரத்து), தலா 1 புள்ளிகளுடன் உள்ளன. பாகிஸ்தான் (1 தோல்வி), நெதர்லாந்து (1 தோல்வி), புள்ளி எதுவும் பெறவில்லை.
மெல்போர்னில் இன்று நடந்த ஆட்டத்தில் குரூப்1 பிரிவில் உள்ள இங்கிலாந்து- அயர்லாந்து அணிகள் மோதின.
முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. 2-வது வெற்றி ஆர்வத்துடன் இந்த அணி களம் இறங்கியது. அயர்லாந்து முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் முதல் வெற்றிக்காக அந்த அணி களத்தில் குதித்தது.
மழையால் ஆட்டம் தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. மழைவிட்டபிறகு 45 நிமிட நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. ஆனால் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.
இங்கிலாந்து கேப்டன் ஜாஸ்பட்லர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அயர்லாந்து கேப்டன் பல் பிரீனும், பால் ஸ்டிர்லிங்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் ஓவரில் அயர்லாந்து அணியால் 3 ரன்களே எடுக்க முடிந்தது.
2-வது ஓவர் வீசப்பட்ட போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 9 பந்துகள் வீசப்பட்ட நிலையில் மழையால் ஆட்டம் மீண்டும் தடைபட்டது.
- தென்ஆப்பிரிக்க வீரர் பந்து மீது இருந்த நூலை பிய்த்து அதிக அளவில் கீறலிடும் காட்சியை மெகாதிரையில் பார்த்தேன்.
- இது குறித்து நடுவரிடம் முறையிட்டேன். ஆனால் அதை அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
சிட்னி:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த 2018-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது கேப்டவுனில் நடந்த டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியது. பந்து 'ஸ்விங்' ஆவதற்காக ஆஸ்திரேலிய வீரர் பான் கிராப்ட் உப்புதாள் கொண்டு பந்தை தேய்த்ததும், அதற்கு கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுமித், வார்னருக்கு ஓராண்டும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதமும் தடை விதிக்கப்பட்டது. கேப்டன் பதவியையும் சுமித் இழந்தார். அவருக்கு பதிலாக டிம் பெய்ன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 492 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது.
2021-ம் ஆண்டு வரை கேப்டனாக பணியாற்றிய டிம் பெய்ன், பெண் ஊழியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய பிரச்சினையில் கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கினார்.
இந்த நிலையில் 4 ஆண்டுக்கு முன்பு நடந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டுமல்ல, தென்ஆப்பிரிக்க அணியினரும் பந்தை சேதப்படுத்தும் யுக்தியை கையாண்டதாக டிம் பெய்ன் பரபரப்பான குற்றச்சாட்டை இப்போது கிளறியுள்ளார். அவர் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் இந்த விஷயம் குறித்து கூறியிருப்பதாவது:-
கேப்டவுன் டெஸ்டில் பான் கிராப்ட் பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த உப்புத்தாளை எடுத்து பந்தை தேய்க்கும் காட்சியை திரையில் பார்த்ததும் ஒருகனம் அதிர்ச்சியில் உறைந்து போனோம். கிரிக்கெட்டில் பந்தின் தன்மையை மாற்ற முயற்சிப்பது நடக்கக்கூடிய ஒன்று தான். ஆனால் உப்புத்தாளை கொண்டு தேய்த்தது வேறு மாதிரி. இது வெட்ககேடான செயல். ஆனால் இது மாதிரி செய்ய வேண்டும் என்று அணி வீரர்களின் ஆலோசனை கூட்டத்தில் எதுவும் விவாதிக்கப்படவில்லை. இந்த பிரச்சினையில் சுமித், பான்கிராப்ட், வார்னர் ஆகியோர் தனித்து விடப்பட்டனர். அவர்களுக்கு அணி நிர்வாகம் ஆதரவாக இருந்திருக்க வேண்டும்.
3-வது டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரம், வீரர்களுக்கு தடை குறித்து அதிகமாக பேசப்பட்டன. அதன் பிறகு 4-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணியினர் பந்தை சேதப்படுத்தியதை நான் பார்த்தேன். நான் பந்து வீச்சாளர் முனையில் நின்று கொண்டிருந்த போது, 'மிட்ஆப்' திசையில் நின்ற ஒரு தென்ஆப்பிரிக்க வீரர் பந்து மீது இருந்த நூலை பிய்த்து அதிக அளவில் கீறலிடும் காட்சியை மெகாதிரையில் பார்த்தேன். ஆனால் பான்கிராப்ட்டின் செயலை அம்பலப்படுத்திய அந்த டெலிவிஷன் இயக்குனர் இந்த காட்சியை திரையில் இருந்து உடனடியாக நீக்கி விட்டார். இது குறித்து நடுவரிடம் முறையிட்டேன். ஆனால் அதை அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு அந்த வீடியோ காட்சியை மீண்டும் காண்பிக்கவில்லை.
இவ்வாறு அதில் டிம் பெய்ன் குறிப்பிட்டுள்ளார்.
- டென்னிசில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் அந்த போட்டியின்போது ரசிகர்கள் முன்னிலையில் கண்ணீர்மல்க விடைபெற்றார்.
- மீண்டும் டென்னிஸ் களம் திரும்புவேன் என்று செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
சான்பிரான்சிஸ்கோ:
23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான 41 வயது செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) டென்னிசில் இருந்து ஒதுங்கி அடுத்தகட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தபோவதாக தெரிவித்து இருந்தார்.
சொந்த மண்ணில் கடந்த மாதம் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிசில் செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். அத்துடன் அவர் டென்னிசில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் அந்த போட்டியின்போது ரசிகர்கள் முன்னிலையில் கண்ணீர்மல்க விடைபெற்றார். இதனால் அது தான் அவரது கடைசி போட்டி என்று கருதப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் டென்னிஸ் களம் திரும்புவேன் என்று செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். தனது முதலீட்டு கம்பெனி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செரீனா பேசுகையில், 'நான் டென்னிசில் இருந்து ஓய்வு பெறவில்லை. ஓய்வு என்கிற வார்த்தை எனக்கு ஒருபோதும் பிடிக்காது. நான் மீண்டும் டென்னிஸ் களம் திரும்ப அதிக வாய்ப்பு இருக்கிறது. எனது வீட்டுக்கு நீங்கள் வந்தால் டென்னிஸ் ஆடுகளம் இருப்பதை பார்க்கலாம்' என்றார்.






