என் மலர்

  கிரிக்கெட்

  இங்கிலாந்து அணிக்கு 158 ரன்கள் இலக்கு- அயர்லாந்து கேப்டன் பால்பிரினி அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார்
  X

  இங்கிலாந்து அணிக்கு 158 ரன்கள் இலக்கு- அயர்லாந்து கேப்டன் பால்பிரினி அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மெல்போர்னில் இன்று நடந்த ஆட்டத்தில் குரூப்1 பிரிவில் உள்ள இங்கிலாந்து- அயர்லாந்து அணிகள் மோதின.
  • அயர்லாந்து கேப்டன் பல் பிரீனும், பால் ஸ்டிர்லிங்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

  20 ஓவர் உலக கோப்பை போட்டியில் குரூப்1 பிரிவில் நியூசிலாந்து (ஒரு வெற்றி), இங்கிலாந்து (ஒரு வெற்றி), இலங்கை (ஒரு வெற்றி, ஒரு தோல்வி), ஆஸ்திரேலியா (ஒரு வெற்றி, ஒரு தோல்வி) தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. ஆப்கானிஸ்தான் (1 தோல்வி), அயர்லாந்து (1 தோல்வி) புள்ளி எதுவும் பெறவில்லை.

  குரூப்2 பிரிவில் இந்தியா (1 வெற்றி), வங்காள தேசம் (1 வெற்றி) ஆகியவை தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே (மழையால் ரத்து), தலா 1 புள்ளிகளுடன் உள்ளன. பாகிஸ்தான் (1 தோல்வி), நெதர்லாந்து (1 தோல்வி), புள்ளி எதுவும் பெறவில்லை.

  மெல்போர்னில் இன்று நடந்த ஆட்டத்தில் குரூப்1 பிரிவில் உள்ள இங்கிலாந்து- அயர்லாந்து அணிகள் மோதின.

  முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. 2-வது வெற்றி ஆர்வத்துடன் இந்த அணி களம் இறங்கியது. அயர்லாந்து முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் முதல் வெற்றிக்காக அந்த அணி களத்தில் குதித்தது.

  மழையால் ஆட்டம் தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. மழைவிட்டபிறகு 45 நிமிட நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. ஆனால் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.

  இங்கிலாந்து கேப்டன் ஜாஸ்பட்லர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அயர்லாந்து கேப்டன் பல் பிரீனும், பால் ஸ்டிர்லிங்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் ஓவரில் அயர்லாந்து அணியால் 3 ரன்களே எடுக்க முடிந்தது.

  2-வது ஓவர் வீசப்பட்ட போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 9 பந்துகள் வீசப்பட்ட நிலையில் மழையால் ஆட்டம் மீண்டும் தடைபட்டது.

  பின்னர் ஆட்டம் தொடங்கியது. போட்டியின் முடிவில், 19.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அயர்லாந்து அணி 157 ரன்கள் எடுத்தது. இதில், அயர்லாந்து கேப்டன் பால்பிரினி அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார்

  இங்கிலாந்து பந்துவீச்சில் மார்க் வுட், லியாம் லிவிங்ஸ்டன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

  இந்நிலையில், 158 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. தற்போது, 5 ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.

  Next Story
  ×