என் மலர்
விளையாட்டு
- மெல்போர்ன் நகரில் இன்று மழை பெய்வதற்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
- தொடர்ந்து மழை பெய்து வந்து உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
மெல்போர்ன்:
20 ஓவர் உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. 'சூப்பர்-12' சுற்றில் குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதும் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை மெல்போர்ன் நகரில் தொடங்க இருந்தது.
அயர்லாந்து அணி 2 ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றது. அந்த அணி இலங்கையிடம் தோற்றது. இங்கிலாந்தை வீழ்த்தியது. ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது.
நியூசிலாந்துடன் மோத இருந்த ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தான் இன்று தனது 3-வது ஆட்டத்தில் அயர்லாந்தை சந்தித்தது.
மெல்போர்ன் நகரில் இன்று மழை பெய்வதற்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு ஏற்றார் போல் டாஸ் போடுவதற்கு முன்பு மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆடுகளம் மற்றும் மைதானத்தின் மற்ற பகுதிகள் மூடப்பட்டு இருந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்து உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மாலை 3 மணியளவில் மழை குறைந்த நிலையில் அரை மணி நேரத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதனால் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து (குரூப்-1) மெல்போர்னில் மோத உள்ளன. இந்த ஆட்டமும் மழையால் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
- 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் மாற்று விக்கெட் கீப்பர் கிடையாது.
- ஒரு வேளை மேத்யூ வேட் கீப்பிங் பன்ன முடியாமல் போனால் மேக்ஸ்வெல் அல்லது டேவிட் வார்னர் அந்த பணியை கவனிப்பார்கள்.
மெல்போர்ன்:
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) சூப்பர்12 சுற்றில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மெல்போர்னில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
இதைத் தொடர்ந்து இதே மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ள இவ்விரு அணிகளுக்கும் இந்த ஆட்டத்தின் முடிவு மிகவும் முக்கியமானது. தோற்கும் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும்.
ஆஸ்திரேலிய அணிக்கு திடீர் பின்னடைவாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் மாற்று விக்கெட் கீப்பர் கிடையாது. அதனால் மேத்யூ வேட் கொரோனா தொற்றுடன் களம் இறங்குவார் என்று தெரிகிறது. ஒரு வேளை முடியாமல் போனால் மேக்ஸ்வெல் அல்லது டேவிட் வார்னர் அந்த பணியை கவனிப்பார்கள். நேற்று சிறிது நேரம் மேக்ஸ்வெல் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது.
இன்னொரு பக்கம் மழையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. மெல்போர்னில் இன்று மழை பெய்வதற்கு 90 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- எனது அணியின் செயல்பாடு மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
- நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை.
பெர்த்:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஒன்றில் வலுவான பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்தது.பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது. நேற்றைய போட்டியில் ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா சிறப்பாக பந்து வீசி 25 ரன்கள் விட்டுக் கொடுத்து பாகிஸ்தான் அணியின் 3 விக்கெட்களை சாய்த்தார்.

மற்றொரு வீரர் பிராட் எவன்ஸ் 2 விக்கெட்களை கைப்பற்றினார். 2வது போட்டியிலும் தோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசம் கூறியுள்ளதாவது: பேட்டிங் போது நாங்கள் முதல் ஆறு ஓவர்கள் மிக மோசமான நிலையில் இருந்தோம், ஆனால் ஷதாப் மற்றும் ஷான் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஷதாப் அவுட்டானார்.

பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் மற்ற வீரர்களுக்கு பேட்டிங்கில் அழுத்தம் ஏற்பட்டது. பவுலிங் போது முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் புதிய பந்தை நன்றாகப் பயன்படுத்தவில்லை. பின்னர் நன்றாக செயல்பட்டோம். நாங்கள் ஒன்றாக அமர்ந்து பேசி எங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்த போட்டியில் வலுவான நிலைக்குத் திரும்புவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இது விளையாட்டில் பாலின சமத்துவத்தை நோக்கிய வரவேற்கத்தக்க நடவடிக்கை.
- ஜெய்ஷா அறிவிப்புக்கு முன்னாள் வீராங்கனை அஞ்சலி சர்மா வரவேற்பு.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று பின்னர் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பாலியல் பாகுபாட்டை சரி செய்யும் வகையில் பிசிசிஐ முதல் நடவடிக்கை எடுத்துள்ளது குறித்து அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் ஊதிய சமத்துவத்தை செயல்படுத்த உள்ளோம். இந்திய மகளிர் அணிக்கு, ஆண்கள் அணிக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும், டி20 போட்டிக்கு 3 லட்சமும் ஊதியமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பி.சி.சி.ஐ.யின் இந்த அறிவிப்புக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது விளையாட்டில் பாலின சமத்துவத்தை நோக்கிய வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இந்தியாவின் புத்திசாலித்தனமான முன்னற்ற நடவடிக்கையாக இது கருதப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல் பிசிசிஐயின் அறிவிப்புக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை அஞ்சலி சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையேயான ஊதிய இடைவெளியைக் குறைக்கும் இந்த நடவடிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு மட்டுமல்ல,உலகெங்கிலும் உள்ள அனைத்து விளையாட்டு வீராங்கனைகளுக்கும் ஊக்கமளிக்கும் நடவடிக்கையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிசிசிஐ அறிவிப்புக்கு விராட்கோலியும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
- முதலில் ஆடிய ஜிம்பாப்வே 130 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 129 ரன்களை மட்டுமே எடுத்தது.
பெர்த்:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 3-வது போட்டியில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்தது. சீன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் முகமது வாசிம் ஜூனியர் 4 விக்கெட்டும், ஷதாப் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 131 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பாபர் அசாம் 4 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 15 ரன்னிலும் அவுட்டாகினர். இப்திகார் அகமது 5 ரன்னிலும், ஷதாப் கான் 17 ரன்னிலும் அவுட்டாகினர்.
பொறுப்புடன் ஆடிய ஷான் மசூத் 44 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹைதர் அலி டக் அவுட்டானார்.
இறுதியில், பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்தது. இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே திரில் வெற்றியை பதிவு செய்தது.
ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா 3 விக்கெட் வீழ்த்தினார்.
- டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் தேர்வு செய்தது..
- முதலில் ஆடிய ஜிம்பாப்வே 130 ரன்களை எடுத்தது.
பெர்த்:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெறும் 3வது போட்டியில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 42 ஆக இருந்தபோது கேப்டன் எர்வின் 19 ரன்னில் அவுட்டானார். மாதேவீர் 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மில்டன் ஷம்பா 8 ரன்னிலும், சிக்கந்தர் ராசா 9 ரன்னிலும் அவுட்டாகினர். சீன் வில்லியம்ஸ் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 31 ரன்கள் எடுத்தார். 14 மற்றும் 15வது ஓவரில் ஜிம்பாப்வே அணி தலா 2 விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில், ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்துள்ளது.
பாகிஸ்தான் சார்பில் முகமது வாசிம் ஜூனியர் 4 விக்கெட்டும், ஷதாப் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து,131 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.
- ஒட்டு மொத்தமாக அதிக சிக்சர்கள் அடித்தவர்களில் முதலிடத்தில் கிறிஸ் கெயில் இருக்கிறார்.
- யுவராஜ் சிங் 33 சிக்சர்கள் அடித்திருந்தார்.
சிட்னி:
2022 டி20 உலகக்கோப்பையில் இன்று இந்தியா நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவர் 39 பந்துகளை எதிர்கொண்டு 53 ரன்களை விளாசினார். இதில் 4 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும். இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். இதற்கு முன்பு யுவராஜ் சிங் 33 சிக்சர்கள் அடித்திருந்தார். தற்போது ரோகித் சர்மா 34 சிக்சரை அடித்திருக்கிறார்.
ஒட்டு மொத்தமாக முதலிடத்தில் கிறிஸ் கெயில் இருக்கிறார். அவர் 63 சிக்சர் அடித்திருக்கிறார். இந்த தொடரில் ரோகித் அதிரடியை காட்டி சிறப்பாக விளையாடினால் 50 சிக்சர்களை அடிக்க வாய்ப்புள்ளது.
- ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
- டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு இது 2-வது வெற்றி ஆகும்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் எடுத்தது.
ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் அரை சதம் அடித்தனர். இதனை தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து களமிறங்கியது.
இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நெதர்லாந்து அணி திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு இது 2-வது வெற்றி ஆகும்.
- இந்திய மகளிர் அணிக்கு ஆண்கள் அணிக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும்.
- பாலின பாகுபாட்டைகளையும் முதல் நடவடிக்கையாக ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும்
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆடவர் அணிகளுக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா கூறுகையில்,
இந்திய மகளிர் அணிக்கு ஆண்கள் அணிக்கு நிகராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரூ. 15 லட்சமும், ஒருநாள் போட்டி ஊதியமாக ரூ. 6 லட்சமும் வழங்கப்படும். பாலின பாகுபாட்டைகளையும் முதல் நடவடிக்கையாக ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும்" என்றார்.
- சூர்ய குமார் யாதவ் 25 பந்தில் அரை சதம் அடித்தார்.
- விராட் கோலி 44 பந்தில் 62 ரன்கள் குவித்தார்.
சிட்னி:
20 ஓவர் உலகக்கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி குரூப்-2 பிரிவில் இடம் பெற்றுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி நெதர்லாந்தை இன்று எதிர்கொண்டது. இந்த ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடிய வீரர்களே இடம் பெற்றனர்.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மாவும் லோகேஷ் ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
கேஎல் ராகுல் 9 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து ஆடினார். ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 53 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து விராட் கோலி-சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
சிறப்பாக விளையாடிய விராட் கோலி இந்த போட்டியிலும் அரை சதம் அடித்தார். அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அரை சதம் அடித்தார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 179 ரன்கள் எடுத்தனர்.
- பாகிஸ்தான் உண்மையில் நல்ல வேகப்பந்து வீச்சை வைத்திருக்கிறார்கள்.
- அர்ஷ்தீப் சிங், ஜாகீர்கானின் பாதையில் சென்று இந்திய அணிக்கு பல அற்புதங்களை நிகழ்த்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
புதுடெல்லி:
20 ஓவர் உலகக்கோப்பையில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள அணி பாகிஸ்தான் தான் என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், இந்திய அணி முன்னாள் கேப்டனுமான கும்ப்ளே தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பாகிஸ்தான் உண்மையில் நல்ல வேகப்பந்து வீச்சை வைத்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியா போல் அவர்களிடம் ஆல்ரவுண்டர்கள் இல்லை. ஆஸ்திரேலிய அணியிலும் சிறந்த வேகப்பந்து வீரர்கள் உள்ளனர்.
சுழற்பந்து வீச்சில் இந்திய அணி நல்ல நிலையில் இருக்கிறது. இதே போல வேகப்பந்து வீச்சு என்று என்னிடம் கேட்டால் பாகிஸ்தானை தான் சொல்வேன்.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், ஜாகீர்கானின் பாதையில் சென்று இந்திய அணிக்கு பல அற்புதங்களை நிகழ்த்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சினால் மிகவும் கவரப்பட்டேன். நான் அவருடன் 3 ஆண்டுகள் ஒன்றாக பணியாற்றி இருக்கிறேன். 20 ஓவர் போட்டிகளில் அவர் வளர்ந்து வந்த விதத்தை கண்கூடாக பார்த்து இருக்கிறேன். கடந்த ஐ.பி.எல். அவரது வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பதற்றம் இல்லாமல் வீசுவது என்பது கனவு தான். ஆனால் அதிலும் அர்ஷ்தீப்சிங் தேறி விட்டார். அவர் முதிர்ச்சி அடைந்து விட்டார். அவர் இது மாதிரியே முன்னேறி செல்ல வேண்டும். அதாவது ஜாகீர்கான் போல் இவரும் ஒரு பெரிய பவுலராக வரவேண்டும்.
இவ்வாறு கும்ப்ளே கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- நெதர்லாந்து தனது முதல் போட்டியில் வங்காளதேசத்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டி தொடரில் தற்போது சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று 2-வது போட்டியில் இந்தியா நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நெதர்லாந்து தனது முதல் போட்டியில் வங்காளதேசத்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.






