என் மலர்
விளையாட்டு
- நியூசிலாந்துக்கு இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரைஇறுதி வாய்ப்பு பிரகாசமாகி விடும்.
- இலங்கைக்கு இந்த ஆட்டம் வாழ்வா-சாவா மோதல் போன்றது. தோற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டியது வரும்.
சிட்னி:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சிட்னியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் நியூசிலாந்து- இலங்கை அணிகள் மோதுகிறது. வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து தனது தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. தற்போது 3 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்துக்கு இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரைஇறுதி வாய்ப்பு பிரகாசமாகி விடும்.
தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வென்றது. அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் பணிந்தது. இலங்கைக்கு இந்த ஆட்டம் வாழ்வா-சாவா மோதல் போன்றது. தோற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டியது வரும்.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையே டாஸ் போடப்பட்டத்தில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
- இதுபோன்ற போட்டியை காண வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது.
- கோலி அந்த பந்தை சிக்சர் அடித்த விதம் இன்னும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது.
பெர்த்:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி குரூப் 2-ல் இடம் பெற்றுள்ளது. இந்த குரூப்பில் பாகிஸ்தான், நெதர்லாந்து அணி மட்டுமே 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற முக்கிய வீரராக விராட் கோலி செயல்பட்டார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் ஆடிய விதம் மிகச்சிறப்பாக இருந்தது.
இந்நிலையில் கோலியின் இன்னிங்ஸ் குறித்து பிசிசிஐ புதிய தலைவர் ரோஜர் பின்னி புகழ்ந்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இதுபோன்ற போட்டியை காண வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது. கோலி அந்த பந்தை சிக்சர் அடித்த விதம் இன்னும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது. பாகிஸ்தானுக்கு சாதகமாக சென்று, கடைசி நேரத்தில் இந்தியாவின் பக்கம் வெற்றி வருவதை அடிக்கடி நம்மால் காண முடியாது.
விராட் கோலி யாருக்காகவும் அவரை நிரூபித்து காட்ட வேண்டிய அவசியமே கிடையாது. அவரை போன்ற வீரர்கள் அழுத்தமான சூழல்களில் தான் பலம் பெறுவார்கள். ஏனென்றால் அழுத்தங்களும், கடினமான சூழல்களும் தான் ஒரு வீரரின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வைக்கும். கோலியை இப்படி பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என ரோஜர் பின்னி கூறினார்.
இந்திய அணி தனது அடுத்த போட்டியாக தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளும் மோதும் போட்டி பெர்த் உள்ள மைதானத்தில் நாளை ( அக்டோபர் 30 ) மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இதிலும் விராட் கோலியின் இன்னிங்ஸ் தான் இந்தியாவுக்கு பெரும் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பகலில் கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்கிறார்.
- மாலையில் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெறுகிறார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ராஜமகேந்திராவரத்தை சேர்ந்தவர் ஆர்ஜித பாலகிருஷ்ணா. இவர் நகராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
மும்பையில் நடந்த தேசிய சீனியர்ஸ் மற்றும் மாஸ்டர்ஸ் கிளாசிக் வலுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் 74 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
பகலில், ராஜ மகேந்திர வரம் நகரில் உள்ள கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்கிறார். மாலையில் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெறுகிறார். துப்புரவு பணியாளர் ஆர்ஜித பாலகிருஷ்ணா மாவட்ட மற்றும் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார்.
"நான் வேலைக்குச் செல்வதற்காக அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கிறேன். நான் ஒப்பந்தத் தொழிலாளி, மாதச் சம்பளம் ரூ.15,000. வலுதூக்கும் போட்டி ஒரு விலையுயர்ந்த விளையாட்டு. என்னிடம் ஒரு பைசா கூட மீதம் இல்லாத நாட்கள் உண்டு.
ஆனால் எனது நண்பர்கள் கடினமான காலங்களில் எனக்கு ஆதரவளித்துள்ளனர். சுமார் 22,000 ரூபாய்க்கு ஆடைகளை வாங்குவதற்கு அவர்கள் எனக்கு கடன் கொடுத்துள்ளனர்.
10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். வறுமை காரணமாக மேற்கொண்டு படிப்பை தொடர முடியவில்லை எனது தந்தை கூலி தொழிலாளி, எனது சகோதரர் ஆட்டோ ஓட்டுகிறார். என் மனைவி, மகன் மற்றும் நோய்வாய்ப்பட்ட தாயை நான் ஆதரிக்க வேண்டும். இதனால், என்னால் சத்தான உணவை உட்கொள்ள முடியவில்லை.
துப்புரவு பணிகளை முடித்துவிட்டு ஜிம்மிற்கு சென்று பயிற்சி எடுத்து வருகிறேன். சாய் பவர் ஜிம்மில் எனது பயிற்சியாளர் சத்யநாராயணா மற்றும் வாலிபால் பயிற்சியாளர் சதீஷ் ஆகியோர் எனக்கு ஆதரவாக நின்று நிதி சிக்கல்களை சமாளிக்க உதவினார்கள்.
மாநில அரசு நிதியுதவி அளித்து விளையாட்டில் அதிக இலக்குகளை அடைய உதவ வேண்டும் என்றார்.
- குரூப் 1-பிரிவில் இலங்கை, நியூசிலாந்தை தவிர மற்ற அணிகள் 3 போட்டிகள் முடிந்து விட்டது.
- நியூசிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா தலா 3 புள்ளிகள் பெற்றுள்ளன.
சிட்னி:
மழை காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் சுவாரசியம் குறைந்து காணப்படுகிறது.
மழை காரணமாக இதுவரை 4 ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. தென் ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே, நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான், அயர்லாந்து-ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து ஆகிய போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டது.
இதில் தென் ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு இருந்தது. மழையால் அந்த அணியின் வெற்றி பறி போனது. மற்ற 3 போட்டிகளும் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
மேலும் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மழையின் விதியால் இங்கிலாந்து அதிர்ஷ்டம் இல்லாமல் அதிர்ச்சிகரமாக தோற்றது.
மழையால் ஆட்டம் ரத்தாவதால் அரை இறுதியில் நுழைய 'குரூப்-1' பிரிவில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த பிரிவில் இலங்கை, நியூசிலாந்தை தவிர மற்ற அணிகள் 3 போட்டிகள் முடிந்து விட்டது. நியூசிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா தலா 3 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து முதல் இடத்தில் இருக்கிறது.
இலங்கை, ஆப்கானிஸ்தான் தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. இதனால் இந்த பிரிவில் எந்த அணிக்கு அரை இறுதி வாய்ப்பு இருக்கிறது என்றே சொல்ல இயலாத நிலை காணப்படுகிறது. ஒவ்வொரு அணியும் போட்டியில் உள்ளன.
முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். இந்த பிரிவில் இன்று நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதுகின்றன.
குரூப்-2 பிரிவில் இந்தியா 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே தலா 3 புள்ளியும், வங்காள தேசம் 2 புள்ளியும் பெற்றுள்ளன. பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் தாங்கள் மோதிய 2 ஆட்டங்களிலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை.
- பாகிஸ்தான் அணி இந்த வாரத்துடன் தாயகம் திரும்பி விடும்
- இந்தியா ஒன்றும் தோற்கடிக்க முடியாத அணி அல்ல.
லாகூர்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் ஜிம்பாப்வேக்கு எதிராக ஒரு ரன்னில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனால் அந்த அணியின் அரைஇறுதி வாய்ப்பு மங்கி போய் விட்டது. இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் யூ டியுப் சேனலில் கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி இந்த வாரத்துடன் தாயகம் திரும்பி விடும் (சூப்பர்12 சுற்றுடன் வெளியேறுவது) என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இதே போல் இந்திய அணி அடுத்த வாரம் அரைஇறுதியில் விளையாடியதுடன் தாயகம் திரும்பும். இந்தியா ஒன்றும் தோற்கடிக்க முடியாத அணி அல்ல. நாங்கள் அதைவிட மோசமாக இருக்கிறோம். பாகிஸ்தானின் செயல்பாடு மெச்சும்படி இல்லை. வீரர்கள் தேர்வும் சரியில்லை என்று அக்தர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் இந்தியா கோப்பையை வெல்லக்கூடாது என்ற பொறாமையில் அக்தர் உளறிக் கொண்டிருப்பதாக இந்திய ரசிகர்கள் அவரை சமூக வலைதளத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
- இந்தியா-பிரிட்டன் அணிகளுக்கு இடையோன ஆட்டம் டிராவில் முடிந்தது.
- புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் உள்ளது.
மலேஷியாவில் நடைபெற்று வரும் சுல்தான் ஜோகூர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கிப் போட்டியில் இந்திய ஜூனியர் ஆடவர் அணி நேற்று பிரிட்டன் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியது. இதில் இந்தியா தரப்பில் பூவண்ணா சிபி (7வது நிமிடம்), அமந்தீப் (50வது நிமிடம்), அரைஜீத் சிங் ஹண்டல் (53வது), ஷர்தா நந்த் திவாரி (56வது, 58வது) ஆகியோர் கோல் அடித்தனர்.
பிரிட்டன் தரப்பில் மேக்ஸ் ஆண்டர்சன் (1வது, 40வது நிமிடம்), ஹாரிசன் ஸ்டோன் (42வதுநிமிடம் ) ஜாமி கோல்டன் (54வது, 56வது நிமிடம் )கோல் அடித்தனர். இதையடுத்து இந்த போட்டி 5-5 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்ததால். இதனால் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடத்தை பிடித்தது.
முன்னதாக ஆஸ்திரேலிய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 6-1 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதையடுத்து இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா ஜூனியர் அணிகள் மோதுகின்றன.
- நெதர்லாந்து போன்ற அணிக்கு எதிராக கூட நாம் சரியான திட்டமிடாமல் பந்துவீசினோம்.
- சூர்யகுமார் தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இரண்டு குறை இருப்பதாக முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். நடப்பு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
இந்த இரண்டு ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றாலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது என்று கபில்தேவ் கூறி இருக்கிறார்.
இதுகுறித்து கபில்தேவ் கூறியதாவது:-
இந்தியாவின் பந்துவீச்சு மெருகேறி வருகிறது. பேட்டிங்கில் நாம் கூடுதலாக ரன் அடிக்க வேண்டும். ஆனால் கடைசி பத்து ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் 100 ரன்களுக்கு மேல் அடித்து சமாளித்து விடுகிறார்கள். ஆஸ்திரேலியாலில் மைதானங்கள் அனைத்தும் பெரியது. இதனால் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும்.
இந்திய அணியின் பந்துவீச்சு ஆங்காங்கே குறைகள் இருக்கிறது. நெதர்லாந்து போன்ற அணிக்கு எதிராக கூட நாம் சரியான திட்டமிடாமல் பந்துவீசினோம். அது போன்ற ஆட்டத்தை நீங்கள் ஒரு பயிற்சியாக நினைக்க வேண்டும். அதற்காக வெற்றி நான் முக்கியம் இல்லை என சொல்லவில்லை. அந்த ஆட்டங்களில் நீங்கள் நோபால், வைடு வீசக்கூடாது.
சூர்யகுமார் தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் ரன்களை வேகமாக அடிக்கிறார். இதனால் அவரை அதிகமாக புகழ வேண்டும்.
இதேபோன்று கேப்டன் ரோகித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமாகும். வெற்றிகரமாக எட்டுவார்கள் அதேபோன்று ராகுலும் முக்கிய போட்டிகளுக்கு முன்பு ரன்களை அடிக்க வேண்டும்.விராட் கோலியை பொருத்தவரை அவர் 20 ஓவரும் நின்று விளையாட வேண்டும். ஏனெனில் அவர் எப்போது வேண்டுமானாலும் வேகமாக அடித்து ரன் குவிக்கலாம்.
என்று கபில்தேவ் கூறினார்.
- பாகிஸ்தானுக்கு எதிராக 3 முக்கிய விக்கெட்டுகளை ராசா கைப்பற்றினார்.
- ஜிம்பாப்வேயின் கடைசி 4 வெற்றிகளில் 3 ஆட்டநாயகன் விருதுகளை ராசா தட்டிச் சென்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 24-வது லீக் போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் பாகிஸ்தானை கத்துக்குட்டியாக கருதப்படும் ஜிம்பாப்வே வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாறு படைத்தது.
இந்த வெற்றியால் 2 போட்டிகளில் 3 புள்ளிகளை பெற்ற ஜிம்பாப்வே புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் 2 போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் நாக்-அவுட் செல்லும் வாய்ப்பையும் குறைத்துக் கொண்டுள்ளது.
ஜிம்பாப்வேயின் இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் 9 ரன்கள் எடுத்தாலும் பந்து வீச்சில் 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்த சிக்கந்தர் ராசா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். உலகக்கோப்பை போட்டியில் சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்கள் கலங்கி விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று போட்டியின் முடிவில் நெகிழ்ச்சியாக பேசினார். மேலும் இவர் பாகிஸ்தானில் பிறந்து இன்று அந்நாட்டுக்கு எதிராகவே சம்பவம் செய்து மிரட்டியுள்ளார்.
ஜிம்பாப்வேயின் கடைசி 4 வெற்றிகளில் 3 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் இந்த வருடம் மட்டும் டி20 கிரிக்கெட்டில் 7 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை தகர்த்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
1. சிக்கந்தர் ராசா : 7* (2022)
2. விராட் கோலி : 6 (2016)
3. சூர்யகுமார் யாதவ் : 5 (2022)*
4. முகமது ரிஸ்வான் : 5 (2021)
5. ஷேன் வாட்சன் : 5 (2012)
- இன்றைய 2 போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டது.
- இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.
20 ஓவர் உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதும் போட்டி மழை காரணமாக டாஸ் போடுவதற்கு முன்பு போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் அரை இறுதி வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும்.
இந்நிலையில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடக்கவிருந்த ஆஸ்திரேலியா-இங்கிலாந்து ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் ஒரு பந்து கூட வீசாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.
- நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் புவனேஸ்வர் குமார் 3 ஓவர் பந்து வீசி 9 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- புவனேஸ்வர் குமார் வெறும் 3.00 என்ற துல்லியமான எக்னாமியில் பந்து வீசி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. விராட் கோலியின் அபார ஆட்டத்தால் தோற்கடித்து கடந்த வருடம் துபாயில் சந்தித்த வரலாற்றுத் தோல்விக்கு பழி தீர்த்தது.
அக்டோபர் 27-ம் தேதியன்று 2வது போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொண்ட இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குரூப் 2 புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 179 ரன்கள் குவித்தது. அதை தொடர்ந்து 180 ரன்களை துரத்திய நெதர்லாந்து ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவரில் 123/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இந்தியா சார்பில் புவனேஸ்வர் குமார், அஸ்வின், அக்சர் படேல் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். பந்து வீச்சில் அற்புதமாக செயல்பட்ட புவனேஸ்வர் குமார் வெறும் 3.00 என்ற துல்லியமான எக்னாமியில் பந்து வீசி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
குறிப்பாக தன்னுடைய முதல் 2 ஓவர்களில் 1 ரன் கூட கொடுக்காமல் அடுத்தடுத்த மெய்டன் ஓவர்களாக வீசிய அவர் மொத்தமாக வீசிய 3 ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார்.
நேற்றைய போட்டியில் அவர் வீசிய 2 மெய்டன் ஓவர்களையும் சேர்த்து இந்த வருடம் 5 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய பவுலர் என்ற புதிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. புவனேஸ்வர் குமார் : 5* (2022)
2. ஜஸ்பிரித் பும்ரா : 4 (2014)
3. ரிச்சர்ட் ங்கரவா : 4 (2021)
அத்துடன் அனைத்து விதமான டி20 கிரிக்கெட்டையும் சேர்த்து அதிக மெய்டன் ஓவர்களை வீசிய இந்திய பவுலர் என்ற புதிய வரலாற்றையும் அவர் படைத்தார்.
அந்த பட்டியல்:
1. புவனேஸ்வர் குமார் : 20*
2. ஜஸ்பிரித் பும்ரா : 19
3. பிரவீன் குமார் : 19
4. ஹர்பஜன் சிங் : 13
5. இர்பான் பதான் : 13
மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே ஓவர்களில் 1000 பந்துகளை வீசிய முதல் இந்திய பவுலர் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஜஸ்ப்ரித் பும்ரா மட்டுமே அதுவும் 500+ பந்துகளை மட்டுமே வீசியுள்ளார்.
- ஆப்கானிஸ்தான்- அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது.
- ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
மெல்போர்ன்:
டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. ஆப்கானிஸ்தான்- அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது.
இந்நிலையில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி இந்திய நேரப்படி 1 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. தற்போது மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. மழை நின்ற பிறகு டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
- நடப்பு டி20 உலகக்கோப்பையில் விளையாடிய விராட் கோலி இரண்டு போட்டியில் மொத்தம் 144 ரன்கள் அடித்திருக்கிறார்.
- விராட் கோலி இன்னும் 11 ரன்கள் எடுத்தால் டி20 உலகக்கோப்பையில் 1000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.
சிட்னி :
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். நெதர்லாந்துக்கு எதிராக 62 ரன்கள் விளாசினார். தொடர்ந்து இரண்டு அரைசதம் மற்றும் ஒரு முறை கூட ஆட்டம் இழக்காமல் விராட் கோலி பட்டையை கிளப்பி வருகிறார்.
நடப்பு டி20 உலகக்கோப்பையில் விளையாடிய விராட் கோலி இரண்டு போட்டியில் மொத்தம் 144 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் விராட் கோலி புதிய சாதனையை படைத்திருக்கிறார். டி20 உலகக்கோப்பை வரலாற்றில் விராட் கோலி 23 போட்டிகளில் விளையாடி தற்போது 989 ரன்கள் விளாசி இருக்கிறார்.
இதன் மூலம் இந்த பட்டியலில் கிறிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளி விராட் கோலி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். விராட் கோலி இன்னும் 11 ரன்கள் எடுத்தால் டி20 உலகக்கோப்பையில் 1000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். மேலும் ஒட்டு மொத்தமாக டி20 உலகக்கோப்பையில் ஆயிரம் ரன்கள் எடுத்த 2 வீரர் என்ற சாதனையையும் அவர் படைப்பார். முதல் இடத்தில் இலங்கை வீரர் ஜெயவர்தனே உள்ளார். இன்னும் 27 ரன்கள் கூடுதலாக அடித்தால் டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தை பிடித்து விடுவார்.
இந்த பட்டியலில் மற்றொரு இந்திய வீரரான ரோகித் சர்மா 904 ரன்கள் அடித்து நான்காவது இடத்தில் இருக்கிறார். இந்த உலகக் கோப்பை முடிவில் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் டாப் 2 இடத்தை பிடிக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதேபோன்று டி20 உலகக்கோப்பையில் அதிக சராசரி வைத்திருக்கும் வீரர் பட்டியலில் விராட் கோலி 89.9 சராசரியை வைத்து முதலிடத்தில் இருக்கிறார்.
இரண்டாவது இடத்தில் 44.6 சராசரியுடன் பீட்டர்சனும், மூன்றாவது இடத்தில் 40.6 சராசரி உடன் டுமினியும், நான்காவது இடத்தில் 39.1 சராசரி உடன் ஜெயவர்த்தனைவும் , ரோகித் சர்மா 37.7 சராசரியுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.






