என் மலர்
விளையாட்டு
- ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்படும்
- தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் கடைசி வாரம் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என மோதும் வகையில் போட்டி அட்ட வணை அமைக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16-ந்தேதி பெங்களூருவில் நடைபெறும் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
போட்டியில் விளையாடும் 10 அணிகளும் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐ.பி.எல். உரிமையாளர்களிடம் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.
ஒவ்வொரு அணியும் வீரர்களுக்கு ஒதுக்கும் தொகை ரூ.90 கோடியில் இருந்து ரூ.95 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த முறையை விட ரூ.5 கோடி அதிகரிக்கப்பட்டு உள்ளது.
பெரும்பாலான ஐ.பி.எல். உரிமையாளர்கள் 15 முக்கிய வீரர்களை தக்கவைத்துக் கொண்டு எஞ்சிய வீரர்களை ஏலத்தில் விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஏலத்துக்கு பிறகு பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளிடம் முறையே ரூ.3.45 கோடி, ரூ.2.95 கோடி மீதமுள்ளன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி முழு பர்சையும் தீர்த்து விட்டது.
- முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது.
- ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் 180 ரன்களே சேர்த்தது
பிரிஸ்பேன்:
டி20 உலகக் கோப்பையில் நேரடியாக சூப்பர்12 சுற்றில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணி வருகிற 23-ந்தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக, இந்திய அணிக்கு இரண்டு பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ராகுல் 57 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 50 ரன்னும், கோலி 19 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் பின்ச் ஆகியோர் இறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்தனர். இதில் மிட்செல் மார்ஷ் 35 ரன்களுக்கு அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ஸ்மித் 11 ரன்னுக்கும், மேக்ஸ்வெல் 23 ரன்னுக்கும், ஸ்டோய்னிஸ் 7 ரன்னுக்கும் அவுட் ஆகினர். இதற்கிடையில் பின்ச் அரைசதம் அடித்தார். தொடர்ந்து ஆடிய அவர் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரில் ஒரு ரன் அவுட் உட்பட 4 விக்கெட்டுகள் வீழ்ந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஷமி 3 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல், சஹால் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணி 19-ம் தேதி தனது அடுத்த பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
- வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 161 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
- ஸ்காட்லாந்து அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ஹோபர்ட்:
டி20 உலகக் கோப்பை முதல் சுற்றின் 3-வது 'லீக்' ஆட்டம் ஹோபர்ட்டில் இன்று நடைபெற்றது. இதில் 'பி' பிரிவில் உள்ள 2 முறை சம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி, ஸ்காட்லாந்து அணியுடன் மோதியது. முதலில் ஆடிய ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சே 66 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக கைல் மேயர்ஸ், இவின் லீஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் மேயர்ஸ் 20 ரன்னுக்கும், இவின் லீவிஸ் 14 ரன்னுக்கும் அடுத்து வந்த பிரண்டன் கிங் 17 ரன்னுக்கும் ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து கேப்டன் பூரன், ஷார்மா புருக்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். ஸ்காட்லாந்து அணியினர் மிகச்சிறப்பாக பந்துவீசி வெஸ்ட் இண்டீஸ் அணியினருக்கு சிக்கல் கொடுத்தனர். பூரன் 4 ரன், புரூக்ஸ் 4 ரன், பவல் 5 ரன், அகைல் ஹோசன் 1 ரன், அல்ஜாரி ஜோசப் 0 ரன் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அதனால் அந்த அணி 79 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியில் அந்த அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 118 ரன்களே எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஸ்காட்லாந்து அணி தரப்பில் மார்க் வாட் 3 விக்கெட்டும், பிரெட் வீல், மைக்கேல் லீஸ்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜோஷ் டாவே, சப்யான் ஷரிப் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக் ஹோல்டர் 38 ரன்கள் எடுத்தார். இரண்டு முறை டி20 உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்து அணியிடம் வீழந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
- வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
- கடைசி வரை நின்று ஆடிய ஜார்ஜ் முன்சே 53 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார்
ஹோபர்ட்:
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதன் முதல் சுற்றில் 8 அணிகள் விளையாடி வருகின்றன. 'சூப்பர் 12' சுற்றில் 8 நாடுகள் நேரடியாக விளையாடும். முதல் சுற்றின் மூலம் 4 அணிகள் 'சூப்பர் 12' சுற்றுக்கு முன்னேறும்.
நேற்றைய தொடக்க ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள நமீபியா அணி 55 ரன் வித்தியாசத்தில் இலங்கையை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது. இதே பிரிவில் நடந்த 2-வது போட்டியில் நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை தோற்கடித்தது.
முதல் சுற்றின் 3-வது 'லீக்' ஆட்டம் ஹோபர்ட்டில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில் 'பி' பிரிவில் உள்ள 2 முறை சம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி, ஸ்காட்லாந்து அணியுடன் மோதியது.
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 'டாஸ்' வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய ஸ்காட்லாந்தின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. 5 ஓவரிலேயே அந்த அணி 50 ரன்னை தொட்டது. தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சே அதிரடியாக ஆடி ரன் குவித்தார். மற்றொரு தொடக்க வீரர் மைக்கேல் ஜோன்ஸ் 20 ரன்களில் வெளியேறினார்.
கேப்டன் ரிச்சி 16 ரன்கள், கேலம் மெக்லியாட் 23 ரன்கள் சேர்க்க, ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது. ஜார்ஜ் முன்சே 66 ரன்களுடனும், கிறிஸ் கிரீவ்ஸ் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்சாரி ஜோசப், ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.
- 7-வது ஓவரில் முதல் விக்கெட்டை பறிகொடுத்த அந்த அணிக்கு காஷிஃப் தாவூத், விர்தியா அரவிந்த் சற்று ஆறுதல் அளித்தது.
- ஐக்கிய அரபு அமீரக அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அணி திரில் வெற்றி பெற்றது.
8-வது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. தகுதிச் சுற்றுப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய முஹம்மது வசீம், சிராக் சுரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வசீம் அதிகபட்சமான 41 ரன்களையும், சுரி 12 ரன்களையும் குவித்தார்.
7-வது ஓவரில் முதல் விக்கெட்டை பறிகொடுத்த அந்த அணிக்கு காஷிஃப் தாவூத், விர்தியா அரவிந்த் சற்று ஆறுதல் அளித்தது.
குறிப்பாக 18-வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை சேர்ந்திருந்த ஐக்கிய அரபு அமீரகம், 19-வது ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே சேர்ந்ததது.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை மட்டுமே சேர்த்தது. நெதர்லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பாஸ் தி லீடே 3 விக்கெட்டுகளையும், ஃபிரட் க்ளாஸன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைதொடர்ந்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர் விக்ரம்ஜித் சிங் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் மேக்ஸ் 23 ரன்களில் ஆட்டமிழக்க நெதர்லாந்து அணி 41 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து வீரர்கள் பாஸ் தி லீடே (14 ரன்கள்) கோலின் அக்கர்மன் (17 ரன்கள்) டாம் கூப்பர் (8 ரன்கள்) அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர்.
இதனால் அந்த அணி 13.3 ஓவர்களில் 76 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்னர் கேப்டன் எட்வர்ட்ஸ்- டிம் பிரிங்கிள் இணைந்து அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு செல்ல, பிரிங்கிள் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அப்போது நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு 9 பந்துகளுக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. பின்னர் வான் பீக் களமிறங்கினார். அனல் பறந்த போட்டியின் இறுதி ஓவரில் நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட 1 பந்து மீதம் இருக்கையில் நெதர்லாந்து அணி 112 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரக அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அணி திரில் வெற்றி பெற்றது. நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 16 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- 20 ஓவர்கள் முடிவில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்தது.
- 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.
16 அணிகள் பங்கேற்கும் 8-வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி நவம்பர் 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.
16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.
டி20 உலக கோப்பையின் முதல் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் நமிபியா அணிகள் மோதின. இந்த போட்டியில் நமிபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் பிற்பகலில் தொடங்கிய முதல் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம்-நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் தொடக்க வீரராக களமிறங்கிய சிராக் சுரி 12 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான முகமது வாசீம் அதிரடியாக விளையாடி 41 ரன்கள் (2 சிக்சர்கள் 1 பவுண்டரி) எடுத்து அவுட்டானார்.
அடுத்ததாக களமிறங்கிய காசிப் தாவுத் 15 ரன்களும் விரித்யா அரவிந்த் 18 ரன்களும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.
- முதலில் விளையாடிய நமீபியா 163 ரன்கள் அடித்தது.
- இலங்கை அணி 108 ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
கீலாங்:
8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. முதல் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இலங்கை, நமிபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து களம் இறங்கி விளையாடிய நமீபியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் அடித்தது.
அதிகபட்சமாக அந்த அணி வீரர் பிரைலின்க் 28 பந்துகளில் 44 ரன்னும், ஜே.ஜே.ஸ்மித் அவுட் ஆகாமல் 16 பந்துகளில் 31 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணி, நமீபிய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் தொடக்க வீரர் நிசங்கா 9 ரன்னுக்கும், மெண்டீஸ் 6 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். தனன்யா டிசெல்வா 12 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். குணதிலகா டக்அவுட்டானார்.
அதிகபட்சமாக கேப்டன் தசுன் ஷனகா 29 ரன்னும், பானுகா ராஜபக்சே 20 ரன்னும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னுடன் பெவிலியன் திரும்பினர். இலங்கை அணி 19 ஓவர் முடிவில் 108 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 55 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியா அபார வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் டேவிட் வைஸ், பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ்,பென் ஷிகோங்கோ,ஜான் ப்ரைலின்க் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஸ்மித் ஒரு விக்கெட் எடுத்தார்.
- முதல் சுற்றில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
- முதல் போட்டியில் இலங்கை அணி, நமீபியாவை எதிர்கொள்கிறது
8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 16 அணிகள் இந்த போட்டிகளில் பங்கேற்கின்றன. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் 'ஏ' பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நமீபியா அணிகளும், 'பி' பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும்.
சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றுடன் முதல் சுற்றில் இருந்து வரும் 4 அணிகளும் இணையும். சூப்பர் 12 சுற்றில் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள அணிகள் தங்களுக்குள் ஒரு முறை மோத வேண்டும்.
இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் இன்று தொடங்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முதல் சுற்றில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் ஆட்டத்தில் இலங்கை அணி நமீபியாவை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி காலை 9.30 மணி இந்த போட்டி தொடங்குகிறது. இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து- ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- இலங்கையை வீழ்த்திய இந்தியா 7-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
- 7-வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
சில்ஹெட்:
8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களே சேர்த்தது. இந்தியா சார்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா 8.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்று 7-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது.
7-வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், ஆசிய கோப்பை வெற்றி குறித்து தீப்தி ஷர்மா கூறுகையில், அணியின் ஒட்டுமொத்த கூட்டு முயற்சியால் ஆசிய கோப்பையை வெல்ல முடிந்தது. தற்போதைய நிலையில் இந்தியா உலக கோப்பையை வெல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை என தெரிவித்தார்.
- இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 அணிகளின் கேப்டன்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
- அப்போது பேசிய ரோகித் சர்மா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு நாங்கள் சிறப்பாக தயாராகி உள்ளோம் என்றார்.
சிட்னி:
டி 20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் வரும் 23-ம் தேதி மோதுகிறது.
இந்நிலையில், 16 அணிகளின் கேப்டன்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். இதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு நாங்கள் சிறப்பாக தயாராகி விடுவோம். அப்போட்டியில் யார் விளையாட போகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
கடைசி நிமிடத்தில் யாரிடமாவது நீங்கள் விளையாடுகிறீர்கள் என்று சொல்வதை நான் விரும்பவில்லை. காயங்கள் விளையாட்டின் ஒரு பகுதி. அதை எதுவும் செய்ய முடியாது. நிறைய போட்டிகளில் விளையாடும் போது காயம் ஏற்படும்.
எங்களது கவனம் அணியை வலுப்படுத்துவதில் உள்ளது. அதனால்தான் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்குகிறோம். பும்ரா காயம் பற்றி நிபுணர்களிடம் பேசினோம். உலக கோப்பை போட்டி முக்கியம். ஆனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முக்கியமானது.
அவரை நாங்கள் தவறவிடுகிறோம். முகமது சமி கொரோனாவில் இருந்து மீண்டு வந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் கடினமாக உழைத்தார். அவர் நன்கு குணமடைந்துள்ளார்.
தற்போது அவர் பிரிஸ்பேனில் உள்ளார். அங்கு இந்திய அணி நாளை சென்றடையும். அவர் அணியுடன் பயிற்சி செய்வார். சூர்யகுமார் யாதவ் சிறந்த நிலையில் உள்ளார். அவர் அந்த பாணியிலேயே பேட்டிங் செய்வார் என்று நம்புகிறேன்.
அவர் நம்பிக்கை நிறைந்த வீரர். அவர் பயமின்றி விளையாடுகிறார். தனது திறமையை நன்றாக பயன்படுத்துகிறார். சூர்யகுமார் யாதவ் முக்கிய பங்காற்றுவார் என்று நம்புகிறேன்.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை சந்திக்கும்போது எங்களது குடும்பம் மற்றும் அனைவரையும் பற்றி பேசுவோம். நீங்கள் என்ன புதிய கார் வாங்கினீர்கள் என்று கேட்பேன்.
இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பான உறவு இருப்பதை நமது முந்தைய தலைமுறை நமக்கு கற்பித்துள்ளது என தெரிவித்தார்.
- முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் சேர்த்தது.
- தொடரின் சிறந்த வீராங்கனை விருது தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
சில்ஹெட்:
வங்காளதேசத்தில் பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிக ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் வியூகத்துடன் களமிறங்கிய இலங்கை, சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களே சேர்த்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 8.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. ஸ்மிருதி மந்தனா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 51 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் ஏழாவது முறையாக இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளது.
இன்றைய போட்டியின் சிறந்த வீராங்கனையாக ரேணுகா சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடரின் சிறந்த வீராங்கனை விருது தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
- டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
- இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார்.
சில்ஹெட்:
வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் 8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன. இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிக ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் வியூகத்துடன் களமிறங்கிய இலங்கை, சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

6 ரன்னில் அவுட் ஆனதும் மனமுடைந்து வெளியேறிய இலங்கை அணி கேப்டன் சமாரி அட்டப்பட்டு
இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களே சேர்த்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 ரன்கள் அடித்தார்.
இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.






