என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஜடேஜாவுக்கு காலில் ஏற்பட்ட காயத்தின் தன்மை பெரிதாக இருப்பதால், இன்னும் முழு உடற்தகுதியை பெறவில்லை.
    • டி20 கிரிக்கெட்டில் கலக்கி வரும் சூர்யகுமார் யாதவ், இன்னும் 50 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் சரிவர வாய்ப்புகளை பெறவில்லை.

    மும்பை:

    நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1 - 0 என கைப்பற்றி அசத்தியது. இதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரை முடித்துக்கொண்டு இந்திய அணி அடுத்ததாக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளன. இதற்கான அணி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், தற்போது பெரும் குழப்பம் உருவாகியுள்ளது.

    இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா, காலில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இதனால் டி20 உலகக்கோப்பையில் கூட ஆடவில்லை. அவர் இந்த வங்கதேச அணியுடனான தொடரில் தான் கம்பேக் கொடுப்பதாக அறிவிக்கப்படிருந்தது. முதன்மை ஸ்பின்னராக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் அந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    காலில் ஏற்பட்ட காயத்தின் தன்மை பெரிதாக இருப்பதால், இன்னும் முழு உடற்தகுதியை பெறவில்லை. அவர் பூரண குணமடைய அடுத்த வருடம் ஆகிவிடும் என்பதால் மாற்று வீரருக்கான தேடல் நடந்து வருகிறது. அதன்படி சூர்யகுமார் யாதவை மாற்று வீரராக உள்ளே கொண்டு வர பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

    டி20 கிரிக்கெட்டில் கலக்கி வரும் சூர்யகுமார் யாதவ், இன்னும் 50 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் சரிவர வாய்ப்புகளை பெறவில்லை. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமே ஆகவில்லை. இதனால் அவரை இந்த 50 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடரில் பயன்படுத்தி பார்க்க முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே அணியில் அஸ்வின், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோர் உள்ளதால் மாற்று ஸ்பின்னரை சேர்க்கவில்லை.

    • கோவாவில் யுவராஜ் சிங்கிற்கு சொந்தமான ஒரு சொகுசு வீடு உள்ளது.
    • கோவாவில் ஒருவர் விடுதி நடத்த வேண்டுமென்றால், அரசிடம் விண்ணப்பித்து, அதற்கான அனுமதி சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

    கோவா:

    இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் முக்கியமான வீரர்களில் இடதுகை ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கும் ஒருவர். உலகக்கோப்பை வென்ற அணிகளில் இடம்பிடித்தவர். நீண்ட நாட்களாக வாய்ப்பு பெறாமல் இருந்து வந்த யுவராஜ் சிங், கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் விலகினார்.

    கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பல்வேறு விளம்பர படங்களில் யுவராஜ் சிங் நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் பல தனியார் தொழில்களில் முதலீடு செய்து வருமானம் ஈட்டி வருகிறார்.

    இந்தியாவின் முக்கியமான சுற்றுலா தளமான கோவாவில் யுவராஜ் சிங்கிற்கு சொந்தமான ஒரு சொகுசு வீடு உள்ளது. இங்கு அவர் அடிக்கடி குடும்பத்தினருடன் சென்று நேரத்தை செலவிடுவார். அதனை தற்போது விடுதியாக மாற்றி சுற்றுலா பயணிகளுக்கு வாடைகைக்கு விடுகிறார். இதுகுறித்து நேற்று அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

    அதில், தனக்கு சொந்தமான காசா சிங் வீட்டில் பல்வேறு சுவாரஸ்ய நினைவுகள் உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களாகிய நீங்கள் அதையெல்லாம் பார்க்க வேண்டுமென்றால் உடனடியாக புக் செய்துக்கொள்ளலாம் என அறிவித்தார். யுவராஜின் இந்த நடவடிக்கை தான் கோவாவின் அரசு விதிமுறைகளுக்கு எதிரானவை ஆகும்.

    கோவாவில் ஒருவர் விடுதி நடத்த வேண்டுமென்றால், அரசிடம் விண்ணப்பித்து, அதற்கான அனுமதி சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். அதை எதையுமே செய்யாமல் யுவராஜ் சிங் இப்படி செய்துள்ளார். எனவே கோவாவின் சுற்றுலா துறை இயக்குநர் சார்பில் ராஜேஷ் காலே, வரும் டிசம்பர் 8ம் தேதி 11 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. அதுவரை அது விடுதியாகாது.

    ஒருவேளை அரசு அனுப்பிய கடிதத்திற்கு யுவராஜ் சிங் எந்தவொரு பதிலும் தரவில்லை என்றால், குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கருதி, அவருக்கு குறைந்தது ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • வெளியில் என்ன பேசிக்கொண்டாலும், அது அணியில் எங்களை பாதிக்கவே பாதிக்காது.
    • பயிற்சியாளருடன் இணைந்து யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்து தான் எடுக்கிறேன்.

    டி20 உலகக்கோப்பை தொடரை முடித்துக்கொண்டு நேரடியாக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1 - 0 என்ற புள்ளி கணக்கில் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது.

    இந்த தொடரில் இந்தியா வெற்றி கண்ட போதும், ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றங்கள் உள்ளன. இதற்கு காரணம் சஞ்சு சாம்சன் மற்றும் உம்ரான் மாலிக் தான்.

    எந்த ஆர்டரில் வேண்டுமானாலும் களமிறங்கி அதிரடி காட்டக்கூடிய சஞ்சுசாம்சனுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுவதே இல்லை. இதே போல இந்தியாவின் எதிர்காலமாக பார்க்கப்படும் உம்ரான் மாலிக்கிற்கும் வாய்ப்புகளே தரப்படவில்லை. சாம்சனுக்கு மாற்றாக விளையாடிய ரிஷப் பண்ட் சொதப்பிய போதும், வாய்ப்பு தரப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    இந்நிலையில் அவர்கள் குறித்து ஹர்திக் பாண்ட்யா விளக்கம் அளித்துள்ளார். அதில், வெளியில் என்ன பேசிக்கொண்டாலும், அது அணியில் எங்களை பாதிக்கவே பாதிக்காது. இது என்னுடைய அணி. பயிற்சியாளருடன் இணைந்து யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்து தான் எடுக்கிறேன். ஒவ்வொருவருக்கும் நேரம் வரும் போது, அவர்களுக்கான வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும்.

    இது ஒரு சிறிய தொடராகும். ஒருவேளை இது நிறைய போட்டிகள் கொண்ட தொடராக இருந்திருந்தால் நிச்சயம் அனைவரையும் பயன்படுத்தி பார்த்திருப்போம். 6 பவுலிங் ஆப்ஷன்களுடன் செல்ல வேண்டும் என முடிவெடுத்தேன். அதற்கு தீபக் ஹூடா சரியாக இருந்தார். ஒரு பேட்டர், நன்கு பந்துவீசவும் தெரிந்திருந்தால் எதிரணிகளுக்கு அதிர்ச்சி தர முடியும் என ஹர்திக் பாண்ட்யா விளக்கம் தந்துள்ளார்.

    • பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற பெருமையை சவுதி அரேபியா பெற்றது.
    • அனைத்து அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் இன்று விடுமுறையாகும்.

    ரியாத்:

    ஆசிய கண்டத்தில் உள்ள அரபு நாடான சவுதி அரேபியா உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டி னாவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது.

    பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற பெருமையை சவுதி அரேபியா பெற்றது. ஆசிய அணிகளின் 5-வது முயற்சியில் இது சாத்தியமாகி உள்ளது.

    36 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் வலம் வந்த அர்ஜென்டினாவின் வெற்றிக்கு சவுதி அரேபியா முட்டுக்கட்டை போட்டது. தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவை 51-வது வரிசையில் உள்ள சவுதி அரேபியா வீழ்த்தியது யாருமே எதிர்பார்க்காத ஒன்றாகும்.

    6-வது முறையாக உலக கோப்பையில் ஆடும் சவுதி அரேபியாவுக்கு கிடைத்த 4-வது வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு 1994-ல் மொராக் கோவை 2-1 என்ற கணக்கிலும், பெல்ஜியத்தை 1-0 என்ற கணக்கிலும், கடந்த உலக கோப்பை யில் எகிப்தை 2-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தி இருந்தது.

    அர்ஜென்டினாவை வீழ்த்திய மகிழ்ச்சியை சவுதி அரேபிய மக்கள் கொண்டாடினார்கள். நாடு முழுவதும் வெற்றி கொண்டாட்டம் இருந்தது. தலைநகர் ரியாத் முழுவதும் ரசிகர்கள் வெற்றியை கொண்டாடினார்கள்.


    நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கார்களில் சென்றவர்கள் கதவுகளை திறந்து சவுதி அரேபியா கொடியை பறக்க விட்டு உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அர்ஜென்டினாவுக்கு எதிராக பெற்ற இந்த வெற்றி காரணமாக சவுதி அரேபியாவுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. சவுதி அரேபிய மன்னர் சல்மான் இதை நேற்று தெரிவித்தார்.

    அனைத்து அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் இன்று விடுமுறையாகும். மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இறுதி தேர்வு நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில் பள்ளிகள் இன்று மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. வேறு தேதியில் பள்ளி தேர்வு நடத்தப்படுகிறது.

    மேலும் பொதுபோக்கு மையங்களுக்கும் நேற்று நுழைவு கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டது.

    • பலருக்கு நான் இந்த அணியில் இருப்பது பிடிக்கவில்லை.
    • மேலாளர் எரிக் எனக்கு உரிய மரியாதையை வழங்குவதில்லை. எனவே, அவருக்கு மரியாதை தர நானும் விரும்பவில்லை.

    போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தாட்ட உலகில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. இவர் கிளப் போட்டிகளில் கடந்த 2003-ம் ஆண்டு, முதல் முறையாக மான்செஸ்டர் யுனைட்டெட் அணியில் விளையாடினார்.

    பின்னர் 2009 ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட் ரொனால்டோ , 2018-ம் ஆண்டு யுவெண்டஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். மூன்று ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடிய அவர், கடந்த ஆண்டு மான்செஸ்டர் அணியில் இணைந்தார்.

    தற்போது அணியின் பயிற்சியாளருக்கும் ரொனால்டோவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ, தலைமை பயிற்சியாளர் எரிக் டென் குறித்தும், அணியில் தனக்கு செய்யப்பட்ட துரோகம் குறித்தும், ரூனி குறித்தும் வெளிப்படையாக பேசி இருந்தார்.

    அதுதொடர்பாக பேட்டியளித்த "அவர் ஏன் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார் என எனக்கு தெரியவில்லை. மேலாளர் எரிக் எனக்கு உரிய மரியாதையை வழங்குவதில்லை. எனவே, அவருக்கு மரியாதை தர நானும் விரும்பவில்லை. பலருக்கு நான் இந்த அணியில் இருப்பது பிடிக்கவில்லை.

    இவ்வாறு மனவருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் பேட்டிக்கு பிறகு ரொனால்டோவை உடனடியாக மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அணியின் மேலாளர் டெடி ஷெரிங்ஹாம் தெரிவித்தார். அதன்படி, தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேறியுள்ளார். இதனை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

    பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப்பை விட்டு வெளியேறுவார் என்று மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அறிவித்துள்ளது. மான்செஸ்டர் அனிக்காக விளையாடிய ரொனால்டோவுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அணி குறிப்பிட்டுள்ளது.

    • 32 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது.
    • சவுதி அரேபியா நல்ல வீரர்களை கொண்ட அணி என்பதை நாங்கள் அறிவோம்.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் யாருமே எதிர் பார்க்காத வகையில் அர்ஜென்டினா அணி 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

    ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்சி பெனால்டி மூலம் கோல் அடித்தார். சவுதி அரேபியா தரப்பில் 48-வது நிமிடத்தில் சலோ அல்ஷெகரியும், 53-வது நிமிடத்தில் சலீம் அல்வாஸ்ரியும் கோல் அடித்தனர்.

    அர்ஜென்டினா அதிர்ச்சிகரமாக தோற்றாலும் அந்த அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அணி அடித்த 3 கோல்கள் ஆப்சைடாக அறிவிக்கப்பட்டது. மேலும் அர்ஜென்டினா வீரர்கள் அடித்த பல ஷாட்களை சவுதி அரேபியா கோல் கீப்பர் தடுத்து அதிர்ச்சி கொடுத்தார்.

    32 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது. இதற்கு முன்பு இத்தாலியில் 1990-ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் அந்த அணி ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கேமரூனிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்று இருந்தது. தற்போது ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியாவிடம் தொடக்க ஆட்டத்தில் வீழ்ந்துள்ளது.

    இந்த தோல்வியால் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி மிகுந்த வருத்தம் அடைந்தார். தோல்விக்கு பிறகு அர்ஜென்டினா கேப்டனான அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சவுதி அரேபியாவுக்கு எதிரான தோல்வி எங்களுக்கு மிகப்பெரிய அடியாகும். இந்த தோல்வியால் மனது வலிக்கிறது. 2-வது பாதி ஆட்டத்தில் 5 நிமிடங்கள் செய்த தவறு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. 1-2 என்ற கோல் கணக்கில் பின் தங்கிய பிறகு அதில் இருந்து மீள்வது கடினமாகி விட்டது.

    சவுதி அரேபியா நல்ல வீரர்களை கொண்ட அணி என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் பந்தை நன்றாக நகர்த்தி செல்கிறார்கள். இந்த தோல்வியை நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.

    நாங்கள் கடினமாக போராடினோம். அதே நேரத்தில் தோல்விக்கு சாக்குகள் எதுவும் கூற விரும்பவில்லை. நாங்கள் முன்பை விட ஒருங்கிணைந்து விளையாட இருக்கிறோம். இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவோம். மெக்சிகோவை வீழ்த்த முயற்சிப்போம்.

    இவ்வாறு மெஸ்சி கூறியுள்ளார்.

    இந்த தோல்வியால் அர்ஜென்டினாவுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதல் சுற்றிலேயே வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    அர்ஜென்டினா எஞ்சிய ஆட்டங்களில் மெக்சிகோ, போலந்துடன் மோத வேண்டி உள்ளது. இந்த இரண்டு ஆட்டத்திலும் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தோற்றால் 'நாக் அவுட்' சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி விடும்.

    • முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
    • ஆட்ட முடிவில் சவுதி அரேபியா 2-1 என வெற்றி பெற்றது.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வீழ்த்தி அசத்தியது.

    முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் சவுதி அரேபியா வீரர்களின் அசத்தலான ஆட்டத்தால் அந்த அணி 2-1 என வெற்றி பெற்றது.

    சவுதி அரேபிய அணியின் வெற்றியை ஒட்டுமொத்த அரேபிய நாடுகளும் கொண்டாடி வருகின்றன.

    இந்நிலையில், சவுதி அரேபியா வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுதும் இன்று ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.

    • 4வது லீக் ஆட்டத்தில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
    • முதல் பாதியில் பிரான்ஸ் 2-1 என முன்னிலை பெற்றது.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று அதிகாலை 12.30 மணிக்கு நடந்த குரூப் டி பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் 9வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் கிரெய்க் குட்வின் முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக பிரான்ஸ் வீரர் ஆட்ரியன் ரேபியாட் 27-வது நிமிடத்திலும், ஆலிவர் கிரௌட் 32-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் பிரான்ஸ் 2-1 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதியின் 68-வது நிமிடத்தில் கைலியன் மாப்பே ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் ஆலிவர் கிளெய்ட் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

    இறுதியில், பிரான்ஸ் அனி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    • இன்று நடந்த 3வது லீக் ஆட்டத்தில் மெக்சிகோ, போலந்து அணிகள் மோதின.
    • ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் டிராவில் முடிந்தது

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் சி பிரிவு லீக் ஆட்டத்தில் மெக்சிகோ, போலந்து அணிகள் மோதின.

    ஆரம்பம் முதல் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடின. ஆனால் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்தது. இதையடுத்து நடந்த 2-வது பாதியிலும் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை.

    கூடுதலாக வழங்கப்பட்ட 10 நிமிடத்திலும் கோல் அடிக்கவில்லை. ஆட்டநேர முடிவில் 0-0 என சமநிலையில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டன.

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • 2வது பாதியிலும் இரு அணிகளால் கோல் அடிக்க முடியவில்லை.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் டென்மார்க் - துனிசியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக போராடினர்.

    முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனை தொடர்ந்து நடந்த 2வது பாதி ஆட்டத்திலும் கோல் எதுவும் அடிக்கப்படாதால், ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

    • முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
    • அர்ஜென்டினாவுக்காக 4 உலக கோப்பை தொடரிலும் கோல் அடித்து மெஸ்ஸி சாதனை.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணிக்கு  10 வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்தி அந்த அணி கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.

    எனினும் 2வது பாதியில் சவுதி அரேபிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 48 வது நிமிடத்தில் அந்த அணி வீரர் சலே அல் ஷெஹ்ரியும், 53 நிமிடத்தில் சலம் அல் தவ்சாரியும் அடுத்தடுத்து தங்கள் அணிக்காக கோல் அடித்தனர். இதை முறியடிக்க முயன்ற அர்ஜென்டினா வீரர்களின் முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து 2-1 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த உலக கோப்பையில் முதலாவது கோலை பதிவு செய்ததன் மூலம் அந்த அர்ஜென்டினா அணிக்காக 4 உலக கோப்பை தொடர்களில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.

    • ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் 12 அணிகளில் குரூப் 12-ல் போட்டியிட்டன
    • இரண்டு குரூப்பின் முதல் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. இதில் 8 அணிகள் நேரடியாக குரூப் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. மீதமுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் இருந்து இரண்டு அணிகள் குரூப் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன.

    அதன்பின் குரூப் 12-ல் உள்ள அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இரண்டு பிரிவுகளிலும் தலா முதல் இரண்டு இடங்களை பிடித்த அணி அரையிறுதிக்கு முன்னேறின. அதன் பிறகு இறுதிப் போட்டி.

    2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் எவ்வாறு நடத்தப்படும் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளன.

    அதன் விவரம் வருமாறு:-

    1. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன.

    2. 20 அணிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படும்.

    3. ஒவ்வொரு பிரிவுகளிலும் ஒரு அணி மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    4. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் தலா இரண்டு அணிகள் சூப்பர் 8 குரூப்பிற்கு முன்னேறும்.

    8. சூப்பர் 8 குரூப்பிற்கு தகுதிப் பெற்ற 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும்.

    9. ஒவ்வொரு பிரிவிலும் இடம் பிடித்துள்ள அணிகள் அதே பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

    10. இரண்டு பிரிவிலும் தலா முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    11. அதன்பின் இறுதிப் போட்டி.

    தற்போது 12 அணிகள் நேரடியாக தகுதிப் பெற்றுள்ளன. மீதமுள்ள 8 அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடி முன்னேறும்.

    டி20 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.

    ×