என் மலர்
நீங்கள் தேடியது "சவுதி அரேபியா அணி"
- பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற பெருமையை சவுதி அரேபியா பெற்றது.
- அனைத்து அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் இன்று விடுமுறையாகும்.
ரியாத்:
ஆசிய கண்டத்தில் உள்ள அரபு நாடான சவுதி அரேபியா உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டி னாவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது.
பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற பெருமையை சவுதி அரேபியா பெற்றது. ஆசிய அணிகளின் 5-வது முயற்சியில் இது சாத்தியமாகி உள்ளது.
36 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் வலம் வந்த அர்ஜென்டினாவின் வெற்றிக்கு சவுதி அரேபியா முட்டுக்கட்டை போட்டது. தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவை 51-வது வரிசையில் உள்ள சவுதி அரேபியா வீழ்த்தியது யாருமே எதிர்பார்க்காத ஒன்றாகும்.
6-வது முறையாக உலக கோப்பையில் ஆடும் சவுதி அரேபியாவுக்கு கிடைத்த 4-வது வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு 1994-ல் மொராக் கோவை 2-1 என்ற கணக்கிலும், பெல்ஜியத்தை 1-0 என்ற கணக்கிலும், கடந்த உலக கோப்பை யில் எகிப்தை 2-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தி இருந்தது.
அர்ஜென்டினாவை வீழ்த்திய மகிழ்ச்சியை சவுதி அரேபிய மக்கள் கொண்டாடினார்கள். நாடு முழுவதும் வெற்றி கொண்டாட்டம் இருந்தது. தலைநகர் ரியாத் முழுவதும் ரசிகர்கள் வெற்றியை கொண்டாடினார்கள்.

நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கார்களில் சென்றவர்கள் கதவுகளை திறந்து சவுதி அரேபியா கொடியை பறக்க விட்டு உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அர்ஜென்டினாவுக்கு எதிராக பெற்ற இந்த வெற்றி காரணமாக சவுதி அரேபியாவுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. சவுதி அரேபிய மன்னர் சல்மான் இதை நேற்று தெரிவித்தார்.
அனைத்து அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் இன்று விடுமுறையாகும். மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இறுதி தேர்வு நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில் பள்ளிகள் இன்று மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. வேறு தேதியில் பள்ளி தேர்வு நடத்தப்படுகிறது.
மேலும் பொதுபோக்கு மையங்களுக்கும் நேற்று நுழைவு கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டது.






