என் மலர்
விளையாட்டு
- கிறிஸ்டினா ரொனால்டோ மான்செஸ்டரில் இருந்து விலகியுள்ளார்
- தன்னை சவுதி அரேபியா லீக்கில் விளையாட கேட்டுக் கொண்டதாக ரொனால்டோ தகவல்
உலகின் தலைசிறந்த, இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படுபவர் கிறிஸ்டியானா ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர் மான்செஸ்டர் யுனைடெட், ரியால் மாட்ரிட் கிளப் அணிகளுக்கான பல வருடங்கள் விளையாடி பல்வேறு சாதனைப் படைத்துள்ளார்.
ரியல் மாட்ரிட் கிளப்பில் இருந்து விலகி, யுவென்டஸ் கிளப்பிற்கு சென்றார். பின்னர், மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பினார். ஒரு சீசன் கூட முழுமையாக விளையாடாத நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மான்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து விலகியுள்ளார்.
டிரான்ஸ்பர் ஃபீஸ் இல்லாமல் வேறு கிளப்பிற்கு செல்ல இருப்பதால் அவரை ஒப்பந்தம் செய்ய பல்வேறு கிளப்புகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இதற்கிடையே மான்செஸ்டர் யுனைடெட் உடனான பிரச்சினை குறித்து பேசும்போது ரொனால்டோ, ''சவுதி அரேபியா கிளப் ஒன்று 360 மில்லியன் டாலரில் இரண்டு வருட ஒப்பந்தத்திற்கான தன்னை அணுகியது. எனினும், தான் அதை மறுத்துவிட்டார்'' என்ற செய்தி வெளியானது.
இதுகுறித்து சவுதி அரேபியாவின் விளையாட்டுத்துறை மந்திரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விளையாட்டு மந்திரி இளவரசர் அல் பைசல் ''ரொனால்டாவை அணுகியது குறித்து தனக்கு ஏதும் தெரியாது. இதுதான் எனது நேரடி பதில். நீங்கள் எவ்வாறு இந்த செய்தியை தெரிந்தீர்களோ? அதேபோல்தான் நானும் அறிந்து கொண்டேன். அவருடைய எதிர்கால திட்டம் என்ன? என்பது எனக்குத் தெரியாது.
சவுதி அரேபியா கிளப்பில் ரொனால்டா விளையாடுவதை பார்க்க விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு, ஏன் இல்லை? எங்களிடம் வலுவான லீக் உள்ளது. ஒவ்வொரு அணியும் தலா ஏழு வெளிநாட்டு வீரர்களை பெற்றுள்ளது. அதை அதிகப்படுத்த பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆசியாவில் எங்கள் அணி டாப் லெவலில் விளையாடுகிறது. சவுதியில் கால்பந்து வலிமையாக உள்ளது. ஆகவே, ஏன் அவர் விளையாடுவதை விரும்பக் கூடாது? என்றார்.
தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் சவுதி அரேபியா அர்ஜென்டினாவை 2-1 என வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.
- தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தாரா என்ற ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
- தினேஷ் கார்த்திக் இதுவரை இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ஃபினிஷராக விளையாடியவர் தினேஷ் கார்த்திக். 2022 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதன் காரணமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை மீண்டும் பெற்றார். அதுவும் டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக இவர் பார்க்கப்பட்டார். இதன் காரணமாகவே டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.
டி20 உலகக்கோப்பைத் தொடர் முடிவடைந்த பின்னர் தினேஷ் கார்த்திற்கு இந்திய அணியின் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சியாளர்கள், சக வீரர்கள், நண்பர்களுக்கு நன்றி கூறி டோனியை போலவே வீடியோ ஒன்றை தினேஷ் கார்த்திக் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற இலக்கை நோக்கி மிகக் கடுமையாக உழைத்தேன். அப்படி செய்வது பெருமையான உணர்வை தந்துள்ளது. எங்களது முயற்சியில் நாங்கள் கடைசி கட்டத்தில் வீழ்ந்தோம். ஆனாலும் அது என் வாழ்நாளில் மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தாரா என்ற ரசிகர்கள் குழம்பியுள்ளனர். சில நாட்களுக்கு முன் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக செயல்பட உள்ளதாக ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. தினேஷ் கார்த்திக் இதுவரை இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- லூகாசுக்கு முழங்காலில் தசைநார் கிழிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
- நாங்கள் முக்கியமான வீரரை இழந்து இருக்கிறோம் என பயிற்சியாளர் கூறினார்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 9-வது நிமிடத்தில் மேத்யூ லெக்கியிடம் இருந்து பந்தை தன்வசப்படுத்த முயற்சித்த பிரான்ஸ் அணியின் முன்னணி பின்கள வீரர் லூகாஸ் ஹெர்னாண்டஸ் வலது முழங்காலில் காயம் அடைந்து வெளியேறினார். அவரை அணியின் மருத்துவ உதவியாளர்கள் கைத்தாங்கலாக வெளியே அழைத்து சென்றனர். அவருக்கு பதிலாக மாற்று ஆட்டக்காரராக அவரது சகோதரர் தியோ ஹெர்னாண்டஸ் களம் இறங்கினார்.
இந்த நிலையில் லுகாஸ் ஹெர்னாண்டஸ்சின் காயத்தை பரிசோதனை செய்ததில் அவருக்கு முழங்காலில் தசைநார் கிழிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் உலக கோப்பை போட்டி தொடரில் இருந்து விலகி இருக்கிறார். ஏற்கனவே காயம் காரணமாக கரீன் பென்ஜிமா, என்கோலோ கான்டே, கிறிஸ்டோபர் என்குங்கு ஆகியோர் ஒதுங்கிய நிலையில் லுகாஸ் ஹெர்னாண்டஸ்சும் வெளியேறி இருப்பது பிரான்ஸ் அணிக்கு பின்னடைவாகும்.
இது குறித்து பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் கூறுகையில் 'அணியின் சக வீரர்களை போல் நானும் லூகாசுக்காக வருந்துகிறேன். நாங்கள் முக்கியமான வீரரை இழந்து இருக்கிறோம். லூகாஸ் போர்வீரர் போன்றவர். காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு வர அவர் எல்லாவற்றையும் செய்வார் என்பதில் சந்தேகமில்லை' என்றார்.
- இன்று அதிகாலை நடந்த லீக் ஆட்டத்தில் பெல்ஜியம், கனடா அணிகள் மோதின.
- இதில் பெல்ஜியம் கனடாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று அதிகாலை நடைபெற்ற குரூப் எப் பிரிவு லீக் ஆட்டத்தில் பெல்ஜியம், கனடா அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே பெல்ஜியம் வீரர்கள் பொறுப்புடன் ஆடினர். ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் மிக்கி பட்ஷியாய் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் பெல்ஜியம் 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் முடிவில், பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
- இந்திய அணியில் குல்தீப் சென் மற்றும் ஆல்-ரவுண்டர் ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளனர்.
- ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஜடேஜா மற்றும் யாஷ் தயாள் விலகியுள்ளனர்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டி20 தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.
நியூசிலாந்து தொடர் முடிந்த பிறகு இந்திய அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது. 2-வது ஒருநாள் போட்டி 7-ம் தேதியும், கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 10-ம் தேதியும் நடைபெறுகிறது. இதையடுத்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது.
இதற்கிடையே, வங்காளதேச அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ கடந்த மாதம் அறிவித்தது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, யாஷ் தயாள் உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஜடேஜா மற்றும் யாஷ் தயாள் விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக குல்தீப் சென் மற்றும் ஆல்-ரவுண்டர் ஷபாஸ் அகமது ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வங்காளதேச தொடருக்கான இந்திய ஒருநாள் அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் அய்யர், ராகுல் திரிபாதி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, அக்சர் படேல் , வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென்.
வங்காளதேச தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், கே.எஸ்.பாரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ்.
- இன்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் ஸ்பெயின், கோஸ்டா ரிகா அணிகள் மோதின.
- ஸ்பெயின் அதிரடி ஆட்டத்தால் 7-0 என அபார வெற்றி பெற்றது.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் இ பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்பெயின், கோஸ்டா ரிகா அணிகள் மோதின.
ஆரம்பம் முதல் ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் டேனி ஆல்மோ ஒரு கோலும், 21வது நிமிடத்தில் மார்கோ அசன்சியோ ஒரு கோலும், 31வது நிமிடத்தில் பெரா டாரஸ் ஒரு கோலும் அடித்தனர். இதனால் முதல் பாதி ஆட்டம் 3-0 என ஸ்பெயின் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியின் 54 வது நிமிடத்தில் ஸ்பெயினின் பெரா டாரஸ் மீண்டும் ஒரு கோல் அடித்தார். 74வது நிமிடத்தில் காவியும், 90வது நிமிடத்தில் கார்லோஸ் சோலர் ஒரு கோலும், 92வதுநிமிடத்தில் அல்வாரோ மொராட்டா ஒரு கோலும் அடித்தனர்.
கோஸ்டா ரிகா அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் 7-0 என அபார வெற்றி பெற்றது.
- தண்டனையுடன் அவருக்கு 5 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
- கருணாரத்னே சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் கேள்வி
இலங்கை கிரிக்கெட் வீரர் சமிகா கருணாரத்னே (வயது 26) அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒரு ஆண்டு தடை விதித்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் வீரர்களுக்கான ஒப்பந்தத்தின் பல விதிமுறைகளை மீறியதற்காக, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணைக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அவர் எந்த விதிமுறைகளை மீறினார் என்பது குறித்த தகவலை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிடவில்லை. ஆனால் சமிகா கருணாரத்னே தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் தண்டனையுடன் அவருக்கு 5 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இது தற்காலிக தடை என்பதால், கருணாரத்னே சர்வதேச அளவில் விளையாட அனுமதிக்கப்படுகிறார். ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடக்கவிருக்கும் உள்நாட்டு தொடருக்கான இலங்கையின் ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்படுவார். கருணாரத்னே சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் கேள்வி எழுப்பியிருந்தார். எனவே, அவரது ஒப்புதலுக்குப் பிறகு இலங்கை அணி அறிவிக்கப்படும்.
- முதல் பாதி ஆட்டத்தில் பெரும்பாலான நேரத்தில் ஜெர்மனி பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
- இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது போட்டி ஜப்பானுக்கு சாதகமாக திரும்பியது.
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப்-இ பிரிவில் உள்ள ஜெர்மனி, ஜப்பான் அணிகள் விளையாடின. நான்கு முறை உலகக் கோப்பையை கைப்பற்றி வலுவான அணியாக வலம் வரும் ஜெர்மனி அணி, இன்றைய ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தியது. 33வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இந்த கோலை இல்கே குண்டோகன் பதிவு செய்தார்.
முதல் பாதி ஆட்டத்தில் பெரும்பாலான நேரத்தில் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜெர்மனி வீரர்கள், இரண்டாவது பாதியிலும் ஜப்பானை முன்னேற விடாமல் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்டம் ஜெர்மனிக்கே சாதகமாக இருந்தது. ஆனால் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது போட்டி ஜப்பானுக்கு சாதகமாக திரும்பியது.
75வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ரிட்சு டோன் கோல் அடித்து 1-1 என சமன் செய்தார். அதன்பின் 83வது நிமிடத்தில் டகுமா அசோனோ கோல் அடிக்க ஜப்பான் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி ஆனது. எனினும், சமன் செய்யும் முயற்சியில் ஜெர்மனி வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடினர். கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் ஜப்பான் அணி 2-1 என வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
- இரு தரப்பிலும் தீவிரமான தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
- சமனில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-எப் பிரிவில் உள்ள மொராக்கோ, குரோசிய அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் இரண்டாவது பாதி ஆட்டத்தில் எந்த அணி முதலில் கோல் அடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டது.
இரு தரப்பிலும் தீவிரமான தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம் கோல் வாய்ப்புகளை தொடர்ந்து தவறவிட்டதால் கடைசிவரை கோல் அடிக்கப்படவில்லை. எனவே, கோல் இன்றி போட்டி சமனில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
- டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்களில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே உள்ளார்.
- 3-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. கடந்த 2 ஆம் தேதி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக முதல் இடத்திற்கு முன்னேறி இருந்த சூர்யகுமார் யாதவ் (890 புள்ளிகள்) தற்போது அதை தக்கவைத்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அதிரடி சதம் விளாசி இருந்த சூர்யகுமார் 31 புள்ளிகள் கூடுதலாக பெற்று 890 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 836 புள்ளிகளுடன் இந்த பட்டியலில் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறார்.
அதே நேரத்தில் 3-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நியூசிலாந்தின் டெவோன் கான்வே 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்களில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே உள்ளார்.
இந்த பட்டியலில் கோலி 13-வது இடத்திலும், லோகேஷ் ராகுல் 19-வது இடத்திலும், ரோகித் சர்மா 21-வது இடத்திலும், இஷான் கிஷன் 33-வது இடத்திலும் ஹர்திக் பாண்டியா 50-வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் புவனேஸ்வர் குமார் 11-வது இடத்திற்கும், அர்ஷ்தீப் 21-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.
இந்த பட்டியலில் இலங்கை வீரர் ஹசரங்கா முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) மற்றும் அடில் ரசித் (இங்கிலாந்து) உள்ளனர்.
ஐசிசி டி20ஐ பேட்டிங் தரவரிசை (நவம்பர் 23, 2022 நிலவரப்படி)
சூர்யகுமார் யாதவ் - 890 புள்ளிகள் முகமது ரிஸ்வான் - 836 புள்ளிகள் டெவோன் கான்வே - 788 புள்ளிகள் பாபர் ஆசம் - 778 புள்ளிகள் ஐடன் மார்க்ரம் - 748 புள்ளிகள் டேவிட் மாலன் - 719 புள்ளிகள் கிளென் பிலிப்ஸ் - 699 புள்ளிகள் ரெய்லி ரூஸோ- 693 புள்ளிகள் ஆரோன் பின்ச் - 680 புள்ளிகள் பதும் நிசாங்கா- 673 புள்ளிகள்
- கொச்சியில் டிசம்பர் 23-ந்தேதி மினி ஏலம் நடைபெறும் என பி.சி.சி.ஐ. அறிவிப்பு
- கிறிஸ்துமஸ் விழாவிற்கு இரண்டு நாள் முன்னதாக இருப்பதால் அணிகள் கோரிக்கை
ஐ.பி.எல். 2023 சீசனுக்கு மினி ஏலம் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த 15-ந்தேதிக்குள் விடுவிக்கப்படும், தக்கவைத்துக் கொள்ளப்படும் வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதன்படி 10 அணிகளும் பட்டியலை வழங்கிவிட்டன. பெரும்பாலான அணிகள் வெளிநாட்டு ஸ்டாஃப்களை கொண்டுள்ளன. அவர்கள் மினி ஏலத்தில் கலந்து கொள்வார்கள். டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை. அதற்கு இரண்டு நாள் முன்னதாக ஏலம் நடைபெற இருப்பதால் அவர்கள் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும்.
இதனால் பெரும்பாலான அணி நிர்வாகம், மினி ஏலத்திற்கான தேதியை மாற்றம் செய்யும்படி பி.சி.சி.ஐ.யிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், பி.சி.சி.ஐ. இதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் இன்னும் 42.25 கோடி ரூபாய், பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 32.20 கோடி ரூபாய், லக்னோவிடம் 23.35 கோடி ரூபாய், மும்பையிடம் 20.55 கோடி ரூபாய், சென்னையிடம் 20.45 கோடி ரூபாய், டெல்லியிடம் 19.45 கோடி ரூபாய், குஜராத்திடம் 19.25 கோடி ரூபாய், ராஜஸ்தானிடம் 13.20 கோடி ரூபாய், பெங்களூரிடம் 8.75 கோடி ரூபாய், கொல்கத்தாவிடம் 7.05 கோடி ரூபாயும் உள்ளது.
மெகா ஐ.பி.எல். ஏலம் இரண்டு நாட்கள் நடைபெறும். மினி ஏலம் ஒருநாள் நடைபெறும்.
- பவர் ப்ளே தான் ஆட்டத்தை தீர்மானிக்கிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மையாக உள்ளது.
- டி20 கிரிக்கெட் என வரும்போது, வெற்றி தோல்விகள் மிகவும் சிறிய ரன் வித்தியாசத்தில் தான் இருக்கும்.
சென்னை:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்து 2 வாரங்கள் ஆகிவிட்டது. எனினும் இந்தியா மீதான விமர்சனங்கள் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை. இந்திய அணியில் ரோகித் சர்மாவின் கேப்டன்சியை மாற்ற வேண்டும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை மாற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்று ஆடிய ரவிச்சந்திரன் அஸ்வினே தற்போது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியதாவது:-
டி20 கிரிக்கெட் என வரும்போது, வெற்றி தோல்விகள் மிகவும் சிறிய ரன் வித்தியாசத்தில் தான் இருக்கும். ஒரே ஒரு பந்தில் தோற்கலாம் அல்லது ஒரே ஒரு பந்தில் வெற்றி பெறலாம். இதனை விட முக்கியமான ஒன்று பவர் ப்ளே.
நிறைய போட்டிகளின் முடிவு பவர் ப்ளேவிலேயே தெரிந்துவிடும். ஒரு அணி பவர் ப்ளேவின் முடிவில் 30 ரன்கள் அடித்து, எதிரணி 60 ரன்களை அடித்தால் அங்கேயே ஆட்டம் முடிந்தது. ஆனால் பவர் ப்ளே தான் ஆட்டத்தை தீர்மானிக்கிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மையாக உள்ளது. பரிசோதனை செய்து பார்ப்பதற்கு டி20 கிரிக்கெட்டில் நிறைய இடங்கள் உள்ளன. ஆனால் முக்கியமான போட்டிகளில் நம் பலத்தை அறிந்து முழுமையாக அதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவை அனைத்துமே இந்திய ஓப்பனர்கள் ரோகித் - கே.எல்.ராகுலை குறிக்கின்றன. இந்த தொடரின் பவர் ப்ளேவின் மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டுடன் இருந்த 4வது அணி இந்தியா ஆகும் (95.85 ). 9 பந்துகளுக்கு ஒரு பவுண்டரி தான் சென்றுள்ளது. அதாவது ரோகித் , கே.எல்.ராகுல் ஆகியோர் ஒரு பந்திற்கு ஒரு ரன்னிற்கும் குறைவாக அடித்துள்ளனர்.
ரோகித் - கே.எல்.ராகுல் ஜோடி மொத்தமாக 6 போட்டிகளில் 88 ரன்களை மட்டுமே அடித்தனர். அவர்களின் சராசரி பார்ட்னர்ஷிப் 14.66 ரன்கள் மட்டுமே ஆகும். அரையிறுதியில் இந்தியா 38/ 1 என இருக்க, இங்கிலாந்து அணி 66/1 என வலுவான நிலையில் இருந்தது. இதனை தான் அஸ்வின் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.






