என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நியூசிலாந்துடனான டி20 தொடரை 1-0 என இந்தியா கைப்பற்றியது.
    • இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது.

    ஆக்லாந்து:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் ஆக்லாந்தில் இன்று பகல்-இரவாக நடக்கிறது. இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுகிறார்.

    இந்நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

    அர்ஷ்தீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் இன்றைய போட்டியில் அறிமுகமாகின்றனர்.

    தவான் தலைமையிலான இந்திய அணி கடந்த மாதம் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    • கானாவுடனான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
    • நட்சத்திர வீரர் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார்.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல், கானா அணிகள் மோதின.

    முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது.

    இறுதியில், கானாவுக்கு எதிரான போட்டியில், 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ 65-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    இந்நிலையில், 5 உலக கோப்பைகளில் (2006, 2010, 2014, 2018, 2022) கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.

    • முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
    • ஆட்ட நேர இறுதியில் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று அதிகாலை நடைபெற்ற குரூப் ஜி பிரிவு லீக் ஆட்டத்தில் பிரேசில், செர்பியா அணிகள் மோதின.

    முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் 62 மற்றும் 73 வது நிமிடங்களில் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

    இறுதியில், பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது.

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
    • ஆட்ட நேர இறுதியில் போர்ச்சுகல் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    தோகா:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல், கானா அணிகள் மோதின.

    முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 65-வது நிமிடத்தில் போர்ச்சுகலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனல்டோ கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.

    அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 73-வது நிமிடத்தில் கானா அணியின் ஆண்ட்ரூ ஆயு ஒரு கோல் அடித்தார்.

    போர்ச்சுக்கல் அணியின் ஜோ பெலிக்ஸ் 78-வது நிமிடத்திலும், 80-வது நிமிடத்தில் ரபேல் லியோவும் தலா ஒரு கோல் அடித்தனர்.

    கானா அணியின் ஓஸ்மான் புகாரி 89-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    ஆட்டநேர முடிவில் போர்ச்சுகல் 3-2 என்ற கோல் கணக்கில் கானா அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது.

    • இரு அணி வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டு கோல் கம்பத்தை நோக்கி முன்னேறினர்.
    • இரண்டாவது பாதியில் முதல் கோலை பதிவு செய்ய கடும் போட்டி

    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-எச் பிரிவில் உள்ள உருகுவே மற்றும் தென் கொரியா அணிகள் விளையாடின. துவக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டு கோல் கம்பத்தை நோக்கி முன்னேறினர். இரு தரப்பினரும் கோல் வாய்ப்பை தவறவிட்டனர். இதனால் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

    இரண்டாவது பாதியில் எப்படியாவது ஒரு கோலை பதிவு செய்துவிட்டால் வெற்றி பெற முடியும் என்ற முனைப்பில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினர். எனினும் ஆட்டநேர முடிவு வரை கோல் அடிக்கவில்லை. கூடுதல் நேரத்திலும் கோல் முயற்சி பலிக்கவில்லை. எனவே, கோல் இன்றி ஆட்டம் டிரா ஆனது. இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    • மும்பையில் உள்ள சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் தான் இவர்களது திருமணம் நடக்க இருக்கிறதாம்.
    • இன்னும் மூன்று மாதங்களில் திருமணத்திற்கு உங்களை அழைப்பேன் என நினைக்கிறேன் என கூறி இருக்கிறார்.

    காதலியை கரம்பிடிக்கும் கேஎல் ராகுல்- திருமணம் தேதியை சூசகமாக அறிவித்த சுனில் ஷெட்டிபிரபல பாலிவுட் வில்லன் நடிகரின் மகளை காதலித்து வரும் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், தற்போது திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரராக இருந்து வருபவர் கே.எல்.ராகுல். கர்நாடகாவை சேர்ந்த இவர் தொடர்ந்து பல்வேறு காதல் வதந்திகளில் சிக்கி உள்ளார். கே.எல்.ராகுல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை நிதி அகர்வால் உடன் டேட்டிங் செய்து வந்தார். இதைவைத்து அவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவின. பின்னர் ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

    இதையடுத்து கே.எல்.ராகுல் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியுடன் நெருங்கி பழகி வந்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சுனில் ஷெட்டியின் மகள் தான் அதியா ஷெட்டி. கே.எல்.ராகுல் உடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, அவருடன் ஜோடியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என இருந்து வந்த அதியா ஷெட்டி, கடந்த ஆண்டு தங்கள் இருவரும் காதலிப்பதை உறுதி செய்தார்.

    இந்நிலையில், தற்போது இந்த ஜோடியின் திருமணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அதியா ஷெட்டி - கே.எல்.ராகுல் ஜோடியின் திருமணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் உள்ள சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் தான் இவர்களது திருமணம் நடக்க இருக்கிறதாம்.

    இதுகுறித்த சூசகமான அறிவிப்பை நடிகர் சுனில் ஷெட்டியும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். பட விழா ஒன்றில் கலந்துகொண்ட சுனில் ஷெட்டியிடம் உங்கள் மகளின் திருமணம் எப்போது என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு இன்னும் மூன்று மாதங்களில் திருமணத்திற்கு உங்களை அழைப்பேன் என நினைக்கிறேன் என கூறி இருக்கிறார். இதன்மூலம் கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் ஜனவரி மாதம் நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

    • 48வது நிமிடத்தில் சுவிட்சலாந்து வீரர் ப்ரீல் எம்போலோ கோல் அடித்தார்.
    • இரண்டாவது பாதியில் கேமரூன் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர்.

    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-ஜி அணியில் உள்ள கேமரூன் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் விளையாடின. ஆட்டத்தின் முதல் பாதியில் 48வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ப்ரீல் எம்போலோ கோல் அடித்தார். இதனால் சுவிட்சலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதியில் சுவிட்சர்லாந்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் கேமரூன் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் கோல் வாய்ப்புகளை சுவிட்சலாந்து வீரர்கள் தடுத்தனர். அதேசமயம் சுவிட்சலாந்தும் கூடுதல் கோல் அடிக்கவில்லை. இறுதியில் 1-0 என சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றது.

    • ரோகித் சர்மா இல்லாத நேரத்தில் தவான் ஒருநாள் அணி கேப்டனாக பணியாற்றியுள்ளார்
    • கே.எல். ராகுல் அணிக்கு திரும்பியதால் தவானிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது

    இந்திய அணியின் தொடக்க இடது கை பேட்ஸ்மேன் ஷிகர் தவான். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணியில் மட்டும் விளையாடி வருகிறார்.

    மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்படும்போது ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டள்ளார்.

    சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அதன்பின் ஜிம்பாப்வே தொடருக்கான அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

    ஜிம்பாப்வே தொடர் தொடங்கும் நிலையில் கே.எல். ராகுல் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியதால் தவான் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். நாளை நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்த தொடருக்கு தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஜிம்பாப்வே தொடரின்போது கடைசி நேரத்தில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தவான் தற்போது பதில் அளித்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது:-

    நீங்கள் நல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள். இந்த நிலையில் அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். கேப்டன் பதவியும், அதன் சவால் பற்றியும் நான் சிறப்பாக உணர்கிறேன். இளம் வீரர்களை கொண்ட அணியுடன் நாம் சில சிறந்த தொடர்களை வென்றுள்ளோம்.

    ஜிம்பாப்வே தொடரின்போது, மெயின் அணியின் துணைக் கேப்டனான கே.எல். ராகுல் மீண்டும் விளையாட வரும்போது, அவர் ஆசிய கோப்பையில் விளையாட இருக்கிறார் என்ற உண்மையை நான் கவனத்தில் கொண்டேன். ஆசிய கோப்பையின்போது ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டால், கே.எல். ராகுல் கேப்டனாக செயல்பட கேட்டுக் கொள்ளப்படுவார். ஆகவே, ஜிம்பாப்வே தொடர் அவருக்கு சிறந்த பயிற்சியாக இருந்திருக்கும்..

    அதனால் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. எது நடந்தாலும், அது சிறப்பானவைக்காக நிகழும் என நினைப்பேன். தென்ஆப்பிரிக்கா தொடருக்கான கேப்டனை தேர்வு செய்யும்போது, எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தனர். நான் ஒருபோதும் மோசமானதாக உணர்ந்தது இல்லை'' என்றார்.

    • கல்லூரியில் டென்னிஸ் விளையாடும்போது, பல குணங்களை கற்று கொண்டேன்.
    • கல்லூரி படிப்பு முடிந்ததும் டென்னிசை எனது தொழிலாக மாற்றி கொண்டேன்.

    நியூயார்க்:

    டென்னிஸ் விளையாட்டில் முன்னணி வீரர், வீராங்கனைகளுக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் இருக்கும். அவர்களில் பலர் வீரர்களின் தீவிர ரசிகர்களாகவும், ஒரு சிலர் அவர்களை ரோல் மாடலாகவும் கூட வைத்திருப்பார்கள். முன்னணியில் இல்லாதபோதும், சிலர் தங்களது துறைகளில் ரசிகர்களை ஈர்த்து வைத்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. சமூக ஊடகங்கள் பெருகியுள்ள காலத்தில், அதன் வழியே பலரும் ரசிகர்கள் வட்டங்களை விரிவாக்கி உள்ளனர்.

    அவர்களில் ஒருவர் டென்னிஸ் வீராங்கனை ரேச்சல் ஸ்டல்மேன். ரோஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ் மற்றும் எம்மா ராடுகானு போன்றவர்கள் டென்னிஸ் விளையாட்டில் முன்னணியில் இருப்பதுடன் சமூக ஊடக தளங்களிலும் அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள், பின்தொடர்பவர்களை கொண்டுள்ளனர். ஆனால், விளையாட்டில் முன்னணி பெற போராடும் சூழலில் இருந்து விலகி, சமூக ஊடகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் முயற்சியில் ரேச்சல் இறங்கினார்.

    அது அவருக்கு பலனளித்து உள்ளது. அமெரிக்காவின் மிசோரி பகுதியில் செயின்ட் லூயிஸ் நகரை சேர்ந்தவரான ரேச்சல், டிக்டாக்கில் பிரபல நபரானார். அவரது தந்திரம் நிறைந்த ஷாட்டுகளை பார்ப்பதற்காகவே, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரை டிக்டாக்கில் பின்தொடருகின்றனர். இன்ஸ்டாகிராமிலும் பிரபலமடைந்துள்ள ரேச்சல் 2.32 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். இதனால், டென்னிசில் சமூக ஊடகம் வழியே அதிக தாக்கம் ஏற்படுத்தியவர்களின் வரிசையில் ரேச்சல் நம்பர் ஒன் இடம் பிடித்து உள்ளார்.

    இதற்கேற்ப இவரது புகைப்படங்கள், வீடியோக்கள் இடம் பெற்று இருக்கும். டென்னிசை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைய செய்வதற்கான முயற்சியில் இறங்கி உள்ளேன் என கூறும் அவர் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இதுபற்றி மேக்சிம் என்ற செய்தி இதழுக்கு ரேச்சல் அளித்த பேட்டியில் கூறும்போது, தடகள வீராங்கனையாக நான் விரும்பினேன்.

    கல்லூரியில் டென்னிஸ் விளையாடும்போது, பல குணங்களை கற்று கொண்டேன். நேர நிர்வாகம், பணி நெறிமுறைகள் மற்றும் கடினம் வாய்ந்த சூழலில் இருந்து மீண்டு வரும் தன்மை ஆகியவற்றை கற்று கொண்டேன். கல்லூரி படிப்பு முடிந்ததும் டென்னிசை எனது தொழிலாக மாற்றி கொண்டேன். பெரிய டென்னிஸ் போட்டிகளுக்கு தயாராவது, பயிற்சி பெறுவது என்பதற்கு பதிலாக தற்போது, எனது தொழிலில் உள்ள அனைத்து விசயங்களிலும் நான் கவனம் செலுத்த தொடங்கி உள்ளேன்.

    விளையாட்டில் மேற்கொள்ளும் பல்வேறு விசயங்களையும் எப்படி சிறப்புடன் செய்ய முடியும் என கவனம் செலுத்தி வருகிறேன் என கூறியுள்ளார். கடந்த காலங்களை போல் நீங்கள் டாப் 3 நபர்களில் இருக்க வேண்டும் என்பதெல்லாம் முக்கியமில்லை. அதுவும் பெண்கள் தரப்பை எடுத்து கொண்டால், திறமைகள் மற்றும் ஆச்சரியங்கள் நிறைந்த ஒன்றாக தற்போது நிலைமை உள்ளது என கூறுகிறார்.

    கோல்ப் விளையாட்டில் தனது டிப்ஸ், எண்ணங்கள் மற்றும் ஆலோசனைகளை சமூக ஊடகம் வழியே பிரபல வீராங்கனை பெய்ஜ் ஸ்பைரனாக் வெளிப்படுத்தி வருகிறார். அதனை நான் மதிக்கிறேன். இதனை போன்று டென்னிசையும் ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும் என்பது எனது விருப்பம் என ரேச்சல் கூறியுள்ளார்.

    • 20 ஓவர் தொடரில் வாய்ப்பு வழங்கப்படாத சஞ்சு சாம்சன் ஒருநாள் தொடரில் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறுவார்.
    • இந்தியா-நியூசிலாந்து இடையே உள்ள நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

    ஆக்லாந்து:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் ஆட்டம் ஆக்லாந்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பகல்-இரவாக நடக்கிறது.

    இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுகிறார். வழக்கமான கேப்டன் ரோகித்சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் உள்ளிட்ட வீரர்களுக்கு நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது. 20 ஓவர் தொடரில் கேப்டனாக இருந்து ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    தவான் தலைமையில் இந்திய அணி கடந்த மாதம் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தற்போது நியூசிலாந்து தொடரில் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    20 ஓவர் தொடரில் வாய்ப்பு வழங்கப்படாத சஞ்சு சாம்சன் ஒருநாள் தொடரில் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறுவார்.

    தவானும், சுப்மன்கில்லும் தொடக்க வரிசையில் ஆடுவார்கள். அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரராக திகழ்கிறார். தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் மிடில் வரிசையில் ஆடுவார்கள். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் சாதிக்க கூடியவர்கள். ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து 2 சுழற்பந்து வீரர்கள் இடம் பெறுவார்கள். சுழற்பந்தில் சாஹல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஷபாஸ் அகமது உள்ளனர்.

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் பின்ஆலன், பிரேஸ்வெல், ஹென்றி, பிலிப்ஸ், சான்ட்னெர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். 20 ஓவர் தொடரை இழந்த அந்த அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் வேட்டையில் உள்ளது.

    இரு அணிகள் கடைசியாக மோதிய 4 ஆட்டத்திலும் (பிப்ரவரி, 2020) நியூசிலாந்தே வெற்றி பெற்றது. நாளை மோதுவது 111-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 110 போட்டியில் இந்தியா 55-ல், நியூசிலாந்து 49-ல் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் முடிவு இல்லை. ஒரு போட்டி டையில் முடிந்தது.

    இந்தியா-நியூசிலாந்து இடையே உள்ள நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

    • ஜப்பான் ரசிகர்களை சர்வதேச கால்பந்து சம்மேளனம் பாராட்டி உள்ளது.
    • ஜப்பான் ரசிகர் ஒருவர் குப்பைகளை எடுத்து நீலநிற கழிவு பைகளில் போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    இதே போல நேற்று நடந்த போட்டியில் 4 முறை உலக கோப்பையை வென்ற ஜெர்மனி 1-2 என்ற கோல் கணக்கில் மற்றொரு ஆசிய அணியான ஜப்பானிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    ஜப்பானின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை கலீபா சர்வதேச மைதானத்தில் இருந்த அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடினார்கள். கோல் அடித்த போது மைதானத்தில் ஏராளமான பாட்டில்கள் வீசப்பட்டது.

    போட்டி முடிந்து வெளியே செல்லும் முன்பு ஜப்பான் ரசிகர்கள் ஸ்டேடியத்தில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்தனர். ஜப்பான் ரசிகர் ஒருவர் குப்பைகளை எடுத்து நீலநிற கழிவு பைகளில் போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

    இதையொட்டி ஜப்பான் ரசிகர்களை சர்வதேச கால்பந்து சம்மேளனம் பாராட்டி உள்ளது. உங்கள் நாட்டின் வெற்றிக்கு வாழ்த்துகிறேன். ஜப்பான் ரசிகர்களின் இந்த செயல் மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தி உள்ளது என்று டுவிட்டரில் தெரிவித்து உள்ளது.

    2018 உலக கோப்பையில் 2-வது சுற்றில் ஜப்பான் 2-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோற்றது. அப்போதும் அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்தை சுத்தம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெய்ப்பூர் அணி 6-வது தோல்வியை தழுவியது.
    • புனே அணி 11-வது வெற்றியை பதிவு செய்தது.

    ஐதராபாத்:

    புரோ கபடி 'லீக்' போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 41-38 என்ற கோல் கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தியது. பெங்கால் அணி பெற்ற 8-வது வெற்றி இதுவாகும். அந்த அணி 48 புள்ளியுடன் 5-வது இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி 6-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 58 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

    மற்றொரு போட்டியில் புனேரி பல்தான் 39-32 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது. புனே அணி பெற்ற 11-வது வெற்றியாகும். அந்த அணி 64 புள்ளியுடன் முதல்இடத்தில் உள்ளது.

    ஜெய்ப்பூர் அணி 6-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 54 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. இன்று ஓய்வு நாளாகும். நாளைய போட்டியில் குஜராத்-டெல்லி, தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர், அரியானா-பாட்னா அணிகள் மோதுகின்றன.

    ×