என் மலர்
விளையாட்டு
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 149 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 145 ரன்கள் எடுத்து தோற்றது.
டிரினிடாட்:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோமன் பாவெல் 48 ரன்கள் குவித்தார். நிகோலஸ் பூரன் 41 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. திலக் வர்மா அதிரடியாக ஆடி 39 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 21 ரன்னும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 19 ரன்னும் எடுத்தனர்.
இதன்மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், முதல் டி20 போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக இந்திய அணிக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதித்தது ஐசிசி. இதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 10 சதவீதம் அபராதம் விதித்துள்ளது ஐசிசி.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ரஜாவத் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த், சக வீரரான பிரியான்ஷு ரஜாவத்துடன் மோதினார்.
இதில் ரஜாவத் 21-13, 21-8 என்ற நேர்செட்டில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு வீரரான இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் சரிவில் இருந்து மீண்டு 16-21, 21-17, 21-14 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் அந்தோனி ஜிங்டிங்கை வீழ்த்தி அரையிறுதியை எட்டினார்.
நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் எச்.எஸ்.பிரனாய், சக வீரரான பிரியான்ஷு ரஜாவத்தை எதிர்கொள்கிறார்.
- முதல் பாதியில் ஜப்பான் 1-0 என முன்னிலை பெற்றது.
- இரண்டாவது பாதியில் இந்தியா ஒரு கோல் அடித்து சமனிலை வகித்தது.
சென்னை:
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
முதல் போட்டியில் மலேசியா சீனாவை 5-1 என வீழ்த்தியது. கொரியா, பாகிஸ்தான் இடையிலான 2வது போட்டி சமனில் முடிந்தது.
இந்நிலையில், இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானுடன் மோதியது.
ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் ஜப்பான் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் 43வது நிமிடத்தில் இந்திய அணி ஒரு கோல் அடித்தது. இறுதியில், 1-1 என போட்டி சமனில் முடிந்தது.
- மாலை 4 மணிக்கு தென்கொரியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆட்டம் தொடங்கியது.
- ஆட்டத்தில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி தலா ஒரு கோல் அடித்தது.
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.
தொடக்க நாளான நேற்று மூன்று ஆட்டங்கள் நடந்தது. தென்கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும், மலேசியா 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தானையும் தோற்கடித்தன.
இரவு 8.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் இந்தியா-சீனா அணிகள் மோதின. இதில் இந்திய அணி கோல் மழை பொழிந்தது. 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை பந்தாடி வெற்றியுடன் இந்தியா கணக்கை தொடங்கியது.
இந்தியா தரப்பில் கேப்டன் ஹர்மன் பிரீத் சிங், வருண்குமார் தலா இரண்டு கோலும், சுக்ஜீத் சிங், ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங் தலா ஒரு கோலும் அடித்தனர்.
தொடர்ந்து, இன்று மூன்று லீக் ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு தென்கொரியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆட்டம் தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி தலா ஒரு கோல் அடித்தது.
இதனை தொடர்ந்து, இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமம் ஆனது.
- அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
- டி20 உலகக் கோப்பை வெற்றியாளராக இங்கிலாந்துடனான எனது கடைசி போட்டியிலிருந்து வெளியேறுவது சரியான முடிவாகும்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தவர். மேலும் ஜோஸ் பட்லருடன் இணைந்து அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் எடுத்தார்.
ஹேல்ஸ் கடைசியாக கடந்த நவம்பர் மாதம் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்காக விளையாடினார். மூன்று வருடங்களுக்கு பிறகு அலெக்ஸ் போட்டிக்கு திரும்ப அழைக்கப்பட்டார்.
இந்நிலையில், அலெக்ஸ் தனது 11 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
ஓய்வு குறித்து ஹேல்ஸ் கூறியதாவது:-
அனைத்து வடிவங்களிலும் இங்கிலாந்து அணிக்காக விளையாடியது ஒரு பாக்கியம். இப்போது அந்த பயணத்தைப் பற்றி சிந்தித்து பார்க்கிறேன். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நான் பெற்ற வாழ்க்கை மற்றும் இங்கிலாந்தின் அணியின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நான் அதிர்ஷ்டசாலியாக இருந்த தருணங்கள் உண்மையில் திருப்தி அளிக்கிறது.
ஆடுகளத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நான் செய்த பல நினைவுகள் உள்ளன. ஆனால் டிரெண்ட் பிரிட்ஜில் அந்த இரண்டு ஒரு நாள் சர்வதேச உலக சாதனை ரன்களை நான் திரும்பிப் பார்க்கிறேன். மேலும் இங்கிலாந்தில் நடந்த அந்த இரண்டு ஆட்டங்களிலும் மூன்று புள்ளிகளை எட்ட முடிந்தது.
டி20 உலகக் கோப்பை வெற்றியாளராக இங்கிலாந்துடனான எனது கடைசி போட்டியிலிருந்து வெளியேறுவது சரியான முடிவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சானியா மிர்சா சோயிப் மாலிக் 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
- இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கும் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகளில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் இருவரும் விவாகரத்து கோர இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு சோயிப் மாலிக் மறுப்பு தெரிவித்திருந்தார். பிறகு இருவரும் ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் மீண்டும் இருவர் குறித்த விவாகரத்து வதந்தி மீண்டும் எழுந்துள்ளது. இந்த வதந்திக்கு மாலிக்கின் இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட மாற்றம்தான் காரணம். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சானியா மிர்சா குறித்த தகவல்களை மாலிக் நீக்கியுள்ளார். அதாவது மிகச்சிறந்த பெண்மணியான சானியா மிர்சாவின் கணவர் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை தனது இன்ஸ்டாவிலிருந்து நீக்கியுள்ளார். இதனால் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- ஆர்சிபி பயிற்சியாளர் மைக் ஹெசன் நீக்கப்படுவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்தது.
- இவரின் ஒப்பந்தம் இந்த மாத இறுதியுடன் முடிவடைவதால், அதன்பின் புதிய பயிற்சியாளரை நியமிக்க ஆர்சிபி நிர்வாகம் பரிசீலித்து வந்தது.
பெங்களூரு:
ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லாத அணிகளுள் பெங்களூரு அணியும் ஒன்று. இந்த அணியின் பயிற்சியாளராக கடந்த 2019-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தவர் மைக் ஹெசன். இவரது தலைமையின் கீழ் ஆர்சிபி அணி தொடர்ச்சியாக 3 முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியால் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. கடந்த முறை அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாததால் அந்த அணி ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 16 ஆண்டுகளாக ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாதது, அந்த அணி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து ஆர்சிபி பயிற்சியாளர் மைக் ஹெசன் நீக்கப்படுவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்தது. இவரின் ஒப்பந்தம் இந்த மாத இறுதியுடன் முடிவடைவதால், அதன்பின் புதிய பயிற்சியாளரை நியமிக்க ஆர்சிபி நிர்வாகம் பரிசீலித்து வந்தது.
இந்த நிலையில் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி ப்ளவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆர்சிபி அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளது. இவருடன் மூன்று ஆண்டுகள் வரை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
- அறிமுக வீரர் திலக் வர்மாவின் பேட்டிங்கை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
- இந்த ஆட்டம், இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுத்து இருக்கும் என்று நம்புகிறேன்.
தரோபா:
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடரை இந்தியா கைப்பற்றியது.
இரு அணிகள் மோதும் 5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் நேற்று தரோபாவில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாவெல் 48 ரன்னும், பூரன் 41 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக அறிமுக வீரரான திலக் வர்மா 39 ரன்கள் எடுத்தார். வெஸ்ட்இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-
இலக்கை நோக்கி விளையாடியதில் நாங்கள் சரியான திசையில் இருந்தோம். சில தவறுகளை செய்து விட்டோம். ஆனால் அது பற்றி கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் இது இளம் வீரர்களை கொண்ட அணி. அவர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இந்த ஆட்டம் முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தால் சேசிங் செய்வது மிகவும் கடினமாகிவிடும். நாங்கள் பேட்டிங் செய்யும் போது தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்ததால் தோல்வி ஏற்பட்டது. ஆடுகளம் சூழலுக்கு ஏற்ப மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்தோம். மேலும் சாகலும், குல்தீப் யாதவும் இணைந்து விளையாட வேண்டும் என்று விரும்பினோம். அக்சர்பட்டேலை பேட்டிங்கிலும் கொண்டு வந்து இருந்தோம்.
முகேஷ் குமாருக்கு இந்த இரண்டு வாரங்கள், அவரது வாழ்க்கையில் சிறப்பானது. மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி உள்ளார். அறிமுக வீரர் திலக் வர்மாவின் பேட்டிங்கை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த ஆட்டம், இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுத்து இருக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இரண்டாவது 20 ஓவர் போட்டி நாளை மறுநாள் கயானாவில் நடக்கிறது.
- 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை பந்தாடி வெற்றியுடன் இந்தியா கணக்கை தொடங்கியது.
- இந்தியாவின் அதிரடி வெற்றியால் போட்டியை காண வந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
சென்னை:
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.
தொடக்க நாளான நேற்று மூன்று ஆட்டங்கள் நடந்தது. தென்கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும், மலேசியா 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தானையும் தோற்கடித்தன. இரவு 8.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் இந்தியா-சீனா அணிகள் மோதின.
இதில் இந்திய அணி கோல் மழை பொழிந்தது. 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை பந்தாடி வெற்றியுடன் இந்தியா கணக்கை தொடங்கியது. இந்தியா தரப்பில் கேப்டன் ஹர்மன் பிரீத் சிங், வருண்குமார் தலா இரண்டு கோலும், சுக்ஜீத் சிங், ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்தியாவின் அதிரடி வெற்றியால் போட்டியை காண வந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இன்றும் மூன்று லீக் ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் தென்கொரியா-பாகிஸ்தான் அணிகளும், 6.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மலேசியா-சீனா அணிகளும் மோதுகின்றன. இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் இந்தியா, ஜப்பானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் இந்தியா ஆதிக்கம் தொடர்ந்து 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க ஆட்டத்தில் அதிரடி வெற்றியை ருசித்துள்ள இந்தியா, நம்பிக்கையுடன் களம் இறங்கும்.
ஜப்பான், தனது தொடக்க ஆட்டத்தில் தோற்றதால் (தென்கொரியாவிடம்) வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்குகிறது.
- கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 100 இடங்களுக்குள் வந்த அவர் 15 மாதங்களிலேயே 10 இடங்களுக்குள் நுழைந்து அசத்தியுள்ளார்.
- செஸ் வீரர் குகேஷ்க்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சென்னை:
இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக தமிழகத்தை சேர்ந்த குகேஷ் சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் (லைவ் ரேட்டிங்) 17 வயதான குகேஷ், 2755.9 புள்ளிகள் பெற்று 9-வது இடத்துக்கு முன்னேறினார். இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 2754.0 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளார். விஸ்வநாதன் ஆனந்தை முந்தியதன் மூலம் குகேஷ் இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் ஆனார்.
செஸ் உலக கோப்பை (2023) தொடர் அஜர்பை ஜான் நாட்டின் பாகுவில் நடந்து வருகிறது. இதில் 2-வது சுற்றுக்கு முன்னேறிய குகேஷ், தன்னை எதிர்த்து விளையாடிய மிஸ்ட்ராடின் இஸ்கண்ட்ரோவை தோற்கடித்து பிறகு உலக தரவரிசை பட்டியலில் 9-வது இடத்துக்கு முன்னேறினார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 100 இடங்களுக்குள் வந்த அவர் 15 மாதங்களிலேயே 10 இடங்களுக்குள் நுழைந்து அசத்தியுள்ளார்.
5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரான விஸ்வநாதன் ஆனந்த் 1986-ம் ஆண்டுக்கு பிறகு 37 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர்-ஒன் வீரராக இருந்து வருகிறார். வருகிற செப்டம்பர் 1-ந்தேதி அடுத்த தரவரிசை பட்டியல் வெளியிடும் வரை குகேஷ், ஆனந்தை விட தொடர்ந்து ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்ததால் 1986-க்கு பிறகு ஆனந்தை முந்திய முதல் இந்தியர் என்ற பெருமையை குகேஷ் பெறுவார்.
இந்த நிலையில் செஸ் வீரர் குகேஷ்க்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
செஸ் உலகத் தரவரிசைப் பட்டியலின் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ள கிராண்ட்மாஸ்டர் குகேஷ்க்கு பாராட்டுகள்.
உங்களது உறுதியும் திறனும் செஸ் ஆட்டத்தின் மிக உயர்ந்த படிநிலைக்கு உங்களை உயர்த்தி, உலக அளவில் அதிகப் புள்ளிகளைப் பெற்றிருக்கும் இந்திய வீரராக உங்களை நிலைநிறுத்தி உள்ளன.
உங்களது சாதனை உலகெங்குமுள்ள இளந்திறமையாளர்களுக்கு ஊக்கமாகவும் நமது தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
- இந்த போட்டியில் திலக் வர்மா அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார்.
- இதில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று தொடங்கியது. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணியின் திலக் வர்மா மற்றும் முகேஷ் குமார் அறிமுகமாயினர்.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அறிமுகமான திலக் வர்மா அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் அவர் அறிமுக டி20-யில் அரிதான சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார்.
வெளிநாட்டில் அறிமுக போட்டியில் 3 சிக்சர் அடித்த வீரர்களில் ராகுல் டிராவிட் மற்றும் முரளி விஜய் ஆகியோருடன் திலக் வர்மா இணைந்துள்ளார்.
- பிவி சிந்து அமெரிக்க வீராங்கனையான பெய்வென் ஜாங்கிடம் மோதினார்.
- பிவி சிந்து 12-21 17-21 என்ற செட் கணக்கில் பெய்வென் ஜாங்கிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பிவி சிந்து அமெரிக்காவின் உலகின் 12-ம் நிலை வீராங்கனையான பெய்வென் ஜாங்கிடம் மோதினார்.
39 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் பிவி சிந்து 12-21 17-21 என்ற செட் கணக்கில் பெய்வென் ஜாங்கிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.






