என் மலர்
புதுச்சேரி
திருக்கனூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கனூர்:
திருக்கனூர் அருகே உள்ள காட்டேரிக்குப்பம் வாய்க்கால் கரை வீதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 65). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சின்னப்பொன் (60). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் முனுசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு முனுசாமி குடித்துவிட்டு வந்ததால் அவரது மனைவி சின்னப்பொன்னு கோபித்துக்கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டாராம். மனைவி பிரிந்து சென்றதால் மனவேதனையில் இருந்த முனுசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
புதுவையில் 3.80 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று புதிதாக 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாள்தோறும் பரிசோதனைகளும் அதிகப்படுத்தப்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு அறிகுறி இல்லாமல் இருந்தால் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அரசின் பல்வேறு நடவடிக்கையால் தற்போது கொரோனா பாதிப்பு சரியத்தொடங்கியுள்ளது.
நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 586 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 88 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 3 லட்சத்து 80 ஆயிரத்து 831 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 854 பேருக்கு தொற்று இல்லை என என்பது கண்டறியப்பட்டது. 36 ஆயிரத்து 693 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
559 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 227 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 332 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை 35 ஆயிரத்து 525 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 609 பேர் பலியாகி உள்ளனர்.
இதில் 499 பேர் புதுச்சேரியையும், 59 பேர் காரைக்காலையும், 44 பேர் ஏனாமையும், 7 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதுவையில் உயிரிழப்பு 1.66 சதவீதமாகவும், குணமடைவது 96.82 சதவீதமாகவும் உள்ளது.
மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை செயலாளரும், மாவட்ட கலெக்டருமான அருண் தெரிவித்துள்ளார்.
புதுவையில் ரவுடிகளை ஊக்குவித்தது ரங்கசாமி தான் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதுவரை 30 சதவீத மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது அகில இந்திய அளவை விட 3 மடங்கு அதிகமாகும். இதனால் புதுவையில் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக இருப்பதால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனையில் வைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கலாமா? என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இது பண்டிகை காலம் என்பதால் கொரோனா மறுபடியும் பரவ வாய்ப்புள்ளது. டெல்லி உள்பட பல மாநிலங்களில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதுவையை பொறுத்தவரை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இங்கு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் மாநிலம் தாங்காது. ஏற்கனவே பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதி உதவி இல்லை. எனவே பொதுமக்கள் மெத்தனமாக இருக்க கூடாது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். டிரைவரின் சாமர்த்தியமான நடவடிக்கையால் தான் அவர் உயிர் பிழைத்துள்ளார். இதில் மிகப்பெரிய சதி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்காக முன்னணியில் இருந்து பணி செய்பவர். அவர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி சிலருக்கு உள்ளது. இது தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அவருக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் பகுதியில் கொலைகள் அதிகரித்து வருகிறது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலர் பின்னணியில் உள்ளனர். ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது புதுவையில் சகஜமாக கொலைகள் நடந்தன. அவரது ஆட்சியின் போது 19 வயது மாணவர் கண்டந்துண்டமாக வெட்டி கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி ஊசுடு ஏரியில் வீசப்பட்டார். அந்த வழக்கில் தொடர்பு இல்லாதவர்கள் பலர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அந்த வழக்கை தோண்டி எடுத்து தற்போது மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.
புதுவையில் ரவுடிகளை ஊக்குவித்தது ரங்கசாமி தான். அதனை தடுத்து நிறுத்த நாங்கள் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் விரோதம் இருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவையில் காவலர் உடல் தகுதித் தேர்வை டிஜிட்டல் முறையில் நடத்த கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் காவலர் உடல் தகுதித் தேர்வை டிஜிட்டல் முறையில் நடத்த கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த 15-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை புதுச்சேரி அரசு பணிகளின் ஒப்புதலுக்காக கவர்னர் மாளிகைக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த 32 கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். அரசு சார்பில் காவலர் உடல்தகுதி தேர்வை டிஜிட்டல் முறையில் நடத்துவதற்கு, ஒரு நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் விட அனுமதி கோரிய கோப்புக்கும் கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்துக்கு ரூ.42 லட்சத்து 74 ஆயிரத்திற்கும், மகளிர் ஆணைய ஊழியர்களின் சம்பளம் வழங்க ரூ.13 லட்சத்து 54 ஆயிரத்திற்கும், திறன் மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.1 கோடியே 82 லட்சம் நிதி உள்ளிட்ட கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் விடுமுறை கால உணவுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த நிர்வாக ஒப்புதல் அளித்தும், சத்துணவு வாங்குவதற்கான இ-டெண்டரை ரத்து செய்வதற்கான கோப்புக்கும் கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் பட்ஜெட் உரையில் கூறியிருப்பது போல் மாற்றி வடிவமைக்கப்பட்டதை கவனத்தில் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக பிரதமரின் சுகாதார திட்டத்தை செயல்படுத்துவது உள்பட 32 கோப்புகளுக்கு கவர்னர் அனுமதி அளித்துள்ளார்.
மதுக்கடையில் புகுந்து திருடியவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை 100 அடி ரோட்டில் உள்ள மதுபான கடையில் கடந்த 15-ந்தேதி இரவு மர்ம நபர்கள் கடையின் ஜன்னல், கதவினை உடைத்து கடைக்குள் புகுந்து ரூ.1½ லட்சம் ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த மதுபான பாட்டில்களை திருடிச் சென்றனர். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். மதுக்கடையின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
இதன்படி புதுவை வம்பாகீரப்பாளையம் திப்புராயப்பேட்டையை சேர்ந்த மனோகர் (வயது 58) என்பவர் தனது தங்கை மகன்களான திருமால் நகரை சேர்ந்த செல்வகணபதி, பிரான்சுவா ஆகியோருடன் சேர்ந்து மதுக்கடையில் புகுந்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து மனோகர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் 118 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள செல்வகணபதி, பிரான்சுவா ஆகியோரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த வழக்கில் திறமையாக செயல்பட்ட போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிஷா கோத்ரா, போலீஸ் சூப்பிரண்டு மாறன் ஆகியோர் பாராட்டினார்கள்.

பெற்றோர் கண்டித்ததால் மாயமான 10-ம் வகுப்பு மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
பாகூர்:
கிருமாம்பாக்கம் அடுத்த கன்னியக்கோவில் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் குமார். இவர், புதுச்சேரி கூட்டுறவு கட்டிட மையத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் நரேஷ் (வயது15) இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலமாக பாடங்களை படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சரிவர படிக்காமல் நண்பர்களுடன் வெளியில் சென்று விளையாடி வந்ததை, அவரது தந்தை குமார், கண்டித்தார். இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த நரேஷ் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து குமார் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீஸ் ஏட்டு ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கன்னியகோவில் அருகே கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
கன்னியகோவில் அடுத்த புதுநகர் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி தாமரைவள்ளி (வயது70). இவர் நேற்று காலை கடலூர் பாண்டி ரோட்டை கடக்கும் போது பாகூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி தாமரை வள்ளி பரிதாபமாக இறந்தார்.
இது சம்பந்தமாக அவரது மகன் சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மாமியார் இறந்த துக்கத்தில் அரசு ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய குடியிருப்பில் வசித்து வந்தவர் ரகுராமன் (வயது 52). அரசு ஆம்புலன்ஸ் டிரைவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மாமியார் இறந்துவிட்டார். அதுமுதல் ரகுராமன் துக்கத்தில் மிகவும் சோகமாக இருந்துள்ளார். குடிப்பழக்கமும் இருந்ததால் குடித்துவிட்டு விரக்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரகுராமன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ரகுராமனின் மகன் துளசிராமன் கொடுத்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முறைப்படுத்தப்படாத வைப்பு திட்டங்களில் சேர்ந்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று கலெக்டர் அருண் எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கலெக்டர் அருண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முறைப்படுத்தப்படாத வைப்பு திட்டங்களை தடை செய்வது தொடர்பான சட்டம் இந்திய அரசால் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இதுபோன்ற சட்ட விரோத வைப்பு திட்டங்களால் ஏமாற்றப்படுவதில் இருந்து தடுத்து பொதுமக்களின் பணத்தை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.
இந்த சட்டம் தற்போதுள்ள மாநில வைப்பு தொகையாளர்களின் உரிமை பாதுகாப்பு சட்டங்களின் சிறந்த நடை முறைகளை பின்பற்றுகிறது. மேலும் இச்சட்டத்தின் மூலம் மோசடி நபர்களின் முறைப் படுத்தப்படாத வைப்பு திட்டங்களை தடை செய்ய முடியும்.
இச்சட்டத்தின்படி முறைப்படுத்தப்படாத வைப்பு திட்டங்களுக்கு 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு. ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கலாம்.
முறைப்படுத்தப்படாத வைப்பு திட்டங்கள் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட சார்பு, துணை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கலாம். எனவே பொதுமக்கள் அனைவரும் அரசிடம் அனுமதி பெறாத முறைப்படுத்தப்படாத எந்த வைப்பு திட்டத்திலும் சேர்ந்து ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இன்று 65 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,648 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90.5 லட்சமாக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 90,50,598 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 46,232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 564 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,32,726 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 84,78,124 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 49,715 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,648ஆக உயர்ந்துள்ளது.

புதுவை லாஸ்பேட்டையில் மாமியார் இறந்த துக்கத்தில் அரசு ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய குடியிருப்பில் வசித்து வந்தவர் ரகுராமன் ( வயது 52). அரசு ஆம்புலன்ஸ் டிரைவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மாமியார் இறந்து விட்டார். அதுமுதல் ரகுராமன் துக்கத்தில் மிகவும் சோகமாக இருந்துள்ளார். குடிப்பழக்கமும் இருந்ததால் குடித்துவிட்டு விரக்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரகுராமன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ரகுராமனின் மகன் துளசிராமன் கொடுத்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
வில்லியனூர் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வில்லியனூர்:
திருவண்டார்கோவில் புதுநகரை சேர்ந்தவர் பாலு என்கிற வெங்கடேசன். உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். இவருக்கும் புதுச்சேரி ஆனந்தரங்கப்பிள்ளை நகரை சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவரின் மகள் ஜெயஸ்ரீக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணமானது. அடுத்து சில மாதங்களில் பாலு மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணையாக 50 பவுன் நகை கேட்டு ஜெயஸ்ரீயை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து வில்லியனூர் மகளிர் போலீசில் ஜெயஸ்ரீ புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் இருவரின் குடும்பத்தாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பாலு மற்றும் அவரது குடும்பத்தினர் கார் மற்றும் 50 பவுன் நகையை பெற்றோரிடம் வரதட்சணையாக வாங்கி வருமாறு கேட்டு ஜெயஸ்ரீயை மீண்டும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் பாலு மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது வில்லியனூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.