search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    புதுவையில் 3.80 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

    புதுவையில் 3.80 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று புதிதாக 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாள்தோறும் பரிசோதனைகளும் அதிகப்படுத்தப்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு அறிகுறி இல்லாமல் இருந்தால் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அரசின் பல்வேறு நடவடிக்கையால் தற்போது கொரோனா பாதிப்பு சரியத்தொடங்கியுள்ளது.

    நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 586 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 88 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 3 லட்சத்து 80 ஆயிரத்து 831 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 854 பேருக்கு தொற்று இல்லை என என்பது கண்டறியப்பட்டது. 36 ஆயிரத்து 693 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    559 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 227 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 332 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை 35 ஆயிரத்து 525 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 609 பேர் பலியாகி உள்ளனர்.

    இதில் 499 பேர் புதுச்சேரியையும், 59 பேர் காரைக்காலையும், 44 பேர் ஏனாமையும், 7 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதுவையில் உயிரிழப்பு 1.66 சதவீதமாகவும், குணமடைவது 96.82 சதவீதமாகவும் உள்ளது.

    மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை செயலாளரும், மாவட்ட கலெக்டருமான அருண் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×