என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் கடல் உள்வாங்கிய தகவல் அறிந்த மக்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பார்வையிட வந்தனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் துறைமுகம் அமைந்த பிறகு கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் கடற்கரையில் மணல் பரப்பு காணாமல் போனது.

    இந்த நிலையில் நேற்று மதியம் வழக்கத்திற்கு மாறாக புதுவை கடல் திடீரென உள்வாங்கியது. சுமார் 100 அடி தூரம் வரை கடல் திடீரென பின்வாங்கியது.

    குறிப்பாக காந்தி சிலை பின்புறம் முதல் துறைமுகம் வரை உள்ள பகுதி வரை உள்வாங்கி காணப்பட்டது. ஆனால், மணற்பரப்பு அதிகளவில் தென்பட்டது கடற்கரைக்கு வந்திருந்த மக்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    சுனாமிக்கான அறிகுறியோ என பீதி அடைந்தனர். மாலை 4 மணி வரை இந்த நிலை நீடித்தது கடல் உள்வாங்கிய தகவல் அறிந்த மக்கள் புதுவையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பார்வையிட வந்தனர். தொடர்ந்து மாலை 4 மணிக்கு மேல் கடல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது.

    இதுகுறித்து கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர் ஆறுமுகம் கூறுகையில், இயற்கைக்கு மாறாக கடலில் நடந்துள்ளதை கடல் உள்வாங்கி சுட்டிக் காட்டுகிறது.

    ஆழ்கடலில் அடுக்குகள் நகர்ந்து கடல் உள்வாங்கி இருக்கலாம். கடல் பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டு அதன் காரணமாகவும் கடல் உள்வாங்கி இருக்கலாம். அதற்கான காரணத்தை ஆராய வேண்டும் என்று கூறினார்.

    அரியாங்குப்பத்தை அடுத்த வீராம்பட்டினத்தில் மீனவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகூர்:

    அரியாங்குப்பத்தை அடுத்த வீராம்பட்டினம் ஜீவரத்தினம் நகரை சேர்ந்தவர் முனியப்பன் (வயது48). மீனவர். இவர் சம்பவத்தன்று தனது நண்பர் அப்புவுடன் துறைமுக மீன்பிடி பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென அப்புவுக்கும் அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனை முனியப்பன் தட்டிக் கேட்டார். இதில் ஆத்திரமடைந்த சரவணன் முனியப்பனை ஆபாசமாக திட்டி கையிலிருந்த இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    பின்னர் தாக்குதலில் காயமடைந்த முனியப்பன் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து அவர் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கொரோனா குறைந்து வரும் வேளையில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதால் ஓரிரு மாதங்களில் 3-ம் அலை பரவ தொடங்கும் என மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவ தொடங்கியது.

    பெரும்பாலும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் அலை பரவ தொடங்கியது. 2-ம் அலையில் முதியோர் மட்டுமின்றி நடுத்தர வயதினரும் இளைஞர்களும் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகினர்

    நாள்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு தொற்று பரவி அதிகபட்சமாக நாளுக்கு 30 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கை அமல்படுத்தியது.

    மேலும் தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் 6 ஆயிரத்து 367 பேரை பரிசோதித்ததில் 103 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது.

    தொற்று சதவீதம் 1.62 சதவீதமாக குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர் கடந்த ஜூன் 6-ந் தேதி வரை மாநிலத்தில் 4 ஆயிரத்து 719 குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

    கொரோனா குறைந்து வரும் வேளையில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதால் ஓரிரு மாதங்களில் 3-ம் அலை பரவ தொடங்கும் என மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர். 3-ம் அலையில் அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

    கொரோனா வைரஸ்

    இந்த நிலையில் 16 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் புதுவையில் 3-ம் அலை தொடங்கி விட்டதோ என மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் இதுவரை 16 குழந்தைகளுக்கு  கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதில் 1 வயது முதல் 5 வயது உள்ள 16 குழந்தைகளுக்கு தொற்று உள்ளது. மீதம் உள்ள 5 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்க்கு பிறந்தவர்கள். இந்த குழந்தைகளை பரிசோதனை செய்ததில் ஒரு குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. மற்ற 4 குழந்தைகளுக்கு பரிசோதனை முடிவு வெளிவர வேண்டி உள்ளது.

    குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பதை கண்டு மக்கள் அச்சமடைய வேண்டாம். பெற்றோர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் நோய் தொற்று வராது.

    மேலும் குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை ஆஷா பணியாளர்கள், அங்கன் வாடி ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    தொற்று பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க 60 படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் தயாராக உள்ளது. புதுவையில் 5 பேர் டெங்கு பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.


    புதுச்சேரியில் இதுவரை 1 லட்சத்து 19 ஆயிரத்து 405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,773 பேர் உயிரிழந்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நேற்று புதிதாக 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் 16 பேர் குழந்தைகள் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. தொற்றால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

    புதுச்சேரியில் இதுவரை 1 லட்சத்து 19 ஆயிரத்து 405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,773 பேர் உயிரிழந்துள்ளனர்.
    புதுச்சேரியில் கடற்கரை சாலை பகுதியில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள தளர்வுகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அதன்படி, சுற்றுலா தளங்களில் 50 சதவிகித நபர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    * புதுச்சேரிக்குள் நுழைய இ-பாஸ் தேவையில்லை.
     
    ஜூலை 31-ம் தேதி வரை அனுமதிக்கப்படாதவை:-

    * சினிமா, தியேட்டர்கள் திறக்க அனுமதியில்லை

    * அனைத்து வகையான கூட்டங்களுக்கு அனுமதியில்லை

    * இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும்

    * மாலை 6 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டவை:-

    * தனியார் நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்

    * இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டவை:-

    * பஸ், ஆட்டோ, டாக்சி, அரசு, தனியார் பொதுபோக்குவரத்து கொரோனா விதிகளை பின்பற்றி செயல்பட அனுமதி

    * அனைத்து கடைகள் குளிர்சாதன வசதி இன்றி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி

    * காய்கறி, பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி 

    * கடற்கரை சாலை பகுதியில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம்

    * பூங்காக்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி 

    * உடற்பயிற்சி, யோகா நிறுவனங்கள் 50 சதவிகித நபர்களுடன் செயல்பட அனுமதி

    * 50 சதவிகித இருக்கை வசதியுடன் உணவகங்கள் செயல்படலாம்

    கோப்புபடம்

    * டீக்கடைகள், பழச்சாறு கடைகள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி செயல்பட வேண்டும் 

    * மதுபான கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி

    கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள நிகழ்வுகள்:-

    * திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் பங்கேற்க அனுமதி

    * இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் 20 பேர் பங்கேற்க அனுமதி

    * பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு போட்டிகள் நடைபெற அனுமதி

    * திரைப்பட, டிவி நிகழ்ச்சி சூட்டிங் 100 பேருடன் நடைபெற அனுமதி

    குறிப்பிட்ட நேர கட்டுப்பாடு இல்லாத நிகழ்வுகள்:-

    * இதர செயல்பாடுகளான அவசர தேவைகளான மருத்துவம், தேர்வு, திருமணம், வேலைவாய்ப்பு நேர்காணல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எந்த நேர கட்டுப்பாடுகளும் இல்லை

    * பொருட்களை கொண்டு செல்லுதல் மற்றும் இ-காமர்ஸ் நடவடிக்கைகளுக்கு எந்த நேர கட்டுப்பாடுகளும் இல்லை 

    * அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்திற்கு நடவடிக்கைகளுக்கு எந்த நேர கட்டுப்பாடுகளும் இல்லை

    * விவசாயம், அரசு அலுவலகங்கள் நடவடிக்கைகளுக்கு எந்த நேர கட்டுப்பாடுகளும் இல்லை

    என புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பள்ளிகளில் வகுப்பறைகளை சுத்தம் செய்வது, மேஜைகளை ஒழுங்குபடுத்துவது, இடைவெளி விட்டு மாணவர்களை அமர வைப்பது உள்ளிட்ட அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா பரவலை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி முதல் மூடப்பட்டன. தற்போது அரசின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக தொற்று பரவல் குறைந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து பள்ளிகளை திறக்க புதுவை அரசு முடிவு செய்தது. இதன்படி நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

    ரங்கசாமி

    இதையடுத்து பள்ளிகளில் வகுப்பறைகளை சுத்தம் செய்வது, மேஜைகளை ஒழுங்குபடுத்துவது, இடைவெளி விட்டு மாணவர்களை அமர வைப்பது உள்ளிட்ட அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இந்நிலையில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுடன் ஆலோசித்த பின்னர் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    * பள்ளிகள், கல்லூரிகள் திறக்கும் சூழல் வரும்போது மீண்டும் திறக்கப்படும்.

    * புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள், பெற்றோர், அரசியல் கட்சியினரின் கோரிக்கையை ஏற்று பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


    புதுவையில் 246 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 1,081 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 177 பேர் குணமடைந்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 88 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 121 பேருக்கு தொற்று உறுதியானது. தற்போது 246 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 1,081 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 177 பேர் குணமடைந்துள்ளனர்.

    கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த சண்முகாபுரத்தை சேர்ந்த 56 வயது ஆண் பலியானார். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,772 ஆக உயர்ந்துள்ளது.

    புதுவையில் உயிரிழப்பு 1.49 சதவீதமாகவும், குணமடைவது 97.40 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 6 பேரும், முன்கள பணியாளர் ஒருவரும், பொதுமக்கள் 3 ஆயிரத்து 146 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள். இதுவரை 5 லட்சத்து 14 ஆயிரத்து 335 தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளது.

    கடை முன்பு வைத்திருந்த ஜெனரேட்டர் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி பாக்குமுடையான்பேட் மகாத்மா நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 52). கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அமுதசுரபி பெட்ரோல் பங்க் எதிரே சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ஜெனரேட்டரை கடைக்கு வெளியே வைத்திருந்தார். சம்பவத்தன்று மர்ம நபர்கள் ஜெனரேட்டரை திருடிச் சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து ராமகிருஷ்ணன் லாஸ்பேட்டை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    ரூ.100-க்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் 20 சதவீதம் சிறப்பு வரியை சேர்த்து ரூ.120-க்கு விற்பனை செய்யப்படும்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களின் அதிபட்ச சில்லரை விலையுடன் கூடுதலாக 20 சதவீதம் சிறப்பு வரி விதித்து திடீரென அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் 20 சதவீதம் சிறப்பு வரியை சேர்த்து ரூ.120-க்கு விற்பனை செய்யப்படும். புதுச்சேரி அரசின் இந்த அதிரடி உத்தரவால் மதுபிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
    வில்லியனூர் அருகே கேபிள் டி.வி. உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கண்டமங்கலத்தை அடுத்த நவமால்மருதூர் முருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் மதிவாணன். இவர் கேபிள் டி.வி. நடத்தி வருகிறார்.

    நேற்று காலை அரியூரில் கேபிள் வயர் துண்டிக்கப்பட்டு இருந்ததால் மதிவாணனும் அவருடன் வேலை பார்க்கும் விஜயன், சந்தோஷ், சுப்பிரமணியன் மற்றும் கணபதி ஆகியோருடன் கேபிள் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

    அப்போது பங்கூரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் கேபிள் இணைப்பு பணியில் இருந்தவர்களை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனை மதிவாணன் தட்டிக்கேட்டார். அப்போது சீனிவாசன் ஆபாசமாக பேசி மதிவாணன் முகத்தில் எச்சிலை துப்பினார். மேலும் அவரை தாக்கி கொலை செய்து விடுவேன் என்றும், இந்த பகுதியில் கேபிள் லைன்களை அறுத்து சேதப்படுத்தி விடுவேன் என்றும் சீனிவாசன் மிரட்டினார்.

    இதுகுறித்து மதிவாணன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசனை தேடி வருகிறார்கள்.

    புதுவை காலாப்பட்டில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்த தம்பதியினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை பெரிய காலாப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது42). இவர் சம்பவத்தன்று இரவு தனது 2-வது மனைவி கயல்விழி என்பவருடன் காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    காலாப்பட்டு நவோதயா பள்ளி அருகே வந்த போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சிவக்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சிவக்குமார் மற்றும் கயல்விழி ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

    உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து சிவக்குமாரின் முதல் மனைவி கல்பனா கொடுத்த புகாரின் பேரில் புதுவை வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுவை மாநிலத்தில் இதுவரை 1,19,302 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,16,203 பேர் குணமடைந்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் நேற்று 6,088 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

    இதில் 121 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதுவையில் 93 பேரும், காரைக்காலில் 18 பேரும், ஏனாமில் 5 பேரும், மாகியில் 5 பேரும் இதில் அடங்குவர். 

    தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 77 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், 51 பேர் கதிர்காமம் கொரோனா மருத்துவமனையிலும், 45 பேர் கோவிட் கேர் சென்டர்களிலும் என 246 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    1,081 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். ஒட்டு மொத்தமாக தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,327 பேர் சிகிச்சையில் உள்ளனர். 177 பேர் குணமடைந்துள்ளனர். 

    இந்த நிலையில் கதிர்காமம் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுவை சண்முகாபுரத்தை சேர்ந்த 56 வயதுடைய முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,772 ஆக உயர்ந்துள்ளது. 

    புதுவை மாநிலத்தில் இதுவரை 1,19,302 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,16,203 பேர் குணமடைந்துள்ளனர். 

    இத்தகவல்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    ×