search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் கடல் உள்வாங்கியது
    X
    புதுவையில் கடல் உள்வாங்கியது

    புதுவையில் கடல் உள்வாங்கியது

    புதுவையில் கடல் உள்வாங்கிய தகவல் அறிந்த மக்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பார்வையிட வந்தனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் துறைமுகம் அமைந்த பிறகு கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் கடற்கரையில் மணல் பரப்பு காணாமல் போனது.

    இந்த நிலையில் நேற்று மதியம் வழக்கத்திற்கு மாறாக புதுவை கடல் திடீரென உள்வாங்கியது. சுமார் 100 அடி தூரம் வரை கடல் திடீரென பின்வாங்கியது.

    குறிப்பாக காந்தி சிலை பின்புறம் முதல் துறைமுகம் வரை உள்ள பகுதி வரை உள்வாங்கி காணப்பட்டது. ஆனால், மணற்பரப்பு அதிகளவில் தென்பட்டது கடற்கரைக்கு வந்திருந்த மக்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    சுனாமிக்கான அறிகுறியோ என பீதி அடைந்தனர். மாலை 4 மணி வரை இந்த நிலை நீடித்தது கடல் உள்வாங்கிய தகவல் அறிந்த மக்கள் புதுவையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பார்வையிட வந்தனர். தொடர்ந்து மாலை 4 மணிக்கு மேல் கடல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது.

    இதுகுறித்து கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர் ஆறுமுகம் கூறுகையில், இயற்கைக்கு மாறாக கடலில் நடந்துள்ளதை கடல் உள்வாங்கி சுட்டிக் காட்டுகிறது.

    ஆழ்கடலில் அடுக்குகள் நகர்ந்து கடல் உள்வாங்கி இருக்கலாம். கடல் பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டு அதன் காரணமாகவும் கடல் உள்வாங்கி இருக்கலாம். அதற்கான காரணத்தை ஆராய வேண்டும் என்று கூறினார்.

    Next Story
    ×