search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல் உள்வாங்கியது"

    • கடல் நீர் உள்வாங்கிய 100 அடி தூரம் சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
    • பருவநிலை மாற்றம் காரணமாக கடல் உள்வாங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. நேற்று அதிகாலை முதல் மழை ஓய்ந்த நிலையில் பனிப்பொழிவு தொடங்கியது. இந்த நிலையில் வேதாரண்யம் சன்னதி கடல் காலை முதல் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியது.

    கடல் நீர் உள்வாங்கிய 100 அடி தூரம் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்களும், பொதுமக்களும் கடலில் இறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும், அலைகள் எதுவும் இன்றி கடல் அமைதியாக காணப்பட்டது. கடல் நீர் உள்வாங்கியுள்ளதால் மீனவர்களும், பொதுமக்களும் அச்சம் அடைந்தனர். பருவநிலை மாற்றம் காரணமாக கடல் உள்வாங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    கடல் உள்வாங்கி சேறும், சகதியுமாக காணப்படும் நிலையில் இன்னும் ஓரிரு நாளில் காற்று அதிகமாக வீசினால் அலைகள் எழுந்தவுடன் கடல் ஓரத்தில் உள்ள சேறு கரைந்து சீராகும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.

    • அக்னி தீர்த்த கடற்கரையில் 100 மீட்டர் கடல் உள்வாங்கியது.
    • இதனால் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட வந்த பக்தர்கள் நீராட முடியாமல் அவதிக் குள்ளாகினர்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து சூறை காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் 100 மீட்டர் வரை கடல் உள்வாங்கியது. இதனால் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட வந்த பக்தர்கள் நீராட முடியாமல் அவதிக் குள்ளாகினர்.

    மேலும் உள்வாங்கிய கடல் காரணமாக அந்த பகுதியில் உள்ள பவளப் பாறைகளில் முழுமையாக வெளியே தெரிந்தன. தீர்த்த கடலில் கடல் நீரை கண்ட பக்தர்கள் இன்று தண்ணீறின்றி பாறைகள் தெரிந்ததால் அதிர்ச்சிக்கும் ஆச்சிரியத்திற்கும் உள்ளாகி னர். சமீப காரணமாக தொடர்ந்து கடல் உள்வாங்கி வந்த நிலையில் இன்று அதிகளவில் கடல் உள்வாங்கியதால் உள்ளும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

    • தென்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது.
    • தனுஷ்கோடியில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் தென்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

    தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் தங்களின் படகுகளின் பாதுகாப்பு கருதி துறைமுகங்களில் நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 50 மீட்டர் வரை கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் கரையோரம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் மணலில் சிக்கிக்கொண்டது. இதனை மீட்க முடியாத நிலையில் மீனவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மாலையில் கடல் நீர்மட்டம் உயர்ந்தவுடன் தான் படகை மீட்க முடியும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

    இதேபோல் தனுஷ்கோடியில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது. சூறாவளி காற்று காரணமாக அரிச்சல்முனை-தனுஷ்கோடி சாலையை மணல் மூடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    • கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
    • கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் சீற்றம், நீர் உள்வாங்குவது போன்ற இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    பவுர்ணமி நாளான இன்றும் கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் திடீரென தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்து பாதிக்கப்பட் டது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்த நிலையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. தொடர்ந்து 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு படகு போக்குவரத்து தொடங்கியது. சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்த்தனர். கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனுஷ்கோடி அரிச்சல் முனை, அனந்தராயர் சத்திரம் பகுதிகளில் ராட்சத அலைகள் எழும்பி வருகின்றன.
    • சங்குமால் பகுதியில் கடல் உள்வாங்கியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றின் வேக மாறுபாட்டால் ராமேசுவரம் கடல் பகுதியில் கடந்த 3 நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

    தனுஷ்கோடி அரிச்சல் முனை, அனந்தராயர் சத்திரம் பகுதிகளில் ராட்சத அலைகள் எழும்பி வருகின்றன. இதனால் மீனவர்கள் 3 நாட்களாக கடலுக்கு செல்லாமல் உள்ளனர். கடந்த 3 நாட்களாக அக்னி தீர்த்த கடல் உள்ளிட்ட பகுதிகளில் பகல் வேளைகளில் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இரவில் மீண்டும் சகஜ நிலையை அடைந்தது.

    இந்த நிலையில் இன்று காலை அக்னி தீர்த்த கடல் பகுதியில் 200 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியது. மேலும் பாம்பன், சங்குமால் கடல் பகுதிகளிலும் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் நாட்டுப்படகு மற்றும் பைபர் படகுகள் தரை தட்டி நின்றன.

    ராமேசுவரம் கோவில் அமைந்துள்ள அக்னி தீர்த்த கடல் பகுதியில் 200 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கி காணப்பட்டதால் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படவில்லை. இதனால் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் நீராட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    அமாவாசை, பவுர்ணமியை ஒட்டிய நாட்களில் கடல் உள்வாங்குவது வழக்கமான நிகழ்வு என்றாலும் இந்த முறை 200 மீட்டருக்கும் அதிகமாக கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் புனித நீராட முடியவில்லை. இதே போல சங்குமால் பகுதியில் கடல் உள்வாங்கியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    ×