என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • உப்பளம் தொகுதி வாணரப்பேட்டையில் வலம்புரி சுந்தர விநாயகர் கோவில் உள்ளது.
    • இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி வாணரப்பேட்டையில் வலம்புரி சுந்தர விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக முதல் கட்டமாக ஏற்கனவே இந்து அறநிலைத்துறை மூலம் ரூ. 1¾ லட்சம் நிதியை கென்னடி எம்.எல்.ஏ. பெற்று தந்தார்.

    இந்த நிலையில் 2-வது கட்டமாக கோவில் திருப்பணிக்கு நிதி வழங்க வேண்டும் என்று கென்னடி எம்.எல்.ஏ. முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை விடுத்தார். அதன்படி 2-வது கட்டமாக ரூ. 1¾ லட்சத்திற்கான காசோலையை முதல்-அமைச்சர் ரங்கசாமி கென்னடி எம்.எல்.ஏ.விடம் வழங்கினார்.

    இதனை கோவில் திருப்பணிக்குழு வினரிடம் கென்னடி எம்.எல்.ஏ. அளித்தார். நிகழ்ச்சியின் போது கோவில் நிர்வாகக்குழு கலியபெருமாள் செயலாளர் விஜயன், பொருளாளர் வாசு தொகுதி தி.மு.க. செயலாளர் சக்தி வேல் துணைச்செயலாளர் ராஜி, கிளைச்செயலாளர் செல்வம் மற்றும் காத்தலிங்கம், ராகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒவ்வொரு மாதமும் 4-ம் சனிக்கிழமை மாணவர்கள் புத்தகம் இல்லாமல் பள்ளிக்கு வரலாம்.
    • நீட் தேர்வுக்காக பயிற்சி வகுப்புகள் வல்லுநர்களை கொண்டு சிறப்பாக நடத்தப்பட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பள்ளிகளில் கைவேலை, கலை விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாதத்தில் ஒருநாள் மாணவர்களுக்கு 'நோ பேக் டே' அறிமுகம் செய்யப்படவுள்ளது.

    தெலுங்கானா கவர்னரான தமிழிசை சவுந்தரராஜன் அந்த மாநில பள்ளி மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கும் வகையில் 'நோ பேக் டே' என்ற பெயரில் புத்தக பை இல்லாத தினமாக மாதத்தில் ஒருநாளை அறிவித்துள்ளார்.

    அதன்படி ஒவ்வொரு மாதமும் 4-ம் சனிக்கிழமை மாணவர்கள் புத்தகம் இல்லாமல் பள்ளிக்கு வரலாம்.

    அதேபோல் புதுச்சேரியிலும் மாதத்தில் ஒருநாள் பள்ளி மாணவர்களுக்கும் புத்தக பை இல்லாத தினத்தை கடைபிடிக்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

    அந்நாளில் கை வேலை, கலை விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க அறிவுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடை வழங்குதல், பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரித்தல், டிஜிட்டல் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும். மாணவர்களுக்கான மதிய உணவில் வாரத்தில் 2 நாட்களாவது சிறு தானிய உணவு வழங்க வேண்டும்.

    நீட் தேர்வுக்காக பயிற்சி வகுப்புகள் வல்லுநர்களை கொண்டு சிறப்பாக நடத்தப்பட வேண்டும். பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருப்பதை உடனே ஆய்வு செய்து அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    படிப்பைத் தொடர முடியாமல் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து, அவர்களை பள்ளிக்கு வர ஊக்கப்படுத்த வேண்டும் அரசுப் பள்ளிகளில் பொதுத்தேர்வுகளில் முதல் இடங்களை பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து மாணவர்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    • 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் இறந்தனர்.
    • இதில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கத்தில் 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் இறந்தனர்.

    2 பஸ்களிலும் பயணித்த 80-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    தகவலறிந்த புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. ஜிப்மருக்கு நேரில் வந்து காயமடைந்த வர்களுக்கு தேவையான உதவிளை செய்து டாக்டர்களை சந்தித்து உரிய சிகிச்சை அளிக்க வலியுறுத்தினார்.

    இதனிடையே காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரத்தம் தேவைப்பட்டது. இதனை யடுத்து புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தி.மு.க. இளைஞரணியினருக்கு தகவல் அளித்து ரத்த தானம் செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து ஜிப்மர் மருத்துவனையில் தி.மு.க. இளைஞரணியினர் ரத்த தானம் வழங்கினர்.

    இந்த நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் தமிழக அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கணேசன், கலெக்டர் அருண் நம்புராஜ் ஆகியோருடன் புதுவை எதிர்கட்சி தலைவர் சிவா, மாநில அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து டாக்டர் களிடம் கேட்டறிந்தனர்.

    தொடர்ந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்ததானம் செய்த தி.மு.க. இளைஞரணியினருக்கு தமிழக அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

    • ஏரியின் தெற்கு பகுதியை ரூ.48 லட்சம் செலவில் ஆழப்படுத்தி தூர்வாறுதல் பணிகள் நடைபெற உள்ளது.
    • அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் பூஜை செய்து 100 நாள் வேலை திட்ட பணிகளை தொடங்கி வைத்தனர்

    புதுச்சேரி:

    வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் மங்கலம் தொகுதிக்குட்பட்ட சாத்தமங்கலம் குடுவையாற்றில் ரூ.17 லட்சத்து 14 ஆயிரம் செலவி லும், கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள ஓடைவாக்காலை ரூ.16 லட்சத்து 12 ஆயிரம் செலவிலும், சிவராந்தகம் கிராமத்தில் உள்ள ஏரியின் தெற்கு பகுதியை ரூ.48 லட்சம் செலவில் ஆழப்படுத்தி தூர்வாறுதல் பணிகள் நடைபெற உள்ளது.

    பணிகளை அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் பூஜை செய்து 100 நாள் வேலை திட்ட பணிகளை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சத்தியமூரத்தி, செயற்பொறி யாளர் பாலசுப்ரமணியன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜேந்திரன், உதவிப்பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் தன்ராஜ், பணி ஆய்வாளர் ரங்கராஜ், கிராம திட்ட ஊழியர்கள் வினோத்குமார், மகாதேவி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை அ.ம.மு.க. மாநில அணி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வில்லியனூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
    • வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் ஆகியோர் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை அ.ம.மு.க. மாநில அணி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வில்லியனூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும் தெற்கு மாநில செயலாளருமான யூ.சி. ஆறுமுகம், வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் ஆகியோர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கட்சி வெற்றிக்கு பாடுபடுவது, பூத் கமிட்டி அமைப்பது, வார்டு நிர்வாகிகள் நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நந்தகோபால், ஜெ.பேரவை செயலாளர் காண்டீபன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்கள் சுதாகர், கபிரியேல், தொழிற்சங்க பேரவை செயலாளர் சுரேஷ், இலக்கிய அணி செயலாளர் பாலு, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்சன், மாணவர் அணி செயலாளர் ஜெகதீஷ், இளைஞர் பாசறை செயலாளர் இளம்வழுதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜனதாவிற்கு பிற கட்சிகளை விட சாதகமாக இருப்பது அமலாக்கம், வருமான வரி, சி.பி.ஐ. ஆகிய துறைகள் தான்.
    • அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    நாட்டின் ஒற்றுமைக்காகவும், மக்களை காக்கவும் தியாகம் செய்த கட்சி காங்கிரஸ். புதுவையில் நான் முதலமைச்சராக இருந்த போது மோடி, அமித்ஷா ஆகியோர் கிரண்பேடியை கவர்னராக நியமித்து மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவிடாமல் தடுத்தனர்.

    பொய் குற்றச்சாட்டுகளை அமைச்சர்கள் மீதும், முதல்வர் மீதும் சி.பி.ஐ.க்கு அனுப்பும் பணிகளை செய்து வந்தார். இதேநிலை தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது

    பா.ஜனதாவிற்கு பிற கட்சிகளை விட சாதகமாக இருப்பது அமலாக்கம், வருமான வரி, சி.பி.ஐ. ஆகிய துறைகள் தான். பொய் குற்றச் சாட்டுகளை கூறி எதிர்கட்சிகளை மிரட்டும் வேலையை மோடி, அமித்ஷா செய்து வருகின்றனர்.

    எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும். ஜனநாயகத்தை மதிக்காமல் செயல்படும் மோடி, அமித்ஷாவை தூக்கி எறியும் வகையில், பல மாநிலங்களின் முதல்வர்கள், தலைவர்கள் குழுவாக வருகிற 23-ந் தேதி சந்திக்கும் கூட்டம் நடக்கிறது.

    புதுவை மாநிலத்தில் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தான் இருக்க வேண்டும். அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். ராகுல் பிரதமராக வர வேண்டும். நாகபாம்பை விட கொடியவர்கள் பா.ஜனதாவினர். பா.ஜனதாவை அழிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கவர்னர் தமிழிசை உறுதி
    • பள்ளி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாணவிகளை பள்ளிக்குள் விடமால் கேட்டை மூடி போராட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை பழைய சட்டக்கல்லூரி வளாகத்தில் இயங்கி வந்த சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி கட்டிடம் சிதிலமடைந்துள்ளது.

    இதனால் பள்ளியை கடந்த ஆண்டு குருசுகுப்பம் என்.கே.சி. பள்ளியில் இணைத்தனர். அப்போது அங்கு படித்து வந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களை சமாதானப்படுத்தி பள்ளி கடந்த கல்வியாண்டில் அங்கேயே இயங்கியது. பாரதியார் பள்ளி கட்டிடம் புதுப்பிக்கப்படவில்லை.

    நடப்பு கல்வியாண்டில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளியை கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளிக்கு இடமாற்றம் செய்தனர். இதற்கு பள்ளி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாணவிகளை பள்ளிக்குள் விடமால் கேட்டை மூடி போராட்டம் நடத்தினர். வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளியை திரு.வி.க. பள்ளியில் இணைக்க சம்மதிக்கமாட்டோம்,

    ஷிப்ட் முறையில் இயங்க–வும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகள் மறைமலை அடிகள் சாலையில் அமர்ந்து மறியல் நடத்தினர். அமைச்சர் நமச்சிவாயம் மறியல் செய்த மாணவிகளை சமாதானப்படுத்தினார். தொடர்ந்து பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, தற்காலிகமாக ஓராண்டு மட்டும் பள்ளியை இடமாற்றம் செய்ய ஒப்புதல் பெற்றார்.

    இதன்பிறகு இன்று முதல் வீராமுனிவர் ஆண்கள் பள்ளி கட்டிடத்தில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி இயங்குகிறது. வீரமா–முனிவர் ஆண்கள் பள்ளி மாணவர்கள், திரு.வி.க. பள்ளியோடு இணைத்து ஒரே ஷிப்ட் முறையில் பாடம் படிக்கின்றனர்.

    இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் போராட்டம், இடமாற்றம் குறித்து கேள்விப்பட்ட கவர்னர் தமிழிசை, இன்று வீரமாமுனிவர் பள்ளிக்கு சென்று சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி மாணவிகளை சந்தித்தார். பள்ளி துணை முதல்வர் கவுரி தலைமையில் ஆசிரியர்கள் வரவேற்றனர்.

    அப்போது தங்கள் பள்ளி முழு நேரம் இயங்கவும், கட்டடத்தை இடமாற்றம் செய்ய உதவியை கல்வித்துறை அதிகாரிகளுக்கும், கவர்னருக்கும் மாணவிகள் நன்றி தெரி–வித்த–னர்.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை முதல்தளத்தில் உள்ள பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்பறைகளுக்கு சென்று பார்வையிட்டார். அங்கிருந்த மாணவிகளோடு அமர்ந்து பேசினார். பின்னர் பரிசோதனை கூடத்துக்கு சென்றார். அது பூட்டியிருந்ததால் ஜன்னல் வழியாக பார்வையிட்டு பின் கீழே வந்தார்.

    பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளிக்கு பெண்கள் பள்ளியை மாற்றியது சவாலான சூழ்நிலைதான். அரசு பள்ளிகள், மருத்துவ–மனைகள் மிக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது எண்ணம். குழந்தைகள் படிக்க வேண்டும் என போரா–டியதை பாராட்ட என வந்தேன். பெண்கள் தங்களின் தேவையை உரக்க சொல்லியுள்ளனர். அதற்கான வழியை அரசும், சமுதாயமும் பெற்றுத் தந்துள்ளது. அதற்காக அனைத்திற்கும் போராட வேண்டும் என்பது இல்லை.

    பள்ளி கல்வித்துறையிடம் பரிசோதனைக்கூடம் அமைக்க அறிவுறுத்தியுள்ளேன். அரசு அனைத்து கல்வி நிலையங்களையும் போதிய வசதிகளோடு அமைத்துத்தர வேண்டும்.

    இதில் தனியார் பங்களிப்பும் இருந்தால் நல்லது. அரசு பள்ளிகளை மேம்படுத்த புதுவையை சேர்ந்த தொழிலதிபர்கள் முன்வந்தால் நன்றாக இருக்கும். சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வந்துள்ளோம். டிஜிட்டல் வகுப்பறை ஏற்படுத்த போகிறோம். இவற்றை முன்பே இருந்த ஆட்சியாளர்கள் சரி செய்திருக்க–வேண்டும்.

    போதிய வசதிகள் இல்லா–தது வருத்தம் தரக்கூடியது தான். இருப்பினும் அரசு பள்ளிகளில் அனைத்து வசதிகளும் செய்துதர தனி கவனம் செலுத்தவுள்ளோம். விரைவாக சுப்பிரமணிய பாரதியார் பள்ளியை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தால் புதுவை–யில் கல்வி புரட்சி ஏற்படும். சி.பி.எஸ்.இ. பாடத்தில் தமிழ் நிச்சயம் இருக்கும்.

    இந்த பாடத்திட்டம் தேசியஅளவிலான தேர்வுகளை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும். 75 பள்ளிகளை பார்க்க வேண்டும் என கருதி 50 பள்ளிகளை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளேன். அதில் உள்ள குறைபாடுகளை நான் கூறினேன், அதை சரிசெய்துள்ளனர். இது போதாது. வகுப்பறையில் மாணவர்கள் தரையில் அமர்ந்து சாப்பிடுவது குறித்து கூறினர்.

    அந்த குறை உடனடியாக சரிசெய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் கனவு கண்டு வருகிறோம். அதற்கேற்ப கல்வித்துறையை மேம் படுத்த வேண்டும். தற்போதைய நிலை கவலை–யளிக்கக் கூடியதுதான், வருத்தம் தெரிவிப்பதில் அர்த்தமில்லை. கல்வித்துறை அதிகாரிகளை அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மழை காலத்தில் தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற் கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    புதுவை அரசு மழைக்கால நோய்களை தடுக்க தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது. மழை பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து தமிழக கவர்னர் குறித்து தி.மு.க. வின் முரசொலியில் வெளி யான கருத்து, நடிகர் விஜய் மாணவர்களுக்கு பரிசு வழங்கியது தொடர்பான கேள்விகளுக்கு கவர்னர் தமிழிசை பதிலளிக்க மறுப்பு தெரி–வித்துவிட்டு கிளம்பிச் சென்றார்.

    இதன்பின் சுப்பிரமணிய பாரதியார் பள்ளியையும் கவர்னர் தமிழிசை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளன.
    • கருணாநிதி உருவசிலையை முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மறைந்த தமிழக முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடி மகிழ வேண்டும் என்று தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.

    இதன்படி புதுவை மாநில தி.மு.க. இந்த ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதன் அடிப்படையில் கிளைக் கழகங்கள் தோறும் கட்சிக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டன.

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களை அழைத்து பல்வேறு பொதுக் கூட்டங்கள் நடத்திடவும், ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளன. கருணாநிதி நூற்றாண்டு நிகழ்வுகளின் வரிசையில், (செவ்வாய்கிழமை) திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடைபெறுகிறது.

    பீகார் மாநில முதல்- மந்திரி நிதிஷ்குமார் கலைஞர் கோட்டத்தையும், பீகார் மாநில துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் முத்துவேலர் நூலகத்தையும் திறந்து வைக்கிறார்கள். கருணாநிதி உருவசிலையை முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    தயாளு அம்மாள் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் மோகன் காமேசுவரன் வரவேற்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம், கலைமாமணி மாலதி லஷ்மண் குழுவினரின் பாட்டரங்கம் எனக் காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்வுகளால் கருணாநிதிக்கு திருவாரூரில் புகழ்மாலை சூட்டப்படுகிறது.

    தி.மு.க.வின் வலிமையைக் காட்டும் வகையிலே திருவாரூரில் திறக்கப்படவுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் நமது மாநில கட்சியின் வலிமையை காட்டிட அன்போடு அழைக்கிறேன்.

     காலை 6 மணியளவில் புதுவை மாநில கட்சி நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி நிர்வாகிகள், அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் தலைமைக் கட்சி அலுவலகத்தில் ஒன்றிணைந்து புறப்பட்டு காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்வுகளில் பகை வெல்லும் பட்டாளமாய் - அறம் காக்கும் அணிவகுப்பாய் திரண்டிடுவோம்

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

    • ஏழைகளுக்கு நலத்திட்டம் வழங்கி கொண்டாட்டம்
    • தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும், முல்லா வீதியில் உள்ள தர்காவில் சிறப்பு தொழுகையும் நடந்தது.

    புதுச்சேரி:

    முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு இன்று பிறந்தநாளாகும். ராகுல்காந்தி பிறந்தநாளை நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் காங்கிசார் கொண்டாடினர்.

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் இன்று பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மணக்குள விநாயகர் கோவிலில் ராகுல்காந்தி பேரவை சார்பில் அவர் நீடூழி வாழ வேண்டி, தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்யப்பட்டது.

    தொடர்ந்து புதுவை ரெயில்வே நிலையம் எதிரே உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும், முல்லா வீதியில் உள்ள தர்காவில் சிறப்பு தொழுகையும் நடந்தது.

    நிகழ்ச்சிகளில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தி யநாதன் எம்.எல்.ஏ, ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாலன், அனந்தராமன், நீலகங்காதரன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் அப்துல் ரகுமான், தனுசு, இளையராஜா,

    எஸ்.எம்.ஏ.கருணாநிதி, காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர் வினோத், திருமுருகன், பிரதீஷ், பாபுலால், ராஜகுமார் தியாகராஜன் ஈரம் பவுண்டேஷன் ராஜேந்தி ரன, வட்டார காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம், ஆனந்த் பாபு, ராகுல்காந்தி பேரவை தலைவர் ஆர்.இ.சேகர், வக்கீல் பிரிவு தலைவர் மருது பாண்டியன், வக்கீல்கள் ராமலிங்கம் பாலமுருகன், சாரதி கார்த்திகேயன், ஜார்ஜ, செந்தில், முத்து, சார்லஸ், ஜோசப் சகாயம், ஆல்பர்ட், கிஷோர், மஞ்சினி, கோபால் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    தொடர்ந்து வட்டார காங்கிரஸ் சார்பில் ரத்ததானம், அன்னதானம், மாணவர்களுக்கு எழுது பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கி கொண்டா டப்பட்டது.

    • பிரதமர் மோடியின் தாயார் பிறந்தநாளையொட்டி நடைபெற்றது.
    • இதில் சாதனையாளர் பரத்ராஜ், ரதிவர்தினி, பிரஜித், தமிழரசன் மற்றும் கிளை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா கட்சியின் மாநில கூட்டுறவு அமைப்பாளரும், முதலியார்பேட்டை கேந்திர பொறுப்பாளர் மற்றும் உப்பளம் தொகுதி பொறுப்பாளருமான வெற்றிச்செல்வம் தலைமையில் அவரது இல்லத்தில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது.

    மேலும் பிரதமர் மோடியின் தாயார் பிறந்தநாளையொட்டி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், எழுதி பொருட்கள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிகளில் மூத்த தொழிற்சங்க தலைவர் கந்தசாமி, கிளை நிர்வாகிகள் ஆனந்தன், பலராமன், மணி, ஓவியர் பாஸ்கரன், சாதனையாளர் பரத்ராஜ், ரதிவர்தினி, பிரஜித், தமிழரசன் மற்றும் கிளை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
    • இந்த ஆண்டு பருவ தேர்வுகள் இதுவரை நடத்தப்படாமல் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    புதுவை பல்கலை கழக உறுப்பு கல்லூரிகளில் புதுச்சேரி, காரைக் கால்,மாகி, ஏனம் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    ஆண்டுதோறும் பருவ தேர்வு மே மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டு, ஜூன் மாத இறுதியில் முடிவுகள் அறிவிக்கபடுவது வழக்கம். இந்த ஆண்டு பருவ தேர்வுகள் இதுவரை நடத்தப்படாமல் உள்ளது.

    பல்கலைக்கழகம் சார்பில் உரிய விளக்கம் அளிக்கவில்லை. இறுதி ஆண்டு பருவ தேர்வு முடித்து, கேம்பஸ் இன்டர்வியூ எனப்படும் வளாக நேர்காணலில் திறமை மிக்க மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டு விட்டன.

    தேர்வுகள் நடத்தப் படாமல் உள்ளதால் மாணவர்கள் பணியில் சேர முடியாமல் வேலை வாய்ப்பை இழக்கும் சூழலை புதுவை பல்கலைக்கழக நிர்வாகம் உருவாக்கி உள்ளது.

    பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் செயல் படுவது மிகவும் கண்டனத்திற்குரியது. பல்கலைக்கழக நிர்வாகம் மிக துரிதமாக செயல்பட்டு காலதாமதம் செய்யாமல் உடனடியாக தேர்வுகளை நடத்த வேண்டும். முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு தேர்வுகளை நடத்த பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவர் கோ.பாரதி தலைமை தாங்கினார்.
    • கவியரங்கத்தில் 47 கவிஞர்கள் கலந்து கொண்டு கவிதை வாசித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது.

    உலக சுற்றுலா பிக்னிக் நாளை முன்னிட்டு புரட்சிக்கவிஞரும் சுற்றுலாவும் என்ற தலைப்பில் நடைபெற்றது. விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவர் கோ.பாரதி தலைமை தாங்கினார்.

    விழாவில் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாள் கலந்து கொண்டு வாழ்த்துரை ஆற்றினார். செயலர் வள்ளி, லட்சுமிதேவி, கிருஷ்ண குமார், சசிகுமார், மீனாட்சிதேவி கணேஷ், ரமேஷ் பைரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    "உலா வருவோம் உலகை!" என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்தில் 47 கவிஞர்கள் கலந்து கொண்டு கவிதை வாசித்தனர். 10 திருக்குறள் சொல்லும் 20 மாணவர்கள் பாராட்ட பட்டனர்.

    இதைதொடர்ந்து பாவேந்தர் பாரதிதாசனின் நீடித்தப் புகழுக்குக் காரணம் தமிழுணர்வே! பகுத்தறிவே! என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது. வேணு கோபால் நடுவராகப் பேசினார்.

    தண்டபாணி, பால சுப்பிரமணியன், ஜெயந்தி ராஜவேலு, விசாலாட்சி, இளவரசி சங்கர், அன்பு நிலவன் வாதிட்டனர். முன்னதாக கவிஞர் ராஜேஷ் வரவேற்றார்.முடிவில் பிரமீளா மேரி நன்றி கூறினார்.

    ×