என் மலர்
புதுச்சேரி
- சி.சி.டி.வி. கேமராக்கள் இல்லாதாதல் உடனடியாக திருடர்களை பிடிக்க முடி யாமல் போலீசார் அவதிப்பட்டு வருகின்றனர்.
- அவர்களிடம் வீடியோ காட்சிகளை கேட்டு கெஞ்சும் அவல நிலை உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் குற்றங்களை தடுக்க மதகடிப்பட்டு , திருபுவனை, திருவாண்டார் கோவில் ஆகிய பகுதியில் உள்ள சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் விழுப்புரம்-நாகப்பட்டி னம் 4 வழிச்சாலை விரி வாக்கப் பணிக்காக இந்த கண்காணிப்பு கேமராக்கள் அகற்றப்பட்டது. அதன் பிறகு மீண்டும் அப்பகுதியில் பொருத்தப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் இதனை பயன்படுத்தி திருபுவனை பகுதியில் குறிவைத்து பட்டப்பகலிலேயே மோட்டார் சைக்கிள்களை திருடிச் செல்வது அதிகரித்து வருகிறது. தற்போது சி.சி.டி.வி. கேமரா இல்லாதது அவர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.
திருவாண்டார்கோயில் ஜெயராணி என்பவரின் வீட்டு முன்பு சாவியோடு நிறுத்தியிருந்த பைக்கை மர்ம ஆசாமிகள் பட்டப்பக லிலேயே திருடிச் சென்றனர்.
அதுபோல் கடந்த 14-ந் தேதி இரவு மதகடிப்பட்டு-மடுகரை சாலையில் தனியார் கம்பெனி அதிகாரி யின் மோட்டார் சைக்கிளும் திருடு போனது.
மேலும் மதகடிப்பட்டில் செவ்வாய்கிழமை தோறும் நடைபெறும் வார சந்தையில் மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு திருட்டுக்கள் நடைபெற்று வருகிறது.
சி.சி.டி.வி. கேமராக்கள் இல்லாதாதல் உடனடியாக திருடர்களை பிடிக்க முடி யாமல் போலீசார் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் திருட்டில் பொருட்களை பறிகொடுத்த வர்கள் புகார் அளிக்க சென்றால் அப்பகுதியில் ஏதேனும் சி.சி.டி.வி. கேமரா இருக்கின்றதா பார்த்து அதன் காட்சிகளை பெற்று வரும்படியும் கூறி அனுப்புகின்றனர்.
இதனால் பொருட்களை பறிகொடுத்தவர்கள் சி.சி.டி.வி. வீடியோவிற்காக தங்கள் பொருட்கள் திருடு போன இடத்தில் எந்த கடை யில் சி.சி.டி.வி. கேமரா உள்ளது எனப்பார்த்து அவர்களிடம் வீடியோ காட்சிகளை கேட்டு கெஞ்சும் அவல நிலை உள்ளது.
எனவே திருபுவனை பகுதியில் தொடரும் மோட்டார் சைக்கிள் திருட்டை தடுக்க மதகடிப்பட்டு நுழைவு வாயில், 4 முனை சந்திப்பு, திருபுனை, திருவாண்டார்கோயில் இடங்களில் மீண்டும் சி.சி.டி.வி. கேமராக்களை உடனடியாக அமைக்க எடுக்க வேண்டும் என்று திருபுவனை தொகுதி மக்கள் காவல்துறைக்கு வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
- இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- மீன்மார்க்கெட் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
உப்பளம் அம்பேத்கர் சிலை அருகே மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு துறைமுகம் செல்லும் பாதையில் வியாபாரம் செய்ய நகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வாகனங்களை சாலை களில் தாறுமாறாக நிறுத்தி மீன் வாங்குவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இதையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.2 ½ கோடியில் தேங்காய்திட்டு செல்லும் சாலையில் உள்ள காலி இடத்தில் மீன் மார்க்கெட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு ஆய்வு நடந்தது. விரைவில் மீன்மார்க்கெட் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட உள்ளது.
- எதிர்கட்சி தலைவர் சிவா வழங்கினார்.
- பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், தி.மு.க. நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர், கொம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவச பள்ளிச் சீருடை மற்றும் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் இன்று காலை நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் வாசு தலைமை தாங்கினார். ஆசிரியர் அப்துல் மாலிக் வரவேற்றார. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை மற்றும் சைக்கிள்களை வழங்கினார்.
இதில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், தி.மு.க. நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி நிறைவில் ஆசிரியர் பூங்குன்றன் நன்றி கூறினார்.
- ஸ்ரீ ராமச்சந்திரா செவிலியர் கல்லூரியின் முதல்வர் நளினி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
- இதில் ஏராளமான செவிலிய பேராசிரியர்கள், செலவி லியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
பாகூர், ஜூன்.19-
ஸ்ரீபாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழகத்தின் கீழ் பிள்ளையார்குப்பத்தில் இயங்கும் மகாத்மாகாந்தி மருத்துவ கல்லூரி வளாகத்தில் கஸ்தூரிபாய் காந்தி செவிலியர் கல்லூரி உள்ளது.
இக்கல்லூரியில் செவிலிய ஆராச்சியை வெற்றிகரமாக மாற்று வதற்கான வழிதடங்கள் என்ற தலைப்பில் தேசிய மாநாடு நடைபெற்றது.
நிகழச்சிக்கு ஸ்ரீபாலாஜி வித்யாபீத் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நிஹார் ரஞ்சன் பிஸ்வாஸ் தலைமை தாங்கி உரையாற்றினார். ஸ்ரீ ராமச்சந்திரா செவிலியர் கல்லூரியின் முதல்வர் நளினி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.
கிறிஸ்டியன் செவிலியர் கல்லூரியின் பேராசிரியர் மனோரஞ்சிதம் சத்தியசீலன் கவுரவ விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
இந்த தேசிய மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள செவிலியர் கல்லூரிகளில் இருந்து செவிலியர் நிபுணர்கள், பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். இதில் ஏராளமான செவிலிய பேராசிரியர்கள், செலவிலியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
முன்னதாக கஸ்தூரி பாய்காந்தி செவிலியர் கல்லூரி பேராசிரியை கீதா வரவேற்புரையாற்றினார். முடிவில் பேராசிரியை ஆனிஅன்னாள் நன்றி கூறினார்.
- வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளிக்கு பெண்கள் பள்ளியை மாற்றியது சவாலான சூழ்நிலைதான்.
- அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் மிக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது எண்ணம்.
புதுச்சேரி:
புதுவை பழைய சட்டக்கல்லூரி வளாகத்தில் இயங்கி வந்த சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி கட்டடம் சிதிலமடைந்துள்ளது.
இதனால் பள்ளியை கடந்த ஆண்டு குருசுகுப்பம் என்.கே.சி. பள்ளியில் இணைத்தனர். அப்போது அங்கு படித்து வந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களை சமாதானப்படுத்தி பள்ளி கடந்த கல்வியாண்டில் அங்கேயே இயங்கியது. பாரதியார் பள்ளி கட்டடம் புதுப்பிக்கப்படவில்லை.
நடப்பு கல்வியாண்டில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளியை கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளிக்கு இடமாற்றம் செய்தனர். இதற்கு பள்ளி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாணவிகளை பள்ளிக்குள் விடமால் கேட்டை மூடி போராட்டம் நடத்தினர். வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளியை திரு.வி.க. பள்ளியில் இணைக்க சம்மதிக்கமாட்டோம், ஷிப்ட் முறையில் இயங்கவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகள் மறைமலை அடிகள் சாலையில் அமர்ந்து மறியல் நடத்தினர். அமைச்சர் நமச்சிவாயம் மறியல் செய்த மாணவிகளை சமாதானப்படுத்தினார். தொடர்ந்து பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, தற்காலிகமாக ஓராண்டு மட்டும் பள்ளியை இடமாற்றம் செய்ய ஒப்புதல் பெற்றார்.
இதன்பிறகு இன்று முதல் வீராமுனிவர் ஆண்கள் பள்ளி கட்டடத்தில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி இயங்குகிறது. வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளி மாணவர்கள், திரு.வி.க. பள்ளியோடு இணைத்து ஒரே ஷிப்ட் முறையில் பாடம் படிக்கின்றனர்.
இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் போராட்டம், இடமாற்றம் குறித்து கேள்விப்பட்ட கவர்னர் தமிழிசை, இன்று வீரமாமுனிவர் பள்ளிக்கு சென்று சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி மாணவிகளை சந்தித்தார். பள்ளி துணை முதல்வர் கவுரி தலைமையில் ஆசிரியர்கள் வரவேற்றனர்.
அப்போது தங்கள் பள்ளி முழு நேரம் இயங்கவும், கட்டடத்தை இடமாற்றம் செய்ய உதவிய கல்வித்துறை அதிகாரிகளுக்கும், கவர்னருக்கும் மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.
தொடர்ந்து கவர்னர் தமிழிசை முதல்தளத்தில் உள்ள பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்பறைகளுக்கு சென்று பார்வையிட்டார். அங்கிருந்த மாணவிகளோடு அமர்ந்து பேசினார். பின்னர் பரிசோதனை கூடத்துக்கு சென்றார். அது பூட்டியிருந்ததால் ஜன்னல் வழியாக பார்வையிட்டு பின் கீழே வந்தார்.
பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளிக்கு பெண்கள் பள்ளியை மாற்றியது சவாலான சூழ்நிலைதான். அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் மிக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது எண்ணம். குழந்தைகள் படிக்க வேண்டும் என போராடியதை பாராட்ட வந்தேன். பெண்கள் தங்களின் தேவையை உரக்க சொல்லியுள்ளனர். அதற்கான வழியை அரசும், சமுதாயமும் பெற்றுத் தந்துள்ளது.
அதற்காக அனைத்திற்கும் போராட வேண்டும் என்பது இல்லை.
பள்ளி கல்வித்துறையிடம் பரிசோதனைக்கூடம் அமைக்க அறிவுறுத்தியுள்ளேன். அரசு அனைத்து கல்வி நிலையங்களையும் போதிய வசதிகளோடு அமைத்துத்தர வேண்டும்.
சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டு வந்துள்ளோம். டிஜிட்டல் வகுப்பறை ஏற்படுத்த போகிறோம். இவற்றை முன்பே இருந்த ஆட்சியாளர்கள் சரி செய்திருக்கவேண்டும்.
போதிய வசதிகள் இல்லாதது வருத்தம் தரக்கூடியதுதான். இருப்பினும் அரசு பள்ளிகளில் அனைத்து வசதிகளும் செய்துதர தனி கவனம் செலுத்தவுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழக கவர்னர் குறித்து தி.மு.க.வின் முரசொலியில் வெளியான கருத்து, நடிகர் விஜய் மாணவர்களுக்கு பரிசு வழங்கியது தொடர்பான கேள்விகளுக்கு கவர்னர் தமிழிசை பதிலளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டு கிளம்பிச் சென்றார்.
இதன்பின் சுப்பிரமணிய பாரதியார் பள்ளியையும் கவர்னர் தமிழிசை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தங்கள் பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கேட்டு சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி மாணவிகள் மறைமலை அடிகள் சாலையில் தரையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
இந்த மறியல் போராட்டத்தின்போது பிளஸ்-2 மாணவி சகானா கடுமையாக கோஷம் எழுப்பினார். அமைச்சர் நமச்சிவாயத்திடமும், 2 ஆண்டாக அலைக்கழிக்கப்படுவதை எடுத்துக்கூறி ஆவேசமாக பேசினார். இன்று கவர்னர் தமிழிசை மாணவிகளை சந்தித்தபோது, பிளஸ்-2 வகுப்பறையில் இருந்த மாணவி சகானாவை அடையாளம் காட்டினர். அவரை கவர்னர் அழைத்தார்.
அவரை அழைத்து, உங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்தியது நியாயமானது, விரைவில் நிரந்தர கட்டிடம் கிடைக்கும் என அவரின் தோளில் தட்டி பாராட்டினார்.
அப்போது சக மாணவிகளும் கை தட்டி வரவேற்றனர்.
- புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து திரும்பியபோது பைக்கில் ஜாலியாக சென்றது தெரியவந்தது.
- தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி அந்த வாலிபர் அங்கிருந்த இரும்பு கேட்டில் முகத்தை வேகமாக இடித்துகொண்டார்.
புதுச்சேரி:
புதுவை-கடலூர் சாலையில் அதிகாலையில் வாலிபர் ஒருவரும், இளம்பெண்ணும் பைக்கில் நெருங்கியவாறு உட்கார்ந்து சென்றனர். பைக்கில் சென்ற அவர்கள் மற்ற வாகனங்களுக்கு வழி விடாமல் சென்றனர்.
பைக்கின் பின்னால் அமர்ந்து வந்த இளம் பெண்ணுக்கு முத்தம் கொடுத்தபடியும் சில்மிஷத்தில் ஈடுபட்டவாறும் வாலிபர் பைக் ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போது மணவெளி ரோடு சந்திப்பில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். பைக்கில் வாலிபரும், இளம்பெண்ணும் சில்மிஷத்தில் ஈடுபட்டவாறு ஜாலியாக வருவதை கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாலிபர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்தவர் அவரது தோழி என்பதும் தெரியவந்தது.
அவர்கள் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து திரும்பியபோது பைக்கில் ஜாலியாக சென்றது தெரியவந்தது.
அந்த வாலிபர் குடிபோதையில் இருந்தார். போலீசாரிடம் வாக்குவாதம் செய்த அவர் அவ்வழியே வந்த வாகனங்கள் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார்.
இதையடுத்து போலீசார் வாலிபரையும், அவரது தோழியையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி அந்த வாலிபர் அங்கிருந்த இரும்பு கேட்டில் முகத்தை வேகமாக இடித்துகொண்டார்.
இதில் காயமடைந்த வாலிபரை போலீசார் அழைத்து சென்று அரியாங்குப்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோட்டக்குப்பம் போலீஸ் சூப்பிரண்டு சுனில், ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
- தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
சேதராப்பட்டு:
புதுச்சேரி லாஸ்பேட்டை அடுத்த நாவற்குளம் முல்லை வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 46).
இவர் கடந்த 20 ஆண்டுகளாக திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி வளாக கட்டிடத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு நகை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் நாள்தோறும் வருவது வழக்கம். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் கடை திறக்கப்படவில்லை.
இந்நிலையில் பள்ளியின் வளாக வீட்டில் வசித்து வருபவர்கள் இன்று அதிகாலை நகைக் கடையின் பின்பக்க சுவர் துளையிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடையின் உரிமையாளருக்கும், ஆரோவில் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கோட்டக்குப்பம் போலீஸ் சூப்பிரண்டு சுனில், ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
கடையின் உரிமையாளர் செந்தில்குமாரும் அங்கு வந்தார். நகை கடையில் பின்பக்க சுவர் துளையிட்டு இருப்பதையும் கடைக்குள் இருக்கும் நகைகள் ஏதாவது கொள்ளையடிக்கப் பட்டுள்ளதா என்பதை பார்வையிட்டனர்.
கடையின் சுவற்றை ஆயுதங்கள் மூலம் துளையிட்ட மர்ம நபர்கள் கியாஸ் வெல்டிங் மிஷின் மூலம் கடைக்குள் இருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். லாக்கர் வலிமையாக இருந்ததால் அதனை கொள்ளையர்களால் உடைக்க முடியவில்லை. இதனால் கடையில் இருந்த பல கோடி மதிப்பிலான நகைகள் தப்பியது.
இதையடுத்து தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- புதுவை காங்கிரசில் நிலவும் கோஷ்டி பூசலை சமாளிக்க சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது.
- ஹோமத்தில் வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அவரது உதவியாளர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக ஏ.வி. சுப்பிரமணியன் இருந்து வந்தார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அகில இந்திய காங்கிரஸ் தலைமை, அவரது ராஜினாமாவை ஏற்கவில்லை. தொடர்ந்து ஏ.வி. சுப்பிரமணியன் காங்கிரஸ் தலைவராக நீடித்து வந்தார்.
இந்நிலையில் புதுவை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் மாநிலத் தலைவர் பதவிகேட்டு, அகில இந்திய தலைமையிடம் அணுகி வந்தனர். அதில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி, காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
பதவிக்காக காங்கிரஸ் தலைமைக்கு ஒருவர் மீது ஒருவர் பல்வேறு புகார்களை அனுப்பி வந்தனர். இதனால் மாநிலத் தலைவர் நியமனம் நீண்டுக் கொண்டே சென்றது. இறுதியில் 3 பேர் கொண்ட பட்டியலை காங்கிரஸ் தயாரித்தது.
பட்டியலில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் மட்டும் இடம் பெற்றனர். இவர்களில் வைத்திலிங்கம் எம்.பி.யை காங்கிரஸ் தலைமை தேர்வு செய்தது. இதற்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியும், ஒருங்கி ணைப்பாளர் தேவதாசும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து புதுவை காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி.யை நியமித்து கடந்த 9-ம் தேதி அறிவிப்பு வெளியானது.
காங்கிரஸ் தலைவராக இன்று மாலை பொறுப்பு ஏற்க உள்ள வைத்திலிங்கம் எம்.பி.க்கு, கூட்டணிக் கட்சி, எதிர்க் கட்சிகளை சமாளிப்பதை விட காங்கிரஸின் உட்கட்சி பூசலை சமாளிப்பதே பிரம்ம பிரயட்தனமாக இருக்கும் என கருதப்படு கிறது.
இதனிடையே புதுவை காங்கிரசில் நிலவும் கோஷ்டி பூசலை சமாளிக்க வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது.
ஹோமத்தில் வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அவரது உதவியாளர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
- படப்பிடிப்பில் பங்கேற்கும் ரஜினி புதுவையின் பிரபல ஓட்டலில் தங்கி உள்ளார்.
- படப்பிடிப்புக்கு இடையில் ரஜினியை முக்கிய பிரமுகர்கள் பலரும் சந்திக்க பல வழிகளிலும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
புதுச்சேரி:
லைகா நிறுவனம் தயாரிக்கும் 'லால் சலாம்' என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.
'லால் சலாம்' திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இதன் முதல்கட்ட படிப்பிடிப்பு ஏற்கனவே மும்பை, திருவண்ணாமலையில் நடந்து முடிந்துள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு புதுவையில் பல இடங்களில் நடத்தப்படுகிறது. புதுவை ரோடியர் மில், சுதேசிமில் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
கடந்த 1992-ம் ஆண்டு வெளியான ரஜினியின் 'பாண்டியன்' படத்தின் படப்பிடிப்பு புதுவை கடற்கரை சாலையில் நடந்தது. அப்போது பெருமளவில் ரசிகர்கள் திரண்டனர். அதன் பிறகு தற்போது புதுவையில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.
ரசிகர்கள் கூடுவதை தவிர்க்க படப்பிடிப்பு குழுவினர் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சி, இடம் ஆகியவற்றை ரகசியமாக வைத்துள்ளனர். அதிலும் ரஜினிகாந்த் படப்பிடிப்பு நடைபெறும் பகுதிக்கு மக்கள் அறியாத வண்ணம் வந்து காட்சிகளை நடித்து கொடுக்கிறார்.
படப்பிடிப்பில் பங்கேற்கும் ரஜினி புதுவையின் பிரபல ஓட்டலில் தங்கி உள்ளார். அங்கு படப்பிடிப்புக்கு இடையில் ரஜினியை முக்கிய பிரமுகர்கள் பலரும் சந்திக்க பல வழிகளிலும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதில் சிலரை ரஜினி சந்திக்கிறார்.
ரஜினி தன்னை சந்திப்பவர்களிடம் பாண்டியன் படப்பிடிப்புக்கு பிறகு புதுவையில் ஏற்பட்டுள்ள பிரமாண்ட மாற்றம், வளர்ச்சி பற்றி வியப்புடன் விசாரித்துள்ளார்.
நேற்று மாலை புதுவை சட்டமன்ற சபாநாயகர் செல்வம் தனது மகள் ஜனனியுடன் ரஜினிகாந்தை ஒட்டலில் சந்தித்தார்.
அப்போது ரஜினி சபாநாயகர் செல்வத்திடம் நலம் விசாரித்துள்ளார். தொடர்ந்து ஜனனியிடம் என்ன படிக்கிறார் என விசாரித்துள்ளார். அவர் மருத்துவ முதுகலை படிப்பதை அறிந்து ரஜினி அவரை பாராட்டியுள்ளார்.
பின்னர், புதுவையின் அரசியல் நிலவரம் குறித்து ரஜினிகாந்த் கேட்டறிந்தார். புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியை பற்றி கேட்டறிந்த அவர் மிக எளிமையான முதல்-அமைச்சர் என கேள்விபட்டுள்ளதாக ரஜினிகாந்த் சபாநாயகர் செல்வத்திடம் தெரிவித்துள்ளார்.
- 141 யூனிட் ரத்தம் விழுப்புரம் மருத்துவக் கல்லுாரிக்கு தானமாக அளிக்கப்பட்டது.
- நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கருணாகரன் மற்றும் பேராசிரியர்கள் செய்தனர்.
புதுச்சேரி:
உலக தன்னார்வ ரத்த கொடையாளர்கள் தினத்தையொட்டி, மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லுாரியில் ரத்ததான முகாம் நடந்தது.
மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லுாரி, இந்திய மருத்துவ சங்கம் விழுப்புரம் கிளை, விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுாரி ரத்த வங்கி, இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் நடந்த முகாமை, கல்லுாரி இயக்குனர் வெங்கடாஜலபதி தொடங்கி வைத்தார்.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர். மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லுாரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், டீன்கள் அன்புமலர், அறிவழகர், வேல்முருகன், கோபால், முகமது யாசின், சிதம்பரம், சந்திரசேகர், ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் முதல்வர் மனோகரன் பங்கேற்றனர்.
தன்னார்வலர்கள் அளித்த 141 யூனிட் ரத்தம் விழுப்புரம் மருத்துவக் கல்லுாரிக்கு தானமாக அளிக்கப்பட்டது.
இந்திய மருத்துவ சங்க விழுப்புரம் கிளை நிர்வாகிகள் திருமாவளவன், தங்கராஜ், சவுந்தர்ராஜன், செல்வக்குமார். செஞ்சிலுவை சங்கம் பிரிவு பொறுப்பாளர் சிவகங்கா, டாக்டர் கவிப்பிரியா, சுகாதார ஆய்வாளர் பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கருணாகரன் மற்றும் பேராசிரியர்கள் செய்தனர்.
- புதிய தலைவராக வைத்திலிங்கம் எம்.பி. நாளை பதவி ஏற்கிறார்
- பதவிக்காக காங்கிரஸ் தலைமைக்கு ஒருவர் மீது ஒருவர் பல்வேறு புகார்களை அனுப்பி வந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக ஏ.வி. சுப்பிரமணியன் இருந்து வந்தார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அகில இந்திய காங்கிரஸ் தலைமை, அவரது ராஜினாமாவை ஏற்கவில்லை. தொடர்ந்து ஏ.வி. சுப்பிரமணியன் காங்கிரஸ் தலைவராக நீடித்து வந்தார்.
இந்த நிலையில் புதுவை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் மாநிலத் தலைவர் பதவிகேட்டு, அகில இந்திய தலைமையிடம் அணுகி வந்தனர்.அதில், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி, காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள்
எம்.எல்.ஏ.அனந்தராமன் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
பதவிக்காக காங்கிரஸ் தலைமைக்கு ஒருவர் மீது ஒருவர் பல்வேறு புகார்களை அனுப்பி வந்தனர். இதனால் மாநிலத் தலைவர் நியமனம் நீண்டுக்கொண்டே சென்றது. இறுதியில் 3 பேர் கொண்ட பட்டியலை காங்கிரஸ் தயாரித்தது.
பட்டியலில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் மட்டும் இடம் பெற்றனர். இவர்களில் வைத்திலிங்கம் எம்பியை காங்கிரஸ் தலைமை தேர்வு செய்தது. இதற்கு முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமியும், ஒருங்கி ணைப்பாளர் தேவதாசும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து புதுவை காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி.யை நியமித்து கடந்த 9-ம் தேதி அறிவிப்பு வெளியானது.
காங்கிரஸ் தலைவராக நாளை திங்கட்கிழமை பொறுப்பு ஏற்க உள்ள வைத்திலிங்கம் எம்.பி.க்கு, கூட்டணிக் கட்சி, எதிர்க் கட்சிகளை சமாளிப்பதை விட காங்கிரஸின் உட்கட்சி பூசலை சமாளிப்பதே பிரம்ம பிரயட்தனமாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்த நிலையில் நாளை மாலை 3 மணியளவில் ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள பதவி ஏற்பு விழாவில் வைத்திலிங்கம் எம்.பி புதிய காங்கிரஸ் தலைவராக பதவியேற்க உள்ளார்.
இந்த விழாவில் புதுவை காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளரும், கர்நாடக மந்திரியுமான தினேஷ் குண்டுராவ் பங்கேற்கிறார்.
முன்னதாக நாளை வைத்திலிங்கம் எம்.பி. பொறுப்பேற்ற பிறகு முதல் நிகழ்வாக ராகுல்காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது.
இதனிடையே புதுவை காங்கிரசில் நிலவும் கோஷ்டி பூசலை சமாளிக்க வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று அதிகாலை ஹோமம் நடந்தது.
ஹோமத்தில் வைத்திலிங்கம் எம்.பி மற்றும் அவரது உதவியாளர்கள் மட்டுமே பங்கேற்றனர். கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டுள்ளது.
- சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
- வளர்ச்சி பணிகள் மற்றும் அதன் விவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:
வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரி களுடன் சட்ட சபையில் உள்ள வேளாண்துறை அமைச்சர் அலுவலகத்தில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை நடத்தினார்.
கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் ரங்க மன்னர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மங்கலம் தொகுதி சேர்ந்த உதவியாளர் திருக்காஞ்சி கணுவாப்பேட்டை, பங்கூர், அரியூர் ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் பூஜைகள் செய்து பணிகள் தொடங்கப்படாமல் உள்ள இடங்கள் பற்றியும் அதற்கான காரணம் குறித்தும் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கேட்டறிந்தார்.
பிறகு அடுத்த கட்டமாக மங்களம் தொகுதியில் நடைபெறவிருக்கும் தொகுதி வளர்ச்சி பணிகள் மற்றும் அதன் விவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.






