என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thefts"

    • சி.சி.டி.வி. கேமராக்கள் இல்லாதாதல் உடனடியாக திருடர்களை பிடிக்க முடி யாமல் போலீசார் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • அவர்களிடம் வீடியோ காட்சிகளை கேட்டு கெஞ்சும் அவல நிலை உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் குற்றங்களை தடுக்க மதகடிப்பட்டு , திருபுவனை, திருவாண்டார் கோவில் ஆகிய பகுதியில் உள்ள சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் விழுப்புரம்-நாகப்பட்டி னம் 4 வழிச்சாலை விரி வாக்கப் பணிக்காக இந்த கண்காணிப்பு கேமராக்கள் அகற்றப்பட்டது. அதன் பிறகு மீண்டும் அப்பகுதியில் பொருத்தப்படாமல் உள்ளது.

    இந்த நிலையில் இதனை பயன்படுத்தி திருபுவனை பகுதியில் குறிவைத்து பட்டப்பகலிலேயே மோட்டார் சைக்கிள்களை திருடிச் செல்வது அதிகரித்து வருகிறது. தற்போது சி.சி.டி.வி. கேமரா இல்லாதது அவர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.

    திருவாண்டார்கோயில் ஜெயராணி என்பவரின் வீட்டு முன்பு சாவியோடு நிறுத்தியிருந்த பைக்கை மர்ம ஆசாமிகள் பட்டப்பக லிலேயே திருடிச் சென்றனர்.

    அதுபோல் கடந்த 14-ந் தேதி இரவு மதகடிப்பட்டு-மடுகரை சாலையில் தனியார் கம்பெனி அதிகாரி யின் மோட்டார் சைக்கிளும் திருடு போனது.

    மேலும் மதகடிப்பட்டில் செவ்வாய்கிழமை தோறும் நடைபெறும் வார சந்தையில் மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு திருட்டுக்கள் நடைபெற்று வருகிறது.

    சி.சி.டி.வி. கேமராக்கள் இல்லாதாதல் உடனடியாக திருடர்களை பிடிக்க முடி யாமல் போலீசார் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் திருட்டில் பொருட்களை பறிகொடுத்த வர்கள் புகார் அளிக்க சென்றால் அப்பகுதியில் ஏதேனும் சி.சி.டி.வி. கேமரா இருக்கின்றதா பார்த்து அதன் காட்சிகளை பெற்று வரும்படியும் கூறி அனுப்புகின்றனர்.

    இதனால் பொருட்களை பறிகொடுத்தவர்கள் சி.சி.டி.வி. வீடியோவிற்காக தங்கள் பொருட்கள் திருடு போன இடத்தில் எந்த கடை யில் சி.சி.டி.வி. கேமரா உள்ளது எனப்பார்த்து அவர்களிடம் வீடியோ காட்சிகளை கேட்டு கெஞ்சும் அவல நிலை உள்ளது.

    எனவே திருபுவனை பகுதியில் தொடரும் மோட்டார் சைக்கிள் திருட்டை தடுக்க மதகடிப்பட்டு நுழைவு வாயில், 4 முனை சந்திப்பு, திருபுனை, திருவாண்டார்கோயில் இடங்களில் மீண்டும் சி.சி.டி.வி. கேமராக்களை உடனடியாக அமைக்க எடுக்க வேண்டும் என்று திருபுவனை தொகுதி மக்கள் காவல்துறைக்கு வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    ×