என் மலர்
புதுச்சேரி
- மாநில துணைத்தலைவர்கள் பொதுச் செயலாளர், மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
- துவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் பி. கே. தேவதாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி:
ராகுல் காந்திக்கு நாளை திங்கட்கிழமை 53-வது பிறந்தநாள்.
ராகுலின் பிறந்தநாளை முன்னிட்டு புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பாக ரத்ததான முகாம் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். முகாமை புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் பி. கே. தேவதாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முகாமில் இளைஞர் காங்கிரஸை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் வழங்கினர்.முகாமில்
காங்கிரஸ் வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் மருது பாண்டியன், வட்டார தலைவர் ஆறுமுகம், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் செயல் தலைவர் வேல்முருகன், முன்னாள் துணைத் தலைவர் ரகுபதி, இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர்கள் பொதுச் செயலாளர், மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
- சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
- செயற்கை நுண்ணறிவு வருங்காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
புதுச்சேரி:
புதுவை சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி எச்சரிக்கை விழிப்புணர்வு பதிவு வீடியோ வெளியிட்டுள்ளார் அதில் ஒரு வீடியோ விளையாட்டு காட்சியில் விளையாட்டு வீரருக்கு பதிலாக வேறோரு நபரின் முகம் மாற்றப்படுகிறது.
இதனால் அந்த போலி நபர் விளையாடியது போன்ற வீடியோ காட்சி காணப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு வருங்காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதனால் எந்த வீடியோ காட்சிளையும் நம்பக் கூடாது. வீடியோக்கள் மற்றும் யூடியூப் அனைத்தும் போலியானதாக இருக்கும். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மேலும் பல சிக்கல்களை உருவாக்கப் போகிறது , எனவே பொதுமக்கள் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
- வீட்டிற்கு வந்தும் அக்ஷய் பிரேம்குமார் விபத்து நடந்தது குறித்து யோசனை செய்துள்ளார்.
- நெஞ்சு வலிப்பது போல இருந்ததால் காலை 7 மணிக்கு தனது தந்தையிடம் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை வைசியால் வீதியை சேர்ந்தவர் பிரேம்குமார். நேரு வீதியில் கடை வைத்துள்ளார். இவரது மகன் அக்ஷய் பிரேம் குமார் (வயது 25). சட்டம் பயின்ற இவர் பிரல வக்கீலிடம் பயிற்சி பெற்று வந்தார்.
தந்தையிடம் அதிகாலை சென்னை புறப்பட்டு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி காலை 4 மணிக்கு பிரேம்குமார் தனது காரில் சென்னைக்கு புறப்பட்டார். காரை அவரே ஓட்டி சென்றுள்ளார். காமராஜர் சாலை பெரியார் சிலை அருகில் கார் சென்ற போது ஒரு மரத்தில் எதிர்பாராவிதமாக மோதியது.
இதில் காரின் முன்பக்கம் சேதமடைந்தது. அக்ஷய் பிரேம் குமாருக்கு மூக்கில் மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர் தனது தந்தைக்கு போன் செய்து விபரத்தை கூறியுள்ளார். உடனே பிரேம்குமார் விரைந்து வந்து மகனை புதுவை காந்தி வீதியில் உள்ள தனியார் மருத்து வமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டார். வீட்டிற்கு வந்தும் அக்ஷய் பிரேம்குமார் விபத்து நடந்தது குறித்து யோசனை செய்துள்ளார். இதனால் அவருக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. நெஞ்சு வலிப்பது போல இருந்ததால் காலை 7 மணிக்கு தனது தந்தையிடம் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.
மீண்டும் அதே தனியார் மருத்துவமனைக்கு மகனை பிரேம்குமார் அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து புதுவை போக்குவரதது போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்துக்கள் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து அங்கு வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.
- தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணையும் சாலைகளை மேம்படுத்த வேண்டும்
புதுச்சேரி:
காரைக்கால் மாவட் டத்தில் 3 மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் சாலை பாது காப்பு சம்பந்தமான ஆலோ சனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். துணை கலெக்டர் பாஸ்கரன், வடக்கு போலீஸ் சூப்பிரண்டு நித்தின் கவுஹால் ரமேஷ், நகராட்சி ஆணையர் செந்தில்நாதன், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சிதம்பர நாதன், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர்.கண்ணகி மற்றும் பல்வேறு அரசுத்துறை சார்ந்த அதி காரிகள் கலந்து கொண்ட னர்.
கூட்டத்தில், காரைக்கால் மாவட்டத்தில் விபத்துக்கள் அதிகம் மற்றும் அடிக்கடி நடைபெறும் இடங்களை, போக்குவரத்து போலீசார் கண்டறிய வேண்டும். மேலும் காரைக்காலில் குறுக்கு சாலைகளில் விபத்துக்கள் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து அங்கு வேகத்தடைகள் அமைக்க வேண்டும். காரைக்காலில் விபத்து களை குறைக்க என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப் பட்ட துறை அதிகாரி கள் நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தேசிய நெடுஞ்சா லைகளுடன் இணையும் சாலைகளை மேம்படுத்த வேண்டும். முக்கியமாக காரைக்காலில், விபத்துகள் நடைபெறும் பொழுது ஆம்புலன்ஸ்கள் காலதாம தமாக செல்வதாக புகார்கள் வந்துள்ளன. அதை இனி தவிர்க்க வேண்டும். 108 ஆம்பு லன்ஸ்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். என கலெக்டர் அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார்.
- இரு தரப்பினருக்கும் இடையே வாயத்தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
- தாக்குதலில் காயமடைந்த சச்சின் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
புதுச்சேரி:
பாகூர் அருகே கரையாம்புத்தூரை அடுத்த கடுவனூர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்(வயது39). விவசாயி.
சம்பவத்தன்று அப்பகுதியில் துக்க நிகழ்ச்சியின் போது அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவர் வானவெடி வெடித்த போது அங்குள்ள கோவிலுக்குள் புகுந்தது.
இதனை அப்பகுதியை சேர்ந்த நாகராஜ் மற்றும் சிலர் தட்டிக்கேட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாயத்தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
இந்தநிலையில் நேற்று இரவு நாகராஜ் அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கிருஷ்ணராஜ் குருவிநத்தத்தை சேர்ந்த கண்ணன் அவரது தம்பி அரவிந்த் மற்றும் கடுவனூரை சேர்ந்த முத்துக்குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி நாகராஜை தாக்கினர்.
மேலும் மோட்டார் சைக்கிள் செயின் கவரை எடுத்து கிருஷ்ணராஜ் அங்கிருந்தவர்களை தாக்க முயன்றார். அப்போது இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 16 வயது சிறுவனின் தலையில் செயின் கவரால் கிருஷ்ணராஜ் தாக்கினார்.
மேலும் அவங்கிருந்தவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு கிருஷ்ணராஜ் மற்றும் அவருடன் வந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.
இந்த தாக்குதலில் காயமடைந்த சச்சின் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து அருண் கரையாம்புத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பொதுப்பணித்துறை சுகாதார கோட்டம் எச்சரிக்கை
- மீண்டும் இணைப்பு கொடுக்கும் போது மறு இணைப்புக்கான கட்டண மாக ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை பொதுப் பணித்துறை சுகாதார கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுப்பணித்துறை சார்பில் வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு குடிநீர் அளவு குறித்து கணக்கீட்டாளர் கணக் கெடுத்து கட்டண ரசீது கொடுக்கப்படுகிறது. அவ்வாறு ரசீது கொடுக்கப் பட்டு 30 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
அவ்வாறு குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டணத்தை செலுத்த தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும் மீண்டும் இணைப்பு கொடுக்கும் போது மறு இணைப்புக்கான கட்டண மாக ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- மாலை பொழுதாகும் போது ஒட்டு மொத்தமாக அந்த லாரி முனையமே முற்றிலும் திறந்தவெளி மதுபாராக மாறிவிடுகிறது.
- வார இறுதி நாட்களில் இங்கு வரும் குடிமகன்களில் எண்ணிக்கை கட்டுக்கடங்காது செல்கிறது.
புதுச்சேரி:
புதுவை மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளது.
புதுவை தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் ஏற்றி இறக்க வரும் கனரக வாகனங்கள் நிறுத்த சரியான இடம் இல்லாததால் கடந்த காலங்களில் பிரதான சாலைகளின் ஒரம் நிறுத்தினர். வெளிமாநிலங்களில் இருந்து வரும் டிரைவர்கள் சாலையிலேயே தங்கி சமைத்து உண்டு இருந்தனர்.
இதனால் சில ஆண்டுகளுக்கு முன்பு லாரி முனையம் தொடங்கப்பட்டது. இந்த பகுதி தமிழகத்தோடு ஒட்டிய பகுதியாகும். இதனால் எல்லை பகுதிகளில் அதிக அளவில் மதுக்கடைகள் உள்ளது. லாரி முனையம் தொடங்கப்பட்டபோது நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் அங்கு வந்து நிறுத்தப்பட்டது. லாரி ஓட்டுனர்களும், கிளினர்களும் அங்கேயே சமைத்து ஓய்வெடுத்தனர்.
கொரோனா காலத்திற்கு பிறகு 24 மணி நேரமும் இயங்கும் திறந்தவெளி மதுபாராக லாரிமுனையம் மாறியுள்ளது. பெரும்பாலும் காலை நேரத்தில் மோட்டார் சைக்கிள், கார் ஓட்ட பயில்பவர்கள் அங்கு வருவர். விடுமுறை நாட்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் விளையாடுவர்.
இங்கு போக்குவரத்து கிளை அலுவலகமும் உள்ளது. சமீப காலமாக அங்கு பெண்கள் வாகன லைசென்ஸ் வாங்க பயிற்சிக்கு வருவதையே கைவிட்டுவிட்டனர். காரணம் காலை நேரங்களிலேயே மதுபிரியர்கள் லாரி முனையத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
மாலை பொழுதாகும் போது ஒட்டு மொத்தமாக அந்த லாரி முனையமே முற்றிலும் திறந்தவெளி மதுபாராக மாறிவிடுகிறது.
நள்ளிரவு வரை அங்கு குடிமகன்கள் மது அருந்துகின்றனர். குடிபோதைக்காரர்கள் கொண்டு வரும் வாகனங்கள் ஆயிரக்கணக்கில் அங்கு சாலையிலேயே நிறுத்தி வைக்கப்படுகிறது. காலையில் பார்க்கும் போது அந்த இடம் முழுவதும் காலி மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில், பாக்கெட் என பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது.
சமீப காலமாக இங்கு நிறுத்தப்படும் லாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நூற்றுக்கணக்கான லாரிகள் நின்றிருந்த இடத்தில் 50-க்கும் குறைவான லாரிகள் தான் நிற்கிறது. இவையும் உள்ளூர் லாரிகள் என்று கூறப்படுகிறது. ஏனெனில் லாரி ஓட்டுனர்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. குடிமகன்கள் லாரி ஓட்டுனர்களுடன் தகராறில் ஈடுபட்டு, சிலர் பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதன் மறுபுறம் ஆரோவில் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது
பெயரளவில் 2 மாநில போலீசாரும் குடிமகன்களை மிரட்டி அனுப்பி வைக்கின்றனர். இரவில் போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பெரும் கூட்டம் குடித்துக் கொண்டிருக்கிறது. இங்கு வரும் குடிமகன்களுக்கு திறந்த வெளி காற்றும், விளக்கு வசதியும் இலவசமாக கிடைக்கிறது. இதனால் எத்தனை முறை விரட்டினாலும் குடிமகன்கள் மீண்டும் படையெடுக்கின்றனர்.
லாரி முனையம் தொடர்ந்து செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் இந்த பகுதியில் சுற்றுசுவருடன் கூடிய பெரிய விளையாட்டு திடல் அமைக்கலாம் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
கோரிமேடு இன்ஸ்பெக்டர் பால முருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் லாரி முனைய பகுதியில் மாலையில் ரோந்து சென்ற போது குடிமகன்கள் அங்கிருந்து தப்பி ஒடினர். அவர்களில் சிக்கியவர்களை பிடித்த போலீசார், குடிமக்களால் அங்கு போடப்பட்டுள்ள குப்பைகளை அங்கிருந்து அகற்ற உத்தரவிட்டனர்.
ஒரு மணி நேரத்துக்கு மேலாக போதை தெளியும் வரையில் குடிமகன்களை போலீசார் குப்பைகளை அள்ள வைத்தனர். 3 சாக்கு பைகள் நிறைய குப்பைகளை அள்ளிய குடிமகன்கள், இனி மேல் இங்கு குடிக்க வரமாட்டோம் விட்டுவிடுங்கள் என கெஞ்சினர். அடுத்த முறை சிக்கினால் வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால் இரவில் ஆயிரக்கணக்கான குடிமகன்கள் முனையத்தில் வழக்கம் போல் அமர்ந்து குடித்தனர். வார இறுதி நாட்களில் இங்கு வரும் குடிமகன்களில் எண்ணிக்கை கட்டுக்கடங்காது செல்கிறது.
- ரூ.18 ஆயிரம் , பைக் பறிமுதல்
- போலீசாரை பார்த்ததும் சூதாடிக்கொண்டிருந்த 3 பேர் தப்பியோடி விட்டனர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே பண்டசோலை நல்லூரில் உள்ள ஏரிக்கரையில் ஒரு கும்பல் தெரு விளக்கு வெளிச்சத்தில் சூதாடிக்கொண்டிருப்பதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் சூதாடிக்கொண்டிருந்த 3 பேர் தப்பியோடி விட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பதும் தப்பியோடியவர்கள் அதே பகுதியை சேர்ந்த முத்து, விக்கி மற்றும் ராஜா என்பது தெரியவந்தது. இதையடுத்து சுந்தரத்தை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.18 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பியோடி மற்ற 3 பேரை தேடி வருகிறார்கள்.
- பாடல்களை ரசித்து கேட்டுக்கொண்டிருந்த போது திடீரென கீதா மயங்கி சாய்ந்தார்.
- பாகூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
பாகூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. இவரது மனைவி கீதா(வயது39). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவக்கொழுந்து இறந்து விட்டார். இதையடுத்து கீதா அங்குள்ள டெய்லர் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு கீதா அங்குள்ள மாதா கோவில் அருகே நடைபெற்ற பாட்டு கச்சேரியை பார்க்க சென்றார். பாடல்களை ரசித்து கேட்டுக்கொண்டிருந்த போது திடீரென கீதா மயங்கி சாய்ந்தார்.
அங்கிருந்தவர்கள் கீதாவை மீட்டு பாகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கீதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கீதா திடீர் நெஞ்சு வலியால் இறந்து போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மகன் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாட்டு கச்சேரியில் பெண் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மோட்டார் சைக்கிளின் சாவியை வண்டியிலேயே திறந்து வைத்து விட்டு வீட்டில் பணம் எடுக்க சென்றார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே திருவாண்டர்கோவில் இந்திராநகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை அவரது மனைவி ஜெயராணி பயன்படுத்தி வந்தார்.தினமும் ஜெயராணி மூங்கில்பட்டில் உள்ள தனது தாய்க்கு மோட்டார் சைக்கிளில் சென்று மதிய சாப்பாடு கொடுத்து விட்டு வருவது வழக்கம்.
அதுபோல் சம்பவத்தன்று மதியம் ஜெயராணி தனது தாயாருக்கு சாப்பாடு கொடுக்க மோட்டார் சைக்கிளில் செல்ல தயாரானார்.
அப்போது வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால் மோட்டார் சைக்கிளின் சாவியை வண்டியிலேயே திறந்து வைத்து விட்டு வீட்டில் பணம் எடுக்க சென்றார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் ஜெயராணி திடுக்கிட்டார். யாரோ மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளின் சாவியை திறந்து வைத்துவிட்டு சென்றதை நோட்டமிட்டு மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஜெயராணி திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறகிறது.
- அதனை சார்ந்த பகுதிகளிலும் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை தேத்தாம்பாக்கம் துணை மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறகிறது.
நாளை (திங்கட் கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குமாரபாளையம் குப்பம் ஒரு பகுதி, அம்மத்தான் குளம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளிலும் பகல் 1 மணி முதல் 4 மணிவரை கொடாத்தூர், கே.மணவெளி, பாலபாடிக்குப்பம், திருக்கனூர், கூனிச்சம்பட்டு, கொண்டா ரெட்டிபாளையம், மற்றும் அதனை சார்ந்த பகுதிகளிலும் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
- பயணிகளை மிரட்டுவது என மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.
- அதிக போதை தரும் மதுபானங்களை குடித்துவிட்டு மீண்டும் வழக்கம் போல் பஸ்களை இயக்குகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவையில் இருந்து வில்லியனூர், வடமங்கலம், தென்னல், அரியூர், கண்டமங்கலம், திருவண்டார் கோவில், திருபுவனை, மடுகரை, திருக்கனூர் மற்றும் விழுப்புரம், கடலூருக்கு பல்வேறு தனியார் பஸ்கள் மற்றும் லாரிகள், கார்கள் போன்ற வாகனங்கள் தினந்தோறும் சென்று வருகின்றன.
இந்த வாகனங்களை இயக்கும் ஒரு சில டிரைவர்கள் மது குடித்து விட்டு அதிவேகத்தில் வாகனங்களை இயக்கி வருகிறார்கள். மேலும் செல்போனில் பேசியவாறும் வாகனங்களை ஓட்டி வருகிறார்கள்.
புதுவை பஸ் நிலையத்திற்கு வரும் தனியார் பஸ்களில் பணியாற்றும் சில டிரைவர்கள், புதிய பஸ் நிலையம் பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் டீ குடிக்க செல்வது போல் சென்று அதிக போதை தரும் மதுபானங்களை குடித்துவிட்டு மீண்டும் வழக்கம் போல் பஸ்களை இயக்குகிறார்கள்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில், பொது மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் வாகனத்தை இயக்கும்போது அதில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பாதுகாப்பு தன்மை இல்லாத நிலை உள்ளது. அவர்கள் திக்திக் பயத்துடன் பயணம் செய்கிறார்கள்.
அதேபோல் மதகடிப் பட்டு, மடுகரை, திருக்கனூர், கன்னிகோவில், பாகூர், காலாப்பட்டு, லாஸ்பேட்டை பகுதிக்கு செல்லும் பஸ்களில் பணிபுரியும் கண்டக்டர்கள், டிரைவர்கள், செக்கர்கள், கிளீனர்கள், புரோக்கர்கள் என ஒரு சிலர் குடித்து விட்டு வாகனங்களை இயக்குவதும், பயணிகளை தரக்குறைவாக பேசுவது, நேரமின்மை காரணமாக டிரைவர்கள் அவர்கள் நினைக்கும் இடத்தில் நிறுத்தி பயணிகளை வலுக்கட்டாயமாக இறக்கி விட்டு செல்வது, பயணிகளை மிரட்டுவது என மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் மிகவும் பாதிப்பு அடைந்து வருகிறார்கள்.
இதனை சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் திடீரென பஸ்களை நிறுத்தி சோதனை செய்து பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள், செக்கர்கள், புரோக்கர்கள் மது அருந்தி உள்ளனரா? என பரிசோதனை செய்து அதன் பின்னரே வாகனங்களை இயக்க அனுமதி தர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.






