என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gambled"

    • ரூ.18 ஆயிரம் , பைக் பறிமுதல்
    • போலீசாரை பார்த்ததும் சூதாடிக்கொண்டிருந்த 3 பேர் தப்பியோடி விட்டனர்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அருகே பண்டசோலை நல்லூரில் உள்ள ஏரிக்கரையில்  ஒரு கும்பல் தெரு விளக்கு வெளிச்சத்தில் சூதாடிக்கொண்டிருப்பதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் சூதாடிக்கொண்டிருந்த 3 பேர் தப்பியோடி விட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பதும் தப்பியோடியவர்கள் அதே பகுதியை சேர்ந்த முத்து, விக்கி மற்றும் ராஜா என்பது தெரியவந்தது. இதையடுத்து சுந்தரத்தை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.18 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பியோடி மற்ற 3 பேரை தேடி வருகிறார்கள்.

    ×